இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 16 July, 2012

தரமற்ற சிப்ஸ் தருமே தண்டனை.

               

 வகையாய் மாட்டிவிட்ட வள்ளி என்று கடந்த மாதம் செயற்கை வண்ணம் சேர்த்து, வள்ளிக்கிழங்கு சிப்ஸ் விற்ற கடைக்காரர், கடையின் உரிமையாளர், தயாரிப்பாளர் ஆகிய மூவர் மீதும் குற்றவியல் வழக்குத் தொடர்ந்தது குறித்து எழுதியிருந்தேன். அந்தப்பதிவில் நம்ம நாஞ்சில் மனோ வந்து,“ஒரு பயலுவளையும் விட்டுறாதீங்க ஆபீசர், சிபி முகத்தை நினைச்சுட்டு போடு போடுன்னு போட்டு தள்ளிருங்க...” ன்னு வேற சொல்லிட்டுப்போனாரு.


                      இப்ப பாருங்க, நெசமாவே அந்த வழக்கின் தீர்ப்பு வந்தபோது, அவங்க மூணு பேருக்கும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் அத்துடன் ஒவ்வொருவருக்கும் மூன்று மாதம் மெய்க்காவல் தண்டனையும் வழங்கப்பட்டிருக்கு. இது சிபி ராசியோ!!!


                         வழக்கம்போல இந்த வழக்கிலும் குறுக்கு விசாரணையில், சும்மா புகுந்து விளாசுனாங்க. கடந்த முறை போல, கடைக்குப்போகலை, உணவு மாதிரியே எடுக்கலைன்னு சொல்லாம, நீங்க உணவு ஆய்வாளரா பணிபுரிய படிக்கவே இல்லைன்னு மட்டும் சொன்னாங்க. எடுபடலை அந்த வாதம். கடந்த வாரம் வந்தது இந்த தீர்ப்பு.
           
இது இந்த மாத ஹெல்த்கேர் மாத இதழில் வந்த எனது கட்டுரை:  


Follow FOODNELLAI on Twitter

40 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஹெல்த்கேர் மாத இதழில் வந்த கட்டுரைக்குப் பாராட்டுக்கள்..

மொக்கராசா said...

சார்..... ரெம்ப பேரின் எதிர்ப்பை சம்பாதிக்கும் அதே நேரத்தில்....... எங்கள மாதிரி பதிவர்களின் அன்பையும் சம்பாதிக்கிறேங்க......

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....

சாந்தி மாரியப்பன் said...

உணவில் கலப்படம் செய்யும் இப்படிப்பட்ட ஆசாமிகளுக்குத் தண்டனை கிடைத்தது மிகவும் சரியே..

ஹெல்த்கேர் கட்டுரைக்குப் பாராட்டுகள்..

முத்தரசு said...

அப்படி போடுங்க ஆபிசர் - சட்டம் கடமையை செய்யுது

கட்டுரைக்கு வாழ்த்துக்கள்

வெளங்காதவன்™ said...

//மொக்கராசா said...

சார்..... ரெம்ப பேரின் எதிர்ப்பை சம்பாதிக்கும் அதே நேரத்தில்....... எங்கள மாதிரி பதிவர்களின் அன்பையும் சம்பாதிக்கிறேங்க......

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....///

காப்பி பேஸ்ட்டுத்தான் ஆபீசர்!!!

:-)

நாய் நக்ஸ் said...

Super...
Boss....

Good work.....

Unknown said...

ஹெல்த்ஹேர் பத்திரிக்கையில் தங்களுடைய கட்டுரை வந்தமைக்கு வாழ்த்துகள் சார்!

Anonymous said...

நான்கைந்து சிப்ஸ்களை மட்டும் உள்ளே வைத்து காற்றை நிரப்பி அதிக விலைக்கு விற்கும் கம்பனிகளை எதுவும் செய்ய முடியாதா சார்?

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள் சார்...

உணவு உலகம் said...

//இராஜராஜேஸ்வரி said...
ஹெல்த்கேர் மாத இதழில் வந்த கட்டுரைக்குப் பாராட்டுக்கள்..//
நன்றி சகோ.

