இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday, 1 August, 2011

மட்டற்ற மகிழ்ச்சி மனதில் மலர்ந்திட!

மாஸ்டர் யோஷிஹிரோ மோரி உரை. அருகில் டாக்கி
                                     
கடந்த வாரத்தின் கடைசி நாள். மாலை வேளையில் ஒரு மகிழ்ச்சி தரும் விழா. வந்து கலந்திட வேண்டுமென்று, வாஞ்சையுடன் அழைத்த இரு இளம் உள்ளங்கள். என்ன நிகழ்ச்சியென்று கேட்டதற்கு, ”மனம் மகிழ்ச்சியாய் இருந்திட-கனவுகள் மெய்ப்பட” என்று மட்டும் சொன்னனர். மறக்காமல்,மனதோடு மட்டும் சகோதரி கௌசல்யாவிற்கும் தகவல் சொன்னேன்.தனது மன்னவனோடு வந்திருந்தார்.
மாஸ்டர் யோஷிஹிரோ மோரி உரையைக்கேட்கும் மக்கள்.
                                                நெல்லை வடக்கு சுழற்கழகத்தின் வாராந்திர கூட்டத்தில், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் அன்புத் தம்பி கோமதிநாயகம் மற்றும் அவரது உற்ற நண்பர் ஷாஜஹான் ஷெரிஃப். கல்லூரியில் கல்வி கற்கும் வயதில், பல கனவுத்திட்டங்களோடு, சாதிக்கத் துடிக்கும் இரு உள்ளங்கள். 
                                                  இந்த இடத்தில், ஷாஜஹான் ஷெரிஃப்பைப் பற்றி ஓரிரு வார்த்தைகள். இவர் ஒரு பதிவர். Indian cuisine (சென்று ஒருமுறைதான் பாருங்களேன்)என்றொரு வலைத்தளத்தில், வகைவகையான உணவுகளை வாகாய்த் தயாரிக்க வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.(ஆஹா, மறுபடியும் ஒரு பதிவர் சந்திப்பா!)             
ஜோதிராஜ்,மாஸ்டர் யோஷிஹிரோ மோரி,சங்கரலிங்கம் மற்றும் டாக்கி.
                     என்ன  சாதிக்க எண்ணுகிறீர்கள் என்று கேட்டபோது, வலைத்தளத்தில் வாசகர் வட்டம் பெருக வேண்டும், அதற்கொரு வழி சொல்லுங்கள் என்றார். அடடே, நானே ஒரு கற்றுக்குட்டி என்னிடம் கேட்டால் எப்படி என்றேன்.(சிபியிடம் டியூஷன் கற்க அனுப்பவேண்டும்) இத்தனைக்கும் அவர் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவர். எதற்கு வாசகர் வட்டம் என்று கேட்டேன். வாசகர் வட்டம் கூடினால், விளம்பரம் (Adsense) மூலம் கிடைக்கும் வருமானம், என் கல்விக்கு உதவுமென்றார். கற்கும்போதே உழைத்து, தன் சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்ற உன்னதமான எண்ணங்கள்.
                            மற்றொருவர், கோமதிநாயகம் என்ற விஷ்ணு. இவர், சென்னை மற்றும் நெல்லையில், Y-NOT EDU CONSULTANTS என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். தொழிற்கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு உதவும் நிறுவனம் இது.உழைத்துப் பிழைக்கவேண்டுமென்ற உங்கள் எண்ணமே, உங்களை உன்னத நிலைக்கு உயர்த்தும்.
மாஸ்டர் யோஷிஹிரோ மோரி,டாக்கியுடன் ஷாஜஹான் மற்றும் கோமதிநாயகம்
                                      அழைப்பை ஏற்று சென்று கலந்து கொண்டேன்.  அற்புதமாய் இருந்தது அந்த சொற்பொழிவு. ஜப்பான் Happy Science அமைப்பின் மாஸ்டர் ஒகவா(Master Ryuho Okawa)வின் கருத்துக்களுக்கு,திரு.யோஷிஹிரோ மோரி எண்ணற்ற வழிகள் எடுத்துரைத்தார். அந்த சொற்பொழிவிலிருந்து சிலவற்றை உங்கள் சிந்தனைக்கு: 
 • எப்போதும் விழிப்புடன் இரு.
 • உன்- மனம் என்ற ஒன்றில் உன்னதமான சக்தி உண்டு.
 • கனவு கண்டிடு.(அப்துல் கலாம் அய்யா நினைவில் வந்தார்)
 • கனவில் உன் லட்சியங்களை உருவேற்று.
 • உன் கனவு பிறருக்கு உதவும் வகையில் அமைந்திட வேண்டும்.
 • காணும் கனவு மிகப்பெரிய அளவில் இருந்திட வேண்டும்.
 • அந்தக் கனவை எண்ணத்தில் எப்போதும் இருத்தி வைத்திடு.
 • அந்தக் கனவை மெய்ப்படுத்த, உன் லட்சியங்களை எழுதி, உன் கண்ணில் படும் இடத்தில் ஒட்டி வை.
 • பலமுறை அதனைப் பார்க்கும்போது, அந்த எண்ணங்கள் உன்னில் நிலை கொள்ளும்.
 • தடைகள் வந்தால் தகர்த்தெறி. அதற்காக ஒருபோதும் உன் எண்ணங்களை விட்டுவிடாதே.

