இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 6 December, 2013

பாலில் கலப்படம் பாவம் உயிர் போகும்

உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.  ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசு நிறுவன பால் பாக்கெட்டுகள், கடைகளில் குளிர்பதன பெட்டியில் வைத்து விற்கப்பட்டாலும், இரண்டு நாள்தான் அதற்கு கெடு. அதற்கு மேல் வைத்து விற்றால் அந்த பால் கெட்டுவிடுகிறது. பாலின் இயல்பும் அதுதான்.
Follow FOODNELLAI on Twitter

Tuesday 12 November, 2013

ஆழ்வார்குறிச்சி கல்லூரியில் டீன் ஏஜ் பெண்களுக்கான கருத்தரங்கு-தினமலர் செய்தி

ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் டீன் ஏஜ் பெண்களுக்கான உணவு பழக்க வழக்கங்களுக்கான சிறப்பு கருத்தரங்கு நடந்தது. 

      தற்போது 90 சதவீத டீன் ஏஜ் பெண்களுக்கு ரத்தத்தில் தேவையான அளவிற்கு ஹீமோகுளோபின் இல்லாததாலும், 40 சதவீத டீன் ஏஜ் பெண்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இல்லாததாலும் டீன் ஏஜ் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியும், நியூட்ரியேசன் கிளப்பும் இணைந்து நடத்திய சிறப்பு கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ரஞ்சித் சிங் தலைமை வகித்தார்.
Follow FOODNELLAI on Twitter

Friday 25 October, 2013

குளிர்பானங்கள் -குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை




                   இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI), அனைத்து வகையான கரியமில வாயு கலந்த குளிர்பானங்களையும் கண்காணித்து அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow FOODNELLAI on Twitter

Friday 11 October, 2013

உணவு போக்குவரத்தாளர்களுக்கு உரிய நடைமுறைகள்.

                         திண்டுக்கல் வட்ட, உணவு பாதுகாப்பு அலுவலர், நண்பர் திரு.M.பாண்டியராஜன், உணவு போக்குவரத்தாளர்கள் உணவு பாதுகாப்பு சட்டம்,2006ன் கீழ் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை அழகு தமிழில் வடிவமைத்து வெளியிட்டிருந்தார்.
                                     நண்பர்கள் அனைவருக்கும் பயன்படட்டும் என்ற நோக்கில், அவர் அனுமதியுடன் இங்கே பகிர்ந்துள்ளேன்:
Follow FOODNELLAI on Twitter

Monday 30 September, 2013

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் கல்லூரி பொன்விழாவில் இரண்டாம்நாள் உரை.

இரண்டாம் நாளில் என்னுரை
               இரண்டாம் நாளில், பற்பல கல்லூரிகளிலிருந்தும் வந்து கலந்துகொண்ட பேராசிரியர்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி எடுத்துரைத்தேன்.  முதல்நாளே, ஸ்வாமிஜி இன்னும் நிறைய புதுத்தகவல்களுடன் வரச்சொல்லி வாழ்த்தி அனுப்பினார்களே!   பிற்பகல் 2 மணியளவில்தானே என்னுரை.  இன்னும் பல அருமையான தகவல்களைச் சேர்க்கலாமென்று எண்ணியிருந்தேன்.
Follow FOODNELLAI on Twitter

Monday 23 September, 2013

பொன்விழா ஆண்டில் என்னுரை.



         கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஒருநாள் காலைப்பொழுதில் அலைபேசியில் ஒரு அழைப்பு. எடுத்தேன். எதிர்முனையிலிருந்து, சாந்தமாய் ஓர் குரல். நான் கோவை,ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியிலிருந்து, ஸ்வாமி கரிஷ்டானந்தா பேசுகிறேன், செப்டம்பர் மாதத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் எம் கல்லூரி பொன்விழா ஆண்டு நிகழ்வில், உணவு பாதுகாப்பு குறித்து மூன்று தினங்கள் உரையாற்ற வரமுடியுமா என்று வினவினார். கேட்ட விதமே,சட்டென்று மறுக்க முடியாது. எனினும், நான் என் அலுவலகப்பணிகளை விடுத்து மூன்று தினங்கள் கோவையிலிருப்பது சற்றே சிரமம் என்றேன். சரி, வார நாளில் ஒருநாளும், விடுமுறை நாளில் ஒருநாளும் இங்கிருப்பதுபோல் வாருங்கள் என்றார்கள். 
Follow FOODNELLAI on Twitter

Friday 2 August, 2013

நெல்லை, மதுரை வட்டாரப் பதிவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


                                  

வணக்கம் வலையுலக நட்புக்களே,
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவர்கள் திருவிழா (மாநாடு/சந்திப்பு) கோலாகலமாக நடந்தது. பல பகுதிகளில் இருந்தும் பதிவர்கள் சங்கமித்து ஒருங்கிணைந்து மிக சிறப்பாக நடைபெற்றது. அது போலவே இந்த ஆண்டும்  பதிவர் திருவிழா வரும் செப்டம்பர் முதல் தேதி (01-09-2013 - ஞாயிற்றுகிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டு சென்னை நண்பர்களால் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
Follow FOODNELLAI on Twitter

Tuesday 30 July, 2013

விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள்.

                      திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களின் தொடர்பு விபரங்கள் வெளியிட்டபோது, மற்ற மாவட்ட நண்பர்களும் அவரவர் மாவட்ட விபரங்களைத் தொகுத்து வழங்கினால், உணவு உலகத்தில் வெளியிட தயாராக இருப்பதாய் தெரிவித்திருந்தேன். இன்று, விருதுநகர் மாவட்ட விபரங்களை நண்பர் திரு.S.நாராயணன் அனுப்பியிருந்தார். நன்றி நண்பரே. இதோ:

மற்ற மாவட்ட நண்பர்களும் தங்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விபரங்களைத்தெரிவித்தால், நாம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள அனைவருக்கும் உதவிடும்.
Follow FOODNELLAI on Twitter

Saturday 27 July, 2013

என் முதல் கணினி அனுபவம்-தொடருமா பதிவு!

 டிஸ்கி:பதிவுலகம் தன்னை மறுபடியும் மீண்டும் ஒரு எழுச்சிக்கு தயார்படுத்த எழும்புவதில் எனக்கு எல்லையில்லா சந்தோசம், காணாமல் போன பதிவர்கள் புத்துணர்ச்சியோடு திரும்பி வருவது மனதுக்கு சந்தோசம், இதில் டெரர் குரூப் தம்பிகள் உற்சாகத்தோடு மீண்டும் எழுத வேண்டும், விக்கி உலகம் விக்கி'யும் பதிவுகள் அதிகம் எழுதவேண்டும் என்பது என் ஆவல்...! -என நம்ம நாஞ்சில் மனோ ஏடாகூடமா அறிமுகம் கொடுத்து, அதுல என்னையும் கோர்த்துவிட்டிருக்காக. 
Follow FOODNELLAI on Twitter

Monday 22 July, 2013

திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 

                                  நேற்று, திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களின் தொடர்பு விபரங்கள் வெளியிட்டபோது, மற்ற மாவட்ட நண்பர்களும் அவரவர் மாவட்ட விபரங்களைத் தொகுத்து வழங்கினால், உணவு உலகத்தில் வெளியிட தயாராக இருப்பதாய் தெரிவித்திருந்தேன். இன்று, திருவாரூர் மாவட்ட விபரங்களை நண்பர் திரு.குருசாமி அனுப்பியிருந்தார். நன்றி நண்பரே. இதோ:
Follow FOODNELLAI on Twitter

Sunday 21 July, 2013

திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 

திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர்களைத்தொடர்பு கொள்ள அவர்களின் அலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி:
Follow FOODNELLAI on Twitter

Monday 8 July, 2013

சாட்டிலைட் இணைப்பு செய்த சதி.

