ஹோட்டல் உணவே உடலுக்கு உகந்தது!
என்னதான் வீட்டில் அறுசுவை உணவு கிடைத்தாலும், சிலருக்கு துரித உணவை துவம்சம் பண்ணாவிட்டால், தூக்கம் வராது. நேற்று ஒரு உணவகம் மீது புகார். நேரில் சென்று பார்த்தால், நெஞசம் பதறுகிறது. காலையில் தயாரித்த இட்லியும், தோசையும் , சூடுபடுத்தப்பட்டு மாலையில் மறு அவதாரம் எடுக்கின்றன. அரைத்து வைத்த மாவில் அத்தனை கரித்துகள்கள். சமையலறையைப் பார்த்தால் சத்தியமாய்ச் சாப்பிட மனம் வராது.
எடுத்து வந்து கடை வாசலில் போட்டு கிருமிநாசினி தெளித்து அழித்தோம். இன்னும் மூன்று தினங்கள் கடை இயங்காதிருக்க தடை விதித்தே உத்தரவிட்டனர் மதிப்பிற்குரிய மாநகராட்சி ஆணையரும், மாநகர நல அலுவலரும். என்னதான் செய்தாலும் எத்தனை முறை எச்சரித்தாலும் மனித உயிர்களோடு விளையாடும் மனங்கள் மட்டும் மாறவில்லை.
உரக்கச் சொல்வீர் ஹோட்டல் உணவே உடலுக்கு உகந்தது!

12 comments:
உணவு விடுதி நடத்துபவர்களுக்கு சரியான எச்சரிக்கை இம்மாதிரியான நடவடிக்கைகள்.
தங்கள் வருகைக்கும் , பதிவிற்கும் நன்றி நண்பரே.
Just because one or 2 small hotels are badly maintained you cant say the entire hotel foods are bad.
No one can make in home such a tasteful yemmy pizza like Pizza hut or doimino pizza
நன்றி நண்பரே. நல்ல உணவு கிடைத்தால் நம் அனைவருக்கும் சந்தோசமே.
இந்த பக்கத்திற்கு வந்து வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
அன்புடன் உங்களை போன்ற சுத்தமான கை உடையவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்
உங்கள் பணி பதிவு தொடர வாழ்த்துகள்
வாழ்த்துக்களுக்கு நன்றி. தங்கள் நல்லாசிகளோடு நாளும் தொடரும்.
சார் - நான் ஒரு புது பதிவர்.தயவு செய்து என்னுடைய வலைபக்கத்துக்கு ஒரு முறை வருகை தந்து ஒரு கமெண்ட் போடுங்க.
http://kaniporikanavugal.blogspot.com/ நன்றி!
தொடர்ந்து எழுதுங்கள். வெற்றி தொட்டு விடும் தூரம்தான்.
உங்கள் பணி சிறப்பாக தொடற வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே. நிச்சயம் உங்கள் வாழ்த்துகளுடன் என் பணி தொடரும்.
Post a Comment