உண்ணும் உணவிலும், பருகும் தண்ணீரிலும் சுத்தமும், சுகாதாரமும், பாதுகாப்பும் மிக முக்கியம். மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் பெருகிவருவது நல்லதொரு அறிகுறி. இதுவும் அத்தகையதோர் நிகழ்வுதான்:
தமிழகத்தில்
857 குடிநீர் கேன் விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான
நிறுவனங்கள் அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்தன. மக்களுக்கு தரமற்ற குடிநீர்
வழங்குவதாக இந்த நிறுவனங்கள் மீது புகார்கள் எழுந்தன. இதனை கருத்தில்
கொண்டு கடந்த மே மாதம் அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை
தீர்ப்பாயம் தானே முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்தது.
இந்த
வழக்கு கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சொக்கலிங்கம்
குடிநீர் கேன் நிறுவனங்கள் மீது மாசுகட்டுபாடு வாரியம், பொதுப்பணித்துறை,
உணவு பாதுகாப்பு துறை அனுமதி பெற்று, பின்னர் விற்பனை செய்ய வேண்டும்
என்றார். மாசுகட்டுப்பாடு வாரியம் இந்த நிறுவனங்களுக்கு நிபந்தனை
அடிப்படையில் தடையில்லா சான்று வழங்கவும் உத்தரவிட்டார்.
மீண்டும்
இந்த வழக்கு கடந்த நவம்பர் 9ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது 40க்கு
மேற்பட்ட குடிநீர் நிறுவனங்கள் நிபந்தனையை தளர்த்த கோரிக்கை வைத்தனர்.
ஆனால், நீதிபதி அந்த கோரிக்கையை நிராகரித்தார். மேலும் மாசுகட்டுப்பாடு
வாரியம் மெத்தனமாக இருக்க கூடாது. உடனே இந்த நிறுவனங்கள் மீது உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை
ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்
அடிப்படையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,
குடிநீர் விற்பனை நிறுவனங்கள், பொதுப்பணி துறை சான்று பெறும் நிபந்தனையை
தளர்த்த கோரினர். அந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். பின்னர்,
சென்னையில் மெட்ரோ வாட்டரை இந்த நிறுவனங்கள் பயன்படுத்துவதால், சென்னையில்
உள்ள நிறுவனங்கள் சென்னையில் குடிநீர் வாரிய அதிகாரிகளிடமும், புறநகர்
பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் பொதுப்பணித் துறையிடமும் கண்டிப்பாக
விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்க தவறிய குடிநீர் நிறுவனங்கள்
உடனடியாக சீல் வைக்கப்படும் என கூறினார்.

8 comments:
இது நீண்ட நாள் எதிர்பார்ப்பு.அரசு துறை நிறுவனங்கள் அனைத்தும் இது போன்று மக்களின் நலன் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல் படவேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம்.இந்த நிகழ்க்வுகள் அதிகம் பேசப்படவேண்டும். தங்களின் இந்த பணி மேலும் சிறந்து வளர விரும்புகிறேன்.வாழ்த்துக்கள்.
நடக்கட்டும்... நல்லது நடக்கட்டும்...
சபாஷ்..
உண்ணும் உணவிலும், பருகும் தண்ணீரிலும் சுத்தமும், சுகாதாரமும், பாதுகாப்பும் மிக முக்கியம். மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் பெருகிவருவது நல்லதொரு அறிகுறி.//
உங்களை மாதிரி அதிகாரிகள் இருக்கும் போது விழிப்புணர்வு செய்து எங்களை உஷார் செய்து விடுகிறீர்கள் மிக்க நன்றி.....நல்லதே நடக்க வேண்டும்...
நல்லது நடக்கட்டும்...
நல்லதொரு பகிர்வு...
வாழ்த்துக்கள்.
வணக்கம்.
பதிவு நமக்கு நல்ல தகவல்கள் , மற்றும் விழிப்பு உணர்வு ஊட்டுவதாகவே உள்ளது.
அரசு ,மற்றும் அரசுத்துறை ,மாவட்ட நிர்வாகம் , போன்றவைகள் செய்யவேண்டிய
பணிகள் / கடமைகளை நீதிமன்ற உத்திரவுகள் பெறப்பட்ட பின்புதான் செய்யவேண்டும்
என்ற போக்கு முற்றிலுமாக மாறவேண்டும்.நல்லதே நடக்க விரும்புவோம்.
<> கே.எம்.அபுபக்கர்.
வணக்கம்,ஆபீசர்!///நல்ல தீர்ப்பு!இது கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.ஊழல் தலை விரித்தாடும் நாட்டில்....................பார்க்கலாம்!
சபாஷ்.. சரியான தீர்ப்பு!!
Post a Comment