                இதற்கு உதாரண புருஷர்களாய் அவர் கூறிய இருவர்:
   
முதலாவது நபர்:
                எட்டு பேர் கொண்ட ஏழைக்குடும்பத்தில், எட்டவதாய்ப் பிறந்த இளைய மகன்.ஒன்பதாவது வயதில் வறுமையின் கொடுமையால், தன் தாயின் கரத்தால், தனியாய் ரயிலிலேற்றி தவிக்க விடப்பட்டவர். பதினைந்து வயதில் ஒசாகா எலெக்டிரிக் கம்பெனியில், வேலையில் சேர்ந்தார்.மிகப்பெரும் கனவுகள் கண்டார். எண்ணங்களே வாழ்க்கை என்பதை உணர்ந்து, தம் இருபத்தி மூன்றாம் வயதில், மடுஷிடா வீட்டு உபயோக எலக்டிரிக் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினார். அதுதான் இன்றைய உலக புகழ் பெற்ற “பானாசோனிக்” நிறுவனம். தடைகளை வென்ற அந்த மாமனிதர் மட்சுஷிதா (Konosuke Matsushita)
“பானாசோனிக்” நிறுவனம்.
 இரண்டாவது நபர்:

 இவரது

 ஒன்பதாவது வயதில் தாயை இழந்தார்.

 பத்தொன்பது வயதில் சகோதரியை இழந்தார்.

 இருபத்தியிரண்டாம் வயதில் செய்த தொழிலில் தோல்வி.

 இருபத்திமூன்றாம் வயதில் தேர்தலில் நின்று தோல்வி.

 இருபத்த்தி ஏழாம் வயதில் நரம்பு மண்டல பாதிப்பு.

 முப்பத்தி நான்காம் வயதில் மீண்டும் தேர்தல் தோல்வி.

37,39,46 மற்றும் 47வது வயதில் நின்ற தேர்தலில் எல்லாம் தோல்வி.

துவண்டு விடவில்லை. அவரது ஐம்பத்தியோரு வயதில் அமெரிக்க ஜனாதிபதி.

அவர்தான்: ஆபிரஹாம் லிங்கன்.

               என்ன நண்பர்களே, கனவு காணுங்கள், கனவில் உங்கள் லட்சியங்களை உருவேற்றுங்கள், உங்கள் லட்சியம் மெய்ப்படும்.       

Follow FOODNELLAI on Twitter

33 comments:

siva said...

me the first dream....

FOOD said...

முதல் வருகை. நன்றி.

J.P Josephine Baba said...

அருமையான அனுபவ பகிர்வு!

Rathnavel said...

அருமையான பதிவு.
நல்ல முயற்சி.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

மைந்தன் சிவா said...

சிந்தனையை தூண்டும் பதிவு...லிங்கனுக்கு இப்பிடியா??!

இராஜராஜேஸ்வரி said...

.(ஆஹா, மறுபடியும் ஒரு பதிவர் சந்திப்பா!)


அருமையான உற்சாகமளிக்கும் பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான சந்திப்பும் பகிர்வும்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

என்ன சாதிக்க எண்ணுகிறீர்கள் என்று கேட்டபோது, வலைத்தளத்தில் வாசகர் வட்டம் பெருக வேண்டும்,//

நானும் பாலோவர் ஆகிட்டேன், என் மகன் செய்த அநியாயத்தால் [[ஹி ஹி]] மோசஸ் மனோ என பெயர் மாறி கிடக்குது அதை மாற்றவே முடியலை ஆபீசர்.....!!!

MANO நாஞ்சில் மனோ said...

சாதனை செய்ய துடிக்கும் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஆபீசர், கோவில்பட்டி தாதாவை கூப்பிடலையா ஹி ஹி.....

கோகுல் said...

உத்வேகத்தை ஏற்படுத்தும் பகிர்வு,நன்றி

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Very energytic post . . . Thanks

Kousalya said...

ஒரு நல்ல நிகழ்ச்சியில் என்னையும் கலந்து கொள்ள செய்த உங்களுக்கு என் நன்றிகள் அண்ணா !

வேற்று நாட்டினர் நம் மகாத்மாவை பற்றி சொன்ன போது நெகிழ்ச்சியாக இருந்தது...!

ஆபிரஹாம் லிங்கன், பானாசோனிக் மட்சுஷிதா இவர்களை பற்றி சொன்னது, வந்திருந்த இளைஞர்களுக்கு ஒரு உத்வேகத்தை நிச்சயம் கொடுத்திருக்கும்...!

