நேற்று காலை, நீண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின்னர், சுழற்கழக செயலர் திரு.பாலசுப்ரமணியன் சாரிடமிருந்து ஓர் அழைப்பு. எடுத்தவுடன், வணக்கம் பாலு சார் என்றேன். அவர்கள், நான் ரோட்டேரியன் பாலு பேசுறேன்னு சொன்னார்கள். வருடங்கள் பல ஆனாலும் இன்னும் அவர் எண் என் செல்லில் இருக்கிறது, அதனால்தான் வணக்கம் என்று உங்கள் பெயர் இணைத்துச்சொன்னேன் என்றேன். ஞாயிறன்று திருநெல்வேலி மத்திய சுழற்கழகத்தின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, “உணவு பாதுகாப்பு” குறித்து உரையாற்ற வேண்டுமென்றார்.
நிகழ்ச்சி துவங்குமுன் திரு.மயில் பாலசுப்ரமணியன் சாரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார் பாலு சார். சங்கரலிங்கம் சாரை என்னிடமே அறிமுகமா செய்கிறீர்கள் என்று கேட்டு நெகிழச்செய்தார்கள். அதன்பின்னர்,இன்று நெல்லையில் நடைபெற்ற திருநெல்வேலி மத்திய சுழற்கழகத்தின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, “உணவு பாதுகாப்பு” குறித்து உரையாற்றினேன்.
பல நாட்களுக்குப் பின்னர் பழகிய பல நண்பர்களைப்பார்த்ததில் மகிழ்ச்சி. திருநெல்வேலி டவுண் கிளப்பிலிருந்து திரு.ராமலிங்கம் அண்ணாச்சி எனக்காகவே வந்ததாகச்சொன்னது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. உணவு பாதுகாப்பு குறித்து சிற்றுரையாற்றி, அக்டோபர்-16 -உலக உணவு தினத்தில் துவங்க உள்ள “ஸ்வஸ்த் பாரத் யாத்ரா” குறித்தும் விளக்கி, 22.10.18 ல் நம் மாவட்டத்தில், வண்ணார்பேட்டை, ஃப்ரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தேன்.
நிறைய சந்தேகங்கள் உறுப்பினர்களிடமிருந்து வந்தது. நிகழ்ச்சியில் தன் பொன்னான நேரத்தை ஒதுக்கி கலந்துகொண்ட மருத்துவர் திரு.அருள் விஜயகுமார் சாரிடம் பல கருத்துக்களை சரிதானா என்று கேட்டு அப்ரூவல் பெற்றுக்கொண்டேன். மொத்தத்தில் ஒரு இனிய மாலைப்பொழுது, மிக இன்பமாய்க் கழிந்தது.

No comments:
Post a Comment