என் மகளின் திருமண உறுதி நிகழ்ச்சி கடந்த 14.12.2011ல், சிறப்புற நடைபெற்றது. நேரில் வந்தும், மெயில் அனுப்பியும்,போஸ்ட்டில் கமெண்டியும், சாட்டில் வந்தும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றிகள்.
நிகழ்ச்சியின் நினைவலைகளை நெஞ்சில் சுமந்து நிற்கும் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு பகிர்ந்துள்ளேன்.
அடுத்து அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கொண்டே, இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியாதுன்னு பல காரணம் சொன்ன நண்பர்கள்,மறக்காம25.04.2012 ல், பாளையங்கோட்டை, செல்வி மஹாலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேடுக்கொள்கிறேன்.
இது கொஞ்சம் ஸ்பெஷல்:பஹ்ரைனில் இருந்தாலும், அன்று நாள் பூராவும் நெல்லை நினைவுகளுடன் இருந்த நம்ம நாஞ்சில் மனோவிற்கும், பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் பொறுப்பிலிருந்த ”நினைவில் நின்றவை” விஜயனுக்கும்,குடும்பச் சுற்றுலா பிசியில், ”திருமண வாழ்த்து”மெயில் அனுப்பி பல்பு வாங்கிய அயல்நாட்டிலிருக்கும் சகோதரிக்கும், நிகழ்ச்சியை மறுநாளே பதிவேற்றி வாழ்க பல்லாண்டு!! என வாழ்த்திய சகோதரிக்கும், இன்னும் இது பற்றி பதிவெழுதப்போவதாக சொல்லிக்கொண்டேயிருக்கும் உள்ளூர் சகோதரிக்கும்,வழக்கம்போல வயிறை நிரப்ப வருவதாகச் சொல்லி வராத சிபிக்கும், ”உணவு உலக” பதிவர் வீட்டில் ”உலக உணவு” கேட்டு, உண்ணவராத ”நண்பேண்டா” சிவகுமாருக்கும் ஸ்பெஷல் தாங்ஸ்.
இதுல மஞ்சள்கலர் சட்டை போட்டிட்டிருக்கிற சுமார் 35 வயது மதிக்கத் தக்க நபர் யாருன்னு, நம்ம விக்கி குமார் போல யாரும் கேள்வியெல்லாம் கேட்கக்கூடாதுங்க.
வந்திருந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள்.
டிஸ்கி: சில பதிவர்களின் ஆலோசனை+வேண்டுகோளுக்கிணங்க, பதிவில் சில மாற்றங்கள் செய்துள்ளேன்.

87 comments:
வாழ்த்துக்கள் ஐயா...
ஹிஹி எப்பிடி கண்டு பிடிக்கிறது அந்த கருப்பு பூனைகளை :P
வாழ்த்துகள் ஆஃபீசர்,
பட்டு வேட்டி கட்டி , டை அடிச்சு யூத் மாதிரி பில்டப் கொடுக்கும் ஆஃபீசரை வன்மையாக கண்டிக்கறேன் ஹி ஹி
ஜோசஃபின் கதைக்கிறேன், ரூபினா நாய்க்குட்டி மனசு , ஐ ஐ ஆம் கண்டு பிடிச்சிங்க், எங்கே பரிசு?
ஆஃபீசர், ஒண்ணூம் பிரச்சனை இல்லை, அடுத்த முறை நெல்லை வருகையில் ஓ சி சாப்பாடு சாப்பிட்டுக்கொள்கிறேன் ஹி ஹி
ஈரோடு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட போதுதான் நெல்லை பதிவர் சந்திப்பின் மகத்துவம் புரிந்தது, விரைவில் அது பற்றி ஒரு கம்பேரிஷன் பதிவு போடறேன் ஆஃபீசர்
>> அடுத்து அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கொண்டே, இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியாதுன்னு பல காரணம் சொன்ன நண்பர்கள்,மறக்காம25.04.2011 ல், பாளையங்கோட்டை, செல்வி மஹாலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேடுக்கொள்கிறேன்.
