
தடை செய்யப்பட பொருட்களை விற்பது என்றால் சிலருக்கு தனி ஆர்வம் போல. கடந்த வாரத்தின் முற்பகுதியில் ஒரு நாள் மாலை, காவல்துறை நண்பர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது.
கேட்டபோதுதான் தெரிந்தது,தச்சநல்லூர் வத்தல் மார்கட் குடோனில், நூற்றுக்கும் மேற்பட்ட மூடைகள் புகையிலை பதுக்கி வைத்திருப்பது. என் துறை உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்துவிட்டு சென்று பார்த்தால் மூடை மூடையாக புகையிலை பொருட்கள் அங்கிருந்தன.
காவல்துறையினர், அந்த கிட்டங்கியை மூடி சீல்வைத்தனர். அடுத்த ஓரிரு நாட்களில் அவற்றை முறையாக எங்களிடம் ஒப்படைத்தனர். அதன் மதிப்பு ரூ.13.91 லட்சம். சற்றேறக்குறைய, 2303 கிலோ இருந்தது.
முன்னே எங்கள் துறை ஈப்பு வாகனம், நடுவில் அந்த மூடைகளை ஏற்றி வந்த லாரி, பின்னே காவலுக்கு காவல்துறை வாகனம் என அணி வகுத்து, அவற்றை லாரியில் ஏற்றி, மாவட்ட அலுவலகத்திற்கு கொண்டுவந்து, ஒரு அறையில் வைத்து சீல் வைத்தோம்.
ஏகப்பட்ட நிர்பந்தங்கள், நெருக்கடிகள் தாண்டி, அவற்றை வெற்றிகரமாக மாவட்ட அலுவலகத்திற்கு கொண்டு வந்து, உணவு மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, சீல் வைத்துவிட்டோம்.
பகுப்பாய்வு முடிவின் அடிப்படையில், இனி அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும்.
தொல்லைகள் தீரும்வரை, தொடரும் இத்தகைய நடவடிக்கைகள்.

6 comments:
வணக்கம்,ஆபீசர்!நலமா?///தொடரட்டும் உங்கள் பணி!
எங்க ஊர் (பொன்னேரி) பக்கம் கடைகளில் பப்ளிக்கா பான்பராக், குட்கா எல்லாம் விக்கிறாங்க! யாரும் கண்டுக்க மாட்டேங்கறாங்களே!
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
நல்ல பகிர்வு..
தங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் சார்.
அப்படியே சென்னை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுங்க சார்... இங்க எல்லா கடையிலும் ரொம்ப தாராளமா கிடைக்குது...
நிச்சயமா தகவல் சொல்றேன் நண்பர்களே. நன்றி அனைவருக்கும்
Post a Comment