இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 25 July, 2012

பல்கலைக்கழக உரையும் பார்த்து வந்த நண்பர்களும்-பார்ட்-2


சிபியைப்போல சிலிர்த்து நிற்குதா?
                                      பல்கலைக்கழக உரையும் பார்த்து வந்த நண்பர்களும் முதல் பகுதி இங்கே.
                            நாமக்கல்லிலிருந்து நண்பர்கள் நலமாய் வழியனுப்பி வைத்தனர். ஈரோட்டில் இரவு பத்து மணிக்குத்தான் எனக்கு ரயில் வரும். அதுவரை நேரம் போகவேண்டுமே, அழைத்தேன் சிபியை! நானிருந்த நண்பரின் கடைக்கு நாலு மணிக்கு வருகிறேன் என்று சரியாக ஐந்தரைக்கெல்லாம் வந்துவிட்டார். காரணம் கேட்டால், கல்லூரி விடும் நேரம், வரும் வழியெங்கும் கன்னியர் கூட்டமென்றார்.

கன்னியரைப்பார்த்த களி(ளை)ப்பில் காலதாமதமாய் வரும் சிபி
நண்பர் நண்டு@நொரண்டு ராஜசேகருக்கும், வீடு சுரேஷிற்கும் தகவல் தெரிவித்து, அவர்களையும் ஈரோடு SKM  பூங்காவிற்கு வரச்சொன்னார். எதுக்கு திடீர்னு பார்க்குக்கு அழைத்துச்செல்கிறாரென்று யோசித்தேன். அங்கு சென்றவுடன்தான், சிபியின் ரசனை புரிந்தது. இளஞ்சோடிகள் பலர் அங்கு மாலையில் வருவது வழக்கமாம். அந்த சூழ்நிலைதான் சிபியை பல டுவிட்ஸ் எழுதத்தூண்டுமாம்.


 நண்பர் ராஜசேகர் வரும்வரை, பூங்காவில் அமைத்துள்ள நடைதளத்தில் நடந்துகொண்டே பேசலாமே என்றார் சிபி. அங்கிருந்த இயற்கை(!) காட்சிகளை சுற்றிச் சுற்றி ரசித்தார் சிபி. பயணக்களைப்புடன் பரிதாபமாய் நானும் சுற்றிவந்தேன். வெளியில் வரும்போது, அங்கிருந்த வாட்ச்மேனிடம் சிபி அங்கு அடிக்கடி வருவாரா என்று கேட்டோம்.ஆமாம், அடிக்கடி வருவார்,ஆனால் தனியாத்தான் வருவார் என்றார்.  
                

                                 அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு வந்தார் நண்பர் ராஜசேகர். புரோஃபைலில் உள்ள படத்தில் பார்ப்பதற்குக் கொஞ்சம் பயப்படும்படிதான் இருந்தார். ஆனால், நேரில் மனிதர் ரொம்ப சாந்தம்.  புல்தரையில் அமர்ந்து அளவளாவினோம். மறந்தே போய்விட்டேன் என்று சொல்லிக்கொண்டே சென்று,அனைவருக்கும் கடலை வாங்கிவந்தார் சிபி.