ayyayyoo, ஜெயில்ல தள்ளீட்டா? ஓக்கே இது கன்ஃபர்ம் , ஐ கமிங்க்
மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
கல்யாண நிகழ்ச்சி மிஸ் ஆக வாய்ப்பே இல்லை. இது போகத்தான் மீதி வேலை. மற்றவை எல்லாம் இறைவன் கையில். அந்த நன்னாளை மிகவும் எதிர்பார்ப்புடன் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.மணமக்களுக்கும் இதில் கலந்துகொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
// மைந்தன் சிவா said...
வாழ்த்துக்கள் ஐயா...
ஹிஹி எப்பிடி கண்டு பிடிக்கிறது அந்த கருப்பு பூனைகளை :P//
சி.பி.ஐ வரவழைப்போமா?
அடடா கல்யாணத்துல நாங்க இல்ல பரிசு கொடுக்கணும். இது புதுசா இருக்கே.
திருமணத்துக்கு கண்டிப்பாய் வந்து விடுகிறேன் அப்பா.
மணமக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
// சி.பி.செந்தில்குமார் said...
1.வாழ்த்துகள் ஆஃபீசர்
2.பட்டு வேட்டி கட்டி , டை அடிச்சு யூத் மாதிரி பில்டப் கொடுக்கும் ஆஃபீசரை வன்மையாக கண்டிக்கறேன் ஹி ஹி//
முதலில் வாழ்த்தி அப்புறமா வாரியும் விட்டுட்டீங்களே! மனோ எடுங்க அந்த அருவாளை!
// சி.பி.செந்தில்குமார் said...
ஈரோடு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட போதுதான் நெல்லை பதிவர் சந்திப்பின் மகத்துவம் புரிந்தது, விரைவில் அது பற்றி ஒரு கம்பேரிஷன் பதிவு போடறேன் ஆஃபீசர்//
ரொம்ப டீசண்டா இருக்கணும் சொல்லிபுட்டேன்.
// மோகன் குமார் said...
மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்//
நன்றி சகோதரரே.
// மோகன் குமார் said...
மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்//
நன்றி சகோதரரே.
// கே. ஆர்.விஜயன் said...
கல்யாண நிகழ்ச்சி மிஸ் ஆக வாய்ப்பே இல்லை. இது போகத்தான் மீதி வேலை. மற்றவை எல்லாம் இறைவன் கையில். அந்த நன்னாளை மிகவும் எதிர்பார்ப்புடன் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.மணமக்களுக்கும் இதில் கலந்துகொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.//
நன்றி விஜயன்.
மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் ...
// Prabu Krishna said...
அடடா கல்யாணத்துல நாங்க இல்ல பரிசு கொடுக்கணும். இது புதுசா இருக்கே.
திருமணத்துக்கு கண்டிப்பாய் வந்து விடுகிறேன் அப்பா.//
சகோதரியின் திருமணத்தை முன் நின்று நடத்துவது பிரபுவின் பொறுப்பல்லவா!
// Prabu Krishna said...
மணமக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.//
நன்றி பிரபு.
// தினேஷ்குமார் said...
மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் ...//
இந்த வருட இளம் தம்பதி நீங்கதானே. நன்றி.
பட்டுவேட்டி பட்டு சட்டை போட்டுக்கிட்டு ரொம்ப டெரரா இருக்கீங்க அந்தப் பார்வையிலே உள்ள கம்பீரம் ஐயோ நான் இல்லை என்று ஆளைத் தானே மிரள வைக்குறீங்க சார் ....
மணமக்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். இவர்கள் இருவரும் இணைபிரியாமல் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
சவுதியில் இருப்பதால் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லையே என்கிறபோது வருத்தம்தான்.
மிக்க நன்றியும், வாழ்த்துக்களும் ஆபீசர்...
