இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday, 21 June, 2012

வகையாய் மாட்டிவிட்ட வள்ளி

                                    
                 கடந்த வருடம், மாதாந்திர ஆய்வின்போது,ஒரு  லாலாக்கடையில் விற்பனை செய்து கொண்டிருந்த சிப்ஸ் பாக்கட், பார்க்க கவர்ச்சியா இருந்தது.அதுல ஒரு சிப்ஸ் பாக்கட்டை உணவு மாதிரியாக எடுத்து அனுப்பினா, அந்த சிப்ஸ் அட்ராக்சனா இருக்க, அதில் செயற்கை வண்ணங்கள் சேர்த்திருக்கிறதும்,அந்த பாக்கட்டுகள் மீது, உணவு கலப்படத்தடைச்சட்டத்தின் கீழ் குறிப்பிட வேண்டிய தயாரிப்பு தேதி, பாட்ச் எண், சிப்ஸில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியல் இல்லையென்பதும் தெரிய வந்தது.
                                       
            அப்புறமென்ன, சிப்ஸை வித்தவரு, வித்த கடையோட ஓனரு, தயாரிச்சவர்னு மூணு பேர் மீதும், வழக்குத்தொடர, துறை இயக்குநருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. வழக்குத்தொடர அனுமதியும் வந்தது. தற்போது வழக்கு, நீதிமன்ற விசாரணையில்.சின்ன புள்ளைங்க சாப்பிடுறதுய்யா, அதுல, கண்ட கண்ட கலருல்லாம் சேர்க்கக்கூடாதுங்க.


                வள்ளி எப்படி வகையா மாட்டிவிட்டான்னு பார்க்கிறீங்களா? வள்ளின்னா அது வள்ளிக்கிழங்குங்க. பலவகை கிழங்குகளில் சிப்ஸ் தயாரித்து பஜாருக்கு வருவது வாடிக்கை. அதில் வள்ளிக்கிழங்கும் ஒரு வகை.
                         இது கடந்தவார பத்திரிக்கை செய்தி. நெய்யைத்தயாரிச்சமா, வீடு வீடாக் கொண்டுபோய் வித்தமான்னு காசு பார்த்தது அந்த காலம். இப்பல்லாம், பாட்டிலிலோ, பாக்கட்டிலோ அடைச்சு வித்தாத்தான், விலை போகுது.  நெய்யைப் பாட்டிலில் அடைச்சு விற்கணும்னா, அதுல தயாரிப்பு தேதி, பாட்ச் எண், எந்த தேதிவரை பயன்படுத்தலாம் என்ற விபரம், சைவ வகை உணவிற்கான குறியீடு, தயாரிப்பாளரின் முழுவிலாசம் அப்படின்னு பல விபரங்கள் தெரிவிக்கணும். இது பற்றி மேலும் அறிய :உணவு பொட்டலங்களில் என்ன பார்க்கவேண்டும்? இப்ப இதெல்லாம் போக, அந்த உணவுப்பொருளில் உள்ள சத்துக்கள் பட்டியலும் லேபிளில் இடம்பெறணும். 
                             இப்படில்லாம் சட்டம் சொன்னா, கேட்கணுமா? கேட்கலைன்னா, வழக்குத்தான்! வழக்குன்னா வக்கீல் இல்லாமலா? குறுக்கு விசாரணைன்னு பெட்டியில ஏத்திவிட்டு, கேட்கப்படும் கேள்விகள்-அப்பப்பா. இந்த வழக்கிலும், நீங்க கடைக்கே போகலை, உணவு மாதிரியே எடுக்கலைன்னு சொன்னாங்க. அப்புறமா, நீங்க உங்க வீட்டுக்கு நெய் ஃப்ரீயா கேட்டீங்க, கடைக்காரர் கொடுக்கலைன்னு அவர்மேல, மோட்டிவ்ல கேஸ் போட்டிருக்கீங்கன்னாங்க. கடைக்கே போகாம எப்படிங்க வீட்டுக்கு நெய் கேக்குறதுன்னு கடைசிவரை எனக்குப் புரியவே இல்லை. 
                                     கடந்த வாரம், தீர்ப்பும் வந்தது. உணவுக் கலப்படத்தடைச்சட்டத்திற்கு உட்பட்டு, நெய் பாட்டில்கள் தயாரிக்கப்படாததால், அதனைத் தயாரித்தவருக்கு, மூன்று மாதம் சிறைத்தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.  
Follow FOODNELLAI on Twitter

46 comments:

SELVASANKAR said...

