"அந்த பொண்ணோட கண்ண பாரு,
அவங்க அம்மா கண்ணப்போல இருக்கு"
இப்படி தினம் தினம் ஆயிரம் டயலாகுகள் அங்கங்கே கேட்டிருக்கிறோம். சில நொடிகள் சிந்தித்தால், இதன் பின்னுள்ள தாத்பரியம் புரியும். மரபணு- இது மரபு மாறாமல் இருக்க முன்னோர்களின் பதிவுகளை பிள்ளைகளுக்கு பெற்று கொடுக்கும் பேராற்றல் பெற்றது. மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை 50 ட்ரில்லியன் ஆகும்.
சின்ன கணக்கு ஒன்று உங்களுக்காக:
ஒரு கோடி லட்சம் என்பது ஒரு ட்ரில்லியன்.
அதை 1,00,00,000 என்று எண்ணால் எழுதலாம்.
ஐம்பது ட்ரில்லியன் என்பது 50,00,00,000.
நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும், கிட்டத்தட்ட 30,000 மரபணுக்கள் உள்ளன. பாரம்பரிய பண்புகளை பரம்பரைகள் பல கடந்தும் பிள்ளைகளில் பதிவிடுவது டி.என்.ஏ. மரபணு(ஜீன்).
டி.என்.ஏ. தொழில் நுட்பம் கற்றல், தொல்லை தரும் பல்வேறு நோய்களைக் களைய ஆற்றல் தரும். நம் வயது, நாற்பதைக் கடந்தால், நீரிழிவும், இதய நோய்களும் அழையா விருந்தாளிகளாய் வந்து நம்மை சேரும். காரணம், நாற்பதை நாம் கடக்கும்போது, மரபணுக்களில் வரும் மாற்றங்களே நோய் கொண்டு தருவன. அதனை "ஜீன் மியூடேஷன்" என்று கூறுவர். நாற்பதை நாம் கடக்கும்போது, இன்சுலினை நம் உடலில் உற்பத்தி செய்யும் ஜீனில் ஏற்படும் மாற்றங்களே, இன்சுலின் உற்பத்தியை குறைய செய்கிறது. விளைவு - சர்க்கரை நோய்.
சமீபத்தில் மரபணு மாற்றம் குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னைக்கு அருகிலுள்ள செட்டிநாடு பல்கலை கழகத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்ட செட்டிநாடு பல்கலை கழக ஆராய்ச்சி பிரிவு தலைவர் டாக்டர் பிச்சப்பன் மற்றும் மதுரை பல்கலை கழகத்தை சார்ந்த டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் அவர்கள் உரையில், மரபணு மாற்றம் செய்யும் மாயங்கள் குறித்து கூறியவை உங்கள் பார்வைக்கு:
"சிலருக்கு நாற்பது வயது வரை சுரக்கும் இன்சுலின் திடீரென நின்று போவதற்கு மரபணு மாற்றமே காரணம் என்றும், சர்க்கரை நோய் கண்டுபிடிக்க, மனிதனின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிர்ணயித்து, அதன் அடிப்படையில் முடிவு செய்கின்றனர். அதற்கு பதிலாக, அந்த குறைபாட்டின் மூல காரணத்தை ஆராய்வது, நோய் தீர்க்கும் வழிகளை காட்டும். மனித உடலில் உள்ள ஆஞ்சியோ டென்ஷைன் கன்வெர்டிங் என்சைம் என்று ஒரு ஜீன் உள்ளது. அதனை ஏஸ் ஜீன் என்போம். இந்த ஏஸ் ஜீன் நம் உடலில் ரத்தம் சீராக ஓட உதவிடும். இந்த ஜீனில், ஐடி, ஐஐ, டிடி என மூன்று வகை உண்டு. ஐடி அல்லது டிடி ஜீன் ஒருவரது உடலில் அதிகமிருந்தால், அவருக்கு இதய நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். அதுவே, ஐஐ ஜீன் அதிகமிருந்தால், அவருக்கு இதய நோய் பிரச்சனைகள் குறைவாகவே இருக்கும்.
எனவேதான், ஒருவரின் இரத்தத்தில் இருக்கும் டி. என். ஏ. வை தனியே பிரித்தெடுத்து, பி.சி.ஆர். தெர்மல் சைக்ளர் மூலம், அதிலுள்ள ஜீனோ டைப்பை கண்டு பிடித்து, அதன் மூலம், அவருக்கு என்ன மாதிரியான நோய் தாக்குதல் ஏற்படலாம் என்றும், அதற்கேற்ற உணவு முறைகள் குறித்தும் அறிவுரை வழங்க இயலும்."
