மாநகர தூய்மை முகாம் மறுநாள் நடைபெற போவதாக முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். முகாம் நன்றாய் நடைபெற்றது. பள்ளி குழந்தைகள் பிளாஸ்டிக்கை அகற்ற பெறும் பங்கு வகித்தனர்.
மறுசுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருட்களை இனி பயன்படுத்துவதில்லை என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துகொன்டனர்.
இருப்பதை அகற்றிவிட்டால் மட்டும் போதாது.
இனி வருவதையும் தடுத்து நிறுத்த வேண்டுமே!
மாநகர ஆணையர் அறிவுரையின் பேரில், புறப்பட்டோம் புது புயலாய்.
மாசு கட்டுபாட்டு துறை உதவி பொறியாளருடன்,
மாநகர உதவி பொறியாளரும்,
மற்றுமுள்ள சுகாதார ஆய்வாளர் நண்பர்களும்.
சனிக்கிழமை தொடங்கிய அதிரடி ஆய்வும் - மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதலும், திங்களன்றும் தொடர்ந்தது.
பறிமுதலைவிட மறுசுழற்சிக்கு பயன்படாத பொருட்களை விற்க மாட்டோமென வியாபாரிகள் கொடுத்த உறுதி மொழிதான்
எங்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆனது.
இருபது மைக்கிரானுக்கும் இளைத்ததை எல்லாம், முப்பதுக்கும் மேலானதென போலி முத்திரை குத்தி
வைத்திருந்த கடைகளும் உண்டு. அவர்தம்
முகத்திரை கிழித்து எறிந்தோம்.
இப்பவும் சொல்றேன், இது மட்டும் போதாது.
இனி பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிந்தால்,
இன்பம் நம் அனைவருக்குமே. நன்றி.

5 comments:
இது போன்ற நாடகதனகளை விட்டு விட்டு, என்று நாம் உண்மையாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க போகிறோம்:
பால் பாகேட்டுகளில் பயன்படுத்தும் பாலிதீன்
அரசு, தனியார் நிறுவன , அமைச்சக கூட்டங்களில் , சுற்றுப்புற சூழல் கருத்தரங்கில் கூட சிறப்பு பேச்சாளருக்கு குடிக்க பிளாஸ்டிக் பாட்டிலில் தான் குடி தண்ணீர்.
UNILVER, GARNIER, COLGATE போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை கட்டு படுத்துவோமா.
இப்போது நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எரியும் மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே.இது நாடகமல்ல. நிச்சயமான உண்மை. ஏற்றுகொள்வதும் மறுப்பதும் உங்கள் உரிமை. நன்றி.
பால் பாகெட்களுக்கு மாற்றாக டெட்ரா பாக்கெட்கள் வந்து விட்டன தெரியுமா நண்பரே.
நான் உங்கள் முயற்சியை ஆர்வத்தை இகழ வில்லை.
சென்னை மும்பை போன்ற பெரு நகரங்களில் வீடுகள் தோறும் ப்லாஸ்டிக் பால் கவர்கள், ரயில் நிலையங்கள் தோறும் பிளாஸ்டிக் தணீர் குடுவைகள்,
கடிகள தோறும் பிளாஸ்டிக்கால் ஆனா ஷாம்பூ, சோப்பு, உணவு போட்டல கவர்கள், பலசரக்கு அங்காடிகள் தோறும் பிளாஸ்டிக் கவர்கள் தான் (reliance, spencers, more value , big bazar, saravana stores, RMKV use plastic covers onlY)
யானையை விட்டு விட்டு அங்குசத்தை பிடிக்கும் வேலையை தான் நாம் செய்து கொண்டு இருக்கிறோம்
ஊர் கூடி தேர் இழுத்தால்தான், தேர் நிலையம் வரும். நாம் ஒவ்வருவரும் ராமருக்கு உதவிய அணில்களாய் பிளாஸ்டிக் ஒழிப்பில் பங்கேற்போம். மறுபடியும் மஞ்சள் பையுடன் மளிகை கடைக்கு செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை, நண்பரே. எப்போதும் தங்கள் கருத்துக்களை, நல்ல ஆலோசனைகளாகத்தான் கருதுகிறேன்.
அடுத்து புவி வெப்பமாதலை தடுக்க, பல லட்சம் மரகன்றுகள் நட போகிறோம். வாருங்கள், வந்து இந்த பூமியில் பிறந்ததற்கு புண்ணியம் தேடிகொள்வோம்.
Post a Comment