டிஸ்கி-1: பதிவர் சந்திப்பு என்று சொன்னால்,நெல்லையில் எத்தனை பதிவர் சந்திப்பு என்றே, படையெடுத்து எங்களை உதைக்க வருது ஒரு கூட்டம் என்பதால், இளம் இயக்குனர் சந்திப்பு என்று வைத்தேன் தலைப்பு.
செல்வகுமார்,சீனா அய்யா,சங்கரலிங்கம். |
சில தினங்களுக்கு முன், நாய்குட்டி மனசு ரூஃபினா சகோதரியிடமிருந்து தொலைபேசி அழைப்பு. சென்னையிலிருந்து இளம் இயக்குனர் திரு.செல்வகுமார் நெல்லைப் பகுதிக்கு வந்திருப்பதாகவும், தற்போது அம்பாசமுத்திரம் அருகே படப்பிடிப்பு சம்பந்தமான வேலையில் இருக்கிறாரென்றும், 17.06.2001 நெல்லைப் பதிவர் சந்திப்பு பற்றி கேட்டும், பதிவுகளில் பார்த்தும் வியந்து, நெல்லையில் உள்ள பதிவர்களை சந்திக்க விழைவதாகவும் சொல்லி, அதற்கான ஏற்பாடுகள் செய்திடவும் கேட்டுக்கொண்டார். வலைச்சரம் ஆசிரியர் திரு.சீனா அய்யா அவர்கள் ஒரு மெயில் அனுப்பி ஒரு மினி சந்திப்பிற்கு தயாராகக் கேட்டுக்கொண்டுள்ளதாக, அடுத்த ஃபோன், சகோதரி கௌசல்யாவிடமிருந்து.
ரூஃபினா,கௌசல்யா,வடிவேல்,ராமலிங்கம்,செல்வகுமார்,சீனா அய்யா,சங்கரலிங்கம்,விஜயன் |
ஒன்றிற்கு இரண்டு மேடம் சொன்ன பின்னர், ஏற்பாடு செய்யாமலிருந்தால், எப்படி? அவசர அவசரமாக, அருகிலிருந்த நண்பர்களைத் தொடர்பு கொண்டு, அடுத்த நாள் ஆறு மணியளவில் சந்திக்கலாமா என்று கேட்டோம். முதல் பச்சைக்கொடி நினைவில் நின்றவை விஜயனிடமிருந்து. முதல் பதிவர் சந்திப்பை தவற விட்டதால், இந்த முறை கட்டாயம் வந்து கலந்து கொள்வேன் என்றார். சொன்னபடியே வந்து கலந்து,கல கல விஜயன், நிகழ்ச்சியைக் கல கலப்பாக்கினார்.
’யாதுமானவள்’ குறும்படம் விஜயனின் பார்வையில். |
மாலை ஆறு மணியளவில், இளம் இயக்குனர் செல்வகுமார் வந்தார். சக பதிவர்களால், ‘செல்வா அண்ணா’ என அன்புடன் அழைக்கப்படுபவர்.அம்பாசமுத்திரம், திருவில்லிபுத்தூர், குற்றாலம் பகுதிகளில் படப்பிடிப்பிற்காக பல இடங்களை பார்வையிட்டு வந்ததாக சொன்னார். திரு.செல்வகுமார், ஒரு பதிவரும் கூட. Selvaspeaking, Ezymaths , Ask Selva என மூன்று வலைத்தளங்களில் கலக்கி வருகிறார்.மறைந்தும் மறையாத நடிகர் திரு.ஐ.எஸ்.ஆரின் மகன். I.S.R. காணொளி. முதல் நாள் சொல்லி, மறு நாள்,பத்து பதிவர்கள் வந்து கலந்து கொண்டதை மிகுந்த ஆச்சரியத்துடன் கூறி சிலாகித்தார். Selva speaking ல் கலந்து கட்டி அடிக்கிறார். Ezymaths ல், கணக்கு பண்ண(!) சொல்லித் தருகிறார். Ask Selvaல், சந்தேகங்கள் தீர்த்து வைக்கிறார். அந்த தளத்தில், என்ன வேண்டுமானாலும் கேட்கலாமா என்று கேட்டதற்கு, என் படத்தில் கதாநாயகியாக நடிக்கலாமா என்று மட்டும் கேட்காதீர்கள் என்றார். நகைச்சுவை உணர்வுடன் பேசினார்.