அவ்வாறு நோய் நாடி, நோய் முதல் நாடி, மருத்துவ சிகிச்சையின் கால விரயம், பண விரயம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் அவஸ்தைகளை தவிர்த்திடலாம்.

டிஸ்கி-1: "நோய் நாடி, நோய் முதல் நாடி"- என்று தலைப்பு வைச்சதா ஞாபகம்.
டிஸ்கி-2: அதுக்கும்; "தேர்தல்-2011 - மாற்றங்கள் ஏற்றம் தருமா? "- ஒரு அலசல் என்பதற்கும் என்னய்யா சம்பந்தம்?
டிஸ்கி-3: எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு. ஆபிஸ்ல தேர்தல்-2011ன்னு, கடிதங்களில் படித்துப் படித்து, இப்படியா?

48 comments:
மதுரை உயர் நீதி மன்ற பணி. பதிலிட முடியாது. நண்பர்கள் மன்னிப்பார்களாக.
வடை ரிசர்வ்டு.
தேர்தல் முடிவதற்குள், எங்க அண்ணன் இன்னும் என்ன என்ன தேர்தல் - அரசியல் தலைப்புகளில் , என்ன என்ன பதிவுகள் போடப் போகிறாரோ?
present.,
நீங்க ஆன்லைனில் வரும்போது நானும் வருகிறேன்..
பணியில் இருந்து பதிவு போட்டால் இப்படி தான்.
அரசியல்வாதிகளின் டி.என்.எ மாற்ற எதாச்சும் வழி உண்டா தல?
மரபணு பற்றிய ஒரு நல்ல பதிவுக்கு, இப்படி ஒரு தலைப்பா?பதிவுலகின் எழுதாத விதி இதுவே!
மரபணு விஷயத்தில் இவ்வளவு இருக்கா..
தலைபபை வைத்து என்னங்க இப்படி .
தேர்தல் இப்படி உங்களையும் விடலிங்களா..
//Chitra said...
தேர்தல் முடிவதற்குள், எங்க அண்ணன் இன்னும் என்ன என்ன தேர்தல் - அரசியல் தலைப்புகளில் , என்ன என்ன பதிவுகள் போடப் போகிறாரோ?//
இன்னும் வரும் பாருங்க தங்கச்சி.
//வேடந்தாங்கல் - கருன் *! said...
நீங்க ஆன்லைனில் வரும்போது நானும் வருகிறேன்..//
நான் வந்திட்டேன். அப்ப நீங்க?
//asiya omar said...
பணியில் இருந்து பதிவு போட்டால் இப்படி தான்.//
சரிதான் சகோ.
//டக்கால்டி said...
அரசியல்வாதிகளின் டி.என்.எ மாற்ற எதாச்சும் வழி உண்டா தல?//
சிந்திக்க வேண்டிய விசயம்தான், நண்பரே.
//சென்னை பித்தன் said...
மரபணு பற்றிய ஒரு நல்ல பதிவுக்கு, இப்படி ஒரு தலைப்பா?பதிவுலகின் எழுதாத விதி இதுவே!//
தலைப்பை மாத்தணுமா?
//கவிதை வீதி # சௌந்தர் said...
மரபணு விஷயத்தில் இவ்வளவு இருக்கா..//
இன்னும் இருக்கு நண்பரே!
//கவிதை வீதி # சௌந்தர் said...
தலைபபை வைத்து என்னங்க இப்படி .
தேர்தல் இப்படி உங்களையும் விடலிங்களா..//
சும்மா, ஒரு ஜாலிக்குதான்!
உயர் நீதி மன்றத்துல போயி ஜட்ஜ் சாப்பாட்டை செக் பண்றேன்னு ரகளை ரவுசு பண்ணிராதீங்க ஆபீசர்....
எனக்கும் என்ன நோய் வரும்னு முன்னாடியே தெரியணும் வயசு முப்பத்தாறு ஆச்சு ஆபீசர் சொல்லுங்க...
//MANO நாஞ்சில் மனோ said...
உயர் நீதி மன்றத்துல போயி ஜட்ஜ் சாப்பாட்டை செக் பண்றேன்னு ரகளை ரவுசு பண்ணிராதீங்க ஆபீசர்....//
தேவை பட்டால், அதையும் செய்வோம். சில நேரங்களில், மாநில கவர்னருக்கே நாங்கள் உணவை டெஸ்ட் பண்ணி கொடுப்பதுண்டு. வருகைக்கு நன்றி.
