![]() |
PEDICON-2011ல் குழந்தைகள் உணவில் கலப்படம் குறித்த உரை. |
தமிழகத்திலுள்ள குழந்தைகள் நல மருத்துவர்களின் 36 வது வருட மாநில மாநாடு TAMIRABARANI PEDICON-2011, நெல்லையில், 12.08.2011 முதல் 14.08.2011 முடிய மூன்று தினங்கள் நடைபெற்றது. அந்தக் கருத்தரங்கில், குழந்தைகள் உணவில் கலப்படம் குறித்து பதினைந்து நிமிடங்கள் பேச எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அந்த கருத்தரங்கில், மூன்று நாட்களும் மருத்துவ வல்லுநர்கள் மட்டுமே தத்தமது அனுபவங்களையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பகிர்ந்திட வந்திருந்தனர். அத்தகைய மாநில அளவிலான ஒரு கருத்தரங்கில், சுகாதாரத்துறை சார்ந்த என்னை பேச வைக்கத் துணிந்தவர் அந்த அமைப்பின், தலைவர் மரு.திரு.A.சுப்பிரமணியன்.

அழைப்பிதழிலும், எனது உரையின் தலைப்பை:
Child food duped/poisoned/adulterated-How? What to do?
என்று கொடுத்து, அதற்கு கீழே:
Non pediatricians also can guide us to the diagnosis.
என்று ஒரு பில்டப் கொடுத்து, என் படபடப்பை ஏற்றிவிட்டிருந்தார்.
அடப்பாவி அங்கேயுமா?: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் காலை 8.45க்கு உரை ஆற்ற வேண்டுமென்று அன்பு கட்டளை. காலை எட்டு மணியளவில் அரங்கிற்கு சென்றேன். அரங்கின் வாயிலில், முகமெல்லாம் புன்னகை தவழ இளம் மருத்துவர் ஒருவர் வந்து, முன்னூறு வருடங்கள் பழகிய அன்போடு, நீங்கள்தானே சங்கரலிங்கம்? என்று கேட்டுக்கொண்டே வந்து வரவேற்றார். அவர், தஞ்சைக்கருகில் பாபநாசம் என்னும் ஊரிலிருந்து, மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த மருத்துவர் திரு.T.ராஜ்மோகன்.
முதல் நாள்தான், எனது டுவிட்டர் பக்கத்தில் ’ஃபாலோ ’ பண்ண விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது ப்ரோஃபைலில், குழந்தைகள் நல மருத்துவர் என்று போட்டிருந்ததால், நானும் ’ஃபாலோ பேக்’ கொடுத்து விட்டு, நீங்கள் நெல்லையில் நடைபெறும் மாநாட்டிற்கு வருவீர்களா என்று ஒரு கேள்வியும் கேட்டு வைத்தேன்.அவ்வளவுதான், அடுத்த பதிவர் சந்திப்பு, அங்கே நிகழுமென்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஆம், அவர் ஒரு பதிவர். தங்கை சித்ராவின் ‘கொஞ்சம் வெட்டி பேச்சு’ கேட்டு, தீவிர ரசிகரானவர். சித்ரா எழுதிய,நெல்லை பதிவர்களின் தானை தலைவர் வாழ்க! பதிவின் தாக்கம், ’உணவு உலகம்’ பக்கம் அவர் பார்வை பதிந்துள்ளது. நன்றி சித்ரா. மரு.திரு.ராஜ்மோகன், !.குழந்தை நலம்.! என்ற வலைப்பூவில், சிறு குழந்தை வளர்ப்பிற்கு தேவையான மருத்துவக் குறிப்புகள் அள்ளித் தருகிறார். ஆஹா, மற்றுமொரு பதிவர் சந்திப்பு. இருவரும் நேரடி அறிமுகத்திற்குப் பின்னர், சிறிது நேரம் பதிவுலகம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். என்னை மாநாட்டிற்கு பேச அழைத்த டாக்டரிடம், பாருங்கள் இங்கும் எனக்கோர் நண்பர், பதிவுலகம் மூலம் அறிமுகம் என்று சொல்லி பதிவுலகப் பெருமைகளை பறைசாற்றிக்கொண்டிருந்தேன்.
