"உணவுக் கலப்படத்தை அறிவோம்!”
உணவுப் பாதுகாப்பே! உயிர்ப் பாதுகாப்பு!
அன்பு நண்பர்களே!
வணக்கம். எனது அன்பு நண்பர் திரு.அ.ரா.சங்கரலிங்கம் அவர்களின் உணவு உலகம் மூலம் உங்களை மீண்டும்
சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி பல்வகை
உணவுக் கலப்படங்களையும் அவற்றை அறியும் எளிய முறைகள் மற்றும் ஆய்வக முறைகளையும் பாதுகாப்பான
உணவை அனைவரும் பெற வேண்டுமென்ற நல்ல நோக்கத்தில் ”உணவுக் கலப்படத்தை அறிவோம்”
என்ற தொகுப்பினை அளிக்க முயற்சி மேற்கொண்டு முதல் தொகுப்பாக முதன்மை
உணவுப் பொருட்களான பால் கலப்படத்தையும் இரண்டாம்
தொகுப்பாக பால் பொருட்கள் மற்றும் உணவு எண்ணெய்கள் கலப்படத்தையும் இத்தொகுதியில் வழங்கியுள்ளேன்.
இத்தொகுப்பிற்குதவிய FSSAI மற்றும் THE HINDU நாளிதழ் ஆகியவற்றிற்கு நன்றி!.மீண்டும் அடுத்த தொகுப்பில் சந்திப்போம்.
பார்க்க!
படிக்க ! பயன்பெறுக!
மீண்டும் அடுத்த தொகுப்பில் சந்திப்போம்
என்றும் உங்களுடன்:
எஸ்.கொண்டல்ராஜ்,
உணவு பாதுகாப்பு அலுவலர்,
ஒரு வழுவழுப்பான சாய்வான ஓட்டின்(டைல்ஸ்) மீது ஒரு துளி பாலை விடும்போது பால் மெதுவாக கீழ்நோக்கி ஓடும்.அப்போது தான் ஓடிய பாதையில் தனது வெண்மை நிறத்தை கோடாக விட்டுச் சென்றால் அந்த பால் சுத்தமான தண்ணீர் கலக்காத பாலாகும். அவ்வாறில்லாமல் தனது பாதையில் வேகமாக ஓடி வெண்மை கோட்டை விட்டுச் செல்லாத பால் தண்ணீர் கலந்த கலப்படப் பாலாகும்.
மாவு
சிறிதளவுப் பாலில் சில துளிகள் டின்ச்சா; அயோடின் அல்லது அயோடினைச் சேர்க்கும்போது பாலின் நிறம் நீலநிறமாக மாறினால் அது ஸ்டார்ச்(மாவுப்பொருள்) சேர்க்கப்பட்ட கலப்படமான பாலாகும்.
யூரியா:
1) ஒரு சோதனைக் குழாயில் ஒரு தேக்கரண்டி பாலில் அரை தேக்கரண்டி சோயாபீன் தூளைச் சேர்த்து நன்கு குலுக்கி 5 நிமிடங்கள் கழித்து அதில் சிவப்பு லிட்மஸ் தாளை அரை நிமிடம் வைக்கும்போது சிவப்பு லிட்மஸ் தாள் நீலநிறத்திற்கு மாறினால் அந்தப்பால் யூரியா சேர்க்கப்பட்ட கலப்படப்பாலாகும்.
(SNF -
மதிப்பை அதிகரிக்கச் செய்ய பாலில் யூரியா
கலப்படம் செய்யப்படுகிறது)
2) ஒரு சோதனைக் குழாயில் 5 மிலி பாலில் 5 மிலி Paradimethyl
amino benzaldehyde (16 percent)-ஐச் சேர்த்தால் மஞ்சள் நிறம் தோன்றினால் அந்தப்பால் யூரியா சேர்க்கப்பட்ட கலப்படப்பாலாகும்.
