உலகின் உறவுகளில் உன்னதமான உறவு
டிஸ்கி: 1)04.09.2011 நண்பகல் 12.30 மணியளவில்,எங்களையெல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு, இறைவனடி சேர்ந்த என் அன்னைக்கு அர்ப்பணம்.
2) தகவலறிந்து, நேரிலும், செல்லிலும்,கமெண்டிலும், Google Buz மற்றும் FB யிலும் இரங்கல் தெரிவித்த பதிவுலக சொந்தங்களுக்கு நன்றி.
3) இயல்பு நிலை திரும்பியவுடன், பதிவுலகம் பக்கம் வருகிறேன்.
பெற்றெடுத்த தாய் என்றால் பெரிதும் சர்ச்சையில்லை.
உதிரம் கொடுத்தாய், உயிரும் கொடுத்தாய்
உணவு ஊட்டும் உன்னத வேளைதனில்,விலகி ஓடினாலும்
தந்தை இவர், தனயன் இவர் என்றெனக்கு உலகின்
உறவுகள் தெரிந்திட உணர்வையும் ஊட்டியே வளர்த்தாய்
உன்னத மனிதனாய் உலகில் வலம் வர ஊக்குவித்தாய்
உறவை மட்டும் சொல்லித்தந்த நீ, பிரிவைச் சொல்லித்தரவோ
உயிரைத்துறந்து உறவுகளை மறந்து தனியே சென்றாய்!
பாலூட்டிச் சீராட்டி பார்த்துப் பார்த்து வளர்த்த என் தாயே
படுக்கையில் நீ வீழ்ந்தபோது பரிதவித்துத்தான் போனேன்.
பம்பரமாய்ச் சுழன்று நீ வேலை பார்த்த வீட்டினிலே
நிற்பதற்கும் நடப்பதற்கும் பிடிக்க ஒரு கம்பி தேவைப்பட்டதே!
பத்து பேருக்கு நாளும் அன்னமிட்ட உன் கைகளால்
பத்து பேருக்கு நாளும் அன்னமிட்ட உன் கைகளால்
பசித்திட்ட வேளைதனில் எடுத்துண்ண இயலாமல் போனதேன்?
பாடாய்ப் படுத்திய நோய் உன்னை பச்சிளங்குழந்தையாக்கியதால்,
பசி,தூக்கம், அன்னம் மறந்தாய், பாலைக் கொடுத்தோம்!
தூக்கம் தொலைத்தாய், துயரம் வளர்த்தோம், கொடுத்த மருந்தினில்
துவண்ட உன் உடல் கண்டு வெறுத்தே விட்டது எங்கள் வாழ்வு.
காசிக்குப் போனபோது என் தந்தை உனக்கு அணிவித்த
கண்ணாடி வளையல் கடைசிவரை உன்னுடன் வந்ததே!
காலமெலாம் காப்பாற்றுவாய் என்றெண்ணிய எங்களை மட்டும்
கைவிட்டு செல்ல மனம் உனக்கு வந்ததேன்?
காசிக்குப் போனபோது என் தந்தை உனக்கு அணிவித்த
கண்ணாடி வளையல் கடைசிவரை உன்னுடன் வந்ததே!
காலமெலாம் காப்பாற்றுவாய் என்றெண்ணிய எங்களை மட்டும்
கைவிட்டு செல்ல மனம் உனக்கு வந்ததேன்?
தாலாட்டி உறங்க வைத்த தாயின் மடியே சொர்க்கமென்பேன் எனைச்
சீராட்டி வளர்த்த உன் கைகள் சிறிதும் செயல்பட மறந்த போதும்
அமுதமொழி அருளிய உன் வாய்தனில் அரிசியிட்ட பொழுதினிலும்,
அடுக்கி வைத்த சிதையினிலே அனலில் நீ வெந்தபோதும்
தொப்புள்கொடி உறவு தொடர்பறுந்து தொலைதூரம் இன்று போனபோதும்
சொர்க்கமெல்லாம் சோகமாகி என் வாழ்வின் அர்த்தம் தொலைந்ததம்மா!
டிஸ்கி: 1)04.09.2011 நண்பகல் 12.30 மணியளவில்,எங்களையெல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு, இறைவனடி சேர்ந்த என் அன்னைக்கு அர்ப்பணம்.
2) தகவலறிந்து, நேரிலும், செல்லிலும்,கமெண்டிலும், Google Buz மற்றும் FB யிலும் இரங்கல் தெரிவித்த பதிவுலக சொந்தங்களுக்கு நன்றி.
3) இயல்பு நிலை திரும்பியவுடன், பதிவுலகம் பக்கம் வருகிறேன்.

38 comments:
:(((
வணக்கம் ஆப்பிசர்,
உங்கள் உணர்வுக் கவிதையோடு,
எம் இரங்கல்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.
எனது கண்ணீர் அஞ்சலிகள்
அம்மாவுடன் வாழ்ந்த நாட்களை அப்படியே ரத்தின சுருக்கமாக எங்கள் கண்முன் கொண்டுவந்துவீட்டீர்கள். அம்மாவுடைய ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அண்ணா...என்ன சொல்றதுன்னு தெரில...:-(( அம்மா உங்க கூடவே தான் இருப்பாங்க அண்ணா...
எங்களூக்கு அப்பாபோல் இருக்கும் உங்கள் அம்மா தவறியதற்கு எங்கள் அஞ்சலிகளூம் ,ஆறுதல்களும்
//உன் வாய்தனில் அரிசியிட்ட பொழுதினிலும்,
அடுக்கி வைத்த சிதையினிலே அனலில் நீ வெந்தபோதும்//
அண்ணா இந்த வரிகள் மீண்டும் என்னை கண்கலங்க வைத்து விட்டது.
