இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 16 October, 2017

கற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.


                                 கற்பித்தல் எவ்வளவு இனிமையென்று கற்றுணர்ந்த நாள் அது. அதுவும் கல்வி கற்ற கல்லூரியிலேயே, கற்பிக்கச் செல்வது இனிமை இனிமை என்றும் இனிமையே.
                                  தற்போது பரவலாக டெங்கு காய்ச்சல் பற்றிய செய்திகள் வருவதால், ஒவ்வொரு வியாழனன்றும் டெங்குநோய் எதிர்ப்பு தினமாக அனுசரித்து  விழிப்புணர்வு ஏற்படுத்திட அரசு அறிவித்துள்ளது.

                                இத்தகைய ஒரு அரிய வாய்ப்பை நாம் கல்வி கற்ற கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நடத்தினால் என்ன என்று எனக்குள் ஒரு ஆவல். உடனே முன்னாள் மாணவர்கள் சங்க இந்நாள், முன்னாள் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டேன்.  திரு.மணிசங்கர் சார்,திரு.முருகானந்தம் சார், திரு.ராஜ்குமார் ஆகியோரிடம் இதுபற்றி கேட்டபோது, அனைவருமே நல்ல விஷயம்தானே, நடத்துங்க என்றார்கள். 

                        அடுத்து, நமது மதிப்பிற்குரிய கல்லூரி முதல்வர் அவர்களைத்தொடர்பு கொண்டேன். விரைவில் வாருங்கள் என்றார்கள். அக்டோபர்-12ல் விழிப்புணர்வு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
                     எங்கள் துறை மாவட்ட நியமன அலுவலரும் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும், அந்தப்பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.மாரியப்பன் அவர்களுடன் சேர்ந்து செய்திட இசைவு தெரிவித்தார். அவரும் நம் கல்லூரி முன்னாள் மாணவர்தான் என்பது அப்போதுதான் தெரிய வந்தது. (ALUMNI ASSOCIATION கவனத்திற்கு)


                          உணவு பாதுகாப்பு குறித்த கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். அனைத்து மாணவர்களும் பார்த்து பயன்பெற வேண்டுமென முதல்வர் அவர்கள் கருத்து தெரிவித்தார்கள். முதல்வர் முன்னிலை வகித்து நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்கள். பேராசிரியர் திரு. விஸ்வநாதன் சார் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை வெற்றிபெற ஒத்துழைத்தார்கள்.
                       முதலில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு குறித்து மாவட்ட நியமன அலுவலர்  மரு.திரு.செந்தில்குமார் அவர்கள் உரையாற்றினார்கள். டெங்குகாய்ச்சல் உருவாகக் காரணிகள் எவை, காய்ச்சல் வராமல் காத்துக்கொள்வது எப்படி, காய்ச்சல் வந்தால் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பன குறித்து விளக்கமளித்தார்கள். ”உணவில் கலப்படம் உயிருக்கு உலை வைத்திடும்” என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன்.

                     

அடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திருவாளர்கள்.மாரியப்பன், காளிமுத்து  ஆகியோர் உணவு பாதுகாப்பு குறித்து விளக்கமளித்தார்கள். 

         உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த முறையில் முறையாக கை கழுவுவது எப்படி என்பதை செயல்முறை விளக்கமளித்தார் உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.ரமேஷ்.   நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் பரிசுகளும் வழங்கப்பட்டன.               மாணவி ஒருவர் நிகழ்ச்சி குறித்து தமது கருத்துக்களை பதிவு செய்து நன்றியுரை நிகழ்த்தினார்.


நன்றி: ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி நிர்வாகம், ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் என்னுடன் பணியாற்றும் குழு உணவு பாதுகாப்பு அலுவலர்கள்.               

Follow FOODNELLAI on Twitter

4 comments:

Seeni said...

நல்ல விசயம்..

உணவு உலகம் said...

நன்றி Seeni சார்

'பரிவை' சே.குமார் said...

நல்ல விஷயம்...
அருமை.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா....

Unknown said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News