நண்பர் ராஜசேகர்,நான்,சிபி
திருப்பூரிலிருந்து நண்பர் வீடு சுரேஷ்,  ஈரோடு வந்துவிட்டேன் என்று சிபிக்கு செல்லில் பேசினார். துள்ளிக்குதித்து எழுந்த சிபி, வாங்க ஐயர் மெஸ்ஸிற்குச் சென்று உணவருந்தலாம் என்றார். என்ன விஷேசம் என்றேன். வாங்க, வந்து (சாப்பிட்டு!) பாருங்க என்றழைத்துச் சென்றார். நாங்கள் ஐயர் மெஸ்ஸை அடைந்தவுடன் அங்கு  சிறு தூறலா(ஜொள்) மழை பொழிந்தது. சிபி, சாப்பாட்டுக்கடையில் அந்த ஐயர் மெஸ்ஸை அறிமுகம் செய்திருக்காராம். 
கடையில் இலை பரப்பிய சிபியுடன் சுரேஷ்.
நண்பர்கள் ராஜசேகர்& சுரேஷ்
எங்களுக்கெல்லாம் ஆவி பறக்கும் ஆனியன் தோசைவந்தது, சுவை மிகுந்த புரோட்டாவும் சூடாக வந்தது. பதிவுலகம், அரசியல், தொடரும் பதிவர் சந்திப்புகள் என பலவாறும் பேசியபடியே பகிர்ந்து கொண்டோம், அன்பை. அவசரமாய் சாப்பிட்ட சிபி, நேரே சென்று கல்லாவில் இருந்த கடை உரிமையாளரிடம் கதை பேச ஆரம்பித்தார். அங்கே வந்த அவரின் உரிமையாளர், அன்பாய் அவர் துணையை வெளியில் அனுப்பி வைத்தார்.  வெளியில் வந்தவுடன், சிபிக்கு நேரம் உரைத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் அவர் வீட்டிலிருக்க வேண்டும், இல்லையென்றால் திண்ணை வாசம்தானாம்.  சுரேஷை  ராஜசேகருடன் அனுப்பிவிட்டு, என்னையும் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு, சிட்டாய்ப் பறந்தார் சிபி.              
Follow FOODNELLAI on Twitter

30 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

நானிருந்த நண்பரின் கடைக்கு நாலு மணிக்கு வருகிறேன் என்று சரியாக ஐந்தரைக்கெல்லாம் வந்துவிட்டார். காரணம் கேட்டால், கல்லூரி விடும் நேரம், வரும் வழியெங்கும் கன்னியர் கூட்டமென்றார்.///

அவர் கன்னியரை பார்த்துட்டு வந்திருக்க மாட்டார். ஏதாவது போஸ்ட் பப்ளிஷ் பண்ணிட்டு, நைட் ஒரு போஸ்ட் பப்ளிஷ் பண்ண எழுதி படங்கள் இணைச்சுட்டு, அதனால லேட்டா வந்திருப்பார் ஆபீசர்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

கடலை வாங்கிவந்தார் சிபி.///

எந்த கடலை வாங்கினார். ஈரோட்டில் கடல் இல்லையே ஆபீசர்?

உணவு உலகம் said...

//தமிழ்வாசி பிரகாஷ் said
அவர் கன்னியரை பார்த்துட்டு வந்திருக்க மாட்டார். ஏதாவது போஸ்ட் பப்ளிஷ் பண்ணிட்டு, நைட் ஒரு போஸ்ட் பப்ளிஷ் பண்ண எழுதி படங்கள் இணைச்சுட்டு, அதனால லேட்டா வந்திருப்பார் ஆபீசர்...//
நண்பருக்காக என்னமா ஜகா வாங்குறாங்கப்பா! சிபி வந்து கன்னியரைக்காணத்தான் சென்று வந்தேன் என்று சொல்லி உங்களைக் கவிழ்க்கப்போறார் பாருங்க.

தமிழ்வாசி பிரகாஷ் said...

சிபிக்கு நேரம் உரைத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் அவர் வீட்டிலிருக்க வேண்டும், இல்லையென்றால் திண்ணை வாசம்தானாம்.///

திண்ணையிலும் டிவிட்டுகள் எழுத தூண்டும் இடமாமே சிபி.....

தமிழ்வாசி பிரகாஷ் said...

FOOD NELLAI said...
//தமிழ்வாசி பிரகாஷ் said
அவர் கன்னியரை பார்த்துட்டு வந்திருக்க மாட்டார். ஏதாவது போஸ்ட் பப்ளிஷ் பண்ணிட்டு, நைட் ஒரு போஸ்ட் பப்ளிஷ் பண்ண எழுதி படங்கள் இணைச்சுட்டு, அதனால லேட்டா வந்திருப்பார் ஆபீசர்...//

நண்பருக்காக என்னமா ஜகா வாங்குறாங்கப்பா! சிபி வந்து கன்னியரைக்காணத்தான் சென்று வந்தேன் என்று சொல்லி உங்களைக் கவிழ்க்கப்போறார் பாருங்க./////

ஆபீசர் இப்போ ஒண்ணு புரியுது. வண்டியில் வர்றப்ப கூலிங் கிளாஸ் எல்லோரும் போடுவாங்க. ஆனால் சிபி போடல. ஆக, கன்னியரை கண்டு கொண்டே வாகனப் பயணம் செய்துள்ளார்.

