இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 29 December, 2014

புத்தாண்டில் புரிந்துகொள்ள ஒரு நிகழ்ச்சி.

     அனைவருக்கும் அட்வான்ஸ் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சென்னையில் இயங்கிவரும் CONCERT அமைப்பு, நுகர்வோர் பாதுகாப்பிற்காக சீரிய நடவடிக்கைகள் எடுத்துவரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்.
Follow FOODNELLAI on Twitter

Wednesday 24 December, 2014

பயணவழி உணவகங்கள் படுத்தும்பாடு.


விக்கிரவாண்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகளவில் பயண வழி உணவகங்கள் உள்ளன. இங்கு உணவு தரமாக வழங்கப்படுவதில்லை, பொருட்களின் விலை அதிகமாக உள்ளதாக கூடுதல் புகார் வந்துள்ளது.
Follow FOODNELLAI on Twitter

Tuesday 2 December, 2014

ர்ளைத் துரத்தும் கேரளா.

                                   

                      வருகின்ற புத்தாண்டிற்கு, நிறமற்ற கேக்குகள்தான் இனி கேரள பேக்கரிகளை அலங்கரிக்கப்போகின்றன என்றொரு தகவல் வந்து, அம்மாநில மக்களின் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை எடுத்துரைக்கின்றது. 
Follow FOODNELLAI on Twitter

Monday 10 November, 2014

பான்பராக் பராக் பராக்!

                                      

                  தடை செய்யப்பட பொருட்களை விற்பது என்றால் சிலருக்கு தனி ஆர்வம் போல. கடந்த வாரத்தின்   முற்பகுதியில்  ஒரு நாள் மாலை, காவல்துறை நண்பர் ஒருவரிடமிருந்து  அழைப்பு வந்தது. 
Follow FOODNELLAI on Twitter

Thursday 6 November, 2014

வண்டியேறி வந்த வதந்தி!

                                       
   நேற்று இரவு தொலைபேசி வாயிலாக, உணவு பாதுகாப்புசட்டம் வாபசாவதாக கடுமையான வதந்தி ஒன்று உலா வந்தது. யாரோ சிலர், தவறான தகவலைப் பரப்பவேண்டுமென்ற நோக்கத்துடன், உணவு பாதுகாப்பு சட்டத்தை, மத்திய அரசு, நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் வாபஸ் வாங்கப்போவதாக வதந்தி பரப்பினர். 
Follow FOODNELLAI on Twitter

Sunday 2 November, 2014

மதுரையில் மனம் மயக்கிய பதிவர் திருவிழா.


மதுரையில் திருவிழா போவாமா வாருங்கள் என்றே  வாஞ்சையுடன் அழைத்தார் அன்பு தம்பி மகேந்திரன் பன்னீர்செல்வம்.  தீபாவளியைத் தொடர்ந்து வருகிறதே என்றே  எண்ணிக்கொண்டு சென்ற எங்களுக்கு திகைப்புத்தான்  மிஞ்சியது.
Follow FOODNELLAI on Twitter

Saturday 6 September, 2014

வானவில் பண்பலை நிகழ்ச்சி பகிர்வு

சமீபத்தில் திருநெல்வேலி ஆகாஷ்வாணியின் வானவில் பண்பலை நிகழ்ச்சியில், செவ்வாய் காலைதோறும் நடைபெறும் துறைத்தலைவர்கள் சந்திப்பு நேரலை கேள்வி-பதில் நிகழ்ச்சியில் எங்கள் துறை மாவட்ட நியமன அலுவலருடன் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அந்த நிகழ்ச்சியின் பகிர்வு:
food safety19.8.14-vanavail F.M. PRGM.mp3
Follow FOODNELLAI on Twitter

Friday 5 September, 2014

தேயிலையில் கலப்படம் தெரிந்துகொண்டால் சுகப்படும்.

