கற்ற கல்லூரியில் கற்பித்த வேளையில். |
நம் வாழ்வில் உன்னதமான, உயிரோட்டம் மிக்க நிமிடங்கள், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமாய் வாய்க்கும். என்றோ ஒரு நாள், அப்படி வாய்க்கும் சில நிமிடங்கள் நம் மனதைவிட்டு அகலுவதுமில்லை. ஆம், அத்தகைய ஒரு நிகழ்வு என் வாழ்வில் ஏற்பட்ட வேளை எதுவெனில், நான் கற்ற கல்லூரியிலேயே, கற்பிக்க சென்ற வேளை எனலாம்.
