இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 20 October, 2010

கொசு -கடிக்கும் ஆனால் கடி(வலி)க்காது.

                                    மரபணு  மாற்றம் கொசுக்களிலும் கொண்டு வரப்படுகிறது. மத்திய அரசின் பூச்சியியல் ஆராய்ச்சி மைய  இயக்குனர் திரு. பி.கே.தியாகி, மரபணு மாற்றம் கொசுக்களிலும் கொண்டு வரப்படுவதாக கூறியுள்ளார்.
 
                                    "ஈடீஸ் ஈஜிப்டி"  - இன்று உலகளவில் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு  இவள்தான்  ஹீரோயினி.(சாரி, ஆண் கொசுக்கள் கடிப்பதில்லை)   வாழ்நாள் இவளுக்கு   மாதம் ஒன்று  மட்டுமே. 

                                     வரிபுலிபோல் உடம்பெல்லாம் வரிசையாய் கோடுகள் இருக்கும். கேள்விக்குறிபோல்  உடல்  வளைந்திருக்கும்.  வாழும் நாட்களில் கண்ணில் கண்டவரையெல்லாம் கடித்து துன்புறுத்துவதில் இவளுக்கு இணை எவருமில்லை. கடி என்றால்  சாதாரண கடியல்ல. மனித உடலில் உள்ள இரத்தத்தை உறிஞ்சுவது இவளுக்கு பொழுதுபோக்கு. பொழுதுபோக்காய் இரத்தத்தை உறிஞ்ச இவளது  சிரிஞ்சை நுழைக்கும்போது, இவள்   உடலில் உள்ள  டெங்கு வைரஸை மனித உடலில் இலவச டெலிவரி  கொடுப்பது இவளது வாடிக்கை.

                                         ஆண்  கொசுக்களின் டி. என். ஏ.வில், மரபணு மாற்றம் செய்து, அவை பெண் கொசுக்களுடன் சேரும் வகையில் பறக்கவிடப்படும்.  அவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களின் இனபெருக்கம் மூலம் பிறக்கும் புதிய சந்ததி வலிமை இன்றியும், கடிக்கும் தன்மை குறைந்தும் காணப்படும். மலேசியாவில் மரபணு மாற்றம் செய்த கொசுக்கள் சிறகடிக்க தொடங்கிவிட்டன. வெகு சீக்கிரம் இந்தியாவிலும் இது சிறகடிக்கும்.  

                                      
Follow FOODNELLAI on Twitter

4 comments:

இளங்கோ said...

wow.. good news

sakthi said...

இந்த வகை கொசுக்கள் பகலில் மட்டுமே கடிக்கும்.பள்ளி குழந்தைகளை அதாவது பதினைந்து வயதுக்குள் உள்ள குழந்தைகளை மட்டுமே தேடிப்பிடித்துக்கடிக்கும்.சுத்தமான தண்ணீரில் மட்டுமே இவை முட்டைகளை இடும்.புதிய கட்டிட பணிகள் நடைபெறும் இடங்களில் தேங்கி இருக்கும் நல்ல தண்ணீரிலும் இவை முட்டையிட்டு இனவிருத்தி செய்யும்.இவை நானறிந்த பழைய தகவல்கள்.டெங்கு காய்ச்சலை உருவாக்கும் இந்த கொசுக்களில் இருந்து அதாவது கடியிலிருந்து விடுதலை கிடைக்கும் என தாங்கள் தந்துள்ள தகவலுக்கு நன்றி.கடிக்கும் தன்மை குறைக்கப்பட்டுள்ள கொசுக்களின் நோய் பரப்பும்தன்மை குறையுமா/

Chitra said...

Super...


Whenever you have time:
http://konjamvettipechu.blogspot.com/2010/10/blog-post_18.html

உணவு உலகம் said...

நன்றி இளங்கோ.
சக்தி, கடி குறையும்போது , நோய் பரவுதலும் குறையுமில்லையா?
நன்றி சித்ரா. நல்ல பதிவிற்கான லிங்க் கொடுத்துள்ளீர்கள். ரசித்தேன்.