இன்றைய இளைஞர்கள் பொறுப்பில்லாதவர்கள் என்று யார் சொன்னா...?! ஷாஜகான், விஷ்ணு இருவரை பார்த்தபின் இனி நான் கண்டிப்பா சொல்லமாட்டேன் !

சிறந்த உத்வேகமும் மிகச் சிறந்த கனவும் கொண்டவர்கள்... ஜப்பானியர்களை வரவழைத்து இத்தகைய பெரிய நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்கள் அவர்களுக்கு என் பாராட்டுகள் இங்கே சொல்லிக்கிறேன்.

இவர்களை பற்றி என் தளத்தில் எழுதணும்னு ஒரு எண்ணம் இருக்கு ...ஆனா இந்த நேரம் தான் கிடைக்க மாட்டேங்குது :)))

இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகா பதிவிட்ட அண்ணா உங்களுக்கு ஒரு பொக்கே கொடுக்கணும்...! :))

koodal bala said...

சிறந்த தன்னம்பிக்கை பதிவு ....நன்றி !

# கவிதை வீதி # சௌந்தர் said...

வந்தேன்..

விக்கியுலகம் said...

முன்னேற்றத்துக்கான வழிகளை பகிந்து இருக்கிறீங்க நன்றிங்க அண்ணே!

சங்கவி said...

அருமையான பகிர்வு....

செங்கோவி said...

நல்ல பகிர்வு சார்..பானசோனிக் பற்றிய தகவல் புதுசு.

தமிழ்வாசி - Prakash said...

சொறப்பொழிவு சிந்தனைகள் எண்ணத்தில் வைக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி,

சென்னை பித்தன் said...

நல்ல பகிர்வு.

கோமாளி செல்வா said...

PANASONIC கம்பனி உருவானதுல இப்படி ஒரு வரலாறா? தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள் சார் :-)

நானும் கனவு கண்டுகொண்டே இருக்கிறேன்!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்த்துக்கள்..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணன் டி சர்ட்ல பின்றாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உற்சாகமூட்டும் வரிகள், மனிதர்கள்... நன்றி ஆப்பீசர்.........

இம்சைஅரசன் பாபு.. said...

நானும் கனவு காணனும் கண்ணை மூடினா ..எப்பவுமே நமீதா ,,குஷ்பூ ..சிம்ரன் திரிஷா ..கோவை சரளா தான் வாராங்க ஏன் ..?

M.R said...

மனதில் உத்வேகம் தூண்டும் பதிவு .

அருமை நண்பரே ,
பகிர்வுக்கு நன்றி .

http://thulithuliyaai.blogspot.com

ஷர்புதீன் said...

:-)

நிரூபன் said...

வணக்கம் ஆப்பிசர்,
மனதிற்கு மகிழ்ச்சி தரும் பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
கூடவே கனவு காண்பதன் முக்கியத்துவத்தினையும், வாழ்வில் வெற்றி கண்ட இரு பெரியவர்களை உதாரணப்படுத்தி விளக்கியிருக்கிறீங்க.

அருமையான நிகழ்வில் கலந்து கொண்டதோடு, அச் சொற்பொழிவின் சிறப்பம்சங்களையும் எம்மோடு பகிர்ந்திருக்கிறீங்க.

நன்றி ஆப்பிசர்.

கே. ஆர்.விஜயன் said...

அருமையான பதிவு.கலக்கலான படங்களுடன்.

sakthi said...

thank you for boosting the selfconfidence to the followers.

Jas said...

very interesting and inspiring topic...


A hearty congrats for taking this effort and All the best

vidivelli said...

அந்த சொற்பொழிவிலிருந்து சிலவற்றை உங்கள் சிந்தனைக்கு: /
எப்போதும் விழிப்புடன் இரு.
உன்- மனம் என்ற ஒன்றில் உன்னதமான சக்தி உண்டு.
கனவு கண்டிடு.(அப்துல் கலாம் அய்யா நினைவில் வந்தார்)
கனவில் உன் லட்சியங்களை உருவேற்று.
உன் கனவு பிறருக்கு உதவும் வகையில் அமைந்திட வேண்டும்.
காணும் கனவு மிகப்பெரிய அளவில் இருந்திட வேண்டும்.
அந்தக் கனவை எண்ணத்தில் எப்போதும் இருத்தி வைத்திடு.
அந்தக் கனவை மெய்ப்படுத்த, உன் லட்சியங்களை எழுதி, உன் கண்ணில் படும் இடத்தில் ஒட்டி வை.
பலமுறை அதனைப் பார்க்கும்போது, அந்த எண்ணங்கள் உன்னில் நிலை கொள்ளும்.
தடைகள் வந்தால் தகர்த்தெறி. அதற்காக ஒருபோதும் உன் எண்ணங்களை விட்டுவிடாதே.


ஆமாம் அத்தனையும் உண்மைதான்...
உங்கள் பகிர்விற்கு நன்றி...
அருமையான பதிவு படங்களுடன்...
அன்புடன் வாழ்த்துக்கள்