இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday, 4 April, 2011

தேர்தல்-2011 -ஓட்டு போடலாமா ? நெசமாவே தேர்தல் செய்திதாங்க!

               என்ன ஓட்டு போடலாமா? 
                  எங்க போறம்?  ஓட்டு சாவடிக்கு. 
                      என்னெல்லாம் இருக்கும்? யாரெல்லாம் இருப்பாங்க?


                          கட்டுப்பாட்டு கருவி ஒன்றும், வாக்களிக்கும் கருவி          
                              ஒன்றும் இருக்குங்க. 
                                          இதுதாங்க கட்டுபாட்டு கருவி.

                                          நான் காட்டுவது, கட்டுபாட்டு கருவியின் பின்னாலிருக்கும், On/Off சுவிட்ச்.
                                                இதுதாங்க ஓட்டளிக்கும் கருவி.

                                    ஒரு ஓட்டு சாவடிக்கு வெளியே, அந்த ஓட்டு சாவடியில் எந்தெந்த பகுதியில் வசிப்பவர்கள் வாக்களிக்கலாம் என்ற விபரம் அறிவிக்க பட்டிருக்கும். வெளியில் ஒரு காவல் துறை அலுவலர் பணியில் இருப்பார்.  ஆண் பெண் வாக்காளர்களுக்கு இரு தனித்தனி வரிசை அமைக்கப்பட்டிருக்கும்.
என்னருகில் மண்டல உதவியாளர் திரு.பரமசிவன்.
                                  உள்ளே நுழைந்தவுடன், வாக்கு சாவடி அலுவலர் ஒருவர் இருப்பார். அவர், உங்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும்  பூத் ஸ்லிப்பை சரி பார்த்து,  வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரை சத்தமாக வாசிப்பார். அதை அங்கிருக்கும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் கேட்டு அவர்கள் கையிலிருக்கும், வாக்காளர் பட்டியலில் சரி பார்ப்பர்.அதற்கடுத்து இருக்கும் அலுவலர்-2,உங்கள் கையொப்பம் அல்லது விரல் ரேகையை, பதிவேட்டில் பெற்று கொண்டு,  உங்கள் இடது கை ஆட்காட்டி விரலில் நகத்தின் மீதும், விரலின் மீதும் படுமாறு, அழியாத மை இட்டு,ஓட்டு போட ஸ்லிப் ஒன்று கொடுத்து,  ஓட்டு போட உங்களை அனுப்புவார். அதனை அடுத்து இருக்கும் அலுவலர்-3, ஓட்டு ஸ்லிப்பை பெற்று கொண்டு, கட்டுப்பாட்டு இயந்திரத்தில் உள்ள வாக்களிக்க அனுமதிக்கும் பட்டனை அழுத்துவார்.
                                 நீங்கள், வாக்களிக்கும் இயந்திரம் வைத்துள்ள பகுதி(VOTING COMPARTMENT)க்கு சென்று, உங்களுக்கு விருப்பப்படும் வேட்பாளர் பெயருக்கு எதிரில் இருக்கும் பட்டனை அழுத்தினால், பீப் ஒலியுடன், உங்கள் வாக்கு பதிவு செய்யப்படுவதை அறிந்து கொள்ளலாம்.நீங்கள் ஓட்டளித்த வேட்பாளர் பெயருக்கு எதிரில் உள்ள விளக்கு ஒளிரும். 
           ஜனநாக கடமையை முடித்த திருப்தியில், நீங்கள் வெளியே வாங்க.
                                   இந்த தேர்தலில், பார்வையற்ற வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக, வாக்கு பதிவு இயந்திரத்தில், ஓட்டு போடும் பட்டன்களுக்கு அருகில், பிரைலி எழுத்துக்களையும் பொறிச்சிருக்காங்க.                          
இதையும் தெரிஞ்சுகோங்க:   
என்னை போல ஒரு மண்டல அலுவலர்: திரு.சாகுல் ஹமீது. 
அவரின் விளக்கங்கள் சில:  
அது என்னாங்க 49-O?:
                                     உங்கள் தொகுதியில் தேர்தலில் நிற்கும் எவருக்கும் உங்களுக்கு வாக்களிக்க விருப்பம் இல்லையா? ஓட்டு சாவடிக்குள்  நுழைந்து, ஓட்டு போட ஸ்லிப் வாங்கிய பின்தான் இந்த எண்ணம் வருகிறதா? உங்களுக்குக்கான பிரிவுதான் 49-O. இந்த பிரிவின்படி, நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என தெரிவித்து,அதனை வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்து, கையொப்பம் இட்டு வெளியேறலாம்.  
ஆய்விற்கு உரிய ஓட்டுன்னா -அது என்னாங்க? : 
                               ஏற்கனவே போடப்பட்ட ஓட்டு  ஒன்று தவறாக போடப்பட்டது என வாக்காளர் ஒருவர் வாக்கு சாவடி தலைமை அலுவலர் முன் ஆஜராகி புகார் தெரிவித்தால், தலைமை அலுவலர் அவரை விசாரித்து அவரது அடையாளத்தில் திருப்தி பட்டால், அவருக்கு ஓட்டு சீட்டு ஒன்று கொடுத்து அதில் வாக்கிட அனுமதித்து, அந்த ஓட்டு சீட்டை தனிகவரில் போட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைப்பார்.
எதிர்க்கப்பட்ட ஓட்டுன்னா -அது என்னாங்க? :
                                    வாக்காளர் ஒருவர் ஓட்டு போட வரும்போது, வாக்கு சாவடியில் இருக்கும்  முகவர் எவரேனும் அவர் தவறான நபர் என்று வாதிட்டால், வாதிடும் முகவர் ரூபாய் இரண்டு செலுத்தி ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும். வாக்கு சாவடி தலைமை அலுவலர் அவரை விசாரித்து, அவர் தவறான நபர் என்று தெரியவந்தால், அவரை காவல் துறை வசம் ஒப்படைப்பார். அந்த நபர் சரியான நபர் என்று நிரூபிக்க பட்டால், அவரை வாக்களிக்க அனுமதிப்பார்.
டிஸ்கி: ஒரு வாக்காளராய், என்னவெல்லாம் செய்ய கூடாது?:  
  • ஓட்டு  போடும் கடமையை மறக்க  கூடாது. 
  • ஓட்டு போட, வேட்பாளர் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் ஓட்டு சாவடிக்கு வரக்கூடாது.  
  • ஓட்டு போடும் போதோ, ஓட்டு போட்டு விட்டு வெளியே வரும்போதோ, எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என்று மற்றவர்கள் அறியும் வண்ணம் சொல்லக்கூடாது.  
Follow FOODNELLAI on Twitter

