இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday, 30 July, 2013

விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள்.

                      திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களின் தொடர்பு விபரங்கள் வெளியிட்டபோது, மற்ற மாவட்ட நண்பர்களும் அவரவர் மாவட்ட விபரங்களைத் தொகுத்து வழங்கினால், உணவு உலகத்தில் வெளியிட தயாராக இருப்பதாய் தெரிவித்திருந்தேன். இன்று, விருதுநகர் மாவட்ட விபரங்களை நண்பர் திரு.S.நாராயணன் அனுப்பியிருந்தார். நன்றி நண்பரே. இதோ:

மற்ற மாவட்ட நண்பர்களும் தங்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விபரங்களைத்தெரிவித்தால், நாம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள அனைவருக்கும் உதவிடும்.
Follow FOODNELLAI on Twitter

Saturday, 27 July, 2013

என் முதல் கணினி அனுபவம்-தொடருமா பதிவு!

 டிஸ்கி:பதிவுலகம் தன்னை மறுபடியும் மீண்டும் ஒரு எழுச்சிக்கு தயார்படுத்த எழும்புவதில் எனக்கு எல்லையில்லா சந்தோசம், காணாமல் போன பதிவர்கள் புத்துணர்ச்சியோடு திரும்பி வருவது மனதுக்கு சந்தோசம், இதில் டெரர் குரூப் தம்பிகள் உற்சாகத்தோடு மீண்டும் எழுத வேண்டும், விக்கி உலகம் விக்கி'யும் பதிவுகள் அதிகம் எழுதவேண்டும் என்பது என் ஆவல்...! -என நம்ம நாஞ்சில் மனோ ஏடாகூடமா அறிமுகம் கொடுத்து, அதுல என்னையும் கோர்த்துவிட்டிருக்காக. 
Follow FOODNELLAI on Twitter

Monday, 22 July, 2013

திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 

                                  நேற்று, திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களின் தொடர்பு விபரங்கள் வெளியிட்டபோது, மற்ற மாவட்ட நண்பர்களும் அவரவர் மாவட்ட விபரங்களைத் தொகுத்து வழங்கினால், உணவு உலகத்தில் வெளியிட தயாராக இருப்பதாய் தெரிவித்திருந்தேன். இன்று, திருவாரூர் மாவட்ட விபரங்களை நண்பர் திரு.குருசாமி அனுப்பியிருந்தார். நன்றி நண்பரே. இதோ:
Follow FOODNELLAI on Twitter

Sunday, 21 July, 2013

திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 

திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர்களைத்தொடர்பு கொள்ள அவர்களின் அலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி:
Follow FOODNELLAI on Twitter

Monday, 8 July, 2013

சாட்டிலைட் இணைப்பு செய்த சதி.

                              
திடீரென புதன் மாலை சன் டி.வி.யிலிருந்து  அவசர அழைப்பு. இன்று இரவு 9 மணியளவில், சன் டி.வி.யில் உணவில் கலப்படம் குறித்து  நடைபெறும் விவாத மேடை நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டுகோள் விடுத்தனர். அண்மையில், உச்ச நீதிமன்றம், வட மாநிலங்களில், செயற்கை பால் விற்பனை செய்யப்படுவது குறித்து கவலை தெரிவித்து, அதன்மீது நாடு முழுவதும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியிருந்தது இந்த நிகழ்ச்சிக்கான அடிப்படைக்காரணம்.
Follow FOODNELLAI on Twitter