அடுத்து உரையாற்ற அழைப்பு வந்தது. மேடையில் ஏறிய உடன், அரங்கில் அமர்ந்திருந்த மருத்துவர்களைப் பார்த்தேன். படபடப்பு பட்டாம்பூச்சியாய் என்னுள் பறக்கத் தொடங்கியது. குழந்தைகள் உணவில் கலப்படம், திண்பண்டங்களில் ஊக்க/தூக்க மருந்துகள் கலப்படம், இனிப்புகளில் சேர்க்கப்படும் மெல்லக் கொல்லும் விஷமான செயற்கை நிறம், பசும்பாலில் மெலமைன் மற்றும் ஆக்சிடோசின் படிவங்கள், துரித உணவு, நஞ்சுணவு குறித்து நானறிந்தவற்றைப் பதினைந்து நிமிடங்களில் பகிர்ந்து விட்டு இறங்கி வந்தேன்.
முன் வரிசையில் அமர்ந்திருந்த டாக்டர்.விருத்தகிரி என்னிடம் பேச வேண்டுமென அழைத்தார். முதுபெரும் மருத்துவர் அவர். சரி, வகையாக மாட்டிக்கொண்டோம், ஏதோ தவறாக சொல்லிவிட்டோமோ என்று எண்ணிகொண்டே அருகில் சென்றேன். என் கைகளைப் பிடித்துக் கொண்டு, என் உரையைப் பாராட்டியபோது என் கண்கள் பனித்தன. வெளியில் வந்தவுடன், கூடவே வந்து, மருத்துவர் மற்றும் பதிவர் திரு.ராஜ்மோகன், படமெடுத்துக்கொண்டார்.
நல்ல அனுபவம். மாநில அளவிலான கருத்தரங்கில், முதல் முறை உரையாற்றிட சந்தர்ப்பம் அமைத்துக் கொடுத்த மரு.A.சுப்பிரமணியன் அவர்களுக்கும், பதிவர்களை நினைவு கூர்ந்து வந்து பழகிய மரு.T. ராஜ்மோகன் அவர்களுக்கும் என் நன்றிகளைக் காணிக்கையாக்கி,பதிவுலகில் இத்தனை சொந்தங்களா!, என்று வியந்து, விடைபெற்று வந்தேன்.
அடப்பாவி அங்கேயுமா?: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் காலை 8.45க்கு உரை ஆற்ற வேண்டுமென்று அன்பு கட்டளை. காலை எட்டு மணியளவில் அரங்கிற்கு சென்றேன். அரங்கின் வாயிலில், முகமெல்லாம் புன்னகை தவழ இளம் மருத்துவர் ஒருவர் வந்து, முன்னூறு வருடங்கள் பழகிய அன்போடு, நீங்கள்தானே சங்கரலிங்கம்? என்று கேட்டுக்கொண்டே வந்து வரவேற்றார். அவர், தஞ்சைக்கருகில் பாபநாசம் என்னும் ஊரிலிருந்து, மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த மருத்துவர் திரு.T.ராஜ்மோகன்.
முதல் நாள்தான், எனது டுவிட்டர் பக்கத்தில் ’ஃபாலோ ’ பண்ண விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது ப்ரோஃபைலில், குழந்தைகள் நல மருத்துவர் என்று போட்டிருந்ததால், நானும் ’ஃபாலோ பேக்’ கொடுத்து விட்டு, நீங்கள் நெல்லையில் நடைபெறும் மாநாட்டிற்கு வருவீர்களா என்று ஒரு கேள்வியும் கேட்டு வைத்தேன்.அவ்வளவுதான், அடுத்த பதிவர் சந்திப்பு, அங்கே நிகழுமென்று நான் எதிர்பார்க்கவில்லை.
