இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 30 September, 2013

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் கல்லூரி பொன்விழாவில் இரண்டாம்நாள் உரை.

இரண்டாம் நாளில் என்னுரை
               இரண்டாம் நாளில், பற்பல கல்லூரிகளிலிருந்தும் வந்து கலந்துகொண்ட பேராசிரியர்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி எடுத்துரைத்தேன்.  முதல்நாளே, ஸ்வாமிஜி இன்னும் நிறைய புதுத்தகவல்களுடன் வரச்சொல்லி வாழ்த்தி அனுப்பினார்களே!   பிற்பகல் 2 மணியளவில்தானே என்னுரை.  இன்னும் பல அருமையான தகவல்களைச் சேர்க்கலாமென்று எண்ணியிருந்தேன்.
Follow FOODNELLAI on Twitter

Monday 23 September, 2013

பொன்விழா ஆண்டில் என்னுரை.



         கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஒருநாள் காலைப்பொழுதில் அலைபேசியில் ஒரு அழைப்பு. எடுத்தேன். எதிர்முனையிலிருந்து, சாந்தமாய் ஓர் குரல். நான் கோவை,ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியிலிருந்து, ஸ்வாமி கரிஷ்டானந்தா பேசுகிறேன், செப்டம்பர் மாதத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் எம் கல்லூரி பொன்விழா ஆண்டு நிகழ்வில், உணவு பாதுகாப்பு குறித்து மூன்று தினங்கள் உரையாற்ற வரமுடியுமா என்று வினவினார். கேட்ட விதமே,சட்டென்று மறுக்க முடியாது. எனினும், நான் என் அலுவலகப்பணிகளை விடுத்து மூன்று தினங்கள் கோவையிலிருப்பது சற்றே சிரமம் என்றேன். சரி, வார நாளில் ஒருநாளும், விடுமுறை நாளில் ஒருநாளும் இங்கிருப்பதுபோல் வாருங்கள் என்றார்கள். 
Follow FOODNELLAI on Twitter