உணவு உலகம் said...

//மொக்கராசா said...
சார்..... ரெம்ப பேரின் எதிர்ப்பை சம்பாதிக்கும் அதே நேரத்தில்....... எங்கள மாதிரி பதிவர்களின் அன்பையும் சம்பாதிக்கிறேங்க......

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....//
நன்றி ராசா, தங்கள் அன்பைத் தந்ததற்கு.

உணவு உலகம் said...

//அமைதிச்சாரல் said...
உணவில் கலப்படம் செய்யும் இப்படிப்பட்ட ஆசாமிகளுக்குத் தண்டனை கிடைத்தது மிகவும் சரியே..

ஹெல்த்கேர் கட்டுரைக்குப் பாராட்டுகள்..//
நன்றி சகோ.

உணவு உலகம் said...

//மனசாட்சி™ said...
அப்படி போடுங்க ஆபிசர் - சட்டம் கடமையை செய்யுது

கட்டுரைக்கு வாழ்த்துக்கள்//
நன்றி சார்.

உணவு உலகம் said...

//வெளங்காதவன்™ said...
//மொக்கராசா said...
சார்..... ரெம்ப பேரின் எதிர்ப்பை சம்பாதிக்கும் அதே நேரத்தில்....... எங்கள மாதிரி பதிவர்களின் அன்பையும் சம்பாதிக்கிறேங்க......
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
காப்பி பேஸ்ட்டுத்தான் ஆபீசர்!!!
:-)//
நன்றி முதல் வருகைக்கும்,வாழ்த்திற்கும்.

உணவு உலகம் said...

//NAAI-NAKKS said...
Super...
Boss....

Good work.....//
நன்றி நக்கீரரே.

உணவு உலகம் said...

//வீடு சுரேஸ்குமார் said...
ஹெல்த்ஹேர் பத்திரிக்கையில் தங்களுடைய கட்டுரை வந்தமைக்கு வாழ்த்துகள் சார்!//
நன்றி சுரேஷ். நம் சந்திப்பு விரைவில் கட்டுரையாக.

உணவு உலகம் said...

// ! சிவகுமார் ! said...
நான்கைந்து சிப்ஸ்களை மட்டும் உள்ளே வைத்து காற்றை நிரப்பி அதிக விலைக்கு விற்கும் கம்பனிகளை எதுவும் செய்ய முடியாதா சார்?//
அதற்கென்று ஒரு எடை மற்றும் அளவைகள் துறை இருக்கே. அதில் புகார் செய்யலாமே.

உணவு உலகம் said...

//வேடந்தாங்கல் - கருண் said...
வாழ்த்துக்கள் சார்...//
நன்றி கருண். என்னால் உங்கள் தளம் வரவே இயலவில்லை. எப்போது நான் உங்கள் தளத்தைத் திறந்தாலும், பிழைச்செய்திதான் வருகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கட்டுரை சார்...
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

Kousalya Raj said...

இது போன்ற தண்டனைகள் தவறு செய்பவர்களை சிறிது யோசிக்கச் செய்யும்...தண்டனைகள் இன்னும் கடுமையாக்கபட்டால் நன்றாக இருக்கும்.

பலரது எதிர்ப்பு இருந்தாலும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியினை சிறப்பாக செய்து வருவதை எண்ணி பெருமை படுகிறேன்...

கட்டுரை ஹெல்த் கேர் இதழில் வெளிவந்ததுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.

MANO நாஞ்சில் மனோ said...

ஹெல்த் கேர் இதழில் எங்கள் ஆபிசரின் பொன்னெழுத்துகள் ஹெல்த்தாக மாற்றியமைக்கு நன்றிகளும், எங்கள் ஆபீஸருக்கு வாழ்த்துகளும் உரித்தாகுக....!

MANO நாஞ்சில் மனோ said...

சிபி செத்தான் இன்னைக்கு, வேணும்னா பாருங்க ஆபீசர் நாலுநாள் ஊரை விட்டே ஒடப்போறான் ஹா ஹா ஹ ஹா....

ஆனந்தி.. said...