KANDIPPA NEEDHI KIDAICHALUM INNUM THANDANAI KATTANAM ATHIGAM IRUKKANUMGARATHU ENNUDAIYA THALMAIYANA KARUTHU SIR

வீடு சுரேஸ்குமார் said...

கடைக்கே போகாம எப்படிங்க வீட்டுக்கு நெய் கேக்குறதுன்னு கடைசிவரை எனக்குப் புரியவே இல்லை.
////////////////////////////////////
கேட்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியிதுங்கறது இதுதான் சார்!

மொக்கராசா said...

well done ....

Vijayan K.R said...

நெய்யை தயாரிக்க முடியுமா???? நெய் எசன்ஸை டால்டாவில் ஊற்றி விடுவார்களோ!!!!!!!!!!!
நாகர்கோவிலும் ஒரு நெய் கடை ராமலட்சுமி சுவிட் ஸ்டால் பின்னால் இருக்கிறது கடை பக்கம் போனால் நெய் வாசம் தூக்கும் ஆனால் வாங்கி வீட்டில் கொண்டு போய் பார்த்தால் ஒரு மண்ணும் சாரி மணமும் இருக்காது.அந்த ஆளுக்கு காது கேட்காது எனவே அவரிடம் பெரிய விளக்கங்கள் எதுவும் கேட்க முடியாது. அவர் அலேக்காக மேலே எறிந்து பேக் செய்யும் விதம் அனைவரையும் கவரும்.

மனசாட்சி™ said...

தேவையான நல்லா தகவல் பகிர்வுக்கு நன்றி ஆபிசர்

Prabu Krishna said...
This comment has been removed by the author.
Prabu Krishna said...

நெய் பொய் என்பது மெய்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இதைப்பார்த்தாவது மற்றவர்களும் திருந்தவேண்டும்...

தொடரட்டும் தங்கள் பணி...

rufina rajkumar said...

நீங்களும் பேர் வைக்க படிச்சிகிட்டீங்க ஆபீசர்

NAAI-NAKKS said...

தங்கள் பணி சிறக்கட்டும்....தல.......

FOOD NELLAI said...

// SELVASANKAR said...
KANDIPPA NEEDHI KIDAICHALUM INNUM THANDANAI KATTANAM ATHIGAM IRUKKANUMGARATHU ENNUDAIYA THALMAIYANA KARUTHU SIR//
உங்க ஆசையை நிறைவேற்ற வந்துவிட்டது புதிய உணவு பாதுகாப்பு சட்டம்.

FOOD NELLAI said...

//வீடு சுரேஸ்குமார் said...
கடைக்கே போகாம எப்படிங்க வீட்டுக்கு நெய் கேக்குறதுன்னு கடைசிவரை எனக்குப் புரியவே இல்லை.
////////////////////////////////////
கேட்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியிதுங்கறது இதுதான் சார்!//
என்னா போடு போட்டுட்டீங்க சுரேஷ்!

FOOD NELLAI said...

// மொக்கராசா said...
well done ....//
நன்றி ராசா.

FOOD NELLAI said...

