இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday 2 February, 2013

உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற்சி -நிறைவு பகுதி.

                                   
                         ஐந்தாம் நாள், பயிற்சியின் இறுதி நாள். காலையில், மத்திய உரிமம் வழங்கும் நியமன அலுவலர், டாக்டர்.திரு.ஸ்ரீநிவாசன்  FOOD SAFETY PLAN தயாரிப்பது எப்படி என்று விளக்கமளித்தார்கள். இது ஒரு பயனுள்ள பயிற்சி.அடுத்து, ஆவினில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற திரு.சங்கரன் CONCEPTS OF FOOD SAFETY MANAGEMENT SYSTEM  குறித்து விளக்கினார்கள்.

                                          
 பிற்பகலில், FOOD SURVEILLANCE குறித்து, திரு.சந்தான ராஜன் சாரும், RISK ANALYSIS குறித்து, ஒய்வு பெற்ற அரசு துணை பகுப்பாளர் திரு.சாய்பாபா சாரும் விளக்கினார்கள். 
                                    பின்னர், உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு சாதகமான உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புரைகள் குறித்து நான் விளக்க திரு.சந்தானராஜன் சார் நேரம் ஒதுக்கினார்.  வழக்கு முறையிடும் அரசு தரப்பிற்கு பயனுள்ள சுமார் 40 தீர்ப் புரைகள் குறித்து, உணவு பாதுகாப்பு ஆணையரக புள்ளியியல் அலுவலர் திருசௌந்தரராஜன்                 முன்னிலையில் எடுத்துரைத்தேன். எனக்கு உணவு கலப்பட தடை சட்டம் குறித்து பயிற்சி அளித்த ஆசிரியர் பலர் அமர்ந்திருந்த சபையில், நான் அறிந்தவற்றை பகிர்ந்துகொள்ள எனக்கு கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பு.

                               அடுத்து, பயிற்சியின் நிறை குறைகள் குறித்து ஒரு அலசல். திண்டுக்கல் நண்பர் செல்வம், மதுரை முரளி போன்றோர் அவர்களது கருத்துக்களை பதிவு செய்தனர். 
          அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கிய பரிட்சைத் தாளும் வழங்கப்பட்டது. 50 கேள்விகள். அனைத்துமே உணவு பாதுகாப்பு சட்டம், விதிகள், ரெகுலேஷன்கள் என நம் பணியோடு தொடர்புடைய  விஷயங்களே. பள்ளிக்கூடத்தில் மீண்டும் ஒரு முறை சேர்ந்து விட்டோமோ என்றென்னும் விதத்தில் மிக கெடுபிடியாக நடத்தப்பட்டது. தேர்வு முடிந்தவுடன், பரிட்சை பேப்பர்களை சேகரித்து விட்டு, அதற்கான பதில்களை திரு.சந்தானராஜன் சார் விளக்கியது அனைவருக்கும் பயனுள்ள ஒரு நிகழ்வு.
                             புள்ளியியல் அலுவலர் சட்ட அமலாக்கம் குறித்து அனுப்பும் அறிக்கைகள் தவறின்றி அனுப்பும் விதம் குறித்து விளக்கினார்.
                             இத்தகைய சிறந்த பயிற்சி அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கும் வழங்க முயற்சி மேற்கொண்ட தமிழக  உணவு பாதுகாப்பு ஆணையர் திரு.குமார் ஜெயந்த்,IAS  அவர்களுக்கும்,  கூடுதல்  ஆணையர் திரு.ஜெயகுமார் அவர்களுக்கும், ஆணையரகத்தில் பயிற்சி நடைபெற அரும்பாடு பட்ட அலுவலர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை  காணிக்கையாக்குகிறோம். தொடர்ந்து நடைபெற உள்ள இப்பயிற்சிக்கு சிறப்பாய் உழைத்திடும்  CONCERT அமைப்பின் தலைவர் திரு.R .தேசிகன் மற்றும் அதன்  பொது செயலாளர் திரு.G.ராஜன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளும், அவர்தம் நுகர்வோர் சேவைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் கூறிக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். 

                         நிறைவு நாளில், பயிற்சி நடைபெற்ற பொதுசுகாதார துறை பயிற்சி நிலையமே ஜே ஜே என்றிருந்தது. அதற்கு காரணம், வளாகத்தில் நடைபெற்ற "காக்கி" திரைப்பட படப்பிடிப்பே. பயிற்சி நிலையம் அன்று காவல் துறை ஆணையரகமானது, காவலர்கலாகவும், கலெக்டராகவும் அங்கிருந்தனர்.அந்த   ஸ்டில்கள் :
                                        
Follow FOODNELLAI on Twitter