நல்ல முயற்சி- நாமும் பங்கு பெறுவோம், பாராட்டுவோம்:
சென்னை யூத் பதிவர் சந்திப்பு பற்றி “மெட்ராஸ் பவன்” சிவகுமாரின் பதிவில் வந்த செய்தியை இங்கே மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சென்னை யூத் பதிவர் சந்திப்பு பற்றி “மெட்ராஸ் பவன்” சிவகுமாரின் பதிவில் வந்த செய்தியை இங்கே மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சென்னை யூத் பதிவர் சந்திப்பு – சிறப்பு விருந்தினர்கள்
வரும் ஞாயிறு சென்னையில் நடக்கவுள்ள யூத் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இரு சாதனையாளர்கள் ஒப்புதல் தெரிவித்து உள்ளதை மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
யோகநாதன்: கோவையை சேர்ந்த பேருந்து நடத்துனரான இவர் கடந்த 25 வருடங்களில் ஒரு லட்சம் மரங்கள் நட்டு சாதனை தமிழராக வலம் வருகிறார். சென்ற ஆண்டு சி.என்.என். ஐ.பி.என். செய்தி சேனல் ‘ரியல் ஹீரோஸ்’ விருதை இவருக்கு வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது.
யோகநாதன் குறித்து சி.என்.என். ஐ.பி.என். வெளியிட்ட செய்திக்கான லிங்க்:
தி ஹிந்து நாளிதழ் செய்தி:

யோகநாதன் அவர்களை அன்புடன் வரவேற்கிறது சென்னை யூத் பதிவர் சந்திப்பு குழு.
அடுத்த சிறப்பு விருந்தினர் செல்வி விஷாலினி அவர்கள்:
பதினோரு வயதே நிரம்பிய இவருடைய ஐ.க்யூ. லெவல் 225. இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ள தமிழ்மகள்.விஷாலினி குறித்து உணவு ஆபீசர் தளத்தில் வெளிவந்த செய்திக்கான லிங்க்:
சகோதரி விஷாலினியையும் அன்புடன் வரவேற்கிறோம்.
Chennai Youth bloggers Meet:
Date: 20/05/12 Sunday
Address:
டிஸ்கவரி புக் பேலஸ்,
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,
சென்னை - 600078.
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
டிஸ்கி:1- சென்னைப்பித்தன் சாரே, யூத் பதிவர் சந்திப்பில் தாம் கலந்து கொள்ளலாமா என்று தம் பகிர்வில் சந்தேகம் எழுப்பியுள்ளார்.அப்ப நாம எப்படின்னு யோசிக்கணுமோ! ஏன்னா, அவர் மனதளவில், நம்மைவிட இளமையானவராச்சே! :)
டிஸ்கி:2- மனதளவில் இளமையானவர் அனைவரும் கலந்துகொள்ளலாம் நண்பர்களே.

32 comments:
congrats to all
சிறப்பு விருந்தினர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வருகை தர உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நக்கீரனின் தொப்பை சைஸ் ‘யூத் பதிவர்’ கட் ஆப் மார்க்கை விட அதிகம் உள்ளதால் அவரை வைட்டிங் லிஸ்டில் போட்டுள்ளோம். இரண்டே நாளில் எட்டு இஞ்ச் குறைக்காவிடில் கஷ்டம்தான்.
மனதளவில் இளமையானவர் அனைவரும் கலந்துகொள்ளலாம் நண்பர்களே.
///////////////////////
சரியாக சொன்னீங்க ஆபிசர்!
உங்களுக்கு இப்போதானே 20 முடிஞ்சு 19 நடக்குது? அப்புறம் என்ன கலந்துகிட்டு அசத்துங்கள். :-)
சந்திப்பு இனிதாக வாழ்த்துக்கள்!
//அவர் மனதளவில், நம்மைவிட இளமையானவராச்சே! :)//
:-)))
இந்த அரிய வாய்ப்பு கிடைத்தது மிக மகிழ்ச்சியளிக்கிறது.சந்திப்போம்.
நல்ல என்ஜாய் பண்ணுங்க friends..
என்னது நக்கீரனுக்கு இடமில்லியா.... இன்னும் 24 மணி நேரத்திற்குள் இடமளிக்காவிட்டால் தமி்ழகமெங்கும் செல்போன் அழைப்பு போராட்டம் நடைபெறும்.... ஜாக்க்க்கிரதை.............!