எலேய் சிபி, ஆபீசர்தான் படு கம்பீரமா இருக்காருன்னா அவருகூட நிற்கும் மீசை அண்ணாச்சியும் படுபயங்கரமா இருக்காரே, கிரைம் பிராஞ்ச் ஆபீசரா இருக்குமோ, எலேய் சிபி அண்ணே உஷாரா இருந்துக்கோ, பாளையங்கோட்டை ஜெயில் பக்கத்துலதான் இருக்கு....
சி.பி.செந்தில்குமார் said...
பட்டு வேட்டி கட்டி , டை அடிச்சு யூத் மாதிரி பில்டப் கொடுக்கும் ஆஃபீசரை வன்மையாக கண்டிக்கறேன் ஹி ஹி//
நீ மட்டும் என்ன யோக்கியமாடா ராஸ்கல்...
சி.பி.செந்தில்குமார் said...
ஆஃபீசர், ஒண்ணூம் பிரச்சனை இல்லை, அடுத்த முறை நெல்லை வருகையில் ஓ சி சாப்பாடு சாப்பிட்டுக்கொள்கிறேன் ஹி ஹி//
ஓசி சாப்பாட்டுக்கும் ஒரு அளவு உண்டு தெரியுமா, நீ ஜானகிராமன் ஹோட்டல் சர்வர்கிட்டே ஓசி சாப்பாடு கேட்டு அடி வாங்குனவன்தானே ஹி ஹி...
சி.பி.செந்தில்குமார் said...
ஈரோடு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட போதுதான் நெல்லை பதிவர் சந்திப்பின் மகத்துவம் புரிந்தது, விரைவில் அது பற்றி ஒரு கம்பேரிஷன் பதிவு போடறேன் ஆஃபீசர்//
எஸ் எனக்கும் புரிகிறது நீ என்னத்தை எழுதப்போகிறாய் என்று, சீக்கிரமா எழுதுடா அண்ணே...
ayyayyoo, ஜெயில்ல தள்ளீட்டா? ஓக்கே இது கன்ஃபர்ம் , ஐ கமிங்க்//
கொய்யால நீ மட்டும் போகாம இரு அப்புறம் உன் போனின் கதி என்னாகும்னு பாரு...
இனிய வாழ்த்துகள் சார். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது :)
FOOD NELLAI said...
// சி.பி.செந்தில்குமார் said...
1.வாழ்த்துகள் ஆஃபீசர்
2.பட்டு வேட்டி கட்டி , டை அடிச்சு யூத் மாதிரி பில்டப் கொடுக்கும் ஆஃபீசரை வன்மையாக கண்டிக்கறேன் ஹி ஹி//
முதலில் வாழ்த்தி அப்புறமா வாரியும் விட்டுட்டீங்களே! மனோ எடுங்க அந்த அருவாளை!//
எட்றா சண்முகபாண்டி அந்த வீச்சருவாளை, பூட்ரா வண்டியை ஈரோட்டுக்கு.......
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
1.மணமக்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். இவர்கள் இருவரும் இணைபிரியாமல் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
2.சவுதியில் இருப்பதால் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லையே என்கிறபோது வருத்தம்தான்.//
நன்றி நண்பரே. உங்கள் வாழ்த்துக்கள் அவர்களை வளரவைக்கும்.
// MANO நாஞ்சில் மனோ said...
மிக்க நன்றியும், வாழ்த்துக்களும் ஆபீசர்...//
நன்றி மனோ.
// MANO நாஞ்சில் மனோ said...
எலேய் சிபி, ஆபீசர்தான் படு கம்பீரமா இருக்காருன்னா அவருகூட நிற்கும் மீசை அண்ணாச்சியும் படுபயங்கரமா இருக்காரே, கிரைம் பிராஞ்ச் ஆபீசரா இருக்குமோ, எலேய் சிபி அண்ணே உஷாரா இருந்துக்கோ, பாளையங்கோட்டை ஜெயில் பக்கத்துலதான் இருக்கு....//
சிபியாவது உஷாராவதாவது!
// MANO நாஞ்சில் மனோ said...