                              
திடீரென புதன் மாலை சன் டி.வி.யிலிருந்து  அவசர அழைப்பு. இன்று இரவு 9 மணியளவில், சன் டி.வி.யில் உணவில் கலப்படம் குறித்து  நடைபெறும் விவாத மேடை நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டுகோள் விடுத்தனர். அண்மையில், உச்ச நீதிமன்றம், வட மாநிலங்களில், செயற்கை பால் விற்பனை செய்யப்படுவது குறித்து கவலை தெரிவித்து, அதன்மீது நாடு முழுவதும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியிருந்தது இந்த நிகழ்ச்சிக்கான அடிப்படைக்காரணம்.
Follow FOODNELLAI on Twitter

Sunday 30 June, 2013

தண்ணீர் தண்ணீர் கலெக்டர்.

                         

                             மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வருமாயின், அது நீருக்காக வரும் போராயிருக்கும். அத்தகையதோர் போர், உலகம் ஒட்டுமொத்தமாய் அழிந்திட வித்திடும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. இது குறித்து உணவு உலகம் வலைத்தளத்தில் வந்த நீருக்காக போர் படிப்பது முன்னுரையாய் அமையும்.
Follow FOODNELLAI on Twitter

Saturday 29 June, 2013

மௌனம் பேசியதோ!






”குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்.”
              என்ற வள்ளுவன் வாக்கினிற்கேற்பமழலைப் பேசக்கேட்டு 

மகிழ்ந்திடாதோ உள்ளம். பிறவிக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு: 
Follow FOODNELLAI on Twitter

Friday 14 June, 2013

இப்படியும் சிலபேர்! 

திரு.ஜாதவ் பயேங்.
                       
          சென்னை, CONCERT அமைப்பில் பணிபுரியும் நண்பர் திரு.சோமசுந்தரம் பல உருப்படியான தகவல் பகிர்வுகள் அளிப்பவர். இன்று அவர் பகிர்ந்துகொண்ட தகவல் தன்னம்பிக்கை அளிப்பதாயிருந்தது. அத்துடன், அந்த செய்தியின் இறுதியில் கண்ட ’அனுமதி’ , அப்படியே என்னைப் பகிரச்செய்தது. பகிர அனுமதித்தமைக்கு நன்றி. 

தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு! ஒரு நிஜ ஹீரோவின் கதை! 
Follow FOODNELLAI on Twitter

Wednesday 12 June, 2013

உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உபயோகப்படும்.



       விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உணவு பாதுகாப்பு அலுவலராகப்பணிபுரியும் நண்பர் நாராயணன், அவர்தம் கடமையே கண்ணாக செயல்படுபவர். எந்த ஒரு திட்டத்தை அமுல்படுத்த, ஆணையரகத்திலிருந்து உத்தரவு வந்தாலும், அதற்கு முழு ஈடுபாட்டுடன் பாடுபடுபவர் அவர். இப்பக்கூட, பான்பராக், குட்கா தடை உத்தரவு அமலுக்கு வந்தவுடன், அவற்றை பறிமுதல் செய்ய, உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்குப் பயன்படும் படிவத்தை உடனே தயார் செய்து அனுப்பியுள்ளார். 
Follow FOODNELLAI on Twitter