64 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

உணவுக்கே வடை..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தேவையான நேரத்தில் சரியாக பதிவு..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இப்பதிவின் மூலம் பல தகவல்களை தெரிந்துக் கொண்டேன்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பிரைலி எழுத்துக்களையும் பொறிச்சிருக்காங்க. -- எவ்ளோ பொறுப்புணர்ச்சி..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பகிர்வுக்கு நன்றி..

FOOD said...

வேடந்தாங்கல் - கருன் *! said...
உணவுக்கே வடை..
உணவுக்கே வடை. சூப்பர்.

FOOD said...

வேடந்தாங்கல் - கருன் *! said...
தேவையான நேரத்தில் சரியாக பதிவு..//
நன்றி நண்பரே!

♔ம.தி.சுதா♔ said...

உங்கள் கடமையை உணர்கிறேன்.. அதை செவ்வனே செய்ய எடுக்கும் முயற்சியும் பிடித்திருக்கு... ஆனால் என்னங்க செய்வது இதால வரப் போவது நாய்களும் காட்டேறிகளும் தானே (அரசியல்வாதிகளை சொல்றெனுங்க...)

FOOD said...

♔ம.தி.சுதா♔ said...
உங்கள் கடமையை உணர்கிறேன்.. அதை செவ்வனே செய்ய எடுக்கும் முயற்சியும் பிடித்திருக்கு... ஆனால் என்னங்க செய்வது இதால வரப் போவது நாய்களும் காட்டேறிகளும் தானே (அரசியல்வாதிகளை சொல்றெனுங்க...)//
வருகைக்கு நன்றி

asiya omar said...

