இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 3 January, 2012

விசாலினி இந்தியாவின் விடிவெள்ளி


                                
              ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!

                              வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.
                                         
                                     வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே,  பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.

                                        கல்லூரியில் பயிலும் B.E., B.TECH  மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர். 
15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.


                                                     
                                         இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச்செய்தது.  இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது. 
                                                 
                                            உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின்  தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

           MCP     (Microsoft Certified Professional)

   CCNA   (Cisco Certified Network Associate),

   CCNA Security(Cisco Certified Network 

                 Associate Security),

   OCJP   (Oracle Certified Java 
                 Professional).
 
                                         


               CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து  THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.                  

           உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com    

வேண்டுகோள்:1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.
      2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!
இன்று (05.01.2012)குற்றாலத்தில் விடிவெள்ளி விசாலினிக்கு நடைபெற்ற பாராட்டு  விழா புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:விசாலினியின் டுடும்பத்தினருடன் பதிவர்கள் சங்கரலிங்கம்,செல்வகுமார்,
மதுரை சரவணன்,சீனா அய்யா.


அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் விசாலினிக்கு,
தமிழ்பதிவர்கள் சார்பாக கேடயம் வழங்குகிறார்.


தொலைக்காட்சி பேட்டியில் விசாலினி


விசாலினியின் பெற்றோருடன் உணவு உலகம் சங்கரலிங்கம்,
செல்வா ஸ்பீக்கிங் செல்வகுமார்.

நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பு:
நன்றி:தேவா (தடை பல கடந்து, படம் வெளியிட துணை புரிந்ததற்கு)
தினமலரில் நிகழ்ச்சி குறித்த செய்தி:
 

Follow FOODNELLAI on Twitter

43 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் வாழ்த்து

இராஜராஜேஸ்வரி said...

இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். , நெல்லை மண்ணின் மகளுக்கு நிறைவான

பாராட்டுக்களும் வாழ்த்துகளும்..

முத்தரசு said...

இந்த பதிவை நா மேலிருந்து படிக்காமல் - ஒரு மாறுதலுக்கு கீழிருந்து வாசித்தேன் -//சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!//

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அண்ணா,

இளங் காலைப் பொழுதில் அருமையான, கொஞ்சம் ஆச்சரியப்படவைக்கும் சேதியினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
இந்தச் சிறுமி மென் மேலும் தொழில்நுட்பத்திலும், கல்வியிலும் சிறப்புற்று விளங்க நாமும் வாழ்த்துவோம்!

நான் இந்தப் பதிவினை என் தளத்தில் உங்கள் அனுமதியுடன் அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

Unknown said...

அண்ணே சாதனை குழந்தைக்கு வாழ்த்துக்கள்...பகிர்ந்த தங்களுக்கும்!

Anonymous said...

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்

குரல்களுக்கேற்ப தாய் தந்தை மட்டுமல்லாது தாய் நாட்டுக்கும் பெருமை சேர்த்த நீ (விசாலினி) மேலும் மேலும் சாதனைகள் பல புரிந்து புகழடைய பிரார்த்திகிறேன்..


இதோ மெயில் அனுப்பியாசுங்க...........

rajamelaiyur said...

இதை என் மாணவர்களுக்கு பகிர்கின்றேன் ..

நாய் நக்ஸ் said...

Vazhthukkal.....
Intha seithiyai....
Ullagam muzhuvathum....
Kondu sella vendum....

Kousalya Raj said...
This comment has been removed by the author.
Kousalya Raj said...

மிக ஆச்சர்யபட்டு போனேன்...நம்ம ஊர்ல இந்த சுட்டிப்பெண் இருக்கிறாள் என்பது பெருமையாக இருக்கிறது அண்ணா.

நேரில் சந்தித்து பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் சொல்லவேண்டும்.

உங்கள் அனுமதியுடன் என் தளத்திலும் பகிர்கின்றேன்.

நன்றிகள் அண்ணா.

cheena (சீனா) said...

அன்பின் விசாலினிக்குப் பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - பகிர்வினிற்கு நன்தி சங்கரலிங்கம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

MANO நாஞ்சில் மனோ said...

விசாலினிக்கு என் அன்பின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், உங்களுக்கு நன்றிகளும் ஆபீசர்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

இதோ இப்பவே பாராட்டி மெயில் அனுப்புகிறேன்...!!!

arasan said...

அன்பு வாழ்த்துக்கள் உங்களுக்கும் அந்த சாதனை சிகரத்துக்கும் ...

Unknown said...

பாரட்டுக்களும்
வாழ்த்துக்களும்

Starjan (ஸ்டார்ஜன்) said...

விசாலினியின் திறமைகளை வெளிகொணர்ந்த பெற்றோர்களும் ஆசிரியர்களும் முதலில் பாராட்டப்படவேண்டியவர்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். விசாலினி மேன்மேலும் பல திறமைகளை வெளிப்படுத்தி பல உலக சாதனைகள் பெற என் ம்னமார்ந்த வாழ்த்துகள்.

நன்றி பகிர்வுக்கு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆபீசர், தங்கள் அனுமதியுடன் நானும் என்னுடைய தளத்தில் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி.

செல்வா said...

ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது சார். நான் எனது வாழ்த்தினை மின்னஞ்சலில் அனுப்பிவிட்டேன்.

