பதப்படுத்தப்படும் உணவுப் பொருட்களில், கடைபிடிக்க வேண்டிய தர அளவீடு குறித்த வரைவு விதிமுறைகளை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டு உள்ளது.
ஜாம், ஜெல்லி… இதுகுறித்து, இவ்வாணைய தலைமை செயல் அதிகாரி பவன் அகர்வால் கூறியதாவது:புதிய உணவுப் பொருட்களின் தர அளவீட்டை நிர்ணயிக்கும் பணி, வழக்கமாக நடைபெறுவது தான். தற்போது, பொதுவாக பயன்படுத்தும், உறைய வைக்கப்பட்ட காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட பழங்கள், ‘டின்’களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றுக்கான தர நிர்ணய வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதுகுறித்து, பொது கருத்துக்களின் அடிப்படையில், விதிமுறைகள் அமல்படுத்தப்படும். புதிய விதிமுறையில், டின்னில் அடைத்து விற்கப்படும் தக்காளி, தக்காளி சாறு, உறைந்த பீன்ஸ், காலிபிளவர், பட்டாணி, கீரை ஆகியவற்றுக்கான தர அளவீடுகள் இடம் பெற்றுள்ளன.
அதுபோல், பழங்களில் தயாரிக்கப்படும், ‘ஜாம், ஜெல்லி மற்றும் மர்மலட்ஸ்’ ஆகியவற்றுக்கான தர நிர்ணய விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த உணவுகளில், உலோகங்கள் இருக்க வேண்டிய அளவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த உணவுப் பொருட்களின், ‘பேக்கேஜிங்’ மற்றும் ‘லேபிளிங்’ முறைகளுக்கும் விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. ஆணையம் அங்கீகரித்த, உடலுக்கு ஊறு விளைவிக்காத மூலப்பொருட்கள் மட்டுமே, உணவுப் பொருட்கள் தயாரிப்பில் இடம் பெற வேண்டும்.

3 comments:
நன்றி சுரேஷ் சார்
நல்ல தகவல்...
அருமை.
நன்றி பரிவை சே.குமார் சார்
Post a Comment