இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 17 July, 2012

பல்கலைக்கழக உரையும் பார்த்து வந்த நண்பர்களும்.

நாமக்கல் கால்நடை பல்கலைக்கழகத்தில் உணவு பாதுகாப்பு உரை
                     வலையுலகம் பக்கம் வலம் வரும்போதெல்லாம், என் மெயில் பாக்ஸைத் திறந்து பார்ப்பது வாடிக்கை. அப்படித்தான், சில நாட்களுக்கு முன், எனது ஜி-மெயிலிற்கு வந்த ஒரு மெயிலைப்பார்த்ததும் கொஞ்சம் மலைப்பாகத்தான் இருந்தது. 
To,
Thiru A.R.Sankarllingam,
Food Inspector ,
Dear Sir, 
I wish to state that a 21 days National level ICAR Summer School on  Opportunities in value addition and challenges in quality control of  meat products including slaughterhouse by – products is being organized at the Dept. of Meat Science and Technology, VC & RI, Namakkal from 04.07.2012 to 24.7.2012.
          We would be very much obliged to have your acceptance for delivering a guest lecture in the following topic.

Title : Food safety issues and legal procedures meat processing industry 10 or 12 July

We look forward your kind acceptance and confirmation. Further I request that the course material  may please be sent to us at an early date (preferably before 31.05.2012), which would facilitate us to incorporate the same in the training manual.
Regards, 

Dr.V.V.Kulkarni, M. V. Sc., Ph.D.
Course Director and

Professor and Head
Department of Meat Science and Technolgy,
Veterinary College and Research Institute (TANUVAS), 
Namakkal, Tamil Nadu-637 002.
                      
                                  சரி இதில் கலந்து கொள்பவர்கள் யாரென்று கேட்டு எழுதினேன். அதற்கு வந்த பதில் இன்னும் கொஞ்சம் கலங்க வைத்தது. பல்வேறு கால்நடைப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்துவரும் உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மட்டுமே கலந்து கொள்வதாக பதில் வந்தது. அத்தோடு, அவர்களுக்கு வழங்கும் பயிற்சி புத்தகத்திற்கும்(TRAINING MATERIAL), உணவு பாதுகாப்பு குறித்த பாடப்பகுதியை தயாரிப்பதும் நம் பொறுப்பு.
நண்பர் சங்கரநாராயணனுடன்.
                                     முடிந்தவரை முயற்சிப்போம் என்ற உறுதியுடன், முதலில் பயிற்சிக்கான பாடப்பகுதியைத் தயாரித்து அனுப்பி வைத்தேன். தேர்வு எழுதிவிட்டு முடிவு தெரிந்துகொள்ளக் காத்திருந்த மாணவனாய், நான். அங்கிருந்து வந்த அடுத்த மெயில், ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதாய் இருந்தது. 
Dear Sir
Greetings
Please accept my sincere thanks for contributing an informative  article for the compendium and in turn for the benefit of the trainees attending summer school.
Regards,
Dr.V.V.Kulkarni, M. V. Sc., Ph.D.
Course Director and
Professor and Head
Department of Meat Science and Technolgy,
Veterinary College and Research Institute (TANUVAS), 
Namakkal, Tamil Nadu-637 002.

                           நம்பிக்கை வந்தது, நாமும் நல்லா கெஸ்ட் லெக்சர் கொடுத்திருவோம்னு. நாமக்கல் சென்றடைந்தபோது, என்னிடம் உணவு ஆய்வாளர் பயிற்சி எடுத்த இரு நண்பர்கள் சங்கரநாராயணன் மற்றும் ராமசுப்ரமணியன் ஆகியோர் பல்கலைக்கழகத்திற்கு வந்து வரவேற்றனர். பயிற்சிக்கு பல மாநிலங்களிலிருந்தும்  உதவி பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் எனப்பலர் வந்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் உணவுபாதுகாப்பு பற்றி நானறிந்த அனைத்து விஷயங்களையும் பவர் பாய்ண்டில் எடுத்துரைத்தேன்.
நண்பர் ராமசுப்ரமணியனுடன்.

