இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday 19 November, 2011

சட்டம் என்ன சொல்கிறது?-சற்றே சிந்திப்போமா!

மேடையில் சட்டநாதன், கலியனாண்டி,சங்கரலிங்கம்,இப்ராகீம்.               
                      உணவு பாதுகாப்பு சட்டம் இந்தியா முழுக்க கடந்த 05.08.2011 முதல் அமலுக்கு வந்துள்ளது.  புதிய சட்டத்தின் கீழ், உள்ளாட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், உணவு ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த உணவு ஆய்வாளர்களை, உணவு பாதுகாப்பை மட்டும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, புதிதாக உணவு பாதுகாப்புத்துறை என்று ஒன்றை உருவாக்கி, முழு நேர உணவு பாதுகாப்பு அலுவலர்களாக அரசு நியமித்துள்ளது.

உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.மாரியப்பன் விளக்கமளிக்கிறார்.
             மாநில அளவில், உணவு பாதுகாப்பு ஆணையர், இணை ஆணையர், மாவட்ட அளவில், ஒரு நியமன அதிகாரியின் (DESIGNATED OFFICER) கீழ், உள்ளாட்சிப்பகுதி மற்றும் ஒன்றிய பகுதிகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இருந்த உணவு கலப்பட தடைச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1954 என்பதால், அதனை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாயிற்று.

கலந்துரையாடலில் கலந்து கொண்ட நெல்லை வியாபாரிகள் சங்க பொறுப்பாளர்கள்.
                    புதிய சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள உணவு பாதுகாப்புத் துறையில், அமல்படுத்தப்பட உள்ள உணவு பாதுகாப்பு சட்டம் குறித்து வியாபாரிகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள். புதிய சட்டம், சில்லறை வணிகத்தை சீர்குலைத்துவிடுமோ என்று ஐயப்பாடுகள்.   
கலந்துரையாடலில் கலந்து கொண்ட நெல்லை மாவட்ட
உணவு பாதுகாப்பு அலுவலர்கள்.
                        அரசும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும்முன், ஆங்காங்கே வியாபாரிகளுடன், கலந்துரையாடல் நடத்தி, சட்டத்தின் நோக்கங்களை எடுத்துரைத்திட விரும்பிற்று. புதிய சட்டத்தின் நோக்கமே, உலக பொருளாதார சந்தையில், இந்திய உணவு பொருள்களின் தரத்தை உயர்ந்த நிலையில் வைப்பதுதான்.
உணவக உரிமையாளர்கள் சங்கம் சார்பாக திரு.ஜெயபிரகாஷ்

                                           இந்தியாவில் தயாராகும் ஒரு உணவுப் பொருள் இண்டர்நேஷனல்ஸ்டாண்டர்டில் இருந்திட வேண்டுமென்பதற்காக, 2006ல் உருவாக்கப்பட்டு, இன்று வரை பல நுணுக்கங்களைச் சேர்த்து செதுக்கியுள்ளது. 
            
சந்தேகங்கள்-விளக்கங்கள்.
                                             அத்தகைய சட்டத்தின்மேல், வியாபாரிகளுக்குள்ள சந்தேகங்களைப் போக்கும் விதமாக, நெல்லையில் ஓர் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாநரிலுள்ள அனைத்து வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

பாளை வியாபாரிகள் சங்க நிர்வாகியின் சந்தேகங்கள்,
விளக்கமளிக்க காத்திருக்கும் உணவு பாதுகாப்பு அலுவலர். 
                    ஏற்கனவே இருந்த சட்டத்தில், உணவில் கலப்படம் செய்தாலும், உணவுப்பொருள் பாக்கட் மீது ஒட்டப்பட்டுள்ள லேபிளில் தயாரிப்பு தேதி, பாட்ஜ் எண், மூலப்பொருட்கள் விபரம், எந்த தேதி வரை பயன்படுத்த உகந்தது போன்ற விபரங்கள் அச்சிடப்படாவிட்டாலும்,நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆறு மாதம் சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. 
                  புதிய சட்டத்தில், குற்றத்தின் தன்மைக்கேற்ப தண்டனை பலவாறு பிரிக்கப்பட்டுள்ளது. லேபிளில் குறைபாடு இருந்தால், அபராதம் மட்டுமே விதிக்கப்படும். உணவில் கலப்படம் செய்யப்பட்டு, அது உயிருக்கு ஊறு விளைவிக்குமானால், உயர்ந்த பட்சமாக, ஆயுள் தண்டனை வரை உண்டு.


கலந்துரையாடல் குறித்த தினமலர் நாளிதழ் செய்தி.
    சட்டத்தின் சாராம்சங்களை எடுத்துரைத்ததுடன், தவறு செய்யாதவர்கள் இந்த சட்டத்தைக் கண்டு கலங்கிட வேண்டாமென்பதையும் விரிவாய் எடுத்துரைத்தோம். கடும் லாபம் ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு,கலப்படம் செய்தால், கண்டிப்பாய்க் காப்புதான் என்றும் சொன்னோம். 
கலந்துரையாடல் குறித்த தினகரன் நாளிதழ் செய்தி.
                     வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு, கருத்துக்களைப் பகிர்ந்தனர். அவர்களின் சந்தேகங்களுக்கும் விடையளித்தோம். முடிவில், தெளிந்த மனதுடன், தெளிவாய் வியாபாரம் செய்வதாய் உறுதிபூண்டு சென்றனர். 
டிஸ்கி: சட்டத்தை அமல்படுத்துவது மட்டுமல்ல, அதனை அனைவரும் அறிந்துகொள்ள வைப்பதும் எங்கள் கடமைதான். 
Follow FOODNELLAI on Twitter

27 comments:

இராஜராஜேஸ்வரி said...

