உணவில் கலப்படம் செய்பவர்கள் மீது, வழக்கு தொடுத்தால் மட்டும் போதாது. அவற்றை நீதிமன்றத்தில் எடுத்துரைத்து, எதிர் தரப்பின் குறுக்கு விசாரணையில் பதில் சொல்வது என்பது சாதாரண காரியமில்லை. அவ்வாறு, நீதிமன்றத்தில் நமது அரசு தரப்பை எடுத்துரைக்கும்போது, பல்வேறு சந்த்ர்ப்பங்களில் நமக்கு ஏற்படும் இன்னல்களைத் தீர்க்க பயன்படுபவையே இதனடியில் காணப்படும் திரட்டு. இது எனக்கு ஒவ்வொரு வழக்கு வாதாடும்போதும், ஏற்பட்ட பிரச்சனைகளின் அடிப்படையில் தேடி கண்டுபிடிக்கப் பட்டவை. அவற்றில் பல, நாம், புதிய உணவு பாதுகாப்பு சட்ட அமலாக்கத்திற்கும் பயன்படுபவை பல உள்ளன.
