இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 7 October, 2011

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப் போடலாம் வாங்க

என்ன ஓட்டு போடலாமா?
எங்க போறம்? ஓட்டு சாவடிக்கு.
என்னெல்லாம் இருக்கும்? யாரெல்லாம் இருப்பாங்க?
தலைவர் தேர்தல் மற்றும் உறுப்பினர் தேர்தலுக்கு தலா கட்டுப்பாட்டு கருவி ஒன்றும், வாக்களிக்கும் கருவி ஒன்றும் இருக்குங்க.
இதுதாங்க கட்டுபாட்டுக் கருவி.

நான் காட்டுவது, கட்டுபாட்டு கருவியின் பின்னாலிருக்கும், On/Off சுவிட்ச்.
இதுதாங்க ஓட்டளிக்கும் கருவி.

ஒரு ஓட்டு சாவடிக்கு வெளியே, அந்த ஓட்டு சாவடியில் எந்தெந்த பகுதியில் வசிப்பவர்கள் வாக்களிக்கலாம் என்ற விபரம் அறிவிக்க பட்டிருக்கும். வெளியில் ஒரு காவல் துறை அலுவலர் பணியில் இருப்பார். ஆண் பெண் வாக்காளர்களுக்கு இரு தனித்தனி வரிசை அமைக்கப்பட்டிருக்கும்.
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளைப் பொறுத்தவரை, முந்திய தேர்தலில், நாம் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்போம். அவர்கள், தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இம்முறை, ஒரே தேர்தலில், இரு முறை வாக்களிக்கப் போகிறோம். ஆம், ஒவ்வொரு வாக்காளரும், அவர்தம் பகுதிக்குரிய உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதைப்போன்றே, தலைவரையும் ஓட்டு போட்டு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்போகிறோம்.உள்ளே நுழைந்தவுடன், வாக்கு சாவடி தலைமை அலுவலர் ஒருவர் இருப்பார். முதலிலுள்ள வாக்குப்பதிவு அலுவலர், உங்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் ஸ்லிப்பை சரி பார்த்து, வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரை சத்தமாக வாசிப்பார். அதை அங்கிருக்கும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் கேட்டு அவர்கள் கையிலிருக்கும், வாக்காளர் பட்டியலில் சரி பார்ப்பர். வாக்காளரை சரி பார்த்தவுடன், உங்கள் கையொப்பம் அல்லது விரல் ரேகையை, பதிவேட்டில் பெற்று கொண்டு, தலைவர் தேர்தலில் வாக்கிட, ஓட்டுப் போட ஸ்லிப் ஒன்றைக் கொடுத்து,ஓட்டு போட உங்களை அனுப்புவார். அதற்கடுத்து இருக்கும் அலுவலர்-2, உங்கள் இடது கை ஆட்காட்டி விரலில் நகத்தின் மீதும், விரலின் மீதும் படுமாறு, அழியாத மை இடுவார். அதனை அடுத்து இருக்கும் அலுவலர்-3, ஓட்டு ஸ்லிப்பை பெற்று கொண்டு,மேயர் தேர்தலுக்கான கட்டுப்பாட்டு இயந்திரத்தில் உள்ள வாக்களிக்க அனுமதிக்கும் பட்டனை அழுத்துவார்.
நீங்கள், வாக்களிக்கும் இயந்திரம் வைத்துள்ள பகுதி(VOTING COMPARTMENT)க்கு சென்று, உங்களுக்கு விருப்பப்படும் வேட்பாளர் பெயருக்கு எதிரில் இருக்கும் பட்டனை அழுத்தினால், பீப் ஒலியுடன், உங்கள் வாக்கு பதிவு செய்யப்படுவதை அறிந்து கொள்ளலாம்.