Monday 13 May, 2013

கற்றுத்தருவோருக்கு ஒரு கலகலப்பான பயிற்சி

 பயிற்சி வகுப்பில் பாந்தமாய் முனைவர் திரு.சுப்பிரமணியன்
                                        
                        மாதா, பிதா, குரு தெய்வம் என்பது நம்  ஆன்றோர் வாக்கு. ஆசிரியர் ஒருவருக்கு சொல்லும் ஒரு செய்தி, அவர் கற்பிக்கும் ஓராயிரம் குழந்தைகளைப் போய்ச் சேரும். அந்த ஆசிரியர் ஒரு குழந்தையிடம் சொல்லும் ஒரு நல்ல செய்தி, அக்குழந்தையின் குடும்பத்தையே யோசிக்கச்செய்யும். இத்தகைய ஆக்கபூர்வமான செயல்  கோவை, ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியின் தலைவர் மற்றும் செயலாளர் மகராஜ்களின் ஆசிகளுடன், அக்கல்லூரியில் பணிபுரியும் முனைவர் திருசுப்பிரமணியன் அவர்களின் ஆர்வத்தால், ஆண்டுதோறும் அரங்கேறி வருகிறது. 
Follow FOODNELLAI on Twitter

Wednesday 8 May, 2013

இது இந்த நிமிஷத்தின் தேவை.

                
                     இன்று, தமிழக சட்டப்பேரவையில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், குட்கா, பான்மசாலா பொருட்கள் தமிழகத்தில் தயாரிக்க,விநியோகிக்க, விற்பனை செய்ய தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். மனமார்ந்த நன்றிகள்.
Follow FOODNELLAI on Twitter

Tuesday 7 May, 2013

இது இப்ப நமக்குத்தேவை நண்பர்களே.




இதை வழங்கிய அரசிற்கும், நமது துறை ஆணையருக்கும், இந்த உத்தரவு கிடைக்க முயற்சி எடுத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Follow FOODNELLAI on Twitter

Monday 29 April, 2013

இது இரண்டாம் கட்ட ஆய்வு- இன்னும் தொடரும்

நன்றி: தமிழ்முரசு.
                                      
                       சென்னை, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் திரு.குமார் ஜெயந்த் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவுப்படி, தமிழகமெங்கும் தரமான தண்ணீர் கிடைத்திட தொடர் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.  
Follow FOODNELLAI on Twitter

Monday 22 April, 2013

கோடைகால தந்திரம் வெல்லும் தரமான தண்ணீர் எனும் தாரக மந்திரம்.


           கோடைக்காலம் தொடங்கியாச்சு, கூடவே குளிர்பான விற்பனையும் கூடிப்போச்சு. ”தாகத்திற்கு தண்ணீர் கொடு”-இது பெரியோர் வாக்கு. இப்ப அதே விஷயத்தை அவங்க சொல்லணும்னா,”தாகத்திற்கு தரமான தண்ணீர் கொடு”ன்னுதான் சொல்லணும். 

அத்தனை விஷயமிருக்கு இந்த பாக்கட்/ பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் தண்ணீரில்!


Follow FOODNELLAI on Twitter

Friday 12 April, 2013

கலப்படம்  கண்டுபிடிப்பது முதல் தண்டனை பெற்றுத்தருவது வரை


                         
                             உணவில் கலப்படம் உள்ளபடியே அதிகம்தான். கண்டுபிடிச்சா, அதை நிரூபிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்தான். உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பனும். அதில் கலப்படம் இருக்குன்னு அறிக்கை வரணும். வந்துட்டா, வழக்கு, வாய்தான்னு அலையணும். இதோ ஒரு உணவு மாதிரி எடுத்து அதில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டதால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். முதலில் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கணும், உயர் அதிகாரிகளிடம், உரிய அனுமதி பெற்று வழக்குத் தொடரணும்.
டிஸ்கி: துறை சார்ந்த அலுவலர்கள், வழக்குத்தொடரும் நடைமுறை அறிந்து கொள்ள ஏதுவாக இங்கு பகிர்ந்துள்ளேன். 
Follow FOODNELLAI on Twitter

Sunday 17 March, 2013

பள்ளிகளுக்கருகில் பிட்சாக்குப் பதிலா பழங்கள்.