சி.பி.செந்தில்குமார் said...
பட்டு வேட்டி கட்டி , டை அடிச்சு யூத் மாதிரி பில்டப் கொடுக்கும் ஆஃபீசரை வன்மையாக கண்டிக்கறேன் ஹி ஹி//
நீ மட்டும் என்ன யோக்கியமாடா ராஸ்கல்...//
எல்லாம் பொறாமைதான்.
// MANO நாஞ்சில் மனோ said...
சி.பி.செந்தில்குமார் said...
ஆஃபீசர், ஒண்ணூம் பிரச்சனை இல்லை, அடுத்த முறை நெல்லை வருகையில் ஓ சி சாப்பாடு சாப்பிட்டுக்கொள்கிறேன் ஹி ஹி//
ஓசி சாப்பாட்டுக்கும் ஒரு அளவு உண்டு தெரியுமா, நீ ஜானகிராமன் ஹோட்டல் சர்வர்கிட்டே ஓசி சாப்பாடு கேட்டு அடி வாங்குனவன்தானே ஹி ஹி...//
பப்ளிக் பப்ளிக்.
// MANO நாஞ்சில் மனோ said...
சி.பி.செந்தில்குமார் said...
ஈரோடு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட போதுதான் நெல்லை பதிவர் சந்திப்பின் மகத்துவம் புரிந்தது, விரைவில் அது பற்றி ஒரு கம்பேரிஷன் பதிவு போடறேன் ஆஃபீசர்//
எஸ் எனக்கும் புரிகிறது நீ என்னத்தை எழுதப்போகிறாய் என்று, சீக்கிரமா எழுதுடா அண்ணே...//
எதாவது படத்தைப் பத்தி எழுதுனாலாவது நாலு பேரு பார்ப்ப்பாங்க.
// கோமாளி செல்வா said...
இனிய வாழ்த்துகள் சார். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது :)//
நன்றி செல்வா.உங்களை குற்ற உணர் வோடு நாளும் நினைக்கிறேன்- இன்னும் உங்களுக்கு அளித்த RJ வாக்குறுதியினை நிறைவேற்ற முடியவில்லை.
// MANO நாஞ்சில் மனோ said...
FOOD NELLAI said...
// சி.பி.செந்தில்குமார் said...
1.வாழ்த்துகள் ஆஃபீசர்
2.பட்டு வேட்டி கட்டி , டை அடிச்சு யூத் மாதிரி பில்டப் கொடுக்கும் ஆஃபீசரை வன்மையாக கண்டிக்கறேன் ஹி ஹி//
முதலில் வாழ்த்தி அப்புறமா வாரியும் விட்டுட்டீங்களே! மனோ எடுங்க அந்த அருவாளை!//
எட்றா சண்முகபாண்டி அந்த வீச்சருவாளை, பூட்ரா வண்டியை ஈரோட்டுக்கு.......//
சிபி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!
மணமக்களுக்கு
இதயம் நிறைந்த
இனிய நல்வாழ்த்துகள்..
எனது வாழ்த்துக்களும்
மணமக்களுக்கு
அங்கே ஆபீசெர் பட்டு வேட்டி கட்டி ஜொலிக்கிறார்
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்....இனி உங்களை அண்ணன்னு கூப்பிட பொறதில்ல..ஏன்னா,மாப்ளன்னுதான் கூப்படனும்னு நீங்க விக்கிய மிரட்டுனதை ஏன் பதிவில் போடலை ஹிஹி!
விக்கியுலகம் said...
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்....இனி உங்களை அண்ணன்னு கூப்பிட பொறதில்ல..ஏன்னா,மாப்ளன்னுதான் கூப்படனும்னு நீங்க விக்கிய மிரட்டுனதை ஏன் பதிவில் போடலை ஹிஹி!//
டேய் இப்பிடி வேற தனி டிராக் ஓடிட்டு இருக்கா விக்கி அண்ணே...?