உணவு உலகம்(சங்கரலிங்கம்) குழந்தைகள் நலம்(மரு.ராஜ்மோகன்) |
அடுத்து உரையாற்ற அழைப்பு வந்தது. மேடையில் ஏறிய உடன், அரங்கில் அமர்ந்திருந்த மருத்துவர்களைப் பார்த்தேன். படபடப்பு பட்டாம்பூச்சியாய் என்னுள் பறக்கத் தொடங்கியது. குழந்தைகள் உணவில் கலப்படம், திண்பண்டங்களில் ஊக்க/தூக்க மருந்துகள் கலப்படம், இனிப்புகளில் சேர்க்கப்படும் மெல்லக் கொல்லும் விஷமான செயற்கை நிறம், பசும்பாலில் மெலமைன் மற்றும் ஆக்சிடோசின் படிவங்கள், துரித உணவு, நஞ்சுணவு குறித்து நானறிந்தவற்றைப் பதினைந்து நிமிடங்களில் பகிர்ந்து விட்டு இறங்கி வந்தேன்.
முன் வரிசையில் அமர்ந்திருந்த டாக்டர்.விருத்தகிரி என்னிடம் பேச வேண்டுமென அழைத்தார். முதுபெரும் மருத்துவர் அவர். சரி, வகையாக மாட்டிக்கொண்டோம், ஏதோ தவறாக சொல்லிவிட்டோமோ என்று எண்ணிகொண்டே அருகில் சென்றேன். என் கைகளைப் பிடித்துக் கொண்டு, என் உரையைப் பாராட்டியபோது என் கண்கள் பனித்தன. வெளியில் வந்தவுடன், கூடவே வந்து, மருத்துவர் மற்றும் பதிவர் திரு.ராஜ்மோகன், படமெடுத்துக்கொண்டார்.
அரங்க வாயிலில் பதிவர்கள். |

76 comments:
குட்மார்னிங்க் ஆஃபீசர்
பதிவு போட ஏன் லேட்? ரெகுலரா காலைல 5.40க்க்கே போடுவீங்களே?ன்னெ நான் கேட்க மாட்டேன். ஹி ஹி
அண்ணே, நேர்ல கண்டிப்பான ஆஃபீசரா இருக்கற நீங்க ஃபோட்டோல மட்டும் சின்னக்குழந்தை மாதிரியே முகத்தை வெச்சுக்கறீங்களே.. அது எப்படிண்ணே?
>>படபடப்பு பட்டாம்பூச்சியாய் என்னுள் பறக்கத் தொடங்கியது.
eஏண்ணே? நர்சுங்களும் வந்தாங்களா?
Congratulations!!! Keep Rocking!!
sir, do u have any idea to make the book for food awareness?! ( serious-a ketkuren)
வெரி குட்மார்னிங் ஆபீசர்...
அருமையான பயனுள்ள மீட்டிங்கும், பதிவர் சந்திப்பும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....
சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே, நேர்ல கண்டிப்பான ஆஃபீசரா இருக்கற நீங்க ஃபோட்டோல மட்டும் சின்னக்குழந்தை மாதிரியே முகத்தை வெச்சுக்கறீங்களே.. அது எப்படிண்ணே?//
டேய் அண்ணா உன்னை பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்......
அவர் மனசு மாதிருயே முகம், தெரியாத மாதிரி கேக்குறே..??
சி.பி.செந்தில்குமார் said...
>>படபடப்பு பட்டாம்பூச்சியாய் என்னுள் பறக்கத் தொடங்கியது.
eஏண்ணே? நர்சுங்களும் வந்தாங்களா?//
டேய் சிபி அண்ணா நீ வெளங்கவும் மாட்டே, மூதேவி நீ திருந்தவும் மாட்டே போ.....
கலக்குங்க பாஸ்!
பயனுள்ள சந்திப்புக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்.
எங்கே சென்றாலும் ஒரு பதிவர் இருப்பார் போல...
அவரின் வலைப்பூ முகவரி சொல்லுங்களேன்.