ரூஃபினா,கௌசல்யா,செல்வகுமர்,சீனா அய்யா,Dr.பரமசிவன்,ராமலிங்கம்,ஜோதிராஜ். |
பின்னர், செல்வா அண்ணா, தான் தயாரித்த ‘யாதுமானவள்’ குறும்படத்தை மடிக்கணினியில் திரையிட்டார். என்ன ஒரு அற்புதமான காட்சி அமைப்பு.கதையும், களமும் கணத்தில் மனதில் ஒட்டிக்கொண்டன. இந்தப்படம் விரைவில் ஜப்பானில் நடைபெற உள்ள குறும்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக ஜப்பான் மொழியில் உப-தலைப்பு (sub-title)சேர்த்து வருவதாகவும் கூறினார். தற்போது, செல்வா அண்ணா இயக்கி வரும் ‘அவர்’ படத்திற்கு, லொக்கேஷன் பார்க்கத்தான் வந்திருந்தார். அடுத்த மாதம், படப்பிடிப்பிற்காக நெல்லைப்பக்கம் வரும்போது, இதைவிட அதிகமான பதிவர்கள் குற்றாலத்தில் உள்ள பிரபல ரிசார்ட்டில் சந்திக்க தாம் ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். இத்தகைய இளம் இயக்குனர் மற்றும் பதிவர் ஒருவரை சந்தித்ததில் அனைவரும் அகமகிழ்ந்தோம்.
நடுவில் சுவாமி திவானந்தா. |
ஜன்னத் ஹோட்டல்தான் அன்றைய சந்திப்பு நிகழ்ந்த இடம். நெல்லைக்கே உரிய அல்வா, மற்றும் பஃப்ஸ் உடன் ருசியான லெமன் டீ வந்தது. ஹோட்டல் உரிமையாளர் என் நண்பர் சுவாமி திவானந்தா அருகிலிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்தார். ஒரு மணி நேரத்தில் புறப்பட வேண்டுமென்று சொல்லி வந்த, ரூஃபினா சகோ, இரண்டு மணி நேரத்திற்கு பின்னரும், புறப்பட்டு செல்ல மனமின்றி, சந்திப்பின்போது, இயக்குனருக்கு ஒரு உண்மை சம்பவம் பற்றிக் கூறி,புதிய கதைக்கான கருவை சிந்திக்க வைத்தார்.
இரவு உணவை முடித்து, சென்னை செல்லும் கடைசி பேருந்தில் ஏறி அமர்ந்தவர், குடும்பத்தைப் பிரிந்து செல்வதுபோல், பேருந்து புறப்படும் வரை, எட்டி எட்டிப் பார்த்து கை அசைத்துக் கொண்டிருந்தார். கருவாலி ராமலிங்கமும் கடைசி வரை இருந்து செல்வா அண்ணனை வழியனுப்பி வைத்தார். பேருந்திற்காகக் காத்திருந்த நேரத்தில், கோமாளி செல்வா பற்றியும், அவரது வாழ்நாள் இலட்சியம் பற்றியும் எடுத்துக்கூறினோம். இணைய வழியில் நாமே நமக்கென்று Podcast மூலம் ஒலிபரப்பலாம் என்றும்,அடுத்த முறை, நெல்லை வரும்போது, அத்ற்கான முயற்சிகள் செய்யலாம் என்றும் சொல்லி சென்றார். எப்படியும் செல்வாவின் குரலை வானலைகளில் ஒலிக்கச் செய்து, அவர் கனவை மெய்ப்படுத்திடலாம் என்ற நம்பிக்கை என்னுள் துளிர்விட்டது.
மீண்டுமொரு சந்திப்பில் சிந்திப்போம்.

42 comments:
காலை வணக்கம். தமிழ்மணம் இணைப்பு மட்டும் கொடுத்திட வேண்டுகிறேன்.
வாழ்க உங்கள் பணிகள் சிறக்கவும்
செல்வாவின் கனவு நிறைவேற எனது வாழ்த்துக்களும்
உங்கள் பகிர்வுக்கும்
நன்றிகளும்
அடிக்கடி நெல்லைல பதிவர் சந்திப்பு நடக்குதே ....இதுல எதாவது உள்குத்து இருக்கோ ..ஹி..ஹி..ஹி.. அருமை .வாழ்த்துக்கள்
வணக்கம் சார், சந்திப்புகள் இனிமையாய் நடைபெற்றதற்கு வாழ்த்துக்கள்... அருமையாக பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள் பல! :)
சில வேலைகளால் உடனே நம் சந்திப்பு பற்றி பதிவு எழுத முடியவில்லை. உங்கள் பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அருமை.
