20.05.2012ல், சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது நினைவிருக்கலாம். அன்று சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பு, அதில் இளம் சாதனையாளர் விசாலினி-இந்தியாவின் விடிவெள்ளி மற்றும் இயற்கை ஆர்வலர் திரு.யோகனாதன் ஆகியோரை பதிவர்கள் கௌரவப்படுத்தியது உட்பட நிகழ்ச்சியின் தொகுப்பு,டெல்லியிலிருந்து வெளியாகும் “THE FORECAST FRONT" ஆங்கில இதழின் ஜூன் -2012 பதிப்பில் செய்தியாக வந்துள்ளது. அதில் கலந்து கொண்ட பதிவர்கள் பெயருடன், அவர்களது வலைப்பூ முகவரியும் கொடுத்துள்ளது மிகச்சிறப்பு. பங்கு பெற்ற அனைவரது பெயரையும் போட அவருக்கு மிகுந்த ஆசையிருந்தும், இடத்தின் அருமை கருதி, சில பெயர்களை மட்டுமே போட முடிந்தது என்று சொன்னார்.