                                   
     
                       நம்மள்ல ரொம்ப பேரு, டீக்கடைக்கு போன உடனே கேக்குறது, “நல்ல ஸ்ட்ராங்க் டீ ஒண்ணு கொடுங்க”ன்னுதான்! அந்த ஸ்ட்ராங் டீ பிரியர்கள் மனசும் ஸ்ட்ராங்கா இருந்தா இந்தப் பதிவை படிக்கலாம். 
Follow FOODNELLAI on Twitter

Monday 21 July, 2014

பள்ளிக்குழந்தைகள் -மனம் பதைபதைக்குது.



                        இரு தினங்களுக்கு முன் எங்கள் மாவட்ட அலுவலரிடமிருந்து காலை பத்து மணிக்கு மாவட்ட அலுவலகம் வரச்சொல்லி ஒரு திடீர் அழைப்பு. நண்பர்கள் காளிமுத்து, கலியனாண்டி, முத்துக்குமாரசாமி, ரமேஷ் ஆகியோருடன் என்னையும் சேர்த்து ஒரு குழு அமைக்கப்பட்டது. 
Follow FOODNELLAI on Twitter

Friday 18 July, 2014

குளு குளு குற்றாலம் சுடச்சுட உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள்



குற்றாலம் சீர்பெற சமீபத்தில் உயர் நீதிமன்றம் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. குற்றால அருவிகளில் நீராடுபவர்கள் எண்ணை, சோப்பு, சீயக்காய், ஷாம்பூ போன்ற பொருட்களை உபயோகிக்க கூடாது, பிளாஸ்டிக் கவர், டம்ளர், பொருட்களுக்கு தடை, துணி துவைக்க கூடாது, அருவி அருகே குண்டு குழி இருக்க கூடாது என இன்னும் பல வழிமுறைகள் வகுத்துள்ளது.



குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணியர்கள் சுத்தமான, பாதுகாப்பான உணவு பெற்றிட, உணவுபாதுகாப்புத்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின்பேரில், மாவட்ட நியமன அலுவலர் தலைமையில், சுழற்சி முறையில் தினசரி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழு அங்குள்ள உணவுப்பொருட்கள் விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

                உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அப்துல்காதர், சங்கரலிங்கம், காசிம்,நாகராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் குற்றாலம் மெயின் அருவி பகுதியிலுள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். பெரும்பாலான கடைகளில், உணவு பண்டங்களை சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும், தயாரிப்பு தேதி விபரங்கள் அச்சிட்டும் வைத்திருந்தனர். ஸ்வீட் கார்ன் விற்ற ஒரு கடையில் மட்டும் 2011ல் பாக்கட்டில் அடைக்கப்பட்ட ஸ்வீட் கார்ன்களை அவித்து சுடச்சுட விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. 

                               குற்றாலத்தில் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் நல்ல சூழலை ஏற்படுத்தியுள்ளது ஆரோக்கியமான விஷயம். 

குற்றாலத்தில் தொடரும் உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள்.

குற்றாலத்தில் தற்போது சீசன் உச்ச கட்டத்தில் இருக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணியர்களுக்கு சுத்தமான பாதுகாப்பான உணவு கிடைக்கவேண்டுமென்பதற்காக தமிழக அரசின் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், சுழற்சி முறையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அங்கு அனுப்பப்பட்டு, உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 
Follow FOODNELLAI on Twitter

Friday 23 May, 2014

மனித மிருகங்கள்!

 18+ ஆண்களுக்கு மட்டும்

              மகள் வீட்டில் இரு தினங்கள் இருந்து வரும் எண்ணத்தில் புதனன்று சென்னைபுறப்பட திட்டமிட்டு, செவ்வாயன்று காலை தட்கலில் முன்பதிவு செய்ய சென்றேன்.
Follow FOODNELLAI on Twitter

Thursday 20 March, 2014

துரித உணவு துரத்தும் உடல்நலம்.