குடும்ப பந்தத்தில் இணையப் போகும் அவர்கள் இருவருக்கும் என் ஆசிகள் என்றும் உண்டு.(உறுதி செய்யும் விழாவிலேயே பட்டு வேட்டி சட்டையோட மின்னுறீங்களே, திருமணத்தன்னிக்கு எப்படி இருப்பீங்க?!)
// siva said...
எனது வாழ்த்துக்களும்
மணமக்களுக்கு
அங்கே ஆபீசெர் பட்டு வேட்டி கட்டி ஜொலிக்கிறார்//
உங்களுக்கும் பொறுக்கலையா!
// விக்கியுலகம் said...
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்....இனி உங்களை அண்ணன்னு கூப்பிட பொறதில்ல..ஏன்னா,மாப்ளன்னுதான் கூப்படனும்னு நீங்க விக்கிய மிரட்டுனதை ஏன் பதிவில் போடலை ஹிஹி!//
சரி சரி பப்ளிக்,கோச்சுக்காதீங்க. உங்க பதிவை இப்பத்தான் கஷ்டப்பட்டு தமிழ்-10ல் இணைச்சுவிட்டேன்.
// MANO நாஞ்சில் மனோ said...
விக்கியுலகம் said...
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்....இனி உங்களை அண்ணன்னு கூப்பிட பொறதில்ல..ஏன்னா,மாப்ளன்னுதான் கூப்படனும்னு நீங்க விக்கிய மிரட்டுனதை ஏன் பதிவில் போடலை ஹிஹி!//
டேய் இப்பிடி வேற தனி டிராக் ஓடிட்டு இருக்கா விக்கி அண்ணே...?//
உங்க பதிவும் தமிழ்-10ல இணைச்சாச்சுங்க. விட்டுறங்க விக்கியை.
// சென்னை பித்தன் said...
குடும்ப பந்தத்தில் இணையப் போகும் அவர்கள் இருவருக்கும் என் ஆசிகள் என்றும் உண்டு.(உறுதி செய்யும் விழாவிலேயே பட்டு வேட்டி சட்டையோட மின்னுறீங்களே, திருமணத்தன்னிக்கு எப்படி இருப்பீங்க?!)//
வாழ்த்துக்களுக்கு நன்றி அய்யா.இன்றைய உங்கள் பதிவே இதுக்குத்தான் போட்டீங்களா?
வாழ்த்துக்கள்., அய்யா...
திருமண நிகழ்ச்சி கண்டிப்பா மிஸ் ஆகாது.. எந்த வேலையாக இருந்தாலும் சரி... அந்த நாளை இப்போதே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
மற்றவை இறைவன் கையில்..
மீண்டும் மணமக்களுக்கு வாழ்த்துக்கள்...
கண்டிப்பா வரோம்
திருமண நிகழ்வில் கண்டிப்பாக கலந்து கொள்ளனும், நேரில் வராத குறையை பதிவில் தீர்த்து விட்டீர்கள் சார். மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
சந்தோஷம் சார்....கல்யாணத்தில் ஜமாய்ச்சிடலாம்.
மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
// இராஜராஜேஸ்வரி said...
மணமக்களுக்கு
இதயம் நிறைந்த
இனிய நல்வாழ்த்துகள்..//
நன்றி சகோ.
// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
வாழ்த்துக்கள்., அய்யா...
திருமண நிகழ்ச்சி கண்டிப்பா மிஸ் ஆகாது.. எந்த வேலையாக இருந்தாலும் சரி... அந்த நாளை இப்போதே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
மற்றவை இறைவன் கையில்..
மீண்டும் மணமக்களுக்கு வாழ்த்துக்கள்...//
நன்றி. மனமிருந்தால் மார்க்கமுண்டு நண்பரே.
// "என் ராஜபாட்டை"- ராஜா said...
கண்டிப்பா வரோம்//
வாங்க, வாங்க. கண்டிப்பா எதிர்பார்க்கிறோம். புரோஃபைல் படம் அட்டகாசம்.
// "என் ராஜபாட்டை"- ராஜா said...