நீங்கள் ஓட்டளித்த வேட்பாளர் பெயருக்கு எதிரில் உள்ள விளக்கு ஒளிரும். மீண்டும், நீங்கள் 3வது வாக்குப்பதிவு அலுவலரிடம் வந்து, உறுப்பினர் தேர்தலுக்கான பதிவேட்டில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும் இடத்தில் கையொப்பமிட்டு, அதற்கான ஓட்டு ஸ்லிப்பை பெற்றுக்கொண்டு, 4வது அலுவலரிடம் சென்றால், அவர் அந்த ஸ்லிப்பைப் பெற்றுகொண்டு, உறுப்பினர் தேர்தலுக்கான கட்டுப்பாட்டுக் கருவியில் ஓட்டளிக்க அனுமதிக்கும் பட்டனை அழுத்துவார். உறுப்பினர் தேர்தலுக்கான வாக்களிக்கும் இயந்திரம் வைத்துள்ள பகுதி(VOTING COMPARTMENT)க்கு சென்று, உங்களுக்கு விருப்பப்படும் வேட்பாளர் பெயருக்கு எதிரில் இருக்கும் பட்டனை அழுத்தினால், பீப் ஒலியுடன், உங்கள் வாக்கு பதிவு செய்யப்படுவதை அறிந்து கொள்ளலாம்.நீங்கள் ஓட்டளித்த வேட்பாளர் பெயருக்கு எதிரில் உள்ள விளக்கு ஒளிரும்.
ஜனநாக கடமையை முடித்த திருப்தியில், நீங்கள் வெளியே வாங்க.
இந்த தேர்தலில், பார்வையற்ற வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக, வாக்கு பதிவு இயந்திரத்தில், ஓட்டு போடும் பட்டன்களுக்கு அருகில், பிரைலி எழுத்துக்களையும் பொறிச்சிருக்காங்க.
இதையும் தெரிஞ்சுகோங்க:
என்னை போல ஒரு மண்டல அலுவலர்: திரு.சாகுல் ஹமீது.
அவரின் விளக்கங்கள் சில:
அது என்னாங்க 71?:
உங்கள் தொகுதியில் தேர்தலில் நிற்கும் எவருக்கும் உங்களுக்கு வாக்களிக்க விருப்பம் இல்லையா? ஓட்டு சாவடிக்குள் நுழைந்து, ஓட்டு போட ஸ்லிப் வாங்கிய பின்தான் இந்த எண்ணம் வருகிறதா? உங்களுக்குக்கான பிரிவுதான் 71. இந்த பிரிவின்படி, நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என தெரிவித்து,அதனை வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்து, கையொப்பம் இட்டு வெளியேறலாம்.
ஆய்விற்கு உரிய ஓட்டுன்னா -அது என்னாங்க? :
ஏற்கனவே போடப்பட்ட ஓட்டு ஒன்று தவறாக போடப்பட்டது என வாக்காளர் ஒருவர் வாக்கு சாவடி தலைமை அலுவலர் முன் ஆஜராகி புகார் தெரிவித்தால், தலைமை அலுவலர் அவரை விசாரித்து அவரது அடையாளத்தில் திருப்தி பட்டால், அவருக்கு ஓட்டு சீட்டு ஒன்று கொடுத்து அதில் வாக்கிட அனுமதித்து, அந்த ஓட்டு சீட்டை தனிகவரில் போட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைப்பார்.
எதிர்க்கப்பட்ட ஓட்டுன்னா -அது என்னாங்க? :
வாக்காளர் ஒருவர் ஓட்டு போட வரும்போது, வாக்கு சாவடியில் இருக்கும் முகவர் எவரேனும் அவர் தவறான நபர் என்று வாதிட்டால், வாதிடும் முகவர் ரூபாய் பத்து செலுத்தி ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும். வாக்கு சாவடி தலைமை அலுவலர் அவரை விசாரித்து, அவர் தவறான நபர் என்று தெரியவந்தால், அவரை காவல் துறை வசம் ஒப்படைப்பார். அந்த நபர் சரியான நபர் என்று நிரூபிக்க பட்டால், அவரை வாக்களிக்க அனுமதிப்பார்.
டிஸ்கி-1: ஒரு வாக்காளராய், என்னவெல்லாம் செய்ய கூடாது?:
  • ஓட்டு போடும் கடமையை மறக்க கூடாது.
  • ஓட்டு போட, வேட்பாளர் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் ஓட்டு சாவடிக்கு வரக்கூடாது.
  • ஓட்டு போடும் போதோ, ஓட்டு போட்டு விட்டு வெளியே வரும்போதோ, எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என்று மற்றவர்கள் அறியும் வண்ணம் சொல்லக்கூடாது.