உள்ளேன் ஐயா
நல்ல பகிர்வு
நல்ல சந்திப்பு
அசத்துங்க ஆபிசர்
பதிவர்களின் புகழை உயர பறக்கச்செய்யும் உங்கள் பணி மெய்சிலிர்க்க வைக்கிறது. இன்னும் உயர வாழ்த்துக்கள் சார்.
சென்றவிடமெல்லாம் சிறப்பு.. தொடர வாழ்த்துகள் :-)
thank you sir.உங்களை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.உங்க பேச்சு பயனுள்ளதாக இருந்தது. மீண்டும் சந்திப்போம் :)
சார் ..குழந்தை நலம் ப்ளாக் நான் பதிவு எழுத ஆரம்பித்தது முதல் பால்லோ பண்ணுறேன் ..ஆனால் இப்பொழுது அவர் அதிகமாக எழுத வில்லை என்று எண்ணுகிறேன் .
ச்சே நான் மிஸ் பண்ணிவிட்டேன் சார் .
நல்ல பயனுள்ள பதிவு
என்று என் வலையில்
டென்ஷன் ஆகாதிங்க பாஸ்…
கொடி பறக்குது!
வாழ்த்துகள்!
//சி.பி.செந்தில்குமார் said...
1. குட்மார்னிங்க் ஆஃபீசர்
2. பதிவு போட ஏன் லேட்? ரெகுலரா காலைல 5.40க்க்கே போடுவீங்களே?ன்னெ நான் கேட்க மாட்டேன். ஹி ஹி
3.அண்ணே, நேர்ல கண்டிப்பான ஆஃபீசரா இருக்கற நீங்க ஃபோட்டோல மட்டும் சின்னக்குழந்தை மாதிரியே முகத்தை வெச்சுக்கறீங்களே.. அது எப்படிண்ணே?
4.படபடப்பு பட்டாம்பூச்சியாய் என்னுள் பறக்கத் தொடங்கியது.
ஏண்ணே? நர்சுங்களும் வந்தாங்களா?//
1.குட் ஆஃப்டர்னூன் சிபி.
2.கேட்டாலும் நான் சொல்ற மாதிரி இல்ல.
3.எதுதான் உங்களுக்கு புரிஞ்சுது, இது புரிய!
4.இல்லையே.
//Chitra said...
Congratulations!!! Keep Rocking!!//
Thanks Chitra.
//ஷர்புதீன் said...
sir, do u have any idea to make the book for food awareness?! ( serious-a ketkuren)//
அதற்கான காலம் மலரும். நன்றி.
//MANO நாஞ்சில் மனோ said...
வெரி குட்மார்னிங் ஆபீசர்...//
வருகைக்கு நன்றி, மனோ.
//MANO நாஞ்சில் மனோ said...
டேய் அண்ணா உன்னை பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்......
அவர் மனசு மாதிருயே முகம், தெரியாத மாதிரி கேக்குறே..??//
அவரு திருந்துவாருன்றீங்க!
//ஜீ... said...
கலக்குங்க பாஸ்!//
நன்றி ஜீ.
//இராஜராஜேஸ்வரி said...
பயனுள்ள சந்திப்புக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்.//
நன்றி சகோ.
//பலே பிரபு said...
எங்கே சென்றாலும் ஒரு பதிவர் இருப்பார் போல...
அவரின் வலைப்பூ முகவரி சொல்லுங்களேன்.//
என் பதிவில், வலைபூ பெயர் வரும் இடத்தில் கிளிக்கினால், லிங்க் கிடைக்கும்.
http://doctorrajmohan.blogspot.com/
//ஜ.ரா.ரமேஷ் பாபு said...
1. உள்ளேன் ஐயா
2. நல்ல பகிர்வு
நல்ல சந்திப்பு
அசத்துங்க ஆபிசர்//
வருகைக்கு நன்றி ரமேஷ்.
//கே. ஆர்.விஜயன் said...
பதிவர்களின் புகழை உயர பறக்கச்செய்யும் உங்கள் பணி மெய்சிலிர்க்க வைக்கிறது. இன்னும் உயர வாழ்த்துக்கள் சார்.//
எல்லாப் புகழும், தங்களைப் போன்ற சக பதிவர்களையே சாரும்.