உங்கள் பதிவு பார்த்தவுடன் ஓட்டு போட முடியலையேன்னு ஏக்கமாக இருக்கு.தேவையான விளக்கமான பகிர்வு.இதுவும் ஒரு சமுதாய தொண்டு தான்,பாராட்டுக்கள்.

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், எங்கள் நாட்டில் இந்த மாதிரியான சிஸ்டம் இன்னமும் வரவில்லை. ஆதலால் செத்துப்போன நம்ம பாட்டன் பாட்டி ஓட்டெல்லாம் ஒவ்வொரு எலக்சனிலையும் கள்ள ஓட்ட விழுந்திட்டிருக்கு. கள்ள ஓட்டையும் கையிலை பூசின மையை அளிச்ச பின்னர் ஈஸியா போட்டிடுறாங்க.

உங்கள் பதிவில் நீங்கள் குறிப்பிடும் ஓட்டுப் போடும் கருவி பற்றிய விபரங்களை இன்று தான் அறிந்தேன்.
அருமையான விடயத்தை என்போன்ற அறியாதவர்களுக்காய் விளக்கங்களுடன் பகிர்ந்திருக்கிறீர்கள்.
நன்றிகள் சகோ

ஆமா இந்த மிசினலை கள்ள ஓட்டெல்லாம் போட முடியாதோ?

கக்கு - மாணிக்கம் said...

அவசியமான விபரங்கள் சொல்லும் அழகான பதிவு.
பதிவுகள் என்றால் இப்படிதான் நமக்கு தெரிந்ததை நாலு பேருக்கு சொல்லவேண்டும்.
வாழ்த்துக்கள் சார்.

Chitra said...

விரிவான விஷயங்கள் ...பயனுள்ள தகவல்கள். படங்களும் நன்றாக இருக்கின்றன. பகிர்வுக்கு நன்றி, அண்ணா.

விக்கி உலகம் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

உங்களை நினைக்க பெருமையா இருக்கு!!

# கவிதை வீதி # சௌந்தர் said...

தற்போதைக்கு தேவையா தகவலை தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்..
வாழ்த்துக்கள்..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பணி சிறக்க வாழ்த்துக்கள்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஓட்டுபெட்டி மாதிரி ஒரு ஃபீலிங் வரலைன்னு நம்ம ஊரு பெருசுங்க சொல்லுதுங்க

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அருமையான படங்க்ளுடன் நல்ல விளக்கம்

! சிவகுமார் ! said...

//உங்களுக்குக்கான பிரிவுதான் 49-O. இந்த பிரிவின்படி, நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என தெரிவித்து,அதனை வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்து, கையொப்பம் இட்டு வெளியேறலாம்.//

வெளியே வரலாம். ஆனால் மீண்டும் வீட்டுக்குள்ளே செல்ல முடியுமா? "மவனே. எந்த கட்சிக்கும் ஓட்டு போடாம போறியா" என்று எல்லா கட்சி ஆளுங்களும் குறு குறுன்னு பாக்குறாங்களாம்...!! அவ்வ்வ்வவ்!!

சென்னை பித்தன் said...

பல புதிய விவரங்கள்!சரியான நேரத்தில் தேவையான பதிவு!நன்று!

இளங்கோ said...

பயனுள்ள தகவல்கள்

அமைதி அப்பா said...

//எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என்று மற்றவர்கள் அறியும் வண்ணம் சொல்லக்கூடாது. //

அவசியமான மற்றும் அனைவரும் பின் பற்ற வேண்டியது.
பதிவு மற்றும் படங்கள் நன்று.

FOOD said...

//asiya omar said...
உங்கள் பதிவு பார்த்தவுடன் ஓட்டு போட முடியலையேன்னு ஏக்கமாக இருக்கு.தேவையான விளக்கமான பகிர்வு.இதுவும் ஒரு சமுதாய தொண்டு தான்,பாராட்டுக்கள்.//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Good info!

FOOD said...