பாதுகாப்பு சட்டம் சொல்றதெல்லாம் நல்லாத்தான் இருக்கு....அதெல்லாம் 5 % பாலோ பண்ணினால் கூட உருப்படும் இல்லையா நாடு ? இதிலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மாதிரி திருத்தம் எல்லாம் கொண்டு வந்தாச்சா?;-)

அப்புறம் அண்ணா...அந்த கேஸ்ல வின்னர் :-) ஆனதுக்கு கங்க்ராட்ஸ்:-)) மேலும் தங்கள் பணி தொடரட்டும்:-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துகள் ஆபீசர்.... இத்தகைய தீர்ப்புகள் தங்களுக்கு மென்மேலும் ஊக்கம் தருவதாகவும், உணவில் விளையாடுபவர்களுக்கு எச்சரிக்கை செய்வதாகவும் அமையும்...!

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

நான்கைந்து சிப்ஸ்களை மட்டும் உள்ளே வைத்து காற்றை நிரப்பி அதிக விலைக்கு விற்கும் கம்பனிகளை எதுவும் செய்ய முடியாதா சார்?//////////////////////////////

யோவ் அவுங்க காற்றை தான் விக்குறாங்க அந்த காற்றை வாங்கினால் சிப்ஸ் இலவசம் .........

ஆனந்தி.. said...

//யோவ் அவுங்க காற்றை தான் விக்குறாங்க அந்த காற்றை வாங்கினால் சிப்ஸ் இலவசம் .........//
செம செல்வின்...:-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிப்ஸ் பாக்கெட்டிற்குள் காற்றை அடைப்பது அவை நொறுங்கிவிடாமல் இருக்கவே. அதுவும் காற்றை அப்படியே அடைக்க மாட்டார்கள், அது மொறுமொறுப்பை குறைத்துவிடும், அதனால் நைட்ரஜனைத்தான் அடைக்கிறார்கள்.

ஆனந்தி.. said...

உபரி தகவலுக்கு நன்றி ப.கு....:-) பாக்கெட் ஓபன் பண்ணி பார்த்தால் 7,8 சிப்ஸ் க்கு மேலே தேற மாடேங்குதே..ஒருவேளை அந்த காற்றுக்கும் சேர்த்து பைசா வசூலா ..???

அண்ணா...எடை போடும்போது கவர் வெயிட் include பண்ணுவாங்களா?? சில மாவு ஐடேம்ஸ் எல்லாம் ரெண்டு, மூணு கவர் போட்டு பேக்கிங் இருக்கே??!!

உணவு உலகம் said...

//திண்டுக்கல் தனபாலன் said...
நல்ல கட்டுரை சார்...
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...//
நன்றி சார்.

உணவு உலகம் said...

//Kousalya said...
இது போன்ற தண்டனைகள் தவறு செய்பவர்களை சிறிது யோசிக்கச் செய்யும்...தண்டனைகள் இன்னும் கடுமையாக்கபட்டால் நன்றாக இருக்கும்.

பலரது எதிர்ப்பு இருந்தாலும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியினை சிறப்பாக செய்து வருவதை எண்ணி பெருமை படுகிறேன்...

கட்டுரை ஹெல்த் கேர் இதழில் வெளிவந்ததுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.//
தங்கள் விருப்பத்திற்கேற்ப புதிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் தண்டனை இன்னும் அதிகம்தான்.நன்றி.

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
ஹெல்த் கேர் இதழில் எங்கள் ஆபிசரின் பொன்னெழுத்துகள் ஹெல்த்தாக மாற்றியமைக்கு நன்றிகளும், எங்கள் ஆபீஸருக்கு வாழ்த்துகளும் உரித்தாகுக....!//
நன்றி மனோ.

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
சிபி செத்தான் இன்னைக்கு, வேணும்னா பாருங்க ஆபீசர் நாலுநாள் ஊரை விட்டே ஒடப்போறான் ஹா ஹா ஹ ஹா....//
அப்படியா, அப்ப பதிவுலகம் உருப்பட்டுரும்! இதுக்கே இப்படினா, நான் சிபியை ஈரோட்டில் சந்திததது பற்றி போடும்போது சிபி நிலைமை?????????