உணவு உலகம் said...

//தமிழ்வாசி பிரகாஷ் said...
கடலை வாங்கிவந்தார் சிபி.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

எந்த கடலை வாங்கினார். ஈரோட்டில் கடல் இல்லையே ஆபீசர்?//
சிபிக்கு தெரிந்த ஒரே கடலை உங்களுக்கு தெரியவில்லை. :))

உணவு உலகம் said...

//தமிழ்வாசி பிரகாஷ் said...
சிபிக்கு நேரம் உரைத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் அவர் வீட்டிலிருக்க வேண்டும், இல்லையென்றால் திண்ணை வாசம்தானாம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

திண்ணையிலும் டிவிட்டுகள் எழுத தூண்டும் இடமாமே சிபி.....//
வாங்கிய அடியின் வலி ஆயிரம் ஆயிரம் டுவிட்ஸ் கொண்டு தரும்!!!

உணவு உலகம் said...

//தமிழ்வாசி பிரகாஷ் said...

ஆபீசர் இப்போ ஒண்ணு புரியுது. வண்டியில் வர்றப்ப கூலிங் கிளாஸ் எல்லோரும் போடுவாங்க. ஆனால் சிபி போடல. ஆக, கன்னியரை கண்டு கொண்டே வாகனப் பயணம் செய்துள்ளார்.//
வந்திட்டீங்களா வழிக்கு! நாமெல்லாம் சிபியை நன்றாய் உணர்ந்தவர்களல்லவா!

தமிழ்வாசி பிரகாஷ் said...

FOOD NELLAI said...
//தமிழ்வாசி பிரகாஷ் said...
சிபிக்கு நேரம் உரைத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் அவர் வீட்டிலிருக்க வேண்டும், இல்லையென்றால் திண்ணை வாசம்தானாம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

திண்ணையிலும் டிவிட்டுகள் எழுத தூண்டும் இடமாமே சிபி.....//
வாங்கிய அடியின் வலி ஆயிரம் ஆயிரம் டுவிட்ஸ் கொண்டு தரும்!!!///

சிபி டிவிட்டிலும் அடி வாங்கியிருக்காரே.... அதனால அடி அவருக்கு பழகியது.....

உணவு உலகம் said...

//தமிழ்வாசி பிரகாஷ் said...

சிபி டிவிட்டிலும் அடி வாங்கியிருக்காரே.... அதனால அடி அவருக்கு பழகியது.....//
எத்தனை கொடுத்தாலும் இன்முகத்துடன் ஏற்றுக்கொளவது எம் சிபி மரபு!

Unknown said...

அசைவ பிரியர் எங்களை சைவம் சாப்பிட வைத்த சிபி நீவிர் வாழ்க....!

ஆபிசர் விலைப்பட்டியலை படம் எடுத்தார் சிபி எதற்கு என்று புரியவில்லை! விலைப்பட்டியலைத்தான் எடுத்தாரா டவுட்டு!

பேசிக்கிட்டே யாருக்கோ போன் போட்டு அந்த வாமுகோமு போஸ்ட் போடுன்னு சொன்னார் அது யாரு....? ஆனால் லேடி வாய்ஸ்(?!)

அப்புறம் டையடிக்கலை......அங்கங்க வெள்ளை முடி சாயம் வெளுத்துப் போச்சு!
திருநெல்வேலியில் கேட்டதுக்கு என்றும் இளமைன்னு பொய் சொன்னார்....

நல்ல சந்திப்பு....மகிழ்ச்சியான தருனங்கள் அது..!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அது ஏன் சுரேஷ் எல்லா போட்டோவிலும் நாடியில் கை வச்சிருக்கார்? அசைவ ஹோட்டலுக்கு போகாத வருத்தமோ?