//நிரூபன் said...
வணக்கம் சகோதரம், எங்கள் நாட்டில் இந்த மாதிரியான சிஸ்டம் இன்னமும் வரவில்லை. ஆதலால் செத்துப்போன நம்ம பாட்டன் பாட்டி ஓட்டெல்லாம் ஒவ்வொரு எலக்சனிலையும் கள்ள ஓட்ட விழுந்திட்டிருக்கு. கள்ள ஓட்டையும் கையிலை பூசின மையை அளிச்ச பின்னர் ஈஸியா போட்டிடுறாங்க.
உங்கள் பதிவில் நீங்கள் குறிப்பிடும் ஓட்டுப் போடும் கருவி பற்றிய விபரங்களை இன்று தான் அறிந்தேன்.
அருமையான விடயத்தை என்போன்ற அறியாதவர்களுக்காய் விளக்கங்களுடன் பகிர்ந்திருக்கிறீர்கள்.
நன்றிகள் சகோ
ஆமா இந்த மிசினலை கள்ள ஓட்டெல்லாம் போட முடியாதோ?//
கையில் தடவும் அழியாத மையை அழித்துவிட்டு, பின்னர் வேறு ஒருவருக்காக ஓட்டு போடுவது,கள்ள ஓட்டு. அதற்கும், அந்த மிசினிற்கும் சம்பந்தமில்லை.

FOOD said...

//கக்கு - மாணிக்கம் said...
அவசியமான விபரங்கள் சொல்லும் அழகான பதிவு.
பதிவுகள் என்றால் இப்படிதான் நமக்கு தெரிந்ததை நாலு பேருக்கு சொல்லவேண்டும்.
வாழ்த்துக்கள் சார்.//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

FOOD said...

//Chitra said...
விரிவான விஷயங்கள் ...பயனுள்ள தகவல்கள். படங்களும் நன்றாக இருக்கின்றன. பகிர்வுக்கு நன்றி, அண்ணா.//
தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி,சித்ரா.

FOOD said...

//விக்கி உலகம் said...
பகிர்வுக்கு நன்றி நண்பரே//
தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி,நண்பரே!

FOOD said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
உங்களை நினைக்க பெருமையா இருக்கு!!//
சந்தோசம்,நண்பரே!

muthu_ki said...

thevaiyana neraththil avasiyamana thavalai parthtu anaivarum vaakkalikkavum. nantri

FOOD said...

//கவிதை வீதி # சௌந்தர் said...
தற்போதைக்கு தேவையா தகவலை தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்..
வாழ்த்துக்கள்..//
நன்றி நண்பரே!

FOOD said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
பணி சிறக்க வாழ்த்துக்கள்.
அருமையான படங்க்ளுடன் நல்ல விளக்கம்//
தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி,நண்பரே!

FOOD said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஓட்டுபெட்டி மாதிரி ஒரு ஃபீலிங் வரலைன்னு நம்ம ஊரு பெருசுங்க சொல்லுதுங்க//
ஓட்டு பெட்டிய விட இது ஒரு படி மேலேங்க!

FOOD said...

//சிவகுமார் ! said...
வெளியே வரலாம். ஆனால் மீண்டும் வீட்டுக்குள்ளே செல்ல முடியுமா? "மவனே. எந்த கட்சிக்கும் ஓட்டு போடாம போறியா" என்று எல்லா கட்சி ஆளுங்களும் குறு குறுன்னு பாக்குறாங்களாம்...!! அவ்வ்வ்வவ்!!//
பார்த்தா பரவாயில்லை!

FOOD said...

//சென்னை பித்தன் said...
பல புதிய விவரங்கள்!சரியான நேரத்தில் தேவையான பதிவு!நன்று!//
தங்கள் வருகையால் பெருமை பெற்றேன்.

FOOD said...

//இளங்கோ said...
பயனுள்ள தகவல்கள்.//
அனைவரும் பயன்பெற்றால் சந்தோசம்.

FOOD said...

//அமைதி அப்பா said...
அவசியமான மற்றும் அனைவரும் பின் பற்ற வேண்டியது.
பதிவு மற்றும் படங்கள் நன்று.//
தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி,நண்பரே!

FOOD said...

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
Good info!//
Thank U.

FOOD said...

//muthu_ki said...
thevaiyana neraththil avasiyamana thavalai parthtu anaivarum vaakkalikkavum. nantri//
Thanks for your esteemed visit & wishes.

MANO நாஞ்சில் மனோ said...

நன்றிங்க ஆபீசர்....

MANO நாஞ்சில் மனோ said...