அம்மா என்றும் நம்மை வாழ்த்தி கொண்டும்...நம் மனதில் வாழ்ந்து கொண்டும் இருப்பார்கள் அண்ணா!
எனது இரங்கலும் அண்ணாச்சி
அன்னையின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்
நீங்கள் விரைவில் இயல்பு நிலை திரும்பவும்.
விரைவில் இயல்பு நிலைக்கு வாருங்கள்.
என் கண்ணீர் அஞ்சலியை கணிக்கையகுகிறேன்.அம்மாவின் மறைவு மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.விரைவில் இயல்பு நிலைக்கு வாருங்கள்....
அம்மாவின் நினைவுகளை கண்ணீரோடு சொல்லிட்டீங்க ஆபீசர்...
அம்மா நம் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்....
மீண்டும் என் கண்ணீர் அஞ்சலி......
கண்ணீரை துடைத்து விட்டு சகஜநிலைக்கு வாருங்கள் ஆபீசர்...
அழ்ந்த அனுதாபங்கள் சார்
சீக்கிரம் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவீர்கள் இறைவனை பிரார்த்திக்கிறேன் அம்மா எப்போதும் உங்களோடு இருப்பார் கலங்காதீர்கள்..
வணக்கம் ஐயா.. சிறு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சந்திக்கின்றோம், அந்த சந்திப்பிலே ஆறாத சோகமும் வந்ததை எண்ணி கலங்குகின்றேன். ஆறுதல்களால் ஆற்றமுடியாத இழப்புக்களை காலமே ஆற்றும்.. அவர் உங்கள் அருகில் இல்லாதபோதும் அவரது ஆசிகளும், ஆனமபலமும் உங்களை வழிநடத்தி செல்லும் என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு
அமுதமொழி அருளிய உன் வாய்தனில் அரிசியிட்ட பொழுதினிலும்,
அடுக்கி வைத்த சிதையினிலே அனலில் நீ வெந்தபோதும்
தொப்புள்கொடி உறவு தொடர்பறுந்து தொலைதூரம் இன்று போனபோதும்
சொர்க்கமெல்லாம் சோகமாகி என் வாழ்வின் அர்த்தம் தொலைந்ததம்மா!
உங்கள் அன்னையார் ஆன்மா சாந்தி அடைய மனப்பூர்வமாக நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
எங்கள் ஆறுதல்களும் அஞ்சலிகளும்,சீக்கிரமே மீண்டு வாருங்க....!
அமுதமொழி அருளிய உன் வாய்தனில் அரிசியிட்ட பொழுதினிலும்,
அடுக்கி வைத்த சிதையினிலே அனலில் நீ வெந்தபோதும்
தொப்புள்கொடி உறவு தொடர்பறுந்து தொலைதூரம் இன்று போனபோதும்
சொர்க்கமெல்லாம் சோகமாகி என் வாழ்வின் அர்த்தம் தொலைந்ததம்மா!
உங்கள் அன்னையார் ஆன்மா சாந்தி அடைய மனப்பூர்வமாக நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
அம்மா ஆசியுடன் சீக்கிரம் மீள்வீர்கள்.
சார், எங்கள் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்! அன்னையில் இழப்பு என்றைக்குமே ஈடு செய்ய முடியாதது சார்!
எனது கண்ணீர் அஞ்சலிகள் .
தாமதமாக அறிந்த செய்தி.அம்பை வீட்டிற்கு நான் செல்லும் போதெல்லாம் எல்லோர் நலமும் விசாரிக்கும் பாட்டி இப்போது இல்லை என்பதை நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. அன்னாரது மறைவை தாங்கும் சக்தியை தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் அருளுமாறு ஆண்டவனை வேண்டுகிறேன்.
அம்மா ஆசியுடன் சீக்கிரம் மீள்வீர்கள்.
May her soul rest in peace. Our sincere prayers for the family at this sad time.
என் அஞ்சலியும்,ஆறுதல்களும்.
ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா, இழப்பின் வலியிலிருந்து காலம் உங்களை மீட்டுக் கொண்டு வரட்டும்.
என் அஞ்சலிகளை பகிர்ந்து கொள்கிறேன் அண்ணா (
என் அஞ்சலியும்,ஆறுதல்களும்.
அன்னையின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம். அஞ்சலியும்,ஆறுதல்களும்.
வேதா. இலங்காதிலகம்.
காசிக்குப் போனபோது என் தந்தை உனக்கு அணிவித்த
கண்ணாடி வளையல் கடைசிவரை உன்னுடன் வந்ததே!/
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் அன்னையின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
அன்னையை இழந்து வாழும் தங்களுக்கும் தங்கள் குடும்பாத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
தங்கள் துயரத்தில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்
எங்க ஆறுதல்களும் அஞ்சலிகளும். மீண்டும் சீக்கிரமே வாங்க.
ஆறுதல் அளித்த, அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி.
அன்னையைப் இழந்து அவதியுறும் தங்கள் துன்பத்தை
இறவன் போக்க வேண்டும் .தங்கள் அன்னையின் ஆத்மா
சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்......
எனது கண்ணீர் அஞ்சலிகள்
அம்மாவுடன் வாழ்ந்த நாட்களை அப்படியே ரத்தின சுருக்கமாக எங்கள் கண்முன் கொண்டுவந்துவீட்டீர்கள். அம்மாவுடைய ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Post a Comment