         
        "பீட்சா, பர்கர் போன்ற, "பாஸ்ட் புட்' அயிட்டங்களை, பள்ளி கேன்டீன்களில், இனி விற்பனை செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக, உடல் ஆரோக்கியத்துக்கு உதவும், பழங்கள், பால் பொருட்களை விற்பனை செய்யலாம்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.
Follow FOODNELLAI on Twitter

Thursday 14 March, 2013

உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் மீறல்- தண்டனை.

நன்றி: தினமலர், நெல்லை.14.03.13
       
   
            உண்ணும் உணவு நம் உடலுக்கு நன்மை விளைவிப்பதாயிருக்க வேண்டும். நாமென்ன செய்யலாம் அதற்கு? இயற்கை உணவுகளை இனி தேடித்தேடி விரும்பி உண்ணலாம். இது இயந்திர உலகம். இயற்கை உணவு தேடி அலைந்தாலும் கிடைப்பது அத்தனை சுலபமல்ல. பாக்கெட்டுகளில் அடைத்த பதப்படுத்தப்பட்ட உணவுகளே இன்றைய நாட்களில் செல்லும் கடையெங்கும் நிறைந்திருக்கிறது. என்னவெல்லாம் பார்க்க வேண்டும் அந்த பாக்கட் உணவுகள் மீது?
Follow FOODNELLAI on Twitter

Thursday 7 February, 2013

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பயன்படுத்த அறிவிப்பு மாதிரிகள்.

உணவு பாதுகாப்பு சட்டத்தினை அமல்படுத்தும்போது, நமக்கு களப்பணியில் பயன்படும் சில அறிவிப்பு மாதிரிகளை, மதுரையில் உணவு பாதுகாப்பு அலுவலராகப்பணிபுரியும் என் நண்பர் திரு.முரளிதரன் தயாரித்திருந்தார். அவை உங்கள் பார்வைக்கும், பயன்பாட்டிற்கும்:
Follow FOODNELLAI on Twitter

Wednesday 6 February, 2013

அரசு தரப்பில் அழகாய் எடுத்துரைக்க தீர்ப்புரைகள்.

                           
                    உணவில் கலப்படம் செய்பவர்கள் மீது, வழக்கு தொடுத்தால் மட்டும் போதாது. அவற்றை நீதிமன்றத்தில் எடுத்துரைத்து, எதிர் தரப்பின் குறுக்கு விசாரணையில் பதில் சொல்வது என்பது சாதாரண காரியமில்லை. அவ்வாறு, நீதிமன்றத்தில் நமது அரசு தரப்பை எடுத்துரைக்கும்போது, பல்வேறு சந்த்ர்ப்பங்களில் நமக்கு ஏற்படும் இன்னல்களைத் தீர்க்க பயன்படுபவையே இதனடியில் காணப்படும் திரட்டு. இது எனக்கு ஒவ்வொரு வழக்கு வாதாடும்போதும், ஏற்பட்ட பிரச்சனைகளின் அடிப்படையில் தேடி கண்டுபிடிக்கப் பட்டவை. அவற்றில் பல, நாம், புதிய உணவு பாதுகாப்பு சட்ட அமலாக்கத்திற்கும் பயன்படுபவை பல உள்ளன.
Follow FOODNELLAI on Twitter

Saturday 2 February, 2013

உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற்சி -நிறைவு பகுதி.

                                   
                         ஐந்தாம் நாள், பயிற்சியின் இறுதி நாள். காலையில், மத்திய உரிமம் வழங்கும் நியமன அலுவலர், டாக்டர்.திரு.ஸ்ரீநிவாசன்  FOOD SAFETY PLAN தயாரிப்பது எப்படி என்று விளக்கமளித்தார்கள். இது ஒரு பயனுள்ள பயிற்சி.அடுத்து, ஆவினில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற திரு.சங்கரன் CONCEPTS OF FOOD SAFETY MANAGEMENT SYSTEM  குறித்து விளக்கினார்கள்.
Follow FOODNELLAI on Twitter

Friday 1 February, 2013

உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற்சி-பாகம்-2

                     மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாள் பயிற்சி
BIS இயக்குனர் திருமதி.கல்பனா அவர்களின் உரை.



