1993ல் தொடரப்பட்ட ஓர் உணவு கலப்பட வழக்கு. உணவு மாதிரி எடுத்தவரும் ஓய்வு பெற்றுவிட்டார். நான் மாநகராட்சிப்பணிக்கு வந்தே 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. வாரம் தவறாமல் வாய்தாவிற்கு சென்று, எதிரிகள் ஆஜராகாதபோது, வாரண்ட் பெற்று, வரவழைத்து, வழக்கு நடத்தி, நேற்று முன் தினம், குற்றம்சாட்டப்பட்ட இரண்டாவது நபர் மட்டும் குற்றத்தை ஒத்துக்கொண்டதால், நீதிமன்றம் கலையும்வரை சிறைத்தண்டனையும், ரூபாய் ஆயிரமும் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஒரு வழக்கு நடைபெறும் காலத்தில் எத்தனை எத்தனை சோதனைகள்: வழக்கு நடைபெற்ற காலத்தில் குற்றம்சாட்டப்பட்ட மூன்றாவது நபர் இறந்துவிட்டார். குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர்தான் தயாரிப்பாளர்.ஆனால் அவர் நீதிமன்றத்திற்கு ஒழுங்காய் வருவதேயில்லை.அதனால் அவருக்கு பிடிவாரண்ட்.எதிர்தரப்பில் வழக்கு நடத்திய ஒரு சீனியர் வழக்கறிஞரும் இறந்துவிட்டார்.
ஒவ்வொரு வழக்கும் நமக்கு ஒவ்வொரு அனுபவம்.

6 comments:
ஸ்பாட்ல தண்டனை கொடுக்கணும் போல இல்லையா.
காலம் மாறும் மனோ.
நம் நீதித்துறையின் லட்சணம் அப்படி!
நான் அப்படி பார்க்கவில்லை சுரேஷ் சார். இத்தனை காலம் நடத்தி, தண்டனை அளித்துள்ளார்களே,அதுதான் முக்கியம்.
சிறந்த பகிர்வு
தொடருங்கள்
அன்றே தண்டனை தர அரசன் இல்லை... அரசனே...(?)
Post a Comment