இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday 1 March, 2012

உணவகத்தொழிலில் உயர் லட்சியங்கள்-பாகம்-1.

                 
                         பாதுகாப்பான, தரமான உணவு, நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்பதே,புதிதாக அமலுக்கு வந்துள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம்,2006ன் நோக்கம். உணவகத்தொழில் புரிவோர் இச்சட்டத்தில் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இங்கே தொகுத்து வழங்கப்படுகிறது. 

                          சட்டத்தின் சாராம்சம், சாமானியனும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதே இதன் நோக்கம். உணவுத்தொழில் புரிபவர்கள் மட்டுமல்ல, உணவை உண்ணச் செல்லும் நாமும் இதனை அறிந்து கொண்டால், நல்ல பாதுகாப்பான உணவு கிடைக்குமிடங்களை, நன்றாய் அறிந்து கொள்ளலாம்தானே!
  • From Farm to Fork- உணவுப்பொருள் உற்பத்தியாகும் இடத்திலிருந்து, உண்பது வரை, உன்னத நிலையிலிருக்க வேண்டும்.
                                       
  • இச்சட்டம் அமலுக்கு வந்தபின்னர், (உணவுத்தரம் குறித்த) அனைத்து சட்டங்களும், பிரிவுகளும் காலாவதியாகிவிட்டன.
  • உணவு கையாள்பவர்களுக்கு புதிய உரிமம் வழங்கப்படும். உரிமம் அற்றவர்கள் சட்டத்திற்கு புறம்பாக பணியிலிருப்பதாக கருதப்படுவார்கள்.
                                    
  • உணவுக்கலப்பட தடைச்சட்டம், உணவுப்பொருளின் குறைந்த பட்ச தரம் பற்றி மட்டுமே சொன்னது. புதிய சட்டத்தில், ’தரக்குறைவான  உணவு ’ மற்றும் ’பாதுகாப்பற்ற உணவு’ என இரு தலைப்புகளின் கீழ் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
  • இதுவரை உள்ளாட்சிப்பகுதிகளிலும், ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளிலும், பகுதி நேர உணவு ஆய்வாளர்களாகப் பணியாற்றியவர்கள், தற்போது முழுநேர உணவு பாதுகாப்பு அலுவலர்களாக, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை யின் (FOOD SAFETY AND DRUG ADMINISTRATION DEPARTMENT) கீழ் பணிபுரிகின்றனர்.
  • புதிய சட்டம், உணவு போக்குவரத்து, உணவைக் கையாளும் பணியாளர்களின் உடல்நலம் ஆகியவற்றிலும் கவனம் கொள்கிறது.
                               
  • உணவக உரிமையாளர்களின் பொறுப்பு, உணவகத்தையும் தாண்டி, உணவுப்பொருள் தயாரிப்பிற்கான மூலப்பொருள்கள் வாங்குவதிலிருந்தே தொடங்குகிறது. எடுத்துக்காட்டாக: ஒரு உணவகத்தில் உண்ட உணவு, நஞ்சுணவு என அறியப்பட்டால், அந்த உணவைத் தயாரிக்கப் பயன்படுத்திய மூலப்பொருள்கள் வாங்கிய இடம், அதனை முறையாகப் பராமரித்த விதம் போன்றவற்றிற்கு அந்த உணவகத்தில் உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும்.
  • உணவில் பயன்படுத்தும் இணைபொருட்கள்(FOOD ADDITIVES), செயற்கை வண்ணங்கள்(ARTIFICIAL FOOD COLOURS) போன்றவை , இந்திய தர நிர்ணயச் சட்டத்திற்கு(ISI) உட்பட்டு தயாரிக்கப்பட்டவையா எனப் பார்த்து வாங்கவேண்டும்.
  • ஒரு உணவகத்தில் உணவு தயாரிக்கும் முறைகளையும், குளிர்சாதன வசதிகளையும், சமைத்த உணவை வைத்திருக்க வேண்டிய வெப்ப நிலை, குளிர்வித்த உணவை சூடாக்கும் முறை ஆகியவற்றையும் இச்சட்டம் விளக்குகிறது.
  • ஒரு மத்திய உற்பத்தி நிலையத்தில் உணவு தயாரிக்கப்பட்டு, பல உணவகங்களுக்கு விநியோகம் செய்யப்படும் முறையினைப் பின்பற்றினால், உணவில் குறைபாடு அறியப்பட்டால், அதனை திரும்பப்பெறும் வசதி(FOOD RECALL PROCEEDURE) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • இருவேறு எண்ணெய்களைக் கலந்து உணவுப்பண்டங்கள் தயாரிப்பதை அனுமதிக்கவில்லை.
                                             