உணவு உலகம் said...

//வீடு சுரேஸ்குமார் said...
அசைவ பிரியர் எங்களை சைவம் சாப்பிட வைத்த சிபி நீவிர் வாழ்க....!

ஆபிசர் விலைப்பட்டியலை படம் எடுத்தார் சிபி எதற்கு என்று புரியவில்லை! விலைப்பட்டியலைத்தான் எடுத்தாரா டவுட்டு!

பேசிக்கிட்டே யாருக்கோ போன் போட்டு அந்த வாமுகோமு போஸ்ட் போடுன்னு சொன்னார் அது யாரு....? ஆனால் லேடி வாய்ஸ்(?!)

அப்புறம் டையடிக்கலை......அங்கங்க வெள்ளை முடி சாயம் வெளுத்துப் போச்சு!
திருநெல்வேலியில் கேட்டதுக்கு என்றும் இளமைன்னு பொய் சொன்னார்....

நல்ல சந்திப்பு....மகிழ்ச்சியான தருனங்கள் அது..!//
சிபி மீது கோபமென்றால் அவரைக்கேளுங்க.
சிபி போட்ட படங்களைத்தான் நாம கண்ணால கண்ட சாட்சிகளல்லவா?
லேடி வாய்ஸ் அவர் பி.ஏன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க!
அங்கங்க வெள்ளை சாயம் பூசி, பல்கலைக்கழகப் பேராசிரியர் கெட்டப்புங்க அது. :)
மகிழ்ச்சி நம் அனைவருக்குமே சுரேஷ், நன்றி.

உணவு உலகம் said...

//தமிழ்வாசி பிரகாஷ் said...
அது ஏன் சுரேஷ் எல்லா போட்டோவிலும் நாடியில் கை வச்சிருக்கார்? அசைவ ஹோட்டலுக்கு போகாத வருத்தமோ?//
அது மட்டுமல்ல. யூத்தா ஒரு சுரேஷ் இருக்கறப்போ, அந்த சிபி வந்த வரத்தைப்பார்த்தும்தான்!!!

முத்தரசு said...

ரசித்தேன்.....நம்மூர்வரைக்கு வந்து உள்ளீர்கள் -
பகிர்வுக்கு நன்றி

MARI The Great said...

நல்ல சந்திப்பு!

MANO நாஞ்சில் மனோ said...

நண்பர்களை சிந்தித்தாலே மனதுக்கு நல்லவொரு புத்துணர்ச்சிதான் இல்லையா...?

ம்ம்ம்ம் ஆபீசர் ஊர் ஊரா போயி கலக்குறார்....!

MANO நாஞ்சில் மனோ said...

நானிருந்த நண்பரின் கடைக்கு நாலு மணிக்கு வருகிறேன் என்று சரியாக ஐந்தரைக்கெல்லாம் வந்துவிட்டார். காரணம் கேட்டால், கல்லூரி விடும் நேரம், வரும் வழியெங்கும் கன்னியர் கூட்டமென்றார்.//

முழுசா வந்தானா ஆபீசர்...? அவனை நல்லா செக் பண்ணுனீங்களா...?

MANO நாஞ்சில் மனோ said...

கடலை வாங்கிவந்தார் சிபி.//

நல்லவேளை ஒரே ஒரு சமோசாவோடு அனுப்பாம விட்டானே...!

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்வாசி பிரகாஷ் said...
சிபிக்கு நேரம் உரைத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் அவர் வீட்டிலிருக்க வேண்டும், இல்லையென்றால் திண்ணை வாசம்தானாம்.///

திண்ணையிலும் டிவிட்டுகள் எழுத தூண்டும் இடமாமே சிபி...//

திண்ணையில் நாயிக்கும் அவனுக்கும் சண்டை வந்தால்....?

MANO நாஞ்சில் மனோ said...