வனஸ்பதி
ஒரு சோதனைக் குழாயில் 3 மிலி பாலை ஊற்றி அதனுடன் 10 துளிகள் அடர்ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச் சேர்த்து
அதனுடன் ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்க்கும்போது பாலின் நிறம் சிவப்பு நிறமாக மாறினால் அது வனஸ்பதி கலப்படம் செய்யப் பட்ட பாலாகும்.
பார்மலின்
ஒரு சோதனைக் குழாயில் 10 மிலி பாலை எடுத்து அதில் 5மிலி அடர்கந்தக அமிலத்தை சோதனைக்குழாயின் உட்பக்கச்சுவற்றில் மெதுவாக விடும்போது (குலுக்காமல்)
இரண்டு திரவ அடுக்குகளும் சந்திக்குமிடத்தில் ஊதா அல்லது
நீல நிற வளையம் தோன்றினால் அது பார்மலின் சேர்க்கப்பட்ட கலப்படமான பாலாகும்.
(நீண்ட நேரம் கெடாமல் இருக்க, பாலில் விஷத்தன்மை கொண்ட
பார்மலின் கலப்படம் செய்யப்படுகிறது.)
நுரைப்பான்கள்
(Detergents)
1) 10 மிலி பாலுடன் 10மிலி நீரைச் சேர்த்து நன்றாகக் குலுக்கும்போது
நுரை தருமானால் அது சோப்பு போன்ற நுரைக்கும் பொருள் சேர்க்கப் பட்ட
கலப்படப் பாலாகும்.
2) ஒரு சோதனைக்குழாயில் 5மிலி பாலுடன் 0.1மிலி bromocresol purple கரைசலைச் சேர்த்தால் வெளிர் ஊதா நிறம் தருமானால் அது சோப்பு போன்ற நுரைக்கும் பொருள் சேர்க்கப்பட்ட கலப்படப் பாலாகும்.(பால் நுரை தருவதற்காக வியாபார நோக்கில் பாலில் அரைத்த சோப்புப் பவுடர் கலப்படம் செய்யப்படுகின்றது.)
அரைத்த சோப்புப் பவுடர்
ஒரு சோதனைக்குழாயில் 10 மிலி பாலுடன் 10மிலி சுடுநீரைச்
சேர்த்து
அதனுடன் ஒன்று அல்லது இரு துளிகள் பீனாப்தளினைச்
சேர்த்தால் பிங்க் நிறம் தருமானால் அது
சோப்பு சேர்க்கப்பட்ட
சர்க்கரை
ஒரு சோதனைக் குழாயில் 10 மிலி பாலை ஊற்றி அதனுடன்
5மிலி அடர்ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் ஒரு 0.1 கிராம்
ரிசோர்சினால் சேர்த்து நன்கு குலுக்கி அந்த சோதனைக்
குழாயை
5 நிமிடம் கொதிநீரில் வைக்கும்போது பாலின்நிறம் சிவப்பு நிறமாக
மாறினால் அது சர்க்கரை கலப்படம் செய்யப்பட்ட பாலாகும்.
(தண்ணீர்க் கலப்படம் செய்த பாலில் SNF -ஐ கூட்ட ( லேக்டோ மீட்டர் ரீடிங் அளவிற்காக)பாலில் சர்க்கரை கலப்படம் செய்யப்படுகிறது.
குளுக்கோஸ்
1) ஒரு சோதனைக் குழாயில் 3 மிலி பாலை ஊற்றி அதனுடன்
அதனுடன் 3மிலி Barford's reagent--ஐ சேர்த்து நன்கு குலுக்கி கலந்து அந்த சோதனைக்குழாயை 3 நிமிடம் கொதிநீரில் வைத்து பின்னர் ஓடும் நீரில் குளிரச்செய்து அதனுடன் 1 மிலி Phosphomolybdic acid-ஐ சேர்த்து நன்கு குலுக்க நீல நிறம் தோன்றினால் அது குளுக்கோஸ் கலப்படம் செய்யப்பட்ட பாலாகும்.