அவரது சாதனைகளைப் பற்றி எழுதியமைக்கு நன்றிகள்!

சக்தி கல்வி மையம் said...

அற்புதமான சாதனை.,

வாழ்த்துக்கள்...

Unknown said...

சாதனைப் படைத்த தமிழ்மகள் விசாலினிக்கு எனது மனமுவந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்!

Rathnavel Natarajan said...

எங்களது மனப்பூர்வ வாழ்த்துகள்.

Unknown said...

குழந்தை மேன்மேலும் பல சாதனைகள் புரிந்து இன்று தமிழகத்தின் விடிவெள்ளி, நாளை உலகத்தின் விடிவெள்ளியாக பிரகாசிக்க...வாழ்த்துகிறேன்..பிராத்திக்கிறேன்.

சென்னை பித்தன் said...

பிரமிக்க வைக்கும் சாதனை!என் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தி விடுகிறேன்.

ஹாலிவுட்ரசிகன் said...

என்னுடைய ஐ.க்யு ஐ விட சற்று கம்மிதான். :P ஆனாலும் 14 வயது என்பதால் இந்த நெல்லையின் சாதனை சிறுமிக்கு அன்பு வாழ்த்துக்கள். மேலும் பல சாதனைகளைப் புரிந்து இனிய வாழ்க்கை வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அபாரமான சாதனை, வாழ்த்துகள்.....!

அம்பாளடியாள் said...

அரிய சாதனைகள் படைத்த இந்தக் குழந்தையை ஈன்றவர்கள்
பெரும் பாக்கியசாலிகள் .மெய் சிலிர்க்க வைக்கின்றது இத்
தகவல்!.. .வாழ்த்துக்கள் மென்மேலும் இவளது சாதனை உலக
அரங்கில் பேசப்பட வேண்டும் .நிட்சயம் இவளது சாதனை
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும்.அந்த வயசெல்லை
வரும்போதும் இவளது சாதனைப் படிகள் இரட்டிப்பாக உயர எம்
இதயங் கனிந்த நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
சகோதரரே அருமையான தகவல் ஒன்றினைப் பகிர்ந்துகொண்டமைக்கு .

M.R said...

பாராட்டத்தக்க அறிவுத்திறன் பெற்ற அந்த குழந்தைக்கு எனது பாராட்டுக்கள்

அன்புடன் நான் said...

விசாலினுக்கு..... இந்த தமிழனின் கம்பீரமான வாழ்த்துக்கலும் பாராட்டுக்களும்.

RAJAMANICKAM said...

MY BEST WISHES TO VISALINI. VAZHGA VALAMUDAN.
BY
RAJAMANICKAM

Asiya Omar said...

நெல்லைக்கு பெருமை சேர்த்து உலகை திரும்பி பார்க்க வைத்த விசாலினிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

jk said...

I bow upon you !

You are the apt example for the word 'Prodigy'.

Let the almighty helps you in all your tasks.

Finally, Do some constructive things to India in the future !

Kousalya Raj said...

//DR.A.S.,NELLAI SAID IN HIS MAIL://

ரொம்ப சந்தோசமாக இருக்கு.
விசாலினியை வாழ்த்தி ஆசிர்வதித்த
அவருக்கு என் நன்றிகள் சொல்லிடுங்க அண்ணா.

துபாய் ராஜா said...

குழந்தை விசாலினிக்கும், குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்.

Jana said...

நீண்ட நாட்களின் பின்னர் சந்திக்கின்றோம் நண்பரே...
புதுவருட வாழ்த்துக்கள் இனி வழமைபோல அடிக்கடி சந்திப்போம்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் ...

Sivakumar said...

நெல்லைப்பெண் விஷாலினிக்கு வாழ்த்துகள்.

JSS said...

Fantastic brilliancy/children should bring credits to their parents like this/In this generation also, we are seeing future stars of IT intellectuals & experts.

Thangasivam said...

அபாரமான சாதனை விஷாலினிக்கு வாழ்த்துக்கள்...

MaduraiGovindaraj said...

அபாரமான சாதனை விஷாலினிக்கு வாழ்த்துக்கள்

ஆத்மா said...

உண்மையில் வெளியுலகிக்கு தெரியாத எத்தனையோ சாதனையாலர்கள் இன்னும் எம்முள் இருக்கிறார்கள் அவர்களின் சாதனைகளை வெளிக்கொண்டு வருவதற்காக இந்த பதிவுலகம் எடுத்துள்ள முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது....

எனக்கு இப்போதுதான் உங்கள் தளத்தின் இந்த பதிவுக்கான லிங்க் கிடைத்தது இதனை வழங்கிய சென்னை பித்தன் சாருக்கு மிக்க நன்றிகள்

தொடருங்கள் உங்கள் சேவைகளை

Unknown said...

உங்களை பார்த்து வாழ்பவன் சராசரி மனிதன் உலகம் பார்த்து வாழ்பவன் சாதனை மனிதன் சாதிப்போம் சாதனை படைப்போம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்களுடன் s.s.முகேஷ்

Unknown said...

நெல்லை மண்ணின் மகளுக்கு நிறைவான

பாராட்டுக்களும் வாழ்த்துகளும்..

Unknown said...

நெல்லை மண்ணின் மகளுக்கு நிறைவான

பாராட்டுக்களும் வாழ்த்துகளும்..