மூன்றாம் நாள் சென்னை, BIS இயக்குனர் திருமதி.கல்பனா 

அவர்களின் சிறப்பு தொழிற்சாலைகள் ஆய்வு குறித்த உரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.  பிற்பகலில், முதல் குரூப், சென்னையிலுள்ள SARGAM LAB பார்வையிட சென்றனர். 
Follow FOODNELLAI on Twitter

Tuesday 29 January, 2013

உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற்சி .

உணவு பாதுகாப்பு ஆணையர் உரை.
                     தமிழகத்தில் உள்ள அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கும், சென்னை பூந்தமல்லியில் உள்ள பொதுசுகாதார பயிற்சி மையத்தில் வைத்து ஐந்து நாட்கள் பணியிடை பயிற்சி முகாம். 50 அலுவலர்கள் கொண்ட இரு குழுக்களுக்கு, இந்த வாரம் 28.01.13ல் சென்னையில் பயிற்சி ஆரம்பமானது. பயிற்சியில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் பட்டியல் இங்கே 
Follow FOODNELLAI on Twitter

Tuesday 15 January, 2013

டெங்கு காய்ச்சல் உரை-7


தமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.

டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் சித்த மருந்துகள்:






[www.4shared.com/file/yRMFglcd/Track07.html]Track07.aac]

                                                                       இன்னும் வரும். . . . . . . . 
Follow FOODNELLAI on Twitter

Saturday 12 January, 2013

உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பயிற்சி.

                    அன்பான உணவு பாதுகாப்பு அலுவலர்களே,
                  நம் துறை சார்பாக, நம் அனைவருக்கும் கீழ்க்கண்ட நாட்களில், சென்னை, பூந்தமல்லி பொதுசுகாதார பயிற்சி மையத்தில் வைத்து பயிற்சி நடைபெற உள்ளது. ப்யிற்சிக்குத் தயாராகுங்கள். பயிற்சி முடித்து, பாதுகாப்பான உணவு அனைவருக்கும் கிடைக்கப் பாடுபடுவோம்
Follow FOODNELLAI on Twitter

Wednesday 9 January, 2013

இது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பார்வைக்கு.

                                அன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களே,

2013ம் ஆண்டில் நாம் உணவுத்தொழிலிற்கு பதிவுச்சான்றிதழ் வழங்கும்போது:

அதன் பதிவெண் -

2 ** 13 $$$  XXXXXX  என்று வழங்குவோம்.

அதில்  -   2      என்பது பதிவுச்சான்றிதழைக்குறிக்கும்.

                  **  என்பது மாவட்டத்தைக்குறிக்கும்.

                   13   என்பது 2013ம் ஆண்டைக்குறிக்கும்.

                 $$$   என்பது உணவு பாதுகாப்பு அலுவலரின் குறியீட்டு எண்ணாகும்.

  XXXXXX   இது அந்த பதிவுச்சான்றிதழின் வரிசை எண்ணாகும்.

                     இந்த இடத்தில் நம்மில் பலருக்கு வரும் சந்தேகம், 2013ம் ஆண்டில் வரிசை எண் 000001 என்று துவங்க வேண்டுமா என்பதே.

                       fssai மற்றும் நம் துறையின் ஆணையர் அவர்கள் வழங்கியுள்ள வழிகாட்டுதல் உத்தரவுக்களுக்கிணங்க, ஏற்கனவே, கடந்த ஆண்டு, அதாவது 2012ல்,உங்கள் பகுதியில்  123 பதிவுச்சான்றுகள் வழங்கியிருந்தால், இந்த ஆண்டு 2 ** 13 $$$ 000124  என பதிவு எண்ணை துவக்கவேண்டும். இந்த ஆண்டு பதிவு எண் 1லிருந்து துவங்கக்கூடாது. நன்றி. 
                       
Follow FOODNELLAI on Twitter