சென்னை யூத் பதிவர் சந்திப்பு க்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்
சென்னை யூத் பதிவர் சந்திப்பு க்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்
// சி.பி.செந்தில்குமார் said...
congrats to all//
கங்கிராட்ஸ் மட்டும் காணாது, வந்து கலந்துக்குங்க யூத்(!) சீனியரே!!!
//தமிழ்வாசி பிரகாஷ் said...
சிறப்பு விருந்தினர்களுக்கும் வாழ்த்துக்கள்.//
அப்படியே ஞாயிறு காலை வைகை எக்ஸ்பிரஸில வந்து கலந்துக்குங்க நண்பரே.
//துபாய் ராஜா said...
வருகை தர உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//
எங்கிருந்தாலும் தாய்மண்ணில் தங்கள் நினைவு.நன்றி ராஜா.
//! சிவகுமார் ! said...
நக்கீரனின் தொப்பை சைஸ் ‘யூத் பதிவர்’ கட் ஆப் மார்க்கை விட அதிகம் உள்ளதால் அவரை வைட்டிங் லிஸ்டில் போட்டுள்ளோம். இரண்டே நாளில் எட்டு இஞ்ச் குறைக்காவிடில் கஷ்டம்தான்.//
அடுத்து கமெண்டியுள்ள ப.ரா. கமெண்டைப் படிச்சிட்டும், வெயிட்டிங்க் லிஸ்ட்டில் வைக்கத் தைரியம் இருக்கா உங்களுக்கு???
//வீடு சுரேஸ்குமார் said...
மனதளவில் இளமையானவர் அனைவரும் கலந்துகொள்ளலாம் நண்பர்களே.//
///////////////////////
சரியாக சொன்னீங்க ஆபிசர்!//
முக்கியமா உங்களைப்போன்ற சீனியர்களுக்காகாத்தான் சொன்னேன். :))
//Prabu Krishna said...
உங்களுக்கு இப்போதானே 20 முடிஞ்சு 19 நடக்குது? அப்புறம் என்ன கலந்துகிட்டு அசத்துங்கள். :-)//
ஆமாம் பெரியவரே. எல்லாம் உங்கள் ஆசிர்வாதம். :)
// koodal bala said...
சந்திப்பு இனிதாக வாழ்த்துக்கள்!//
நன்றி பாலா.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது நக்கீரனுக்கு இடமில்லியா.... இன்னும் 24 மணி நேரத்திற்குள் இடமளிக்காவிட்டால் தமி்ழகமெங்கும் செல்போன் அழைப்பு போராட்டம் நடைபெறும்.... ஜாக்க்க்கிரதை.............!//
அய்யா சாமி, ஆளை விடுங்க. அடுத்த 48 மணி நேரத்தில் தக்க இடம் நக்கீரருக்குக் காத்திருக்கும். சினம் தணிக்க!
//"என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல என்ஜாய் பண்ணுங்க friends..//
வாங்க நண்பரே.
//யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...
சென்னை யூத் பதிவர் சந்திப்பு க்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்//
நேரில் வந்து வாழ்த்தினா இன்னும் நல்லாயிருக்குமே.
//சென்னை பித்தன் said...
//அவர் மனதளவில், நம்மைவிட இளமையானவராச்சே! :)//
:-)))
இந்த அரிய வாய்ப்பு கிடைத்தது மிக மகிழ்ச்சியளிக்கிறது.சந்திப்போம்.//
இளைய சாரி இளமைத்தளபதியே வருக, வருக.
மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.
விழா சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.
கலக்குவோம் சார்.
// Rathnavel Natarajan said...
மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.//
நன்றி அய்யா.
// சே. குமார் said...
விழா சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.//
நன்றி குமார்.
//கோகுல் said...
கலக்குவோம் சார்.//
வாங்க கலக்கலாம்.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள் - போய் கலக்குங்கள்
அய்யய்யோ சென்னைக்கு வர டிக்கெட் கிடைக்காமல் போச்சே நான் மிஸ் பண்ணிட்டேனே.
பதிவர்களின் சந்திப்பு சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள் வாழ்த்துகள், அப்படியே சிறப்பு விருந்தினர்களுக்கும் வாழ்த்துகள்.....
Post a Comment