இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 24 August, 2015

ஷீரடி,சனிஷிக்னாபூர், புனே, தோரணமலை ஆன்மீகப்பயணங்கள்.

                         

                                                                   ஓம் சாய்ராம்.
                             கடந்த வருடமே செல்ல எண்ணி, கடந்த வாரம், ஷீரடி செல்ல வேண்டுமென நண்பர்கள் குழாமுடன் புறப்பட்டேன். நெல்லையிலிருந்து முதல்நாள் சென்னை நோக்கிய பயணம். அடுத்தநாள் பகல் முழுவதும், சென்னையில் போக்குவதற்குள் போதும், போதுமென்றாகிவிட்டது.
Follow FOODNELLAI on Twitter

Thursday 6 August, 2015

மீண்டும் ஒரு கால அவகாசம்.

                   உணவுப்பொருள் வணிகர்கள், உணவு பொருட்கள் விற்பனை செய்வதற்காக பல்வேறு அரசுத்துறைகளிடமிருந்து பெற்றுள்ள உரிமங்களை, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழான உரிமமாக மாற்றிக்கொள்ள,இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைவனம்(FOOD SAFETY AND STANDARDS AUTHORITY OF INDIA), 04.08.2015 வரை அளித்திருந்த கால அவகாசத்தை, இன்று  06.08.2015ல் வெளியிட்டுள்ள ஒரு உத்தரவின் வாயிலாக, 04.02.2016 வரை நீட்டித்துள்ளது.
Follow FOODNELLAI on Twitter

Wednesday 5 August, 2015

மதி இழந்த மனிதனால் நேர்ந்த கதி!

         

        நேற்று மாலை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து நெல்லைக்கு பயணம். எனக்கு ஒரு கோச்சில் கீழ் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. எப்போதாவது கீழ் இருக்கை கிடைக்கும். தப்பித்தவறி கிடைக்கும்போதும், அதில் நாம் பயணம் செய்யமுடியாமல், வயதானவரோ, கர்ப்பிணிப்பெண்ணோ, கைக்குழந்தையுடன் வரும் தாயாகவோ வருபவருக்கு மேல் இருக்கை கிடைத்திருக்கும். அதை நாம் பெற்றுக்கொண்டு, கீழ் இருக்கையை அவர்களுக்கு விட்டுத்தருவது வாடிக்கை.
Follow FOODNELLAI on Twitter