இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday 7 April, 2016

விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்

வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு முகாம்
31.03.2016ல், தச்சநல்லூர் நகர வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு, திருநெல்வேலி, மாவட்ட நியமன அலுவலர் தலைமையில், உணவு பாதுகாப்பு சட்டம் குறித்த ஒரு விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வுக்கூட்டத்தி்ல்,திருநெல்வேலி, மாவட்ட நியமன அலுவலர் மரு.திரு.V.செந்தில்குமார், மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூத்த சகோதரர் திரு.எஸ்.இப்ராகிம்(மேலப்பாளையம் மண்டலம்), நண்பர் திரு.A.C.ரமேஷ்(மேலநீலிதநல்லூர் ஒன்றியம்) ஆகியோர் என்னுடன் கலந்துகொண்டு, சட்டம் குறித்தும், வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
 கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் பொறுமை காத்த வியாபாரிகள் கேட்ட சந்தேகங்களுக்கும் பதிலளித்தோம். இறுதியில், ”கைகழுவுதல்” எவ்வளவு முக்கியம் என்பதை நண்பர் திரு.A.C.ரமேஷ் எடுத்துரைத்து, அதற்கான செயல்விளக்கமும் அளித்தார். நான், கலப்படத்தேயிலையை சுலபமாய்க் கண்டுபிடிப்பது எப்படி என்று எடுத்துரைத்தேன். நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த தச்சநல்லூர் நகர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்து வந்தோம்







மாம்பழங்களைப் பழுக்க வைக்க புதியமுறை: 


திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் திரு.மு. கருணாகரன் அவர்கள் அறிவுரையின்பேரில்,05.04.2016ல், கோடைக்கால பழங்கள் விற்பனையை நெறிமுறைப்படுத்த, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையும் இணைந்து,திருநெல்வேலி மாநகரப்பகுதியிலுள்ள பழங்கள் விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு வருகை புரிந்தவர்களை, உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.முத்துகுமார் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ம.க.குழந்தைவேலு தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மரு.திரு.வி.செந்தில்குமார் அவர்கள் பாதுகாப்பான முறையில் பழங்கள் விற்பனை செய்வதன் அவசியத்தை எடுத்துரைத்தார். பாதுகாப்பற்ற முறையில், உணவு பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மாறாக பழுக்கவைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்பவர்களுக்கு, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணயச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள தண்டனை விபரங்களை, உணவு பாதுகாப்பு அலுவலர் அ.ரா.சங்கரலிங்கம் விளக்கினார்.
தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.கண்ணன் அவர்கள் பாதுகாப்பான முறையில் பழங்களைப் பழுக்க வைப்பது எப்படி என்பது குறித்து எடுத்துரைத்தார். கால்சியம் கார்பைடு எனும் கந்தகக்கல் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களினால் உண்டாகும் தீமைகளை விளக்கி, தோட்டக்கலைத்துறையினால் பரிந்துரைக்கப்படும் எத்திலீன் வாயு மூலம் மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை பழுக்க வைப்பது குறித்து எடுத்துரைத்தார். அவர் பேசும்போது, எத்திலீன் வாயு மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களினால் உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை வலியுறுத்தினார். வீடுகளிலும் மாங்காய்களைப்பழுக்க வைக்க, எத்ரல் கரைசலை ஒரு லிட்டர் தண்ணீருக்கு, ஒரு மில்லி வீதம் கரைத்துக்கொண்டு, அதில் விளைந்த மாங்காய்களை ஒவ்வொன்றாக முக்கி எடுத்துவைத்தால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவை பழுக்கத்துவங்கிவிடும். இதே முறையில், பழங்கள் மொத்த விற்பனை நிலையங்கள் வைத்திருப்போர், எத்ரல் கரைசலை, 5லிட்டர் தண்ணீருக்கு, 10 மிலி வீதம் கலந்து, அத்துடன் சோடியம் ஹைட்ராக்சைடு 2கிராம் சேர்த்து,காற்றுப்புகாத அறையில், முக்கால் பாகத்திற்கு மாங்காய்களை அடுக்கிவைத்து, மீதியுள்ள இடத்தில்,மாலை நேரத்தில், எத்ரல் கரைசல் உள்ள வாளிகளை வைத்து பூட்டிவிட்டால், மறுநாள் காலையில் மாம்பழங்கள் பழுக்கத்துவங்கி விடும். இந்த முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களால், எவ்வித உடல்நலக்கேடுகளும் விளையாது என்றும் எடுத்துரைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ம.க.குழந்தைவேலு அவர்கள் பேசும்போது, கோடை காலத்தில் பழங்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை எடுத்துரைத்து, பாதுகாப்பான முறையில் பழங்களை பழுக்க வைப்பதின் அவசியத்தை வலியுறுத்தினார். பழ வியாபாரிகள் பாதுகாப்பான முறையில் பழங்களைப்பழுக்க வைப்பது குறித்த தமது சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்திக்கொண்டனர்.
உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.எஸ்.இப்ராகிம் நன்றியுரை கூறினார். உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.பா.காளிமுத்து நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
மொத்தத்தில் மிக சிறப்பாக நடைபெற்ற ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
Follow FOODNELLAI on Twitter

3 comments:

MANO நாஞ்சில் மனோ said...

சிறப்பான விழிப்புணர்வு பதிவு...வாழ்த்துகளுடன் நன்றிகளும்...

Yaathoramani.blogspot.com said...

எங்களுக்கும் இதுவரை
எத்திலீன் அறியாத தகவல்
பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

Yarlpavanan said...


சிறந்த பகிர்வு