முடிந்ததும் ஒரு பதினைந்து நிமிடங்கள் கேள்வி நேரம். புதிய உணவுப்பாதுகாப்புச் சட்டம் குறித்து அவர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு இருந்தது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்னிடம் பதிலும் இருந்தது. நிச்சயம் எனக்கும் ஓர் நல்ல அனுபவம். கற்பித்தலுக்கும், கற்றுக்கொள்ளுதலுக்கும். நன்றி- என் மீது நம்பிக்கை வைத்த நாமக்கல் பேராசிரியருக்கும், அவர் நல்ல நம்பிக்கை கொள்ள வழிவகுத்த வலையுலகிற்கும். ஆம், என் வலைப்பதிவுகளைப் பார்த்துத்தான் என்னை வகுப்பெடுக்க அழைத்துள்ளனர். 

                         நண்பர்களுடன் வந்து நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசித்து விட்டு ஈரோட்டிற்குப் புறப்பட்டேன். இன்னும் சில நண்பர்களை அங்கு சந்தித்தேன். அது பற்றி அடுத்த பதிவில். . .
Follow FOODNELLAI on Twitter

26 comments:

Unknown said...

அண்ணே கலக்கி இருக்கீங்க வாழ்த்துக்கள்

நாய் நக்ஸ் said...

தல....நமது அடுத்த விரிவுரை....
வெளிநாட்டில் தான்....
கண்டிப்பா நடக்கும்....

வாழ்த்துக்கள் தல....

உணவு உலகம் said...

//விக்கியுலகம் said...
அண்ணே கலக்கி இருக்கீங்க வாழ்த்துக்கள்//
நன்றி முதல் வாழ்த்து.

கூடல் பாலா said...

தொடரட்டும் உங்கள் சேவை .....

உணவு உலகம் said...

//NAAI-NAKKS said...
தல....நமது அடுத்த விரிவுரை....
வெளிநாட்டில் தான்....
கண்டிப்பா நடக்கும்....

வாழ்த்துக்கள் தல....//
நன்றி நக்கீரரே.அப்போதும் நக்கீரர் என் அருகிலிருப்பார்.

உணவு உலகம் said...

//koodal bala said...
தொடரட்டும் உங்கள் சேவை .....//
நன்றி பாலா.

Unknown said...

சார்! வாழ்த்துகள்....!அடுத்த பதிவில் ஈரோட்டில் சந்தித்த பிரபல பதிவர்களை பற்றிய செய்திகள் சென்சார் இல்லாமல் வருமா...?ஹஹா!

சாந்தி மாரியப்பன் said...

கௌரவ விரிவுரையாளர் பதவிக்கு வாழ்த்துகள் அண்ணா..

முத்தரசு said...

அசத்தீடீங்க

வாழ்த்துக்கள்... தொடரட்டும்

இராஜராஜேஸ்வரி said...

ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதாய் அருமையான பயனுள்ள பகிர்வுகள்..

தங்கள் திறமையான விரிவுரைக்குப் பாராட்டுக்கள்..

நான் படித்த ஊர்
அருமையான நாமக்கல்.

அனுதினமும் தரிசித்த நாமக்கல் அனுமன்...

இனிய வாழ்த்துகள்..

MARI The Great said...

தங்கள் திறமை கண்டு வியக்கிறேன்..!

MANO நாஞ்சில் மனோ said...

ஆபீசரா கொக்கா....கலக்குறீங்க ஆபீசர் வாழ்த்துகள்....!

MANO நாஞ்சில் மனோ said...

மேலை நாட்டு பல்கலைகழகங்களும் நம்ம ஆபீசர் அழைத்து கவுரவிப்பார்கள் அதற்கு இப்போதே என் வாழ்த்துகள்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துகள் ஆபீசர், கலக்கலா கலக்கி இருக்கீங்க.....!

வெளங்காதவன்™ said...

வாழ்த்த வயதில்லை சார்!!!

உங்க சேவை, இந்த நாட்டுக்குத் தேவை!!!!

#இது மிகைப்படுத்தப்பட்டோ, ஐஸ் வைக்கவோ சொல்லல சார்... நெசமாத்தேன்!!!

வெளங்காதவன்™ said...

