இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 5 August, 2011

பசித்திருப்போரைப் புசிக்க வைத்திடு!

                       
                         கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா மையம். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ இல்லையோ, அழைத்து வந்து விட்டுச் செல்லப்படும் முதியவர்கள், மன நோயாளிகள் எண்ணிக்கை தினம் தினம் அதிகரிப்பது மட்டும் அன்றாடம் நடக்கும் கொடுமை. அப்படி விடப்படுபவர்கள் வெயிலிலும், மழையிலும், கடும் பனியிலும் படுவது காணாதென்று, பசியின் கொடுமையால், பிச்சை எடுத்துத் திரிவது கொடுமையிலும் கொடுமை.
                                     
பசிக்கும் வேளையில், புசிக்க உணவின்றி, உணவகங்களில் விழும் எச்சில் இலைகளைப் பொறுக்கி எடுத்து, பசியாறும் பல முதியவர்களைக் காணலாம். பசித்திருப்பவனைப் புசிக்கச் செய்து பார்க்கும் எண்ணம் படைத்தவன் இறைவனாகிறான் என்பதற்கேற்ப, கன்னியாகுமரியில் உள்ள திருவாவடுதுறை ஆதீன மடம், ஒரு முன்னோடித் திட்டத்தை மனமுவந்து செய்து வருகிறது. 
                                        காலையில், பொங்கல் அல்லது இட்லி பார்சல் செய்யப்பட்டு, பசியால் துடித்திருப்பவர் இடம் தேடிச்சென்று, வழங்கி வருகின்றனர். எங்கெங்கு புண்ணிய தலங்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் இந்த ஆதினத்திற்கு சொந்தமான் மடங்கள் இருக்கும். அப்படி 250 மடங்கள் வரை இருந்தாலும், அவற்றில்,இலவச உணவு, மருத்துவ வசதி போன்ற  அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன. ஆனால், பசித்திருக்கும் ஏழைக்கு, அவன் இருக்குமிடம் தேடிச் சென்று உணவு வழங்குதல் இதுவே முதல் முறை.
டிஸ்கி-1:  மதுரையில் நாராயணன் கிருஷ்ணன் என்பவர் ஆதரவற்ற முதியோருக்கு செய்து வரும் தொண்டு குறித்து, அற்றார் அழிபசி தீர்த்தல் -தமிழன் ஒரு தலைசிறந்த ஹீரோ எனும் தலைப்பில் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன், நண்பர்களே.
டிஸ்கி-2: அடுத்த பதிவு எனது முன்னூறாவது பதிவு. அதற்குப் பின், உங்கள் உணவு உலகத்தில் சில மாற்றங்கள் செய்ய உத்தேசித்துள்ளேன்.
Follow FOODNELLAI on Twitter

36 comments:

கூடல் பாலா said...

உலகின் மிகச் சிறந்த சமூக சேவைகளில் ஒன்று இது !

கூடல் பாலா said...

முதலில் வந்ததால் எனக்கும் ஒரு வடை கிடைத்தது !

rajamelaiyur said...

300 பதிவை எதிர்பார்கிறேன்

rajamelaiyur said...

இன்று இன் வலையில்

சீ.. பேசாம சாமியாரா போயிடலாம்…

கோகுல் said...
This comment has been removed by the author.
கோகுல் said...

தானத்தில் சிறந்த அன்னதானம்,இதை தொண்டாக செய்து வரும் அன்பர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

sakthi said...

very eagerly awaiting for the 300th regn.

Unknown said...

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. வட இந்தியாவிலிருந்து சுற்றுலா என்ற பெயரில் மனநோயாளிகளை குமரியில் கொண்டுவிடும் பழக்கம் காலம்காலமாக நடந்து வருகிறது. நாகர்கோவிலிலும் சர்தீப் தொண்டு நிறுவனம் இந்த மாதிரி ஆட்களுக்கு அவர் இருக்கும் இடம்தேடி தினமும் உணவும் உடையும் வழங்குவதை நான் தினமும் காண்கிறேன்.வாழ்க அவர்கள் தொண்டு.

Kousalya Raj said...

மிக சிறந்த தொண்டு...நெகிழ்ச்சியாக இருக்கிறது.

300 பதிவை நெருங்கிடிங்க !! சந்தோசமாக இருக்கிறது அண்ணா...

பல வேலைகளுக்கு நடுவில் உற்சாகம் சிறிதும் குறையாமல் தொடர்ந்து பதிவுகளை எழுதிகொண்டு வரும் உங்களுக்கு என் பாராட்டுகள்...

வாழ்த்துக்கள் அண்ணா

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ராசலிங்கம்,

பற்பல இயற்கையான/செயற்கையான காரணங்களால் தங்கள் முயற்சியில் பின்தங்கி சிலர் பசியால் உணவின்றி வாட, அவர்களுக்கு முயற்சியில் முன்னேறியவர் செய்ய வேண்டிய இன்றியமையாத கடமை, "உணவிடல்" என்று இறைவனால் கட்டளை இடப்படுகிறது.