சுஜாதா ரேஞ்சுக்கு விளக்கம் சொல்லி இருக்கீங்க ஆபீசர்..

FOOD said...

//MANO நாஞ்சில் மனோ said...
நன்றிங்க ஆபீசர்....
//
வாங்க வாத்தியாரே!

FOOD said...

//MANO நாஞ்சில் மனோ said...
சுஜாதா ரேஞ்சுக்கு விளக்கம் சொல்லி இருக்கீங்க ஆபீசர்..//
புல்லரிக்க வச்சிட்டிங்க.

மொக்கராசா said...

தகவலுக்கு மிக்க நன்றி ......
ஆனால் எனக்கு இன்னும் ஓட்டு போடும் வயசு வரவில்லை

Jana said...

தேவையான விடயத்தை, சரியான தருணத்தில் புரியும்படி தெளிவாகத் தருவதுதானே உங்கள் பாலிஸி! பாராட்டுக்கள்

இரவு வானம் said...

மிகவும் தேவையான பயனுள்ள பதிவு சார், பகிர்வுக்கு நன்றி...

FOOD said...

//மொக்கராசா said...
தகவலுக்கு மிக்க நன்றி ......
ஆனால் எனக்கு இன்னும் ஓட்டு போடும் வயசு வரவில்லை//
ஆஹா, அப்ப்டியா?

FOOD said...

//Jana said...
தேவையான விடயத்தை, சரியான தருணத்தில் புரியும்படி தெளிவாகத் தருவதுதானே உங்கள் பாலிஸி! பாராட்டுக்கள்//
நன்றி ந்ண்பரே! உங்கள் வாழ்த்துக்கள் ஊக்கமளிக்கும்.

FOOD said...

//Jana said...
தேவையான விடயத்தை, சரியான தருணத்தில் புரியும்படி தெளிவாகத் தருவதுதானே உங்கள் பாலிஸி! பாராட்டுக்கள்//
நன்றி ந்ண்பரே! உங்கள் வாழ்த்துக்கள் ஊக்கமளிக்கும்.

FOOD said...

//இரவு வானம் said...
மிகவும் தேவையான பயனுள்ள பதிவு சார், பகிர்வுக்கு நன்றி...//
வாழ்த்திற்கு நன்றி ந்ண்பரே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான பதிவு சார்...! எனக்கு இரண்டு சந்தேகங்கள்,
1. வாக்களிக்கும் போது கைதவறி ஓட்டை மாற்றி போட்டுவிட்டால் என்ன செய்வது? போட்ட ஓட்டை வாபஸ் வாங்க இயலாதா?

2. கவரில் தனியாக போடப்படும் ஓட்டுச் சீட்டும் எண்ணப்படுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னொரு சந்தேகம், வாக்கு எண்ணிக்கைக்கும் போயிருப்பீங்கன்னு நினைக்கிறேன்,

எந்தெந்த காரணங்களுக்காக மறு எண்ணிக்கை கேட்கலாம்?

FOOD said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அருமையான பதிவு சார்...! எனக்கு இரண்டு சந்தேகங்கள்,
1. வாக்களிக்கும் போது கைதவறி ஓட்டை மாற்றி போட்டுவிட்டால் என்ன செய்வது? போட்ட ஓட்டை வாபஸ் வாங்க இயலாதா?
2. கவரில் தனியாக போடப்படும் ஓட்டுச் சீட்டும் எண்ணப்படுமா?//
1.ஆம். போட்ட ஓட்டை திரும்ப பெற வழி இல்லை.
2.ஆம். எண்ணப்படும்.

FOOD said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்னொரு சந்தேகம், வாக்கு எண்ணிக்கைக்கும் போயிருப்பீங்கன்னு நினைக்கிறேன்,
எந்தெந்த காரணங்களுக்காக மறு எண்ணிக்கை கேட்கலாம்?//
மிக நுட்பமான கேள்விகள் கேட்டுள்ளீர்கள். நன்றி.என் சிற்றறிவிற்கு எட்டியவரை:
பல காரணங்கள் உண்டு.
சில மட்டும் இங்கே:
1.குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெறும்போது, அடுத்த நிலையில் இருப்பவர் கோருவதுண்டு.
2.வாக்கு சீட்டு முறையில், அதிகமான ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்க பட்டால்.(தற்போது அதற்கு வாய்ப்பில்லை.)
3.வாக்கு சீட்டு முறையில், வாக்கு எண்ணும் அலுவ்லரின் நட்வடிக்கை திருப்தி இல்லையெனில்.(தற்போது அதற்கும் வாய்ப்பில்லை.)
அதனை தனி பதிவாகவே போடலாம் போல.