(லேக்டோ மீட்டர் ரீடிங் அளவை கூட்டிக் காண்பித்து ஏமாற்ற
தண்ணீர் கலப்படம் செய்த பாலில் குளுக்கோஸ் சேர்க்கப்படுகிறது)
2) Strip of diacetic-- ஐ 30-60 விநாடிகள் பாலில் அமிழ்த்தும்போது அதன் நிறம் மாறினால் அந்தப்பால் குளுக்கோஸ் கலப்படம் செய்யப்பட்ட பாலாகும்.
நியுட்ரலைசர்கள்
(Neutralisers) (சோடியம் கார்பனேட், சோடியம் பைகார்பனேட் போன்றவை)
ஒரு சோதனைக் குழாயில் 5 மிலி பாலை ஊற்றி அதனுடன்
5மிலி ஆல்கஉறால் மற்றும் 5 துளிகள்ரோசாலிக் அமிலத்தை
சேர்க்கும்போது
பாலின் நிறம் பிங்க் கலந்த சிவப்பு நிறானால்
அது சோடியம் கார்பனேட் சோடியம் பைகார்பனேட் கலப்படம்
செய்யப்பட்ட பாலாகும்.
அம்மோனியம் சல்பேட்
ஒரு சோதனைக் குழாயில் 5மிலி சூடான பாலுடன் சிறிது சிட்ரிக்
அமிலத்தை சேர்த்தால் கிடைக்கும் திடப்பொருளைப் (whey) பிரித்து, அதை
மற்றொரு சோதனைக் குழாயிலிட்டு 0.5 மிலி Barium chloride-ஐச் சேர்க்கும்போது வீழ்படிவு ஏற்பட்டால் அது அம்மோனியம் சல்பேட் கலந்த கலப்படப் பாலாகும்.(லேக்டோ மீட்டர் ரீடிங் அளவை கூட்டிக் காண்பித்து ஏமாற்ற அம்மோனியம் சல்பேட் சேர்க்கப்படுகிறது)
உப்பு
ஒரு சோதனைக் குழாயில் 5மிலி சில்வர் நைட்ரேட்டுடன்(0.8%)
மூன்று துளிகள் 1% பொட்டாசியம் டை குரோமேட் மற்றும் 1மிலி
பாலை கலந்தால் மஞ்சள் நிறம் கிடைத்தால் அது உப்பு கலந்த
கலப்படப் பாலாகும். சாக்லெட் நிறம் கிடைத்தால் உப்பு கலப்படம்
இல்லா பாலாகும்.(லேக்டோ மீட்டர் ரீடிங் அளவை கூட்டிக் காண்பித்து ஏமாற்ற உப்பு சேர்க்கப்படுகிறது)
பாலாடை நீக்கிய பால் பவுடர்
சிறிதளவு பாலில் நைட்ரிக் அமிலத்தை சொட்டுச்
சொட்டாக
சேர்த்தால்
பாலின் நிறம் ஆரஞ்சு நிறமாக மாறினால் அது பாலாடை நீக்கிய பால் பவுடர் கலந்த கலப்படப்பாலாகும்.மஞ்சளாக மாறினால் சுத்தமான பாலாகும்.
போரிக் மற்றும் சாலிசிலிக் ஆசிட் பவுடர்
ஒரு சோதனைக் குழாயில் 5மிலி பாலுடன் சிறிது அடர்
கந்தக அமிலம் மற்றும் 0.5 % ferric chloride solution-ஐ சொட்டுச் சொட்டாக சேர்த்து நன்கு கலக்கினால் buff நிறம் கிடைத்தால் அது போரிக் ஆசிட் பவுடரும் ஊதா நிறம் கிடைத்தால் சாலிசிலிக் ஆசிட் பவுடரும் கலந்த கலப்படப் பாலாகும்.