                   துரித உணவு உண்பது என்பது உடல்நலத்திற்கு எப்படில்லாம் துன்பம் விளைவிக்கும்? CONCERT  அமைப்பின் செய்திகுறிப்பு:
Follow FOODNELLAI on Twitter

Saturday 15 February, 2014

அயோடின் கலந்த உப்பு விற்பனை: ஆறு மாதங்களுக்கு பிறகே கட்டாயம்

''அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்பதற்கான, கால நிர்ணயம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என, உப்புத் துறை கமிஷனர் கூறினார்.
Follow FOODNELLAI on Twitter

Monday 10 February, 2014

ஊறுகாயில் உள்ள விஷ(ய)ம்

                 

         ஏணி,தோணி, அண்ணாவி,நார்த்தங்காய் என்றொரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏணி-அனைவரையும் ஏற்றிவிடும். தோணி-ஏறிச்செல்பவரை கரையேற்றும். அண்ணாவி-ஆசிரியர்-அவரிடம் கல்வி கற்பவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு தேறிச்செல்வர். நார்த்தங்காய் ஊறுகாய்-சோறுடன் சேர்த்து உண்டால்,சோறு செரித்துவிடும். ஆனால், இங்கு கூறப்பட்ட ஆசிரியரும் ஏனைய பொருட்களும் இருக்கும் இடத்தைக்கடந்து போவதில்லை என்பார்கள்.
Follow FOODNELLAI on Twitter

Sunday 9 February, 2014

கன்சர்ட் அமைப்பின் பிஸ்கட் குறித்த அறிக்கை.

          இப்பல்லாம் காலை உணவை ஸ்கிப் பண்ணுறதே ரொம்ப பேருக்கு வழக்கமாயிருச்சு. அதுவும் பயணத்தின்போதென்றால், சாப்பிடவே பலருக்கு அலர்ஜி. சிம்பிளா ஒரு பாக்கெட் பிஸ்கட் போதுமே, என் பசியைத்தீர்க்கன்னு நினைப்பவர் பலர். CONCERT அமைப்பு,பொதுமக்கள் நலன்கருதி இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி:
Follow FOODNELLAI on Twitter

Thursday 6 February, 2014

காலாவதியான சட்டங்களின் கீழ் பெறப்பட்டுள்ள உரிமங்களைப்புதுப்பிக்க கால அவகாசம்

                             2011ம் வருட, உணவு பாதுகாப்பு சட்ட ஒழுங்குமுறைகள் உபபிரிவு 2.1.2ன் கீழ், காலாவதியான  சட்டங்கள் மற்றும் உத்தரவுகளின்கீழ்(உணவு கலப்பட தடைச்சட்டம்,1954 உள்ளிட்டவை), ஏற்கனவே பெறப்பட்ட உணவு சம்பந்தமான உரிமங்களை புதுப்பிக்கவும், மாற்றிக்கொள்ளவும் வழங்கப்பட்ட கால அவகாசத்தை, 04.08.2014 வரை நீட்டித்துள்ளதாக, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய அமைப்பு, 04.02.2014ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள: கால அவகாசம்

Follow FOODNELLAI on Twitter

Sunday 5 January, 2014

கேன்களில்  தண்ணீர் விற்கும் நிறுவனங்கள்-பசுமைத்தீர்ப்பாய உத்தரவு

                   உண்ணும் உணவிலும், பருகும் தண்ணீரிலும் சுத்தமும், சுகாதாரமும், பாதுகாப்பும் மிக முக்கியம். மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் பெருகிவருவது நல்லதொரு அறிகுறி. இதுவும் அத்தகையதோர் நிகழ்வுதான்:
          தமிழகத்தில் 857 குடிநீர் கேன் விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்தன. மக்களுக்கு தரமற்ற குடிநீர் வழங்குவதாக இந்த நிறுவனங்கள் மீது புகார்கள் எழுந்தன. இதனை கருத்தில் கொண்டு கடந்த மே மாதம் அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானே முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்தது.
Follow FOODNELLAI on Twitter