அவ்வகையில், மக்களை நன்மை செய்ய தூண்டும் நல்ல நோக்கத்தில் பகிரப்பட்ட சிறப்பான பதிவு சகோ.
தங்கள் பகிர்வுக்கும் சிந்தனைகளுக்கும் மிக்க நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணன் இன்னைக்கும் நல்ல போஸ்ட் போட்டிருக்காரே!!!!!!!!!

சி.பி.செந்தில்குமார் said...

ச்சே.. அண்ணனை கும்மி அடிக்கவே வழி இல்லை. வேற பிளாக்ல அவர் போடும் கமெண்ட்ஸூக்க்குத்தான் கும்மி அடிக்கனும் போல.

Unknown said...

மிகச்சிறந்த சேவை! நல்ல பதிவு பாஸ்!

சக்தி கல்வி மையம் said...

தானத்தில் சிறந்த அன்னதானம்,இதை தொண்டாக செய்து வரும் அன்பர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.....

சக்தி கல்வி மையம் said...

thanks for sharing..

Chitra said...

Very inspiring post. One of the best!

சாந்தி மாரியப்பன் said...

பசித்த வயிற்றுக்கு அன்னமிடுவதுதான் மிகப்பெரிய தொண்டு.. அதைச்செய்துவரும் மடத்துக்கும், பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துகளும், நன்றியும்.

sathishsangkavi.blogspot.com said...

//பசித்திருக்கும் ஏழைக்கு, அவன் இருக்குமிடம் தேடிச் சென்று உணவு வழங்குதல் //


இதைச்செய்பவர்களுக்கு கோடி புண்ணியம்... கோடி நன்றிகள்...

Unknown said...

வறுமையும் வெறுமையும் 70 % இந்தியர்களின் தலை எழுத்து..

மாற்றப்போவது யாரோ!!??

vidivelli said...

இவர்கள் ஆயுளையும் தாண்டி நீடூழிவாழ்வார்கள்....
நல்ல மிகச்சிறந்த சேவை...
பகிர்விற்கு அன்புடன் வாழ்த்துக்கள்...

Unknown said...

பகிர்வுக்கு நன்றி அண்ணே...வாழ்த்துக்கள் வரப்போகும் 300 வது பதிவுக்கு!

செங்கோவி said...

முதுமையில் தனிமை கொடுமை..அதிலும் வறுமையும் பசியும் மிகக் கொடுமை..

செங்கோவி said...

//அடுத்த பதிவு எனது முன்னூறாவது பதிவு. //

அட்வான்ஸ் வாழ்த்துகள்..

//அதற்குப் பின், உங்கள் உணவு உலகத்தில் சில மாற்றங்கள் செய்ய உத்தேசித்துள்ளேன்.//

எப்படியோ டேஸ்ட் கூடினால் சரி.

Unknown said...

உணர்வான பதிவு
இந்த 299 பதிவுக்கும்
அடுத்த 300 vatu பதிவுக்கும்
எனது அன்பான வாழத்துக்களும்
வணக்கங்களும்

Unknown said...

25...vadai enakkey..:)

Thangasivam said...

பாராட்டபடவேண்டிய விஷயம்

சென்னை பித்தன் said...

திருவாவடுதுறை ஆதீனத்துக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.

முன்னூறைத் தொடும் உங்களுக்கு என் இதயம் நிறை வாழ்த்துகள்!

டக்கால்டி said...

பகிர்வுக்கு நன்றி அண்ணே...வாழ்த்துக்கள் வரப்போகும் 300 வது பதிவுக்கு!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
திருவாவடு துறை ஆதீனத்தின் சீரிய பணிக்கு ஒரு வணக்கம்.
நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே..

முன்னூறுக்கு வாழ்த்துக்களூம் பாராட்டுக்களும்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

பதிவு அருமை.... முன்னூறாவது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான தகவல் ஆபீசர், என்ன மாற்றம் செய்ய போறீங்க?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்ல மனசு சார்...

காதர் அலி said...

தானத்தில் சிறந்த அன்னதானம்,இதை தொண்டாக செய்து வரும் அன்பர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.....

MANO நாஞ்சில் மனோ said...

கன்யாகுமரியில் தொலைதூரத்தில் இருந்து [[காஷ்மீர் போன்ற]] வரும் ரயிலில் மனநலமில்லாதவர்களை ஏற்றி அனுப்பிவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு, இதில் தீவிரவாதிகளும் ஊடுருவ வாய்ப்பு இருக்கிறது...!!! இதை பற்றி ஒரு பதிவு எழுதனும்னு இருந்தேன் நீங்க முந்திட்டீங்க ஆபீசர்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

300 ஆம் பதிவுக்கு வாழ்த்துக்கள் ஆபீசர்....!!!