எனது குடும்ப சூழல் காரணமாக, கடந்த ஒரு மாத காலமாகவே, நான் பதிவுலகம் பக்கம் சரியாக வரமுடியாமல் இருக்கிறேன். மிக அரிதாகவே, ஆன்லைனில் வர முடிகிறது. இந்த நிலையில், அதையும் கெடுக்க,யாரோ ஒரு புண்ணியவான், எனது yahoo மெயில் ஐ.டி.யை ஹாக் பண்ணி, அருவருப்பான ஸ்பேம் மெயில்களை என் பெயரில் அனுப்பி வருகின்றார்.
எனது மெயில் பாக்ஸை திறக்கவே முடியவில்லை. தினசரி பல மெயில்கள் என்னைத் திட்டி வருகின்றன. ஒவொன்றிற்கும் நான் அனுப்பவில்லை என்று பதில் மெயில் போட்டு என் வருத்ததை தெரிவித்து வருகிறேன். இதைக் கேட்டாவது சந்தோசப்பட்டு, இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.
சகோதரர்கள் பாடாவது பரவாயில்லை. சகோதரிகளுக்கும் என் பெய்ரில் இந்த ஸ்பாம் மெயில் போயிருந்தால், என்னை எவ்வளவு மட்டமாக நினைத்திருப்பார்கள்!
யாஹூ நிறுவனத்திற்கும் புகார் அனுப்பியுள்ளேன். பதில் இல்லை. பதிவர்களே, சொல்லுங்கள் இதற்கு என்னதான் தீர்வு? அன்பினால் என்னைக் கவர்ந்த ‘பலே பிரபு’ விடம்தான் முதலில் மெயிலில் புலம்பினேன். அவர், அந்த ஐ.டி.யை டிஸ்கார்ட் பண்ணிவிடுங்கள் என்றார். அது அவ்வளவு சுலபமில்லை. ஏனெனில், அந்த மெயில் ஐ.டியை பல நிலைகளில், பல தளங்கள் செல்லப் பயன்படுத்தியுள்ளதால், அதனை டிஸ்கார்ட் பண்ணவும் முடியாத நிலை.
எப்படி இந்த கொடுமையிலிருந்து விடுபட? தெரிந்தவர்கள் மாற்று வழி சொல்லுங்களேன்.
டிஸ்கி-1: இது உதவி கேட்கும் பதிவென்றாலும், பதிவுலகில் சகோதர, சகோதரிகள் யாருக்கேனும் இத்தகைய மெயில், என் ஐ.டி.யிலிருந்து வந்து வருத்தப்பட்டிருந்தால், அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவும்தான். மற்ற நண்பர்களுக்கும், இது ஒரு எச்சரிக்கை உணர்வைக் கொடுக்கட்டும்.
டிஸ்கி-2: நண்பர்கள் யாருக்கேனும் இத்தகைய ஸ்பாம் மெயில், வித்யாசமான தலைப்பில் எனது Yahoo ஐ.டி.யிலிருந்து வந்தால், தயவு செய்து அதனை அழித்து விடவும். அப்போதுதான், அந்த வைரஸ் உங்கள் பெயரில் ஸ்பாம் அனுப்பாமல் தடுக்க முடியும்.
டிஸ்கி-2: நண்பர்கள் யாருக்கேனும் இத்தகைய ஸ்பாம் மெயில், வித்யாசமான தலைப்பில் எனது Yahoo ஐ.டி.யிலிருந்து வந்தால், தயவு செய்து அதனை அழித்து விடவும். அப்போதுதான், அந்த வைரஸ் உங்கள் பெயரில் ஸ்பாம் அனுப்பாமல் தடுக்க முடியும்.

45 comments:
it's ok..not a problem
i can (
bloggers too ) easily guessed that u didnt sent that mails,
சார் எனக்கும் வந்துச்சு ...அவ்வவ் ..ஆனா எங்களுக்கு தெரியும் சார் வேறு எதோ தவறு நடந்திருக்குன்னு ..அந்த அளவுக்கு நாங்க யோசிக்காம இருப்போமா ? ..இது ஒரு மேட்டர் இல்ல சார் ..நீங்க தொடர்ந்து நல்ல கட்டுரைகளை எழுதுங்கள்
எச்சரிக்கையா இருப்போம், நீங்க தொடருங்க ஆபீசர்.......!