சகாதேவன்
இனிமையான சந்திப்பு..
நெஞ்சம் மறப்பதில்லை!//
இனிமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
அண்ணே கலக்கல் பதிவு....களை கட்டுச்சின்னு சொல்லுங்க சந்திப்பு....உங்க ப்ளோகும் ஆட்சி மாற்றம் நடந்துட்டுதா நன்றி!
'கோவை நேரம்' ஆபத்தை உண்டாக்கி விட்டுறாதீங்க. கஷ்டப்பட்டு கலந்து கொண்டு இருக்கிறேன். இது சம்பந்தமாக எனது பதிவையும் பார்க்க வேண்டுகிறேன்
http://venthayirmanasu.blogspot.com/2011/08/blog-post.html
இது 300 ஆவது பதிவா வந்திருந்தா சிறப்பா இருந்திருக்கும் சரி பரவாஇல்லை விடுங்க
05.08.2011 முதல் அமலுக்கு வந்துள்ள உணவு பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தும் பணி தீவிரமடைவதால், இந்த தளத்தை நிர்வகிக்கும் பொறுப்பை என் மனைவியிடம் ஒப்படைக்கிறேன். உணவின் சுவை குறையாது. உரிமையாளர் மட்டுமே மாறுகிறார். உங்கள் ஆதரவோடு, உணவு உலகம் உன்னதமாய் செயல்படும்.
..... வேலைக்கு மத்தியில், ப்லாக்ல "பொங்கல்" வச்சுடாதீங்க.... தொடர்ந்து அசத்துங்க..... அண்ணிக்கு வாழ்த்துக்கள்!
300th post - Congratulations!!!!
உங்கள் இருவரைப் பற்றி குறிப்பிட்டு, நீங்கள் இல்லாமல், இந்த சந்திப்பு எப்படி (சிரிப்பு புயலும், அருவாளுமின்றி) கொஞ்சம் கலகலப்பு குறைவாய் நடைபெறுகிறது என்றும் பேசினோம். நெஞ்சம் மறப்பதில்லை!
...... அதானே பார்த்தேன்..... இல்லைனா, செல்வா அண்ணனுக்கு அருவாளை பார்சல்ல அனுப்புறதா இருந்தேன். மனோ சாரேவும், நானும் கலந்து கொண்ட பதிவர் சந்திப்புக்கு அழைத்த போது, பிகு பண்ணிக் கொண்டாரே டைரக்டர் சார்...... கிர்ர்ரர்ர்ர்.......!!!
கௌசல்யா, ரூபினா மேடம் , விஜயன், சீனா ஐயா , மற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
ஓனர் மாறுனாலும் சுவை குறையாத வரி ஓகே தான்..
//யாதுமாகியவள்// இல்லை. யாதுமானவள். தயவு செய்து பதிவில் திருத்திவிடுங்களேன். செல்வாவின் அப்பா ஐ.எஸ்.ஆர் அவர்களின் படம் ஒன்றையும் தேடி இணைத்தால் நன்றாக இருக்கும்
சகாதேவன்
என்னது ஓனர் மாறுகிறாரா? அப்போ இனி நல்ல பதிவுகள் வருமா? ஹி ஹி
இந்த சந்திப்புக்கு முறைப்படி அண்ணன் என்னை அழைக்க வில்லை என்பதால் நான் கோவிச்சுக்கிட்டேன் ஹி ஹி
நல்ல பதிவு
வணக்கம் ஆப்பிசர், இருங்கோ படிச்சிட்டு வாரேன்.
பதிவர்களால், மிக அற்புதமான சிறிய அளவிலான அங்கீகாரமொன்றைக் குறும்படத்திற்கு வழங்கியிருக்கிறீர்கள்.
மிக்க மமிழ்ச்சியாக இருக்கிறது.
யாதுமானவள் பற்றிய குறும்பட அறிமுகத்திற்கும், மினி சந்திப்பு பற்றிய விளக்கப் பகிர்விற்கும் நன்றி.
ஒரே சந்திப்புகள்தான் போங்க! கலக்குங்க ஆபிசர்
intha pathivin moolam naanum kalanthu konda thirupthi. thanks 4 food.
mobile'il iruppathaal tamilmanam ottu mattum potten.
அழகான சந்திப்பை அருமையாய் பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள் சார்.