  • இச்சட்டத்தில் உடனடி அபராதத்தொகை செலுத்தும் முறை மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடரும் நடைமுறையும் உள்ளது. 
  • தயாரிப்பு தேதி, எந்த தேதி வரை பயன்படுத்த உகந்தது மற்றும் மூலப்பொருள்கள் விபரம் இல்லாத பொருள்கள் உணவகக் கிட்டங்கிகளில் இருப்பில் இருக்கக்கூடாது.
  • உணவகங்களில் பூச்சி மற்றும் எலி ஒழிப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான கால அட்டவணை தயார் செய்து, அதன் விபரம் பதிவேட்டில் பதியப்பட்டு ஆய்விற்கு வைக்கப்படவேண்டும்.
  • உணவகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு,முறையான பயிற்சி அளிக்கப்படுவதுடன், அவரவரின் கடமை குறித்த விளக்கங்கள், அந்தந்தப் பகுதியில், அவர் அறியும் வண்ணம் அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும்.
                முந்தைய சட்டத்தைப்போல், அனைத்து குறைபாடுகளுக்கும், அதாவது உணவில் கலப்படம் செய்தாலும், உரிய விபரங்களை லேபில்களில் குறிப்பிடாவிட்டாலும், குறைந்த பட்சம்,ஆறு மாதம் சிறைத்தண்டனையுடன் ஆயிரம் ரூபாய் அபராதம் என்றிருந்த நிலை மாறி, உணவுத்தொழில் புரிவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குறைகளை சுட்டிக்காட்டி கால அவகாசம் அளித்து திருத்தச் செய்தல், உணவில் தரமில்லையெனில் திரும்பப்பெறுதல் என்ற நிலைகளையும் தாண்டி, திருந்த அடம் பிடிப்பவர்களை மட்டும் குற்றச்சாட்டு சுமத்தி,சட்டத்தின் முன் நிறுத்துதல் என படிப்படியாக பல நிலை அணுகுமுறையினை புதிய சட்டம் கொண்டுள்ளது.                                       உணவு தயாராகி,இன்னும் வரும் . . .             
Follow FOODNELLAI on Twitter

17 comments:

Unknown said...

அண்ணே பல விஷயங்க தெரிந்துகொண்டேன்...தவறு செய்பவர்கள் அது தங்கள் சந்ததியய்யும் தான் பாதிக்கும் என்று உணர்ந்தால் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிரேன்!

இராஜராஜேஸ்வரி said...

மிகவும் பயனுள்ளது..
அனைவரையும் சென்று சேர்ந்து நினைவில் நிறுத்தவேண்டிய மதிப்புமிகுந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

சார், நல்ல லாபம் பார்த்தவன் திருந்துவான்னு நினைகிரிங்களா?

Unknown said...

உணவகத்தில் முந்திரி ஓடுகளை வைத்து எரிப்பது தொடர்பாகவும்,தவிட்டு எண்ணை பயன்படுத்துவதையும், தடுக்கும் சட்டம் உள்ளதா?
உணவு தயாரிக்கும் பொருட்கள் கலப்படம் இருக்கிறதா? என அறியும் முறைகள் பிரபல உணவகங்களில் கூட இல்லை...அதைபற்றிய விழிப்புணர்வு அவர்களிடமும் இல்லை அரசு இதை எப்படி தெளிவு படுத்த உள்ளது?

Unknown said...

உணவுச் சட்டங்கள் இவ்வளவு சரியாக இருந்தும் 99% உணவகங்கள் எதையும் மதிப்பதில்லை...

ஒரு காலத்தில் உணவு கொடுப்பதை தெய்வகாரியமாக மதித்த ஊர் நம்முடையது.

காலமும், பணமும் மனிதனை சுயநலமாக மாற்றிவிட்டது..

Prabu Krishna said...

இது பற்றி அறிய நினைத்தேன் பதிவின் மூலம் அருமையாக சொல்லி விட்டீர்கள்.

//உணவு தயாராகி,இன்னும் வரும் . . . //

காத்திருக்கிறேன்.

கோகுல் said...

இவ்வளவு பாதுகாப்பு முறைகள் இருக்கிறதா சார்?இவற்றில் ஏதாவது குறை கண்டுபிடித்தால் புகார் செய்ய உண்டான அணுகுமுறைகளை வரும் பதிவுகளில் தருவீர்கள் என நம்புகிறேன்.

MANO நாஞ்சில் மனோ said...

அஹா இம்புட்டு விஷயமெல்லாம் இருக்கா ஆபீசர் மிக்க நன்றி...!

MANO நாஞ்சில் மனோ said...

பெல்ட்டை கழட்டி பெண்டை நிமித்துங்க ஆபீசர், நானும் வாரேன் துணைக்கு...!

முத்தரசு said...

எல்லா விசயங்களும், சட்டங்களும் இருக்கு பேப்பர்ல....யாரு சார் மதிகிறாங்க.

தகவலுக்கு நன்றி

Unknown said...

தகவலுக்கு நன்றி

தஞ்சை குமணன் said...

பயனுள்ள பதிவு நன்றி சார்.

Rathnavel Natarajan said...

அருமையான, பயனுள்ள பதிவு.
நன்றி ஐயா.

கூடல் பாலா said...

நல்ல திட்டங்கள் ...நடை முறை படுத்துபவர்களுக்கு பாராட்டுக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ஆபீசர். தொடருங்கள்! வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுடன் இருந்தாலே, விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் மாறிவிடுவார்கள். அந்த வகையில் உங்கள் முயற்சி வரவேற்கத்தக்கது.

Pespro said...

சட்டம் உங்கள் கையில் .அதனை திறம்பட செயல்படுத்துவது உங்கள் கடமை. உங்கள் கடமைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து சட்டம் வழி நடப்பது உணவு உற்பத்தியாளரின் பொறுப்பு. பாதுகாப்பான உணவு , வளமான வாழ்விற்கு வழிகாட்டும் உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் பாராட்டுக்களும்.

DIAMOND said...

அருமையான, பயனுள்ள பதிவு.பாராட்டுக்கள்!!!!