சமீபத்தில் நண்பர் ஒருவர் பகிர்ந்ததில் பிடித்தது:
மதுரை 'அப்போலோ மருத்துவமனை’
'சிறுநீரகவியல்’ தலைமை மருத்துவர் சௌந்தரபாண்டியன் :
-
'புற்றுநோய்க்கான முக்கிய காரணிகள், இந்த ரசாயன உரங்களும் பூச்சிக்
கொல்லிகளும்தான். இதை ஏராளமான ஆய்வு முடிவுகள் உறுதிபடுத்தியுள்ளன. இப்போது நியோநிகோடினாய்ட்
(Neonicotinoid) என்ற ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லி மருந்து, காய்கள் மற்றும்
பழங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இது, மூளையையும் நரம்பு
மண்டலத்தையும் பாதிக்கக்கூடியது. காய்கறி, பழங்களைச் சமைப்பதற்கு முன்பு
கழுவினாலும், ஏற்கனவே உள்ளே சென்ற ரசாயனம் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால்,
அல்சைமர், ஞாபகமறதி, குழந்தையின்மை போன்ற பாதிப்புகளை இது ஏற்படுத்தும்.
'எல்லாம்
சரி, ஆபீஸ் போற அவசரத்துல
கிடைக்குறதை சமைச்சு, சாப்பிடும் நடுத்தர மக்கள் என்ன
செய்வது. உடலுக்குக் கெடுதினு தெரியுது. ஆனா, இயற்கை அங்காடிகளைத்
தேடி போக முடியலையே'' என
அலுத்துக் கொள்பவர்களுக்கும் ஒரு தீர்வைச் சொல்கிறது
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள விவசாய
பல்கலைக்கழகம். சிறிது புளியை எடுத்துக்
கரைத்து, அந்த தண்ணீரில் கொஞ்சம்
வினிகரை கலந்துகொள்ளுங்கள். அந்தக் கலவையில் காய்கறி,
பழங்களை 15 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினால் காய்கறி, பழங்களில் உள்ள ரசாயன உரங்கள்,
பூச்சிக்கொல்லிகள் 95 சதவிகிதம் நீங்கி விடும். பீன்ஸ்,
பாவக்காய் போன்ற காய்கறிகளை இரண்டு
முறை கழுவ வேண்டும்.