
விழிப்புடன் இருந்தால வேதனைகள் தவிர்க்கலாம்:
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை
திருநெல்வேலி.
மாநகரப் பகுதியில், மழைக்காலம் தொடங்கியுள்ளதால், உணவுத்தொழில் புரிபவர்கள் கீழ்க்கண்ட நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
• வளாகத்தில், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
• மழைக்காலங்களில் தண்ணீர் தேங்க ஏதுவாக இருக்கும், திறந்த நிலையிலுள்ள கப்புகள், காலி டப்பாக்கள், டயர்கள், கண்ணாடி பாட்டில்கள், சிரட்டைகள் போன்றவற்றை, உடனுக்குடன் வளாகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
• பொதுமக்களுக்கு, நன்கு கொதிக்க வைத்து ஆறிய குடிநீரையே வழங்க வேண்டும்.
• உணவருந்த வருபவர்களுக்கு, சூடான உணவுப்பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும்.
• தயாரித்த உணவுப்பொருட்களை, கண்ணாடிப் பெட்டிகளில் வைத்து விற்பனை செய்ய வேண்டும்.
• நிறுவன வளாகத்தில், கிருமிநாசினிகள் தெளித்து, சுத்தமாகவும்ää சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
• உணவகக் கழிவுப்பொருட்களை, ஈ மொய்க்காதவாறு உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.
• உணவு நிறுவனத்தில், தொற்றுநோய் கண்ட நபர்களை பணியில் அமர்த்தக் கூடாது.
• உணவு தயாரிக்க, பரிமாறப் பயன்படுத்தும் பாத்திரங்களை, கொதி நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
• உணவு நிறுவனத்தில், எலி, கரப்பான் பூச்சிகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு அலுவலர் மாவட்ட நியமன அலுவலர்
திருநெல்வேலி. திருநெல்வேலி.
கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக்கண்டுபிடித்து, அவற்றை அழித்தால், டெங்குவைக் கட்டுப்படுத்துவது மிக சுலபம்.