படித்து கருத்துகளை சொல்லுங்கள்
2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது ?//
இதோ வந்துட்டா போச்சு.தளத்தில் சந்திக்கிறேன்.
// இரவு வானம் said...
திருமண நிகழ்வில் கண்டிப்பாக கலந்து கொள்ளனும், நேரில் வராத குறையை பதிவில் தீர்த்து விட்டீர்கள் சார். மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.//
நன்றி நண்பரே. அழைப்பிதழ் அனுப்புகிறேன்.அவசியம் திருமணத்திற்கு வாங்க.
// ரஹீம் கஸாலி said...
சந்தோஷம் சார்....கல்யாணத்தில் ஜமாய்ச்சிடலாம்.//
நன்றி சகோதரரே. அழைப்பிதழ் அனுப்புகிறேன்.அவசியம் திருமணத்திற்கு வாங்க.
// Thangasivam said...
மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்//
நன்றி தங்கசிவம். திருமணத்திற்கு அவசியம் வாங்க.
அப்படியே கொஞ்சம் ஏசி ஹாலையும் புக் பண்ணிடுங்க., ஏப்ரல் மாசமாச்சே !
வாழ்த்துக்கள் சார்!
மிக மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்., ஆபீசர் அய்யா...
ஆபிசர்.... வாழ்த்துக்கள்......... ! (ஆமா உங்க திடீர் இளமையின் ரகசியம் என்ன?)
வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு மகிழ்ச்சி சங்கரலிங்கம் சார்.
//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
வாழ்த்துக்கள்.//
நன்றி சார்.
// ஷர்புதீன் said...
அப்படியே கொஞ்சம் ஏசி ஹாலையும் புக் பண்ணிடுங்க., ஏப்ரல் மாசமாச்சே !
வாழ்த்துக்கள் சார்!//
அதே அதே. புக் பண்ணியாச்சு.
// எம் அப்துல் காதர் said...
மிக மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்.து கொண்டமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்., ஆபீசர் அய்யா...//
நன்றி-வருகைக்கும் வாழ்த்திற்கும்
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆபிசர்.... வாழ்த்துக்கள்......... ! (ஆமா உங்க திடீர் இளமையின் ரகசியம் என்ன?)//
நன்றி சார். எல்லாம் உங்களைப் போன்ற இளமையானவர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தினால்தான். ஹா ஹா ஹா.
//asiya omar said...
வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு மகிழ்ச்சி சங்கரலிங்கம் சார்.//
நன்றி சகோதரி. கல்யாண அழைப்பிதழ் அனுப்புகிறேன்.
>>FOOD NELLAI said...
// MANO நாஞ்சில் மனோ said...
சி.பி.செந்தில்குமார் said...
பட்டு வேட்டி கட்டி , டை அடிச்சு யூத் மாதிரி பில்டப் கொடுக்கும் ஆஃபீசரை வன்மையாக கண்டிக்கறேன் ஹி ஹி//
நீ மட்டும் என்ன யோக்கியமாடா ராஸ்கல்...//
எல்லாம் பொறாமைதான்.
aafiisar ஆஃபீசர், நீங்க எனக்கு அப்பா மாதிரி, நான் ஏன் பொறாமைபப்டப்போறேன் ஹி ஹி மீ யூத்
// சி.பி.செந்தில்குமார் said...
>>FOOD NELLAI said...
// MANO நாஞ்சில் மனோ said...
சி.பி.செந்தில்குமார் said...
பட்டு வேட்டி கட்டி , டை அடிச்சு யூத் மாதிரி பில்டப் கொடுக்கும் ஆஃபீசரை வன்மையாக கண்டிக்கறேன் ஹி ஹி//
நீ மட்டும் என்ன யோக்கியமாடா ராஸ்கல்...//
எல்லாம் பொறாமைதான்.
aafiisar ஆஃபீசர், நீங்க எனக்கு அப்பா மாதிரி, நான் ஏன் பொறாமைபப்டப்போறேன் ஹி ஹி மீ யூத்//
வெட்கப்படுகிறேன் சிபி போன்று கண்ணாடி போட்டு வயதைக் குறைக்கவில்லையே என்று.