சார் எனக்கும் வந்திட்டுத்தான் இருக்கு. ஆனா ஏற்கெனவே இது மாதிரி ஒரு பிரச்சினை இன்னொரு நண்பருக்கு இருந்ததால நான் இத பெரிசா எடுத்துக்கல :))))))
அப்பா உங்களுக்கு நான் மெயில் செய்கிறேன்.
நீங்கள் சோதனைகளை சாதனைகளாக மாற்றி ............
வெற்றி பெற வேண்டும் ...
எங்களை போன்ற வளரும் பதிவர்கள்கும் """புண்ணியவான்"""""
செயல் மிகவும் வேதனை அளிக்கின்றது ......
கம்ப்யூட்டர் கடவுள் தான் நம்மளை காக்க வேணும்...
அன்புடன் ....
யானைகுட்டி
எச்சரிக்கையாக இருப்போம்
Elangovan - To solve this problem change your password of yahoo email id.
;-(
இதே மாதிரி என் பேரிலும் நிறைய பேருக்கு மடல் போயிருக்கிறது. நல்ல வேளை, அவற்றை நான்தான் அனுப்பியிருப்பேன் என்று யாரும் நம்பவில்லை - காரணம், அதில் உருப்படியான மடல்கள் போயிருந்ததாம்.
ஆமா நானும் யோசிச்சேன்.. ஆபிசர் கிட்ட இருந்து இந்த மாதிரி மேயிலான்னு.நான் நம்பாம அதை டெலிட் பண்ணிட்டேன்..
கொஞ்ச கால இடைவெளியில் பதிவுலகில் இப்படி ஒரு பிரச்னை பூதம் கிளம்பிடுதே சார், என்ன தான் நடக்குது ஒண்ணுமே புரிய மாட்டேங்குது
Don t worry be happy
நீங்கள் செய்ய வேண்டியது...
1 .அடிக்கடி பாஸ்வோர்ட் மாற்றுங்கள்.
2 . நல்ல வைரஸ் மற்றும் வோர்ம் scanner மூலம் ஸ்கேன் செய்து வோர்ம் களை நீக்குங்கள்..
3 .இலவசமாக பாடல்...படம்...கிரிக்கெட் பார்ப்பதை தவிருங்கள்.
4 . இலவச வீடியோ பிளேயர்,விளையாட்டு எதுவும் வேண்டாம்...
5 . தவிர்க்க முடியாவிட்டால் புதிதாய் ஒரு கணினி வாங்கி உங்கள் அத்தியாவசிய தேவைகளை அதில் நிவர்த்தி செய்யுங்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஹாக்கர்ஸ் உலகின் அதி புத்திசாலிகள்... அவர்களை வெல்வது கடினம்...முடிந்த வரை விலகி இருங்கள்...
இது வேறா?
ஓ .
தடைகற்களை படிக்கல்லாக மாற்றி உங்கள் சமூக பணி தொடர வாழ்த்துகிறேன்.
எனக்கு உங்க பெயரில் தினந இரண்டு மெயிலாவது வந்துவிடும், ஆரம்பத்தில் அண்ணன் அனுப்பியது ஆச்சேனு ஒரு ஆர்வத்தில் ஓபன் பண்ணிட்டு அப்புறம் மேட்டர் படிச்சி குழம்பி செல்பேசியில் அழைத்து தெளிந்தேன்.
இன்றும் வந்தது, கொஞ்சமும் தயங்காமல் அப்படியே தூக்கி குப்பையில் போட்டுட்டேன் :)
ஆன்லைனில் இது சகஜம் போலன்னு நினைச்சிட்டு ப்ரீயா இருங்க...
:))
எச்சரிக்கையாக இருப்போம்!அண்ணே விடுங்கண்ணே.....பாவம் தன்னிலை தெரியாதவங்க...!
படித்தேன்.
வேதனையாக இருக்கிறது. இது முதுகில் குத்தும் செயல். கண்டிக்கப்பட வேண்டியது. தகுந்த நடவடிக்கை எடுங்கள். அதைரியப்படாதீர்கள்.
நன்றி.
