நேற்று காலை, நீண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின்னர், சுழற்கழக செயலர் திரு.பாலசுப்ரமணியன் சாரிடமிருந்து ஓர் அழைப்பு. எடுத்தவுடன், வணக்கம் பாலு சார் என்றேன். அவர்கள், நான் ரோட்டேரியன் பாலு பேசுறேன்னு சொன்னார்கள். வருடங்கள் பல ஆனாலும் இன்னும் அவர் எண் என் செல்லில் இருக்கிறது, அதனால்தான் வணக்கம் என்று உங்கள் பெயர் இணைத்துச்சொன்னேன் என்றேன். ஞாயிறன்று திருநெல்வேலி மத்திய சுழற்கழகத்தின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, “உணவு பாதுகாப்பு” குறித்து உரையாற்ற வேண்டுமென்றார்.