விழா நல்லபடியா நடந்தது குறிச்சு சந்தோஷம்.
மணமக்களுக்கு இனிய வாழ்த்துகள்..
//அமைதிச்சாரல் said...
விழா நல்லபடியா நடந்தது குறிச்சு சந்தோஷம்.
மணமக்களுக்கு இனிய வாழ்த்துகள்..//
ஆம் சகோ.திருமண அழைப்பிதழ் அனுப்புகிறேன். வாங்க.
இறைவன் அருளால் திருமணம் நல்லபடியாக நடக்க வாழ்த்துகள் சார்.
அலுவலக பணி, மிக தூரத்தில் இருக்கும் நெல்லை..இதுதான் பிரச்னை எனக்கு. இல்லாவிடில் கண்டிப்பாக வருவேன். பதிவர் சந்திப்பையும் தவற விட்டேன். உங்களை சந்திக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
பன்னீர் தெளிக்கும் பெண்களிடம் சொல்லி வையுங்கள். நாஞ்சில் மனோ மாதிரி சிலர் கல்கண்டை தட்டோடு விழுங்க ப்ளான் செய்துகொண்டிருக்கிறார்கள் என உளவுத்துறை தகவல் வந்துள்ளது.
// ! சிவகுமார் ! said...
இறைவன் அருளால் திருமணம் நல்லபடியாக நடக்க வாழ்த்துகள் சார்.//
நன்றி சிவகுமார் சார்.
// ! சிவகுமார் ! said...
அலுவலக பணி, மிக தூரத்தில் இருக்கும் நெல்லை..இதுதான் பிரச்னை எனக்கு. இல்லாவிடில் கண்டிப்பாக வருவேன். பதிவர் சந்திப்பையும் தவற விட்டேன். உங்களை சந்திக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்.//
மனமிருந்தால் மார்க்கமுண்டு. “உலக உணவெல்லாம்” உங்களுக்காக காத்திருக்கும். தவறாமல் கல்யாணத்திற்கு வந்திடுங்க நண்பரே.
// ! சிவகுமார் ! said...
பன்னீர் தெளிக்கும் பெண்களிடம் சொல்லி வையுங்கள். நாஞ்சில் மனோ மாதிரி சிலர் கல்கண்டை தட்டோடு விழுங்க ப்ளான் செய்துகொண்டிருக்கிறார்கள் என உளவுத்துறை தகவல் வந்துள்ளது.//
உளவுத்துறை தகவலென்றாலே கவனம் அதிகம் செலுத்தனுமே.
மணமக்களுக்கு இனிய வாழ்த்துகள்..
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
வணக்கம். வாழ்த்துக்கள். ஏற்கனவே கூறியபடி ஏப்ரலில் நமது இல்ல திருமண விழாவில் பதிவுலக குடும்ப உறவினர்களோடு சந்திப்போம். சங்கமிப்போம்.
மண மக்களுக்கு என் இதயங் கனிந்த நல் வாழ்த்துக்கள்.மிக்க நன்றி சார் உங்கள் பகிர்வுக்கு .
puthumana thampathikalukku valthukkal.
swiss fernando
// மனசாட்சி said...
மணமக்களுக்கு இனிய வாழ்த்துகள்..
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்//
நன்றி வருகைக்கும், வாழ்த்திற்கும்.
// துபாய் ராஜா said...
வணக்கம். வாழ்த்துக்கள். ஏற்கனவே கூறியபடி ஏப்ரலில் நமது இல்ல திருமண விழாவில் பதிவுலக குடும்ப உறவினர்களோடு சந்திப்போம். சங்கமிப்போம்.//
வணக்கம் ராஜா. அவசியம் வரணும் நீங்க கல்யாணத்திற்கு.
// geo.fernando said...
puthumana thampathikalukku valthukkal.
swiss fernando//
Thank You.
Post a Comment