ஆனந்தி.. said...

அண்ணா...ரொம்ப அருமையான விழிப்புணர்வு பதிவு...முதன் முதலாய் வோட்டு போட போகும் மக்களுக்கு இதை படிச்சாலே போதும்..எல்லா குழப்பங்களும் போயிரும் நினைக்கிறேன்...அந்த அளவுக்கு பால பாடமாய் இருந்தது...தேவை உங்கள் சேவை...!!

ஆனந்தி.. said...

அண்ணா...என் பதிவில் வெளிநாட்டில் (லண்டன்) வாழும் நம் தமிழ் சகோதரி ஒரு கேள்வி கேட்டு இருந்தாங்க...அவங்க அங்கே இருந்து இங்கே தபால் வோட்டு போட முடியுமான்னு...??? விளக்கம் சொல்லுங்க அண்ணா>.

அன்புடன் மலிக்கா said...

//இப்பதிவின் மூலம் பல தகவல்களை தெரிந்துக் கொண்டேன்.// நானும்தான்.

நல்லபாடம் எடுதிருக்கீங்க.

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணன் வாத்தியார்னு புரூஃப் பண்ணீட்டார்டோய்

FOOD said...

ஆனந்தி.. said...
அண்ணா...ரொம்ப அருமையான விழிப்புணர்வு பதிவு...முதன் முதலாய் வோட்டு போட போகும் மக்களுக்கு இதை படிச்சாலே போதும்..எல்லா குழப்பங்களும் போயிரும் நினைக்கிறேன்...அந்த அளவுக்கு பால பாடமாய் இருந்தது...தேவை உங்கள் சேவை...!!//
அன்பு தங்கையின் வருகைக்கு நன்றி.தேர்தல் பணிக்கு சென்று விட்டதால், கால தாமதமான பதில்.
இன்னும் பத்து நாட்கள் இப்படித்தான்.

FOOD said...

ஆனந்தி.. said...
அண்ணா...என் பதிவில் வெளிநாட்டில் (லண்டன்) வாழும் நம் தமிழ் சகோதரி ஒரு கேள்வி கேட்டு இருந்தாங்க...அவங்க அங்கே இருந்து இங்கே தபால் வோட்டு போட முடியுமான்னு...??? விளக்கம் சொல்லுங்க அண்ணா>.//
1.அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்காது.
2.தேர்தல் பணியில் இருப்பவர்கள் மட்டும், தபால் ஓட்டு போடலாம்.
3.ராணுவத்தில் பணி புரிபவர்கள், அதற்குறிய சான்று பெற்று, மாற்று நபர் மூலம் வாக்களிக்கலாம்.
4.சாரி,வெளி நாட்டில் வசிப்பவர்,தபால் மூலம் வாக்களிக்க வழி இல்லை.

FOOD said...

//அன்புடன் மலிக்கா said...
//இப்பதிவின் மூலம் பல தகவல்களை தெரிந்துக் கொண்டேன்.// நானும்தான்.
நல்லபாடம் எடுதிருக்கீங்க.//
நன்றி.
அடுத்து வந்துள்ள சி.பி. சார் கமெண்ட்டையும் பாருங்க!

FOOD said...

//அன்புடன் மலிக்கா said...
//இப்பதிவின் மூலம் பல தகவல்களை தெரிந்துக் கொண்டேன்.// நானும்தான்.
நல்லபாடம் எடுதிருக்கீங்க.//
நன்றி.
அடுத்து வந்துள்ள சி.பி. சார் கமெண்ட்டையும் பாருங்க!

FOOD said...

//சி.பி.செந்தில்குமார் said...
அண்ணன் வாத்தியார்னு புரூஃப் பண்ணீட்டார்டோய்//
1. வணக்கம் வாத்தியாரே!
2.தல இருக்கும்போது வால் ஆட கூடாதில்ல!தப்புதான்.