    டிஸ்கி-2:
    இது இந்த தேர்தலுக்கு தக்க வகையில் திருத்தம் செய்யப்பட்ட ஒரு மீள் பதிவு.
Follow FOODNELLAI on Twitter

39 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் ஓட்டு...

MANO நாஞ்சில் மனோ said...

இருங்க படிச்சுட்டு வாறேன்...

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் இணைச்சி ஓட்டும் போட்டாச்சு...

MANO நாஞ்சில் மனோ said...

மீள்பதிவுன்னாலும், எல்லாரும் தெரிந்து கொள்ள வசதியா இருக்கும் நன்றி ஆபீசர்...

MANO நாஞ்சில் மனோ said...

கிளாஸ் எடுக்கும் போது பெல்ட்டை கையில் வைக்கிறதில்லையா, நானும் சிபி'யும் வந்தா மட்டும்தான் பெல்ட் எடுப்பீங்களா...?

இருங்க அவன்கிட்டே போட்டுகுடுக்குறேன்...

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணன் அன் டைம்ல போஸ்ட் போட்டிருக்காரே?


ஆனா நல்ல போஸ்ட் தான்

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

கிளாஸ் எடுக்கும் போது பெல்ட்டை கையில் வைக்கிறதில்லையா, நானும் சிபி'யும் வந்தா மட்டும்தான் பெல்ட் எடுப்பீங்களா...?

இருங்க அவன்கிட்டே போட்டுகுடுக்குறேன்...

தம்பி லேப்டாப் மனோ, இன்னும் இந்த போட்டுக்குடுக்கற வேலையை ரிசைன் பண்னலையா?

Prabu Krishna said...

ஆமா ஓட்டுக்கு எவ்ளோ பணம் கொடுப்பாங்கன்னு சொல்லவே இல்லையேப்பா? ஹி ஹி ஹி

ஊராட்சி கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலருக்கு நாம் ஓட்டுப் போட மாட்டோமா?

இதுவரை உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளித்தது இல்லை. இதுதான் முதல் முறை. அதான் டவுட்டு

K said...

வணக்கம் ஆஃபீசர்! ஓட்டளிப்பு இயந்திரம் பற்றிய உங்கள் விளக்கம் அருமை! படங்களும் கலக்கல்!

பெரிய ஆஃபீசர்தான்! நன்றி சார்!

Unknown said...

அண்ணே அழகா படங்களுடன் விளக்கப்படுத்தி சொல்லி இருக்கீங்க நன்றி!

Unknown said...

ஓட்டு போட்டாச்சு

செங்கோவி said...

நல்ல விளக்கம்..நன்றி.

FOOD said...

/செங்கோவி said...
நல்ல விளக்கம்..நன்றி.//
ஓட்டு போட ஊருக்கு வாறீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆபீசர் ஜனநாயகக் கடமைய அருமையா பண்ணிட்டார்......

Unknown said...

நல்ல பதிவு சார் ரொம்ப விரிவா விளக்கியிருக்கீங்க மொதோ தடவ ஒட்டு போடப்போறவங்களுக்கு உபயோகமா இருக்கும்.

ஆனா பூத்துக்கு போகாதவங்களுக்கு என்ன செய்யாலாம் சார்!!?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பயனுள்ள தகவல் .
தகவலுக்கு நன்றி.

settaikkaran said...

உங்க வேலையை நீங்க பண்ணிட்டீங்க! இனி, நாங்களும் ஓட்டுப்போட்டுர வேண்டியதுதான்! :-)

FOOD said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆபீசர் ஜனநாயகக் கடமைய அருமையா பண்ணிட்டார்......//
இன்னும் கொஞ்ச நாளைக்கு, தேர்தல் வேலையில பிஸியா இருப்போங்கறதுக்கு முன்னோடி இந்த பகிர்வு

FOOD said...

// ஜ.ரா.ரமேஷ் பாபு said...
நல்ல பதிவு சார் ரொம்ப விரிவா விளக்கியிருக்கீங்க மொதோ தடவ ஒட்டு போடப்போறவங்களுக்கு உபயோகமா இருக்கும்.

ஆனா பூத்துக்கு போகாதவங்களுக்கு என்ன செய்யாலாம் சார்!!?//
அசெம்ப்ளி தேர்டலுக்கும், இந்த உள்ளாட்சி தேர்தலுக்குமே நிறைய வித்யாசம் இருக்கு. அதை சொல்லத்தான் இந்த பதிவு.

FOOD said...

// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பயனுள்ள தகவல் .
தகவலுக்கு நன்றி.//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

FOOD said...

// சேட்டைக்காரன் said...
உங்க வேலையை நீங்க பண்ணிட்டீங்க! இனி, நாங்களும் ஓட்டுப்போட்டுர வேண்டியதுதான்! :-)//
ஓட்டு போடும் வயசு வந்துட்டுன்னு சொல்றீங்க. நம்புறோம் சார்.

Unknown said...

ஓட்டு போட கத்து கொடுத்துடீங்களா சார்

இராஜராஜேஸ்வரி said...

ஓட்டு போடும் கடமையை மறக்க கூடாது. /

பயனுள்ள தகவல் .
தகவலுக்கு நன்றி.

கோகுல் said...

ஆபிசர் சார் எனக்கொரு சந்தேகம் 49-o-க்கும் ,71 -க்கும் என்ன வித்தியாசம்?

Rathnavel Natarajan said...

தேர்தலில் வாக்கு செலுத்துவதைப் பற்றிய பட விளக்கங்களுடன் கூடிய அருமையான பதிவு.
நன்றி ஐயா.