நெல்லை பதிவர் சந்திப்பு ஆபீசர் தயவில் செவிக்கும் திவானந்தா சுவாமிகள் தயவில் வயிற்றுக்கும் சுவையான விருந்தாக அமைவதில் பெருமகிழ்ச்சி. அவர்களிருவருக்கும் அனைவர் சார்பிலும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நெல்லை சந்திப்பு ஆபீசர் தயவில் செவிக்கும், திவானாந்தா சுவாமிகள் தயவில் வயிற்றிற்கும் சுவையான விருந்தாக அமைவதில் பெருமகிழ்ச்சி. நமது சக பதிவர்கள் அனைவர் சார்பிலும் அவர்களிருவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.தொடர வாழ்த்துக்கள்.
நானும் நெல்லை பதிவர் தான்! உள் குத்து தானோ? இருப்பினும் வாழ்த்துக்கள்!
அடுத்த சந்திப்பா....
வாழ்த்துக்கள்..
நல்ல பதிவு.
எனக்கு அன்று காலையில் தான் (2.8.11) தெரியும். இரண்டு நாட்கள் முன்னதாகவே தெரிந்தால் வர வசதியாக இருக்கும்.
இனிமேல் கொஞ்சம் முன்னதாக முடிந்தவரை எல்லோருக்கும் மின்னஞ்சல்/தொலைபேசியில் தகவல் கொடுத்து விடுங்கள்.
வாழ்த்துக்கள்.
சந்திப்புக்கு மேல் சந்திப்பாகக் கலகலப்பாகிறது நெல்லை!
புது உரிமையாளருக்கு வாழ்த்துகள்!
வணக்கம் சார். பதிவர்கள் மாநாட்டுக்குச் செல்வது
உங்களைப் போன்றவர்களுக்கு மதியச் சாப்பாட்டுக்குச்
செல்வதுபோல் சாதாரணம் ஆகிவிட்டது .இதைக்கண்டு
நான் பெருமைகொள்கின்றேன்.உங்களை மனதார வாழ்த்துகின்றேன்
மென்மேலும் இதுபோன்ற சந்திப்புக்கள் தொடரட்டும்.....
செல்வா'வுக்கு எனது அன்பின் வாழ்த்துக்கள்...
பதிவர் சந்திப்புன்னாலே தித்திப்புதான்ய்யா.....!!! அது கூட சுவாமிகளின் [[திவான்]] சாப்பாடுன்னா கேக்கவே வேண்டாம்...!!!
நடுவில் சுவாமி திவானந்தா.//
ஏன் சைடுல உக்காரமாட்டாராமா...??
டிஸ்கி-2:05.08.2011 முதல் அமலுக்கு வந்துள்ள உணவு பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தும் பணி தீவிரமடைவதால், இந்த தளத்தை நிர்வகிக்கும் பொறுப்பை என் மனைவியிடம் ஒப்படைக்கிறேன். உணவின் சுவை குறையாது.//
ஐயய்யோ.....அண்ணி வந்தாச்சா இனி வாலை மரியாதையா சுருட்டிட்டு உக்காந்துரு மனோ......பூரிக்கட்டை பறந்து வந்தாலும் வரும் அவ்வ்வ்வ்வ்வ்வ்...
புதிய உரிமையாளரை அன்புடன் [[அருவாளுடன்]] வரவேற்கிறேன் ஹி ஹி.....
அடுத்த முப்பதாம் தேதி நான் வெளிநாடு கிளம்புறேன் அதுக்குள்ளே நடக்கும் பதிவர் சந்திப்புக்கு என்னை கூப்பிடலைன்னா அருவா என்ன அருவா வெடிகுண்டே வந்து போட்டுருவேன் நெல்லையில......
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட எல்லாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்......
உணவு உலகம் - சங்கரலிங்கம்
http://bloggersbiodata.blogspot.com/2011/08/blog-post_09.html
நான் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் உண்டு
இரண்டே நாட்கள்தான்.
3 ஹலோக்கள்.
4வது ஹலோவுக்குப் பதில், சார் எனக்கு சென்னைக்கு ஒரு டிக்கெட் எடுத்து வைக்க முடியுமா? என்று யாரிடமாவது கேட்க முடியுமா?
நான் கேட்டேன். அந்த உரிமையைத் தந்தவர் நெல்லை அண்ணா சங்கரலிங்கம். சூப்பர் கூல், சூப்பர் அக்கறை!
நல்ல சந்திப்பு. எல்லோரையும் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமாகிறது.
Post a Comment