//MANO நாஞ்சில் மனோ said...
எனக்கும் என்ன நோய் வரும்னு முன்னாடியே தெரியணும் வயசு முப்பத்தாறு ஆச்சு ஆபீசர் சொல்லுங்க...//
அப்படியெல்லாம் சொல்லி வயச குறைக்கபிடாது ஆமா!
உங்களுக்கு என்னென்ன டெஸ்ட் என்று உங்கள் மெயிலில் சொல்கிறேன். பாவம் வருகின்ற ஒன்றிரண்டு சகோதரிகளும் என் வலை பூவிற்குள் வருவதை நானே தடுத்து விடக்கூடாது பாருங்க!
வாசித்து விட்டு ஓட்டு போடாமல் சென்ற மனோ, வாழ்க!
பிள்ளை அவன் அப்பன உரிச்சு வைச்சிருக்கான் பார் "
"அந்த பொண்ணோட கண்ண பாரு,
அவங்க அம்மா கண்ணப்போல இருக்கு"//
வணக்கம் சகோதரம், அட நம்ம குடும்ப அரசியலை அழகாக விளக்கியிருக்கிறீர்கள் சகோ. என்ன ஒரு அருமையான நாசூக்கான கடி.
ஆரம்பத்தில் தேர்தல் பற்றி ஒரு தெம்மாங்கைப் போட்டு விட்டு, பின்னர் மருத்துவக் குறிப்பினைத் தந்துள்ளீர்கள்.
மரபணு மாற்றம், இன்சுலின் அளவு குறைவது பற்றிக் கூறியிருக்கும் நீங்கள்,
இந்த இன்சுலின் அளவு என்ன காரணத்தால் குறைகிறது? அதனை நிவர்த்தி செய்ய வேறேனும் வழிகள் உள்ளனவா? எத்தகைய உடற் பயிற்சிகள் இந் நோய் உள்ளோருக்கு அவசியமானவை என்றும் விளக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மருத்துவத் தகவலுக்கு நன்றிகள் சகோ.
நிரூபன் said...
பிள்ளை அவன் அப்பன உரிச்சு வைச்சிருக்கான் பார் "
"அந்த பொண்ணோட கண்ண பாரு,
அவங்க அம்மா கண்ணப்போல இருக்கு"//
வணக்கம் சகோதரம், அட நம்ம குடும்ப அரசியலை அழகாக விளக்கியிருக்கிறீர்கள் சகோ. என்ன ஒரு அருமையான நாசூக்கான கடி.
இதுக்கு இப்படியும் அர்த்தம் இருக்கா?
நிரூபன் said...
ஆரம்பத்தில் தேர்தல் பற்றி ஒரு தெம்மாங்கைப் போட்டு விட்டு, பின்னர் மருத்துவக் குறிப்பினைத் தந்துள்ளீர்கள்.
மரபணு மாற்றம், இன்சுலின் அளவு குறைவது பற்றிக் கூறியிருக்கும் நீங்கள்,
இந்த இன்சுலின் அளவு என்ன காரணத்தால் குறைகிறது? அதனை நிவர்த்தி செய்ய வேறேனும் வழிகள் உள்ளனவா? எத்தகைய உடற் பயிற்சிகள் இந் நோய் உள்ளோருக்கு அவசியமானவை என்றும் விளக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மருத்துவத் தகவலுக்கு நன்றிகள் சகோ.//
தங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி சகோதரரே! இன்னும் என்னிலிருந்து எதிர்பார்ப்பவை எல்லாம் முழுமையாக படைக்க பார்கிறேன். இன்னும் வரும்.
///////சிலருக்கு நாற்பது வயது வரை சுரக்கும் இன்சுலின் திடீரென நின்று போவதற்கு மரபணு மாற்றமே காரணம்/////////
நன்றி நன்றி அருமையான தொரு பதிவு.. உறவு முறைத்திருமணமே இதற்கு இன்னும் ஏதுவாக அமைகிறது...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...
//விக்கி உலகம் said...
பகிர்வுக்கு நன்றி நண்பரே//
வாருங்கள் நண்பரே, தங்கள் ஊக்கம் என்னை ஆக்கப்படுத்தும். நன்றி.
>>FOOD said...
மதுரை உயர் நீதி மன்ற பணி. பதிலிட முடியாது. நண்பர்கள் மன்னிப்பார்களாக.
வடை ரிசர்வ்டு.