//அமைதிச்சாரல் said...
சென்றவிடமெல்லாம் சிறப்பு.. தொடர வாழ்த்துகள் :-)//
நன்றி சகோ.
//kids doctor said...
thank you sir.உங்களை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.உங்க பேச்சு பயனுள்ளதாக இருந்தது. மீண்டும் சந்திப்போம் :)//
மிக்க மகிழ்ச்சி சார். நட்பு தொடரட்டும்.
//இம்சைஅரசன் பாபு.. said...
சார் ..குழந்தை நலம் ப்ளாக் நான் பதிவு எழுத ஆரம்பித்தது முதல் பால்லோ பண்ணுறேன் ..ஆனால் இப்பொழுது அவர் அதிகமாக எழுத வில்லை என்று எண்ணுகிறேன் .
ச்சே நான் மிஸ் பண்ணிவிட்டேன் சார் .//
மிக்க மகிழ்ச்சி பாபு. இனி அடிக்கடி அவரை சந்திக்க வாய்ப்புகள் உருவாகும்.
//"என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல பயனுள்ள பதிவு//
நன்றி ராஜா. தங்கள் வலைப்பக்கம் வந்து சந்திக்கிறேன்.
//சென்னை பித்தன் said...
கொடி பறக்குது!
வாழ்த்துகள்!//
நன்றி அய்யா.
நல்ல பதிவு...தங்கள் உரையின் முக்கிய விஷயங்களை பதிவிடலாமே?
வாழ்த்துக்கள் ...
அருமையான பயனுள்ள மீட்டிங்கும், பதிவர் சந்திப்பும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் + பாராட்டுகள்.
வாழ்க வளமுடன்
என்னமோ நாமே பாராட்டு பெற்றது போல சந்தோசம்
மென் மேலும் வாழ்க
How many peoples having this type of habits?
Thank you for awareness
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ஆபீசர்.... கலக்குறீங்க....! குழந்தை நலம் டாக்டர் ராஜ்மோகன் பதிவுகளுக்கு வழமையாக போவதுண்டு.. மிக மிக உபயோகமான தளம்!
////// சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே, நேர்ல கண்டிப்பான ஆஃபீசரா இருக்கற நீங்க ஃபோட்டோல மட்டும் சின்னக்குழந்தை மாதிரியே முகத்தை வெச்சுக்கறீங்களே.. அது எப்படிண்ணே?
////////
நீங்க பாக்கறதுக்கு தெலுங்கு பட ஹீரோ பாலகிருஷ்ணா மாதிரி இருக்கீங்களே அப்படித்தாண்ணே......
//கே. பி. ஜனா... said...
நல்ல பதிவு...தங்கள் உரையின் முக்கிய விஷயங்களை பதிவிடலாமே?//
விரைவில் நண்பரே.
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அருமையான பயனுள்ள மீட்டிங்கும், பதிவர் சந்திப்பும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் + பாராட்டுகள்.//
நன்றி கருன்.
//siva said...
வாழ்க வளமுடன்
என்னமோ நாமே பாராட்டு பெற்றது போல சந்தோசம்
மென் மேலும் வாழ்க//
பதிவர் ஒருவர் பெறும் பாராட்டு, நம் அனைவருக்கும்தானே.
//krish2rudh said...
How many peoples having this type of habits?
Thank you for awareness//
Thanks for your valuable comment.
//Rathnavel said...
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.//
நன்றி அய்யா.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாழ்த்துக்கள் ஆபீசர்.... கலக்குறீங்க....! குழந்தை நலம் டாக்டர் ராஜ்மோகன் பதிவுகளுக்கு வழமையாக போவதுண்டு.. மிக மிக உபயோகமான தளம்!//
என்ன இருந்தாலும், சீனியர் சீனியர்தான்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நீங்க பாக்கறதுக்கு தெலுங்கு பட ஹீரோ பாலகிருஷ்ணா மாதிரி இருக்கீங்களே அப்படித்தாண்ணே......//
சிபிய ரொம்ப புகழாதீங்க, புல்லரிக்குதாம் அவருக்கு. ஆனாலும் அவரை தெலுங்கு தேசம் பக்கம் தள்ளி விட்டுட்டீங்களே!
