இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 4 September, 2015

இந்திய பிரதமருடன் உரையாடிய இளம்பெண்.


விசாலினியுடன் நான்
                           கடந்த 2011ம் ஆண்டின் இறுதியில் ஒருநாள், என் வேலை விஷயமாக நான் பணிபுரியும் பகுதியில் ஆய்விற்கு சென்றபோது என்று எண்ணுகின்றேன். வயதான ஒரு அம்மா, சிற்றுண்டி விடுதியில், தன் கையில் ஒரு மஞ்சப்பையில் பல சான்று நகல்களை வைத்துக்கொண்டு அருகிலிருந்தவரிடம், என் பேத்தி, இத்தனை சாதனைகள் படைத்திருக்கின்றாள், ஆனாலும் இந்த சமூகம்  அங்கீகரிக்க மாட்டேன் என்கிறதே! என்ன உலகமடா இது என்று அங்கலாய்த்துக்கொண்டிருந்தார்.         
                           சற்றே, என் காதுகளை அந்தப்பக்கம் கேட்க அனுமதித்தேன். அவர் அங்கலாய்ப்பில் ஒரு அர்த்தம் இருப்பதாய் தோன்றியது. அத்தனை சான்றுகளையும் பார்த்தபோது, நான் உங்கள் பேத்தியைப் பற்றி, என் வலைப்பக்கத்தில் எழுதலாமா என்று வினவினேன். அது என்னமோப்பா, வலைப்பக்கமெல்லாம் எனக்கு என்னான்னே தெரியாது. ஆனா, அதுல எழுதினா என் பேத்தியை நாலு பேரு தெரிஞ்சுக்குவாங்கன்னா சந்தோஷம்தான் எனக்கு என்றார். அந்தக்குழந்தை பற்றி முழுவிபரமும் தாருங்கள் என்றேன். என் மகளிடம் நாளை பெற்றுத்தருகின்றேன் என்றார்.
                       சொன்னபடியே, மறுநாளில் அவர் பேத்தி பற்றிய முழுவிபரங்களும் என்னிடம் அளித்தார். அதை அடிப்படையாகக் கொண்டு நான் 2012ம் ஆண்டில்  எழுதியது இங்கே. விசாலினி இந்தியாவின் விடிவெள்ளி என்று நான் அன்று எழுதிய வலைப்பதிவு, முகநூலிலும் பகிரப்பட்டு, நண்பர்களின் பகிர்வால் நாடு முழுவதும் வலம் வந்தது. பல நல்ல உள்ளங்கள் செய்தியை பகிர்ந்ததின் பலனாய், நாடுகள் பலவற்றிலிருந்தும், விசாலினிக்கு பல நூறாயிரம் அழைப்புகள், மெயில்கள், வாழ்த்துக்கள் என குவியத்தொடங்கியது.
                   என் மகளின் திருமண வரவேற்பில் விசாலினி பதிவர்களுக்கு நன்றி சொன்ன காணொளி
                   அந்தக்குழந்தையை வெளி உலகிற்கு கொண்டுவர, அண்ணன் திரு. ISR Selvakumar அவர்கள் முயற்சியில்,“பசுமை விடியல்” இயக்கத்தை  அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், விசாலினியின் கையால் மரக்கன்று ஒன்றை நடச்சொல்லி துவக்கி வைத்தார். 

                          திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சங்கர் காலனியைச் சார்ந்த திரு.குமாரசாமி மற்றும் திருமதி.சேதுராகமாலிகா தம்பதியினரின் மகள் விசாலினியின் பயணம் பல மைல்கள் சாதனைகளைப் படைத்து வருகின்றது. 
                                           வியப்பின் சிகரமான விசாலினி, தனது 15 வயதிற்குள்
THE YOUNGEST CCNA IN THE WORLD
THE YOUNGEST CCSA IN THE WORLD
THE YOUNGEST IELTS IN THE WORLD
THE YOUNGEST EXIN CLOUD COMPUTING IN THE WORLD
     என பல சாதனைகள் படைத்துவிட்டு, 9ம் வகுப்பில் பயின்று கொண்டிருந்த அவரை நேரிடையாக B.Tech கணினி அறிவியல் படிக்க முதலாம் ஆண்டில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் அனுமதித்துள்ளது.
                               பத்து சர்வதேச கணினி மாநாடுகளுக்குத் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டு, சிறப்புரை ஆற்றி, நம் இந்திய மண்ணின் பெருமையை உலகறியச்செய்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சி மாநாட்டில் ஒரு மணிநேரம் சிறப்புரை ஆற்றி, "The Youngest Google Speaker" என்ற பட்டம் பெற்றுள்ளார். அது இங்கே
                          பதிவர்கள் சார்பாய்  சென்னை யூத் பதிவர் சந்திப்பில் இவரைப்பாராட்டிய செய்தி: http://www.unavuulagam.in/2012/06/forecast-front.html
                               சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொகுப்பு
                           தன் சாதனைகள் பற்றி பிறர் அறிந்துகொள்ள, இவர் ஒரே நாளில் உருவாக்கிய தளம் www.kvisalini.com. இத்தனை சாதனைகள் மட்டும்தான் என்றில்லை. எழுத இடம் போதாது, இவர் படைத்துள்ள சாதனைகளைப் பட்டியலிட. இத்தகைய சாதனைப்பெண்தான் 04.09.15 காலை, இந்தியத் திருநாட்டின் பிரதமருடன் வீடியோ கான்பரன்சிங்கில் உரையாடியுள்ளார்.
                                  ”ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
                                    சான்றோன் எனக்கேட்ட தாய். ”
                               
                               இங்கு இந்த மகவைப் பெற்றதால்,  இந்தியப்பிரதமருடன் உரையாடி வெளிவந்த விசாலினியைக் கண்ட அவள் தாயின் கண்களில்,ஆனந்தக் கண்ணீரைக் கண்டேன்.   நிகழ்ச்சி முடிந்ததும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் விசாலினியை வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்கள்.

நிகழ்ச்சி குறித்த பத்திரிக்கை செய்தி

அரும்பாடுபட்ட அன்னையும் தந்தையும் அருகில் விசாலினி
         வருங்காலத்திட்டம் என்னவென்று கேட்டால், நெட்வொர்க்கிங் துறையில் புதிய நிறுவனம் ஒன்றைத் துவக்கி அதன் தலைமைச் செயல் அதிகாரியாக வேண்டுமென்றார்.
        தனக்கு அதிக அளவில் அறிவுத்திறன் (IQ LEVEL-225) அளித்துள்ள ஆண்டவன் மனதைக் குளிர்விக்க, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு இல்லம் ஒன்றைத் துவக்கி, இலவசமாய் அவர்களைப் பராமரிப்பேன் என்கின்றார்.
               அத்தனைக்கும் ஆசைப்படு. ஆண்டவன் அருளட்டும் நல்லாசிகளை.
பத்திரிக்கை செய்தி:
நன்றி:தினமலர்

நன்றி:தினமலர்

Follow FOODNELLAI on Twitter

4 comments:

HariV is not a aruvujeevi said...

nanri

துபாய் ராஜா said...

குழந்தை விஷாலினி வாழ்வில் ஏற்றம் பல பெறவும், லட்சியங்கள் யாவும் நிறைவேறவும் வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

குழந்தை விஷாலினி வாழ்வில் ஏற்றம் பல பெறவும், லட்சியங்கள் யாவும் நிறைவேறவும் வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

விஷாலினிக்கு வாழ்த்துக்கள்.