அண்ணனுக்கு நக்கல் ஜாஸ்தி தான்
சி.பி.செந்தில்குமார் said...
மதுரை உயர் நீதி மன்ற பணி. பதிலிட முடியாது. நண்பர்கள் மன்னிப்பார்களாக.
வடை ரிசர்வ்டு.
அண்ணனுக்கு நக்கல் ஜாஸ்தி தான்//
விக்கலாண்ணா?
எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு. ஆபிஸ்ல தேர்தல்-2011//
நல்லா அல்வா குடுக்கறீங்க. சீக்கிரம் உணவுத்துறை அமைச்சர் ஆகிடுங்க.
ஆணின் ஸ்டில்லைப்போட்டு அவமானப்படுத்திய அண்ணனை வன்மையாக கண்டித்து மைனஸ் ஓட்டு போடுகிறேன் ஹி ஹி
//! சிவகுமார் ! said...
எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு. ஆபிஸ்ல தேர்தல்-2011//
நல்லா அல்வா குடுக்கறீங்க. சீக்கிரம் உணவுத்துறை அமைச்சர் ஆகிடுங்க.//
அதற்கும் உங்கள் ஆசி வேண்டும்.
//சி.பி.செந்தில்குமார் said...
ஆணின் ஸ்டில்லைப்போட்டு அவமானப்படுத்திய அண்ணனை வன்மையாக கண்டித்து மைனஸ் ஓட்டு போடுகிறேன் ஹி ஹி//
நிபந்தனை அற்ற மன்னிப்பு கோருகிறேன் மன்னா!
////சி.பி.செந்தில்குமார் said...
ஆணின் ஸ்டில்லைப்போட்டு அவமானப்படுத்திய அண்ணனை வன்மையாக கண்டித்து மைனஸ் ஓட்டு போடுகிறேன் ஹி ஹி//
இருந்தாலும் உங்களுக்கு குழந்தை மனசு, மைனஸ் ஓட்டு போட மாட்டீங்க!
சாரி ஃபார் லேட்......
ஆஹா நீங்களும் டிஸ்கி போட ஆரம்பிச்சிட்டீங்களா...?
ஜீன் மேட்டரை சூப்பரா சொல்லீட்டீங்க சார்.....
//////டிஸ்கி-2: அதுக்கும்; "தேர்தல்-2011 - மாற்றங்கள் ஏற்றம் தருமா? "- ஒரு அலசல் என்பதற்கும் என்னய்யா சம்பந்தம்?////////
இந்தத் தேர்தல் எப்போ முடியும்...!
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை எங்கே....? தேர்தல் வந்திருச்சுன்னு எடுத்து பூட்டி சீல் வெச்சிட்டீங்களா.....?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சாரி ஃபார் லேட்......//
நானும் இன்று லேட்டுதான்
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆஹா நீங்களும் டிஸ்கி போட ஆரம்பிச்சிட்டீங்களா...?//
கொஞ்சம் கொஞ்சமா உங்கள் வலைபூக்களை பார்த்து படித்து வருகிறேன்.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////டிஸ்கி-2: அதுக்கும்; "தேர்தல்-2011 - மாற்றங்கள் ஏற்றம் தருமா? "- ஒரு அலசல் என்பதற்கும் என்னய்யா சம்பந்தம்?////////
இந்தத் தேர்தல் எப்போ முடியும்...!//
ஏப்ரல் பதிமூணுல, பதிவுலகம் மீட்சியுறும்.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை எங்கே....? தேர்தல் வந்திருச்சுன்னு எடுத்து பூட்டி சீல் வெச்சிட்டீங்களா.....?//
அய்யோ காணுமா, அதுக்கும் வந்துட்டாங்களா ஆப்பு வைக்க ?
தங்கள் வருகைக்கும், ஊக்கமளிப்பிற்கும் நன்றி.
பதுப் பதிவு போடுங்க தலைவா?
வேடந்தாங்கல் - கருன் *! said...
பதுப் பதிவு போடுங்க தலைவா?//
கருன் சார், கொஞ்சம் கருணை காட்டனும். தேர்தல் வேலை, ஓய்வில்லை. நிச்சயம், திங்களன்று பதிவுடன் சந்திக்கின்றேன்.
என்னங்க பதிவு போடலியா ?
♔ம.தி.சுதா♔ said...
என்னங்க பதிவு போடலியா ?
தேர்தல் வேலை, ஓய்வில்லை. நிச்சயம், திங்களன்று பதிவுடன் சந்திக்கின்றேன்.
Post a Comment