வணக்கம் ஆப்பிசர் அண்ணாச்சி,
அருமையான ஓர் அனுபவப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
உங்களின் உரையினைக் கேட்க முடியாவிட்டாலும், உங்களுக்கு கிடைத்த கௌரவிப்புக்களை, பாராட்டுக்களைப் படிக்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது.
வாழ்த்துக்கள் அண்ணா.
என் இன்ரநெட்டில் ஏதோ ப்ராப்ளம், வியாழன் தான் சீர் செய்வார்கள். அதனால் தான் வலைப் பக்கம் ஒழுங்காக வரமுடியலை.
மன்னிக்கவும்.
@Niruban: Thanks a lot.
அருமையான சந்திப்பு
நல்ல பகிர்வு சார்..பதிவர் சந்திப்பு ஃபோட்டோ அருமை.
உங்கள் சந்தோஷத்தை இங்கிருந்தே என்னால் உணர முடிகிறது வாழ்த்துக்கள் ஆபிசர்
குழந்தைகள் உணைவில் இவ்வளவு கலப்படமா என்ன கொடுமை
வணக்கம் . வாழ்த்துக்கள்.
இரட்டை மகுடம்!வாழ்த்துக்கள்.
நன்றி:
தமிழ்வாசி
செங்கோவி
நாய்க்குட்டி மனசு
ஆர்.கே.சதீஷ்குமார்
துபாய் ராஜா
ராஜ நடராஜன்
அருமையான பயனுள்ள சந்திப்புக்கள்... பகிர்வு அருமை. வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள் ...நல்ல பகிர்வு
//டாக்டர்.விருத்தகிரி என்னிடம் பேச வேண்டுமென அழைத்தார். //
மிக சந்தோசமாக இருக்கிறது...உங்களுக்கு அது ஒரு நெகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்கும், அதை உணரமுடிகிறது அண்ணா. எல்லோருக்கும் வாய்ப்பதில்லை, செல்லும் இடமெல்லாம் சிறப்பு. பெருமையாக இருக்கிறது.
உங்களின் உரையின் பதிவு கிடைக்குமா ?
டாக்டர் ராஜ்மோகன் அவர்களின் அறிமுகம், ஆர்வம் பாராட்டுகிறேன்.
பயனுள்ள சந்திப்புக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்..
வாழ்த்துக்கள் ..!!
"நானறிந்தவற்றைப் பதினைந்து நிமிடங்களில் பகிர்ந்து விட்டு இறங்கி வந்தேன்." பேச்சின் சாரத்தை வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
மருத்துவம் சார்ந்த ஒரு பதிவு இதோ:
மனித உயிர் உலோகத்தைவிட மலிவானதா?
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_27.html
கை கொடுங்க தம்பீ..
நன்றி: சே.குமார்
கோவை நேரம்
kousalya
ஈரோடு தங்கதுரை
ஊரான்
தாராபுரத்தான்.
குழந்தைகள் நலம் குறித்து என்னைப்போன்ற குழந்தைகளுக்கு நல்ல தகவல்களை தந்ததற்கு நன்றி.
குழந்தை அழுகுது, பால் புட்டில கொடுங்கப்பா!
.பயனுள்ள சந்திப்பு .பதிவர்களுக்கு என் மனந்துறந்த பாராட்டுகள்.
நன்றி உங்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .
ஆரோக்கியமான சுவாரசியமான பயனுள்ள பதிவு சார்
நல்ல சுவாரசிகமான பயனுள்ள பதிவு...
உங்களது பாராட்டுக்களுக்கு எனது வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்...நல்ல பகிர்வு...என் முதல் வருகை..சுற்றிப்பார்த்து வருகிறேன்...
அருமையான பயனுள்ள மீட்டிங்கும், பதிவர் சந்திப்பும் வாழ்த்துக்கள்
Post a Comment