25 comments:
பயன் தரும் தகவல்கள்...
விளக்கங்கள் கொடுத்ததால் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும்...
நன்றி சார்...
பாலிலும் இம்புட்டு கலப்படமா ஆண்டவா....!
ஒரிஜினல் பாலினை கண்டு பயன்பெற உதவும் பதிவு நன்றி மிக்க நன்றி...!
பால்ல இத்தனை வகை கலப்படம் பண்றாங்கன்னா அதிர்ச்சியாத்தான் இருக்கு....!
நிறைய பரிசோதனைகள் லேப்லதான் பண்ண முடியும்னு நினைக்கிறேன்.... நன்றி!
மிகவும் பயனுள்ள பகிர்வு .மிக்க நன்றி சார் பகிர்வுக்கு .
பாலில் இப்படி கலந்து?
ஏன் இப்படி ஒரு பொழப்பு??
படிக்க படிக்க மிரண்டுவிட்டேன். அறிந்து கொண்டேன் ஆபிசர் நல்ல தேவையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.
தகவலுக்கு நன்றி!
//அது சோப்பு கலக்கப்பட்ட பால் ஆகும் // ஐயையோ , இது என்னாதிது ?
பால் முழுமையான உணவுன்னு பள்ளி காலங்களில் படித்தது இப்போ ஏனோ ஞாபகம் வருது
நன்றி தல.
உணவில் கலப்படம் பற்றிய விழிப்புணர்வினை உண்டாக்கியதிற்கு மிக்க நன்றி.
[வேறு ஒரு தளத்தின் வாயிலாக இங்கு வந்தேன். தொடருகிறேன் இனி]
//திண்டுக்கல் தனபாலன் said...
பயன் தரும் தகவல்கள்...
விளக்கங்கள் கொடுத்ததால் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும்...
நன்றி சார்...//
முதலில் பப்ளிஷ் செய்த பதிவில் சில பிரச்சனைகள் இருந்தது. சரி செய்து மீண்டும் பப்ளிஷ் ஆன பின் சரியானது. நன்றி சார்.
// MANO நாஞ்சில் மனோ said...
பாலிலும் இம்புட்டு கலப்படமா ஆண்டவா....!//
ஆமா மனோ, பாலையும் பாழ்படுத்தும் பாவிகள்.
// MANO நாஞ்சில் மனோ said...
ஒரிஜினல் பாலினை கண்டு பயன்பெற உதவும் பதிவு நன்றி மிக்க நன்றி...!//
நன்றி மனோ.நல்லதா நாலு வார்த்தை நச்சுன்னு.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பால்ல இத்தனை வகை கலப்படம் பண்றாங்கன்னா அதிர்ச்சியாத்தான் இருக்கு....!//
விட்டா நம்ப ஆளுங்க தாய்ப்பாலிலும் கலப்படம் பண்ணிடுவாங்க. :)
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நிறைய பரிசோதனைகள் லேப்லதான் பண்ண முடியும்னு நினைக்கிறேன்.... நன்றி!//
சரிதான் சார். இவை அறிந்துகொள்ள மட்டுமே. சிலவற்றை நாம் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். நன்றி சார்.
//அம்பாளடியாள் said...
மிகவும் பயனுள்ள பகிர்வு .மிக்க நன்றி சார் பகிர்வுக்கு .//
நன்றி சகோ.
//மனசாட்சி™ said...
பாலில் இப்படி கலந்து?
ஏன் இப்படி ஒரு பொழப்பு??
படிக்க படிக்க மிரண்டுவிட்டேன். அறிந்து கொண்டேன் ஆபிசர் நல்ல தேவையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.//
நன்றி சார். தொடர்ந்து தருகிறேன்.
//koodal bala said...
தகவலுக்கு நன்றி!//
நன்றி பாலா.
