இந்த ஆண்டு, உலக சுகாதார தினத்தின் (07.04.2015), உன்னத லட்சியமாய் பாதுகாப்பான உணவு நம் அனைவருக்கும் கிடைத்திட உலக சுகாதார நிறுவனம் உறுதி ஏற்கின்றது.
Ø நம் உணவில் காணப்படும் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள்,
ரசாயனங்கள் போன்றவற்றால், வயிற்றுப்போக்கு முதல் புற்றுநோய் வரை, இருநூறுக்கும் மேற்பட்ட
நோய்கள் நம்மைத்தாக்குகின்றன.
Ø பருவநிலை
மாற்றங்களும், அதனால் உணவு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகளும், சுற்றுச்சூழல் மாசுபடுதலும்
உணவுப்பாதுகாப்பிற்கு பெரும் சவால்களாக விளங்குகின்றன.
Ø உணவின்மூலம்
வரும் நோய்களால், உடல்நலம் கடுமையான பாதிப்பிற்குள்ளாகின்றது. குறிப்பாக குழந்தைகள்
ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள்,
முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பற்ற உணவினால் அதிகளவில் பாதிப்படைகின்றனர்.
Ø இத்தகைய
நோய்தாக்குதல் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக இருப்பதுடன், நாட்டின்
பொருளாதாரம், தொழில்வளர்ச்சி, சுற்றுலாத்துறை வளர்ச்சி ஆகியவற்றிற்கும் பங்கம் விளைவிக்கின்றன.
Ø பாதுகாப்பற்ற
உணவினால், வயிற்றுவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை முதலில் தோன்றும் அறிகுறிகள்.
உணவில் காணப்படும் கன உலோகங்கள்(Heavy metals) மற்றும் நச்சுக்கள் நீண்ட காலப் பயன்பாட்டில்,
புற்றுநோய் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புக்களை உருவாக்கும்.
Ø உடல்நல
பாதிப்புகள் உள்ளோருக்கும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளோருக்கும் உணவுமூலம் வரும் நோய்கள்
சுலபமாக தாக்குகின்றன.
Ø உலக
மயமாக்கலின் காரணமாக, இன்றைய காலகட்டத்தில் உணவுப்பொருட்கள் விநியோகம் தாராளமாக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு
உற்பத்தியாகுமிடத்திலிருந்து, உண்ணக்கிடைக்கும்வரை பல கட்டங்களைத்தாண்டி வரும்போது
அதன் தரம் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகமாகின்றது.
இத்தருணத்தின்
தேவை:
Ø முறையாக தயாரிக்கப்படும் உணவு.
Ø சுகாதாரம்,
விவசாயம், கல்வி, வியாபாரம் உள்ளிட்ட பலதுறைகள்,உணவு பாதுகாப்பிற்காக ஒன்றோடொன்று தகவல்
பரிமாற்றம் செய்து கொண்டு ஒத்துழைத்து பங்கேற்க வேண்டும்.
Ø முறையற்ற
பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடும், முறையற்ற எதிருயிரி (Antibiotics) பயன்பாடும், கிருமிகளுக்கு மருந்து எதிர்ப்பு சக்தியை
உருவாக்குவதால், மனித உயிர்களிடமும் மருந்து எதிர்ப்பு சக்தி உருவாக்கிக்கொண்ட பாக்டீரியாக்கள்
பரவ ஏதுவாகும். எனவே, அவற்றைக் கவனமாக கையாள வேண்டும்.
Ø எனவே,
பாதுகாப்பான உணவை நாம் பெற இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுடன், பொதுமக்களும், சுய
உதவிக்குழுக்களும், பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களும், நுகர்வோர் அமைப்புகளும் இணைந்து
செயல்படவேண்டும்.
உணவுப்பாதுகாப்பு
உங்கள் சமையலறையிலிருந்து தொடங்கட்டும்:
Ø சமையலறையையும், அங்குள்ள பாத்திரங்களையும், நம் கைகளையும் எப்போதும் சுத்தமாக வைத்திருப்போம்.
Ø சமையலுக்கான
மூலப்பொருட்களையும்,சமைத்த உணவையும் பிரித்தே வைத்திருப்போம்.
Ø உணவினை
முறையாகவும், முழுமையாகவும் சமைத்தே உண்போம்.
Ø சமைத்த
உணவை அதற்கான சரியான தட்பவெப்ப நிலையில் வைத்திருப்போம்.
Ø உணவு
சமைக்க தரமான மூலப்பொருட்களையே பயன்படுத்துவோம்.

3 comments:
வீட்டம்மாவுக்கும் இந்த பதிவை படித்து காட்டினேன் ஆபீசர், மிக்க நன்றி...
உற்பத்தி ஆகும் இடமும், கழிவு போகும் இடமும் என்றும் சுத்தமாக இருக்க வேண்டும்...!
நன்றி Mano நாஞ்சில் மனோ மற்றும் திண்டுக்கல் தனபாலன்.
Post a Comment