ஏணி,தோணி, அண்ணாவி,நார்த்தங்காய் என்றொரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏணி-அனைவரையும் ஏற்றிவிடும். தோணி-ஏறிச்செல்பவரை கரையேற்றும். அண்ணாவி-ஆசிரியர்-அவரிடம் கல்வி கற்பவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு தேறிச்செல்வர். நார்த்தங்காய் ஊறுகாய்-சோறுடன் சேர்த்து உண்டால்,சோறு செரித்துவிடும். ஆனால், இங்கு கூறப்பட்ட ஆசிரியரும் ஏனைய பொருட்களும் இருக்கும் இடத்தைக்கடந்து போவதில்லை என்பார்கள்.
இங்கு பிரச்சனைக்குரியதாக எடுத்துக்கொள்ளப்பட்டது ஊறுகாய் மட்டுமே. அலசி ஆராய்ந்தது-CONCERT எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம். என் ஆசான் திரு.G.சந்தானராஜன் அவர்கள் அனுப்பி வைத்த ஊறுகாய் குறித்த குறிப்பு உங்கள் பார்வைக்கு:

8 comments:
எண்ணெய் கலந்த ஊறுகாயை சூடாக்கக்கூடாது என்பதை இப்பதான் தெரிந்து கொண்டேன், நன்றி ஆபீசர் !
வீட்டில் தான் செய்வோம்...!
சேமிக்கும் வழிமுறைகளுக்கு நன்றி...
நான் ஊறுகாய் வகைகளையே தொடுவதில்லை, ஹோட்டலில் சாப்பிட நேர்ந்தாலும் அவைகளை தள்ளி வைத்து விடுவேன். அந்த சிட்ரிக் ஆசிட் சுவையே மகா கொடுமையாக இருக்கும். வீட்டில் செய்யப்படும் ஊறுகாய்கள் நன்று. தேவையான செய்திகள் ஆபீசர். நன்று.
வணக்கம் ஆபீசர்!நலமா?முகப் புத்தகத்தை மறந்து விட்டதால் பார்க்க முடிவதில்லை.பதிவுகளில் சந்திக்கலாம்.///நல்ல விழிப்புணர்வுப் பகிர்வு,ஆபீசர்!நன்றி!!!
உண்ணுவதற்கு சுவையாக இருப்பினும் தயாரித்த முறை எப்படியோ !
பதப்படுத்தப் பட்ட உணவுவகைகளில் உள்ள சிக்கலை இது போன்ற
தகவல்கள் மூலம் உணர்ந்து தவிர்த்துக்கொள்ள முடியும் .அருமையான தகவலுக்கு மிக்க நன்றி சகோதரா
சிட்ரிக் ஆசிட், வினிகர், எண்ணெய் இவை மூன்றுமே மோசமான் பொருட்கள். வீடுகளில் செய்யப்படும் ஊறு காய்களில் முதல் இரண்டும் இருக்காது. மேலும் கடை ஊறு காய்களில் உப்பும் மிக அதிகம் இருக்கும். ஊறு காய் வகைகளை தவிர்ப்பது நல்லது.வீட்டு ஊரு காய் களை எப்போதாவது சேர்த்துக்கொள்ளலாம் .
எண்ணெய் கலந்த ஊறுகாயை சூடாக்கக் கூடாது என அம்மா சொல்வார்கள்...
மற்ற விபரங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி சார்.
நண்பரே...
நீங்கள் கோவைக்கு வந்திருக்கும் போது பரிந்துரைத்த,‘குரு ஊறுகாய்’ உபயோகித்து வருகிறேன்.
‘கான்சர்ட் பட்டியலில்’ குரு ஊறுகாய் இடம் பெறவில்லையே!
Post a Comment