//MANO நாஞ்சில் மனோ said...

மேலை நாட்டு பல்கலைகழகங்களும் நம்ம ஆபீசர் அழைத்து கவுரவிப்பார்கள் அதற்கு இப்போதே என் வாழ்த்துகள்...!////

வாயில சக்கரையைப் போட.....

உணவு உலகம் said...

// வீடு சுரேஸ்குமார் said...
சார்! வாழ்த்துகள்....!அடுத்த பதிவில் ஈரோட்டில் சந்தித்த பிரபல பதிவர்களை பற்றிய செய்திகள் சென்சார் இல்லாமல் வருமா...?ஹஹா!//
ஆமா அந்த பிரபலங்களுள் நீங்களும் ஒருவர். உங்களைப்பற்றியோ, மற்றொரு வழக்கறிஞர் நண்பரைப்பற்றியோ சென்சார் பண்ணாமல் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால்,அந்த வளர்ந்த மனிதர் பண்ணிய அட்டகாசங்கள் அடுத்த பதிவில் அப்படியே இடம் பெறும். இதற்குத்தானே ஆசைப்ப்பட்டாய் பாலகுமாரா!!!

உணவு உலகம் said...

//அமைதிச்சாரல் said...
கௌரவ விரிவுரையாளர் பதவிக்கு வாழ்த்துகள் அண்ணா..//
நன்றி தங்கைக்கு.

உணவு உலகம் said...

//மனசாட்சி™ said...
அசத்தீடீங்க

வாழ்த்துக்கள்... தொடரட்டும்//
நன்றி சார்.

உணவு உலகம் said...

//இராஜராஜேஸ்வரி said...
ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதாய் அருமையான பயனுள்ள பகிர்வுகள்..
தங்கள் திறமையான விரிவுரைக்குப் பாராட்டுக்கள்..
நான் படித்த ஊர்
அருமையான நாமக்கல்.
அனுதினமும் தரிசித்த நாமக்கல் அனுமன்...
இனிய வாழ்த்துகள்..//
நன்றி சகோ. ஆன்மீக அன்பர் பயின்ற ஊர் சென்று வந்ததில் எனக்கும் அகமகிழ்வே.

உணவு உலகம் said...

//வரலாற்று சுவடுகள் said...
தங்கள் திறமை கண்டு வியக்கிறேன்..!//
எல்லோருக்குள்ளும் ஒளிந்திருப்பதுதான் திறமை. அதை நீங்கள் பதிவுகளாக வெளியிடுகிறீர்கள். நான் பாடங்களாகவும் வெளியிடுகிறேன். நன்றி.

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
ஆபீசரா கொக்கா....கலக்குறீங்க ஆபீசர் வாழ்த்துகள்....!//

எத்தனை நாள் கோபம் மனோ, கொக்கு,குருவி என்று கலாய்கிறீர்கள். :))

உணவு உலகம் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாழ்த்துகள் ஆபீசர், கலக்கலா கலக்கி இருக்கீங்க.....!//
நன்றி சார். எல்லாவற்றிற்கும் தங்களைப்போன்றவர்களின் ஊக்கமும் ஒரு அருமருந்துதான்.

உணவு உலகம் said...

//வெளங்காதவன்™ said...
வாழ்த்த வயதில்லை சார்!!!
உங்க சேவை, இந்த நாட்டுக்குத் தேவை!!!!
#இது மிகைப்படுத்தப்பட்டோ, ஐஸ் வைக்கவோ சொல்லல சார்... நெசமாத்தேன்!!!//
நம்புகிறேன் தங்களைப்போன்ற நல்லுள்ளங்களை. நன்றி.

உணவு உலகம் said...

//வெளங்காதவன்™ said...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
MANO நாஞ்சில் மனோ said...
மேலை நாட்டு பல்கலைகழகங்களும் நம்ம ஆபீசர் அழைத்து கவுரவிப்பார்கள் அதற்கு இப்போதே என் வாழ்த்துகள்...!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

வாயில சக்கரையைப் போட.....//
தங்களுக்கும் சேர்த்துத்தான்.:))

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் சார் ! உங்கள் சேவை தொடரட்டும்..

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”