சென்னை பித்தன் said...

நன்று.

கோகுல் said...

விளக்கமளித்தமைக்கு நன்றி!சார்!

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

அட நல்ல விளக்கம். நன்றிகள் கோடி

துபாய் ராஜா said...

தேவையான நேரத்தில் தேவையான பதிவு. பகிர்விற்கு நன்றி.

ம.தி.சுதா said...

இன்றைக்கு நம்ம நாட்டில தேர்தல் நடக்கிறது..

சுஜாதாவை என்றைக்குமே மறக்க முடியாது.. தங்காள் போட்டுள்ள ஒவ்வொரு படத்திலும் அவர் முகமே ஜொலிக்கிறது..

ம.தி.சுதா said...

அண்ணரே ஏன் புறோபைல் மாத்திட்டிங்க இதில உள்ளது போல முயற்சியுங்களேன்...

http://www.mathisutha.com/2011/10/hackers.html

Sivakumar said...

எதிர்க்கப்பட்ட ஓட்டு..நல்ல ஐடியா. தேர்தல் பணி சிறக்க வாழ்த்துகள்.

FOOD said...

//சிவகுமார் ! said...
எதிர்க்கப்பட்ட ஓட்டு..நல்ல ஐடியா. தேர்தல் பணி சிறக்க வாழ்த்துகள்.//
நல்ல விஷயமே உங்க கண்ல படாதா!

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் ஆப்பிசர்,
வெள்ளி சனி, ஞாயிறு கொஞ்சம் பிசியாகி விட்டேன்,
கிடைத்த நேரத்திலும் ஒரு சில பதிவுகளைத் தான் படிக்க முடிந்தது.
மன்னிக்கவும்,

நிரூபன் said...

அனைத்து மக்களும் ஓட்டுப் போடுவது தொடர்பாக அறிந்து கொள்வதற்கும்,
பூரண விளக்கத்தினைப் பெறுவதற்கும் ஏதுமான விளக்கப் படங்களுடன் கூடிய விரிவான பதிவு!
நன்றி பாஸ்.

Anonymous said...

@ FOOD

//நல்ல விஷயமே உங்க கண்ல படாதா!//

நீங்கள் கண்டுபிடிக்கும் "கலப்பட பொருட்கள்" கெட்டவைதானே சார்? அது மாதிரிதான் இதுவும். என்ன சொல்றீங்க?

ம.தி.சுதா said...

அண்ணாச்சி... palaapattarai.blogspot.com

இந்த தளம் மல்வெயர் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதால் தங்கள் தளத்தினுள் உள் நுழைய அனுமதியில்லை என எனத குரோம் தடுக்கிறது..

ம.தி.சுதா said...

இப்ப ஓகே சகோதரம்... முடிந்தால் அந்த தளத்திற்குரியவருக்கு தகவலை சேர்ப்பித்து விடுங்கள்...

எனக்குத் தெரிந்தவரை புளொக்கில் வருவத குறைவு அப்படி வந்தால் நாம் ஏதாவது புதிதாக தளத்தை இணைத்திருந்தால் வரலாம் அதை நீக்க வண்டியது தான்...

அ. வேல்முருகன் said...

என் போன்றோருக்கு ஓட்டு போடாதே என்றுதான் கற்று தந்திருக்கிறார்கள். வாழ்நாளில் ஒருமுறையும் ஓட்டுப் போட்டதில்லை. ஓட்டு போடாதீர்கள் என்றுதான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படியே தங்களையும், தங்கள் தளத்தை பார்க்க வருபவர்களையும் வேண்டுகிறேன்.

ஏன் ஓட்டுப் போடக்கூடாது.

ஒரு மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு பதினைந்து லட்சம் செய்ய வேண்டும் என சொல்கிறார்.

ஏன் பலமுனை போட்டி, ஏன் அண்ணணும் தம்பி எதிர்த்து நிற்கின்றனர்.

அரசியல் சேவை என்பதலிருந்து மாறி உழைக்காமல் சாம்பாதிக்கும் வழி என மக்கள் மனதில் ஊறி விட்டது.

10% கழிவு எந்த வார்டில் எந்த செயல் நடந்தாலும் என்ற விதியான பின்பு ஏன் இந்த போட்டி இருக்காது.

மின் விளக்கு மாற்ற, தார்சாலை அமைக்க, தண்ணீர் குழாய் பதிக்க, அல்ல எந்தவொரு நலத்திட்டங்கள் நடந்தாலும் அது வருவாய்க்கான வழி

அப்படி ஒரு தேர்தலுக்கு வாக்களி என்று எந்த ஒரு நேர்மையான அதிகாரியும் கோரமாட்டார்கள் என நம்புகிறேன்.