மனமார்ந்த நன்றி:
சமுத்ரா
ஷர்புதீன்
இம்சை அரசன் பாபு
பன்னிக்குட்டி ராம்சாமி
கோமாளி செல்வா
Prabu Krishna (பலே பிரபு)
Yanaikutty Gnanendran
இராஜராஜேஸ்வரி
FOOD SAFETY OFFICER
நிகழ்வுகள்
சேட்டைக்காரன்
வேடந்தாங்கல் கருன்
நாய்க்குட்டி மனசு
"என் ராஜபாட்டை"- ராஜா
ரெவெரி
சென்னை பித்தன்
நண்டு @நொரண்டு -ஈரோடு
கே. ஆர்.விஜயன்
Kausalya
விக்கியுலகம்
Rathnavel அய்யா.
ஏதாவது நல்ல மெயிலா இருந்தா, எனக்கும் அனுப்புங்க சார்..
இவங்கள தடுக்க வழியே இல்லையா?
வருத்தம் வேண்டாம் சகோதரா!
//செங்கோவி said...
ஏதாவது நல்ல மெயிலா இருந்தா, எனக்கும் அனுப்புங்க சார்..//
யாம் பெற்ற/பெறும் துன்பம், செங்கோவி பெறுவதில் எமக்கு உடன்பாடில்லை.
@தமிழ்வாசி: அதற்கும் ஒரு பேட்டி எடுத்து போடுங்களேன்!
@J.P Josephine Baba: நன்றி.
ஜாக்கிரதையாக இருப்பேன்.
@DrPKandaswamyPhD: நன்றி அய்யா.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும்.
நாங்கள் உங்களோடு இருக்கிறோம். கலங்க வேண்டாம் சித்தப்பா சார்.
//துபாய் ராஜா said...
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும்.
நாங்கள் உங்களோடு இருக்கிறோம். கலங்க வேண்டாம் சித்தப்பா சார்.///
தங்கள் அன்பு சூதுகளைக் களைந்திடும்.
ஆமா, அது என்ன, கடைசியில ஒரு சார்?
எச்சரிக்கையா இருப்போம்!
அவங்கள விட்டுத்தள்ளுங்க!
உங்க பணியை தொடருங்கள்!
நல்ல வெளை உங்களுக்கு நல்ல பேர் இருக்கு, யாரும் நம்பலை, தப்பிச்சீங்க!இதுவே நான் அல்லது என் பேர்ல யாராவது அனுப்பி இருந்தா?!!!!!!!!!!!!!!
விடுங்க பாஸ்! உங்களை யாரவது வித்தியாசமா யோசிப்பாங்களா? கூல்!!! :-)
வணக்கம் ஆப்பிசர்,
அந்தக் கணக்கினுள் உங்களால் உள்ளே நுழைய முடியும் என்றால்,
பாஸ்வேர்ட்டை மாற்றி, கணக்கினை உங்கள் வசமாக்க முயற்சி செய்ய முடியாதா?
இப்படியெல்லாம் கூட கொடுமை நடக்குதா..,?
உஷாரா இருக்கணும் போல...
இந்த மோசமான செயலை செய்தவனை நானும் கண்டிக்கிறேன்
இந்த பிரச்சனை பற்றி நானும் கேள்வி பட்டு இருக்கிறேன். ஒரு இ-மெயில் ஐடியில் ப்ளாக்,மெயில்,சாட் பேன்றவை பயன்படுத்தினால் பல பிரச்சனை ஏற்படும். எனவே தனி தனி அக்கவுண்ட் பயன்படுத்துவது சிறந்தது. மேலும் ஐடி-ஐ டெக்ஸ்ட் ஆக கொடுக்காமல் இமேஜ் ஆக கொடுத்தால் வெப் கேச்-ல் இருந்து தப்பிக்கலாம்.
ஆஃபீசர்கிட்டேவா ......
koodal bala said...
ஆஃபீசர்கிட்டேவா ......
300கிலோ மீட்டர் தாண்டி வர முடியாது பாலா..................
FOOD said...
//துபாய் ராஜா said...
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும்.
நாங்கள் உங்களோடு இருக்கிறோம். கலங்க வேண்டாம் சித்தப்பா சார்.///
தங்கள் அன்பு சூதுகளைக் களைந்திடும்.
ஆமா, அது என்ன, கடைசியில ஒரு சார்? //
உரிமையோடு 'சித்தப்பா' மரியாதையோடு 'சார்'. சரிதானே "சித்தப்பா சார்". :))
@துபாய் ராஜா:
சரி, துபாய்க்கே ராஜா நீங்க. சொல்லும்போது கேட்டுத்தானே ஆகனும்.
Post a Comment