//rufina rajkumar said...
ஐயையோ , இது என்னாதிது ?
பால் முழுமையான உணவுன்னு பள்ளி காலங்களில் படித்தது இப்போ ஏனோ ஞாபகம் வருது//
இன்னும் அதிர்ச்சி ரகங்கள் அடுத்தடுத்து வருது. வருகைக்கு நன்றி.
//நாய் நக்ஸ் said...
நன்றி தல.//
வருகைக்கு நன்றி நக்கீரரே!
//சந்திர வம்சம் said...
உணவில் கலப்படம் பற்றிய விழிப்புணர்வினை உண்டாக்கியதிற்கு மிக்க நன்றி.
[வேறு ஒரு தளத்தின் வாயிலாக இங்கு வந்தேன். தொடருகிறேன் இனி]//
நன்றி முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.
பாலில் தண்ணீர் கலப்பது தெரியும். மாட்டுக்கு ஊசி போடுவார்களென கேள்விப்பட்டதுண்டு. இப்படியெல்லாம் கலப்படம் உண்டு என்பது புதிய, அறிந்துகொள்ளவேண்டிய ஆனால் கலக்கமூட்டும் தகவல். நன்றி.
இன்னும் எங்க ஊரில் பால்காரன் வீட்டிற்கு வந்து பால் தரும் வழக்கம் இருந்துவருகிறது. எப்படி அதை பரிசோதிப்பது?
பால்காரரிடம் வாங்கும் பாலில் அல்லது குறிப்பிட்ட பாக்கெட் பாலில் சந்தேகம் இருந்தால், யாரிடம் புகார் தருவது? அதற்கான நடைமுறைகள் என்ன? இந்தப் பரிசோதனைகளைச் செய்வதற்கு, புகார் தருபவர் கட்டணம் செலுத்த வேண்டுமா?
உணவுத் துறை இதற்கான ஆய்வுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்துவருகிறதா? நிறுவனமல்லாது, தனியார் பால் விற்பனைகளையும் பரிசோதிப்பார்களா?
வணக்கம் சகோதரி.
நான் குறிப்பிட்டுள்ளவற்றில் பல பரிசோதனைகள் ஆய்வகத்தில் மட்டுமே செய்ய இயலும். எனினும், பாலில் மாவுப்பொருள் கலந்திருந்தால், பாலை சிறிது சூடுபடுத்தி, வெது வெதுப்பாக இருக்கும்போது,ஓரிரு சொட்டுக்கள் டிஞ்சர் அயோடினை(இது அனைவர் வீட்டு முதலுதவிப்பெட்டியில் இருக்கும்)விட்டால், அது நீல நிறமாக மாறும். இப்படி சில சோதனைகள் மட்டுமே, வீட்டில் செய்யமுடியும். மற்றவை, என்ன செய்யவேண்டுமென அறிந்து கொள்ள மட்டுமே.
ஒவ்வொரு ஊருக்கும், கிராமப்பகுதியெனில், ஊராட்சி ஒன்றிய அளவிலும், நகரப்பகுதியெனில், ஒவ்வொரு உள்ளாட்சி அளவிலும், ஒரு உணவு பாதுகாப்பு அலுவலர் இருப்பார். மாவட்ட அளவில், ஒரு நியமன அலுவலர் இருப்பார்.
முகவரி:
மாவட்ட நியமன அலுவலர்,
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து
நிர்வாகத்துறை,
. . . . . . . . . மாவட்டம்.
கலப்படம் பற்றிய புகார்களை அவர்களிடம் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்க, www.fssai.gov.in என்ற அரசு தளத்திலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மூலம், தனிநபர்,தனியார்துறை, அரசுத்துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை, அறநிலையத்துறை மூலம் நடத்தும் உணவு சம்பந்தமான தொழில்களை ஆய்வு செய்ய புதிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயனுள்ள தகவலுக்கு நன்றி
Post a Comment