பயிற்சி வகுப்பில் பாந்தமாய் முனைவர் திரு.சுப்பிரமணியன் |
மாதா, பிதா, குரு தெய்வம் என்பது நம் ஆன்றோர் வாக்கு. ஆசிரியர் ஒருவருக்கு சொல்லும் ஒரு செய்தி, அவர் கற்பிக்கும் ஓராயிரம் குழந்தைகளைப் போய்ச் சேரும். அந்த ஆசிரியர் ஒரு குழந்தையிடம் சொல்லும் ஒரு நல்ல செய்தி, அக்குழந்தையின் குடும்பத்தையே யோசிக்கச்செய்யும். இத்தகைய ஆக்கபூர்வமான செயல் கோவை, ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியின் தலைவர் மற்றும் செயலாளர் மகராஜ்களின் ஆசிகளுடன், அக்கல்லூரியில் பணிபுரியும் முனைவர் திருசுப்பிரமணியன் அவர்களின் ஆர்வத்தால், ஆண்டுதோறும் அரங்கேறி வருகிறது.