// Vijayan K.R said...
நெய்யை தயாரிக்க முடியுமா???? நெய் எசன்ஸை டால்டாவில் ஊற்றி விடுவார்களோ!!!!!!!!!!!
நாகர்கோவிலும் ஒரு நெய் கடை ராமலட்சுமி சுவிட் ஸ்டால் பின்னால் இருக்கிறது கடை பக்கம் போனால் நெய் வாசம் தூக்கும் ஆனால் வாங்கி வீட்டில் கொண்டு போய் பார்த்தால் ஒரு மண்ணும் சாரி மணமும் இருக்காது.அந்த ஆளுக்கு காது கேட்காது எனவே அவரிடம் பெரிய விளக்கங்கள் எதுவும் கேட்க முடியாது. அவர் அலேக்காக மேலே எறிந்து பேக் செய்யும் விதம் அனைவரையும் கவரும்.//
கலப்பட நெய் என்பது, அதிக அளவில் வனஸ்பதியை, சிறிது நெய்யுடன் கலப்பதாகும். நல்ல மஞ்சள் நிறம் வர, செயற்கை வண்ணங்களையும் சேர்ப்பாங்க. இது போதாதென்று, மிருகக்கொழுப்பு கலப்பது அதனினும் கொடுமை சாமி.

FOOD NELLAI said...

//மனசாட்சி™ said...
தேவையான நல்லா தகவல் பகிர்வுக்கு நன்றி ஆபிசர்//
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

FOOD NELLAI said...

//Prabu Krishna said...
நெய் பொய் என்பது மெய்.//
மெய்யாலுமே கவிஞர்தான் மகனே.

FOOD NELLAI said...

//கவிதை வீதி... // சௌந்தர் // said...
இதைப்பார்த்தாவது மற்றவர்களும் திருந்தவேண்டும்...//
மிக நீஈஈஈஈஈஈஈண்ட இடைவேளைக்குப் பின் வருகை. சந்தோஷமா இருக்கு சௌந்தர். நன்றி.

FOOD NELLAI said...

//rufina rajkumar said...
நீங்களும் பேர் வைக்க படிச்சிகிட்டீங்க ஆபீசர்//
எல்லாம் பதிவுலக சகோதரிகளுடன் பழகியதன் பலன். :)

FOOD NELLAI said...

//NAAI-NAKKS said...
தங்கள் பணி சிறக்கட்டும்....தல.......//
உங்களைப்போன்றவர்களின் நல்ல துணையோடு தொடருமுங்கோ!

மோகன் குமார் said...

Good work sir.

FOOD NELLAI said...

//மோகன் குமார் said...
Good work sir.//
நன்றி சார்.

MANO நாஞ்சில் மனோ said...

ஆபிசரின் சுண்டு விரலில் மாட்டுனவன் தப்பமுடியுமா என்ன..?!

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு பயலுவளையும் விட்டுறாதீங்க ஆபீசர், சிபி முகத்தை நினைச்சுட்டு போடு போடுன்னு போட்டு தள்ளிருங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல விஷயம் ஆபீசர். இந்த தகவல்கள் பலரையும் சென்று அடைய வேண்டும். அப்போதுதான் தவறு செய்ய பயப்படுவார்கள்.

NARAYANAN said...

Sir Vanakkam. Interesting one. by S.Narayanan FSO Sattur urban

இராஜராஜேஸ்வரி said...

இந்த வழக்கிலும், நீங்க கடைக்கே போகலை, உணவு மாதிரியே எடுக்கலைன்னு சொன்னாங்க. அப்புறமா, நீங்க உங்க வீட்டுக்கு நெய் ஃப்ரீயா கேட்டீங்க, கடைக்காரர் கொடுக்கலைன்னு அவர்மேல, மோட்டிவ்ல கேஸ் போட்டிருக்கீங்கன்னாங்க.விசித்திரமான வாதம் !

சிறப்பான பணிக்குப் பாராட்டுக்கள் !

FOOD NELLAI said...

// MANO நாஞ்சில் மனோ said...
ஆபிசரின் சுண்டு விரலில் மாட்டுனவன் தப்பமுடியுமா என்ன..?!//
அதென்ன நாஞ்சில் மனோ அருவாளா!

FOOD NELLAI said...