புதிய சட்டத்தின் நோக்கமே, உலக பொருளாதார சந்தையில், இந்திய உணவு பொருள்களின் தரத்தை உயர்ந்த நிலையில் வைப்பதுதான்/

அருமையான அறிந்துகொள்ள வேண்டிய
அவசியமான பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..

Unknown said...

எல்லோரும் படித்து பயனுற வேண்டிய அருமையான பதிவு.

செங்கோவி said...

//சட்டத்தை அமல்படுத்துவது மட்டுமல்ல, அதனை அனைவரும் அறிந்துகொள்ள வைப்பதும் எங்கள் கடமைதான்.//

நல்ல விஷயம் சார்..

nellai ram said...

அருமையான பதிவு.

Unknown said...

நல்ல விஷயம் சார்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

துபாய் ராஜா said...

படங்களோடு, விளக்கமான பதிவு. அருமையான பகிர்விற்கு நன்றி.

Unknown said...

அருமையான பதிவு

Unknown said...

சிறப்பான தகவல் ஐயா!

MANO நாஞ்சில் மனோ said...

நீங்கதான் ஆபீசர் ஆக்கப்பூர்வமா அசத்துறீங்க வாழ்த்துக்கள் ஆபீசர்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

சட்டத்தை அமல்படுத்துவது மட்டுமல்ல, அதனை அனைவரும் அறிந்துகொள்ள வைப்பதும் எங்கள் கடமைதான். //

உங்கள் நல்ல எண்ணத்திற்கு மிக்க நன்றி ஆபீசர்...

MANO நாஞ்சில் மனோ said...

உணவில் கலப்படம் செய்தால் மவனே காப்புதான் சாக்குரதை...

சென்னை பித்தன் said...

அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

சாந்தி மாரியப்பன் said...

அவசியமான பயனுள்ள பகிர்வு..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சட்டத்தைப்பற்றிய போதிய அனுபவமும், வாடிக்கையாளர் சட்டம் குறித்த அதிக விழிப்புணர்வும் இல்லாத காரணத்தால் தான் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்...


ஒவ்வோறு தகவலையும் அதை தேவையானவர்களுக்கு கொண்டு செர்க்க வேண்டும்...

தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

சி.பி.செந்தில்குமார் said...

>>புதிய சட்டத்தின் நோக்கமே, உலக பொருளாதார சந்தையில், இந்திய உணவு பொருள்களின் தரத்தை உயர்ந்த நிலையில் வைப்பதுதான்

aahaa ஆஹா , நல்லா சொன்னாங்க

Thangasivam said...

nice..........

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

வழக்கம் போல வழக்கமான பதிவு அல்ல !

அதற்கு மேல............

ரொம்ப நல்ல பதிவு .

ஏழாவது படத்தில் நம்ம

உணவு பாதுகாப்பு அலுவலர் அவர்கள்

சும்மா ஜம்முனு இருக்கிறார்.

பாதுகாப்பு அதிகாரி என்றால் இப்படித்தான்

இருக்க வேண்டும் ...

சூப்பர்

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

ஏழாவது படத்தில் நம்ம

உணவு பாதுகாப்பு அலுவலர் அவர்கள்

சும்மா ஜம்முனு இருக்கிறார்.

பாதுகாப்பு அதிகாரி என்றால் இப்படித்தான்

இருக்க வேண்டும் ...

சூப்பர்

Prabu Krishna said...

//சட்டத்தை அமல்படுத்துவது மட்டுமல்ல, அதனை அனைவரும் அறிந்துகொள்ள வைப்பதும் எங்கள் கடமைதான். //

இதுதான் முக்கியம். நன்றி அப்பா.

Rathnavel Natarajan said...

நல்ல பயனுள்ள பதிவு.
வாழ்த்துகள் ஐயா.

சக்தி கல்வி மையம் said...

லேபிளில் தயாரிப்பு தேதி, பாட்ஜ் எண், மூலப்பொருட்கள் விபரம், எந்த தேதி வரை பயன்படுத்த உகந்தது போன்ற விபரங்கள் அச்சிடப்படாவிட்டாலும்,நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆறு மாதம் சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது///

இந்த வழக்கை பொதுமக்களும் தொடரலாமா?

சக்தி கல்வி மையம் said...

கடும் லாபம் ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு,கலப்படம் செய்தால், கண்டிப்பாய்க் காப்புதான் என்றும் சொன்னோம். //இது சூப்பர்..

சக்தி கல்வி மையம் said...

சட்டத்தை அமல்படுத்துவது மட்டுமல்ல, அதனை அனைவரும் அறிந்துகொள்ள வைப்பதும் எங்கள் கடமைதான். //

உயர்ந்த நோக்கம் வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

\\சட்டத்தை அமல்படுத்துவது மட்டுமல்ல, அதனை அனைவரும் அறிந்துகொள்ள வைப்பதும் எங்கள் கடமைதான். \\

நல்ல பகிர்வு.

நிரூபன் said...

வணக்கம் ஆப்பிசர்,

நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

புதிய சட்டத்தின் பயனாக மக்களுக்குச் சுகாதாரமான உணவு வகைகள் கிடைக்கும் எனும் நம்பிக்கை வலுப் பெறும் என நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

Anonymous said...

நிறைய சேர் காலியா இருக்கே. ஏன் சார்?

Unknown said...

சட்டபடி...
நன்றி..
அப்படியே கொஞ்சம் நம்ம கடைக்கும் வாங்க
http://mydreamonhome.blogspot.com