ஆபீசர் இப்போ ஒண்ணு புரியுது. வண்டியில் வர்றப்ப கூலிங் கிளாஸ் எல்லோரும் போடுவாங்க. ஆனால் சிபி போடல. ஆக, கன்னியரை கண்டு கொண்டே வாகனப் பயணம் செய்துள்ளார்.//

ஆஹா கண்ணும் கண்ணும் நோக்க கன்னியரை பார்க்க கண்ணாடி இல்லையா.....எங்க அண்ணன் செம உஷார்...!

MANO நாஞ்சில் மனோ said...

FOOD NELLAI said...
//தமிழ்வாசி பிரகாஷ் said...

சிபி டிவிட்டிலும் அடி வாங்கியிருக்காரே.... அதனால அடி அவருக்கு பழகியது.....//
எத்தனை கொடுத்தாலும் இன்முகத்துடன் ஏற்றுக்கொளவது எம் சிபி மரபு!//

சொம்பு பலமா நசுங்கினாலும் அண்ணன் சிரிப்பான் பாருங்க ஒரு சிரிப்பூ....

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய சந்திப்பை ரசித்தேன்...

நன்றி....

MANO நாஞ்சில் மனோ said...

வீடு சுரேஸ்குமார் said...
அசைவ பிரியர் எங்களை சைவம் சாப்பிட வைத்த சிபி நீவிர் வாழ்க....!

ஆபிசர் விலைப்பட்டியலை படம் எடுத்தார் சிபி எதற்கு என்று புரியவில்லை! விலைப்பட்டியலைத்தான் எடுத்தாரா டவுட்டு!

பேசிக்கிட்டே யாருக்கோ போன் போட்டு அந்த வாமுகோமு போஸ்ட் போடுன்னு சொன்னார் அது யாரு....? ஆனால் லேடி வாய்ஸ்(?!)

அப்புறம் டையடிக்கலை......அங்கங்க வெள்ளை முடி சாயம் வெளுத்துப் போச்சு!
திருநெல்வேலியில் கேட்டதுக்கு என்றும் இளமைன்னு பொய் சொன்னார்....

நல்ல சந்திப்பு....மகிழ்ச்சியான தருனங்கள் அது..!//

எங்கே யானை வால் சூப் குடிக்க கூட்டிட்டு போயிருவாயிங்களோன்னு பயந்து அவனே முந்திகிட்டான் ஹா ஹா ஹா ஹா செம உஷார்தான்...

இப்போல்லாம் இளமையின் ரகசியமே வெள்ளை முடிதான்....இது கூட தெரியலையா டம்பி....?

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான சந்திப்பை சிறப்புடன் பகிர்ந்தமைக்கு நன்றி!
இன்று என் தளத்தில் தெருக்குடிமக்கள்! கவிதை! http://thalirssb.blogspot.in

நாய் நக்ஸ் said...

நல்ல வேளை ....
சிபியோட பழக்க தோஷம் (போஸ்ட் பைத்தியம்)...உங்களுக்கு வரலை...
தப்பிச்சீங்க ஆபிசர்....

அம்பாளடியாள் said...

பதிவோடு கூடிய கருத்துரைகள் மிகவும்
நகைசுவையாக இருந்தது .பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்!....:)

Unknown said...

அண்ணே அவரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் மன்சன்....அதான் எல்லாத்தையும் பிளான்(!) பண்ணி பண்றாப்ல...ஹிஹி...சரியான டைமுக்கு ஓடிப்போனாரு பாருங்க...அங்க நிக்குறாரு...சிப்பி....நல்ல சந்திப்பு...அளவலாவல் தொடரட்டும்...பகிர்வுக்கு நன்றி அண்ணே!

உணவு உலகம் said...

// விக்கியுலகம் said...
அண்ணே அவரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் மன்சன்....அதான் எல்லாத்தையும் பிளான்(!) பண்ணி பண்றாப்ல...ஹிஹி...சரியான டைமுக்கு ஓடிப்போனாரு பாருங்க...அங்க நிக்குறாரு...சிப்பி....நல்ல சந்திப்பு...அளவலாவல் தொடரட்டும்...பகிர்வுக்கு நன்றி அண்ணே! //
:))

saraasari manithan said...

oho