துரித உணவுகளைத் துவம்சம் பண்ணுபவரா நீங்கள்?
விருந்தில் விதவிமாய் சாப்பிட்டபின் வயிற்றில் எரிச்சல் வருகின்றதா?
விருந்தில் படைக்கும் வித விதமான உணவுகளும், துரித உணவுகளும் “ரியாக்டிவ் ஆக்ஸிஜனை” உருவாக்குகின்றன. அவை இரத்தத் தமணிகளில் எரிச்சலை ஏற்படுத்தும்.
உணவில் சேர்க்கப்படும் மசாலாபொருட்களும் ரியாக்டிவ் ஆக்ஸிஜனை உருவாக்கும்.
இத்தகைய ரியாக்டிவ் ஆக்ஸிஜனால் நாளடைவில் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்பட்டு பல இன்னலைத் தரும்.
அமெரிக்க ஆய்வு ஒன்று, ஆரஞ்சு பழ ரசத்தை இதற்கு அருமருந்தாய் அறிவித்துள்ளது.
வயிறு புடைக்க உண்டாலோ, துரித உணவை துவம்சம் செய்தாலோ, ஆரஞ்சு பழ ரசம் பருகுங்கள். ரியாக்டிவ் ஆக்ஸிஜனை கட்டுப்படுத்தி ஜீரணத்தை எளிதாக்கும்.
புற்று நோயைக் குணப்படுத்தும் பப்பாளி இலைச்சாறு:
பப்பாளி இலைச்சாறு அருந்தினாலும், இலையை உலர்த்தி தேநீருடன் பருகினாலும் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகின்றது. அண்மைய ஜப்பானிய நாட்டு விஞ்ஞானி ‘நம்டங்’ அவர்கள் நடத்தியஆய்வின் முடிவு இது.
கல்லீரலைக் காக்கும் மஞ்சள்:
மைக்கேல் டிரானர் எனும் ஆஸ்திரிய நாட்டுப்பேராசிரியர் எலிகளை வைத்து நடத்திய ஆராய்ச்சியில், மஞ்சளில் உள்ள “குர்குமின்”, எலிகளின் கல்லீரலில் எரிச்சல், சேதம், செல்கள் அடைப்பு ஏற்படாமலிருக்கச் செய்வதைக் கண்டறிந்துள்ளனா; இனி கல்லீரல் நோய் களைய கண்டுபிடிக்கப்படும் மருந்துகளில், மஞ்சளுக்கும் பெரும் பங்கிருக்கும்.
மார்பக புற்றுநோயை உருவாக்கும் மல்டி விட்டமின்கள்:
இது சுவிட்ச்சர்லாந்து சுவாரசியம். 49 முதல் 83 வயது வரையுள்ள 35,000 பெண்களுக்கு பத்தாண்டுகள் சத்து மாத்திரைகள் நித்தமும் வழங்கப்பட்டன. அவர்களில் 19 சதவிகிதம் பேருக்கு மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன.
சத்து மாத்திரைகளிலுள்ள ஃபோலிக் அமிலம், உடலின் உட் பகுதிகளில் ஏற்படும் கட்டிகளை வேகமாக வளரச் செய்வதை பல ஆய்வுகள் நிச்சயப்படுத்தியுள்ளன.
இயற்கையாய் நம் உணவிலிருந்து உடலில் சேரும் சத்துக்களே சாலச் சிறந்தது.
தூக்கம் தொலைப்பவரா? தொல்லைகள் உங்களுக்கே!
அதிகமாய் தூங்குவதும், தூக்கம் தொலைப்பதும் தொல்லைகள் தரும். உண்ணும் உணவைவிட, தூங்கும் நேரமே கொழுப்பை நம் உடலில் தேங்கச்செய்கிறது. நாற்பதைக் கடந்தவர்களிடம் காணாத இந்த பிரச்சனை, நாளும், இளைஞர்களை இம்சிக்கிறதாம். ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்குதல் நலம்.
காபி குடிக்க நல்ல காலம் எது?
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியிது. நண்பர்கள் புடை சூழ, நல்ல வெளிச்சத்தில் நாம் அருந்தும் காபி நம்மை சுறுசுறுப்பாக்கும். நாக்கின் சுவை அரும்புகள் நன்றாய் சுவையுணர காலை பதினொன்றே காபி குடிக்க ஏற்ற நேரம்.

6 comments:
CLICK AND READ THE LINK BELOW
என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு.
good post :)
nice sharing
நன்றி நண்பர்களே. என்றும் இளமைக்கு உங்களின் தகவல் உரமளிக்கும்.
Thankyou for this information. By S.Narayanan Food Inspector Sattur Municipalitiy
Nantri.
நன்றி...
நம் தளத்தில் இணைத்தாயிற்று...
இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_7.html
புதுக்கோட்டை விழாக்குழு சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
Post a Comment