உணவு உலகம் said...

//ஆனந்தி.. said...
பாதுகாப்பு சட்டம் சொல்றதெல்லாம் நல்லாத்தான் இருக்கு....அதெல்லாம் 5 % பாலோ பண்ணினால் கூட உருப்படும் இல்லையா நாடு ? இதிலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மாதிரி திருத்தம் எல்லாம் கொண்டு வந்தாச்சா?;-)

அப்புறம் அண்ணா...அந்த கேஸ்ல வின்னர் :-) ஆனதுக்கு கங்க்ராட்ஸ்:-)) மேலும் தங்கள் பணி தொடரட்டும்:-))//
புதிய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணயச்சட்டம் 2006லேயே பாராளுமன்றத்தில் பாஸாகி, 05.08.2011 முதல் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. அதன் ஷரத்துக்கள் தவறு செய்பவர்களுக்கு, சற்றே கடுமையானதுதான்.
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ.

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாழ்த்துகள் ஆபீசர்.... இத்தகைய தீர்ப்புகள் தங்களுக்கு மென்மேலும் ஊக்கம் தருவதாகவும், உணவில் விளையாடுபவர்களுக்கு எச்சரிக்கை செய்வதாகவும் அமையும்...!//
தாங்கள் சொன்னால் சரிதான் சார்.

உணவு உலகம் said...

//அஞ்சா சிங்கம் said...
! சிவகுமார் ! said...

நான்கைந்து சிப்ஸ்களை மட்டும் உள்ளே வைத்து காற்றை நிரப்பி அதிக விலைக்கு விற்கும் கம்பனிகளை எதுவும் செய்ய முடியாதா சார்?//////////////////////////////

யோவ் அவுங்க காற்றை தான் விக்குறாங்க அந்த காற்றை வாங்கினால் சிப்ஸ் இலவசம் .........//
மிக நக்கலாகச்சொன்னாலும், இதுதான் நிதர்சனம் சிங்கம். நல்ல நுகர்வோரா நமக்கு விழிப்புணர்வு இன்னும் அதிகம் தேவை.

உணவு உலகம் said...

//ஆனந்தி.. said...
//யோவ் அவுங்க காற்றை தான் விக்குறாங்க அந்த காற்றை வாங்கினால் சிப்ஸ் இலவசம் .........//
செம செல்வின்...:-))//
செம செல்வின் மட்டுமல்ல,சிப்ஸ் வியாபாரிகளும்தான்!

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சிப்ஸ் பாக்கெட்டிற்குள் காற்றை அடைப்பது அவை நொறுங்கிவிடாமல் இருக்கவே. அதுவும் காற்றை அப்படியே அடைக்க மாட்டார்கள், அது மொறுமொறுப்பை குறைத்துவிடும், அதனால் நைட்ரஜனைத்தான் அடைக்கிறார்கள்.//
அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய அவசியத்தகவல் இது.நன்றி சார்.

உணவு உலகம் said...

//ஆனந்தி.. said...
உபரி தகவலுக்கு நன்றி ப.கு....:-) பாக்கெட் ஓபன் பண்ணி பார்த்தால் 7,8 சிப்ஸ் க்கு மேலே தேற மாடேங்குதே..ஒருவேளை அந்த காற்றுக்கும் சேர்த்து பைசா வசூலா ..???
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அண்ணா...எடை போடும்போது கவர் வெயிட் include பண்ணுவாங்களா?? சில மாவு ஐடேம்ஸ் எல்லாம் ரெண்டு, மூணு கவர் போட்டு பேக்கிங் இருக்கே??!!//
இன்னைக்கு செம ஃபார்ம்ல இருக்கீங்க போல!
எல்லாப்பொருள் மீதும் நிகர எடைதான் குறிப்பிடப்பட்டிருக்கும்.
காற்றைக்கூட காசு கொடுத்து வாங்கும் காலம் வெகு அருகில்!!!

Unknown said...

தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள் சார்! அருமையான பகிர்வு!