//MANO நாஞ்சில் மனோ said...
ஒரு பயலுவளையும் விட்டுறாதீங்க ஆபீசர், சிபி முகத்தை நினைச்சுட்டு போடு போடுன்னு போட்டு தள்ளிருங்க...//
இங்கேயும் சிபிதானா!

FOOD NELLAI said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல விஷயம் ஆபீசர். இந்த தகவல்கள் பலரையும் சென்று அடைய வேண்டும். அப்போதுதான் தவறு செய்ய பயப்படுவார்கள்.//
நன்றி சார். நீங்க ஆசைப்பட்டுட்டீங்க. கண்டிப்பா சென்றடையும்.

FOOD NELLAI said...

// NARAYANAN said...
Sir Vanakkam. Interesting one. by S.Narayanan FSO Sattur urban//
Thank You my dear Narayanan.

FOOD NELLAI said...

// இராஜராஜேஸ்வரி said...
இந்த வழக்கிலும், நீங்க கடைக்கே போகலை, உணவு மாதிரியே எடுக்கலைன்னு சொன்னாங்க. அப்புறமா, நீங்க உங்க வீட்டுக்கு நெய் ஃப்ரீயா கேட்டீங்க, கடைக்காரர் கொடுக்கலைன்னு அவர்மேல, மோட்டிவ்ல கேஸ் போட்டிருக்கீங்கன்னாங்க.விசித்திரமான வாதம் !

சிறப்பான பணிக்குப் பாராட்டுக்கள் !//
நன்றி சகோ.

NARAYANAN said...

Sir, Interesting one. by S.Narayanan Sattur

! சிவகுமார் ! said...

சென்னைப்பித்தன் ஸ்டைலில் பதிவிற்கு தலைப்பு.

துபாய் ராஜா said...

சீரிய பணி தொடர வாழ்த்துக்கள் சித்தப்பா சார்.

சென்னை பித்தன் said...

உம்க்களைப் போன்ற அதிகாரிகளின் எண்ணிக்கை பெருக வேண்டும்

s suresh said...

நல்ல விழிப்புணர்வு பதிவு!

சே. குமார் said...

தேவையான விழிப்புணர்வு பகிர்வு சார்.

FOOD NELLAI said...

// ! சிவகுமார் ! said...
சென்னைப்பித்தன் ஸ்டைலில் பதிவிற்கு தலைப்பு.//
அவர் ரேஞ்சே வேறங்க!

FOOD NELLAI said...

//துபாய் ராஜா said...
சீரிய பணி தொடர வாழ்த்துக்கள் சித்தப்பா சார்.//
வாங்க ராஜா. நன்றி.

FOOD NELLAI said...

// சென்னை பித்தன் said...
உம்க்களைப் போன்ற அதிகாரிகளின் எண்ணிக்கை பெருக வேண்டும்//
என்ன இருந்தாலும் உங்ககிட்ட நெருங்க முடியுமா?

FOOD NELLAI said...

// s suresh said...
நல்ல விழிப்புணர்வு பதிவு!//
நன்றி சார்.

FOOD NELLAI said...

//சே. குமார் said...
தேவையான விழிப்புணர்வு பகிர்வு சார்.//
நன்றிங்க.

திண்டுக்கல் தனபாலன் said...

விழிப்புணர்வு பதிவு சார் ! நன்றி !

உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

இனி தொடர்வேன். நன்றி !

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
கடமையைச் செய்யும் போது நிறைய இடையூறுகள் இருக்கின்றன.
வாழ்த்துகள் சார்.

FOOD NELLAI said...

//திண்டுக்கல் தனபாலன் said...
விழிப்புணர்வு பதிவு சார் ! நன்றி !

உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

இனி தொடர்வேன். நன்றி !//
நன்றிங்க.

FOOD NELLAI said...

// Rathnavel Natarajan said...
அருமையான பதிவு.
கடமையைச் செய்யும் போது நிறைய இடையூறுகள் இருக்கின்றன.
வாழ்த்துகள் சார்.//
நன்றிங்க அய்யா.