இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 27 April, 2011

பத்த வச்சிட்டியே பரட்டை.

                                   வெயில் காலம் வந்தாலும் வந்தது. விலை கொடுக்காமலே வீணாய் நோய்களும் வந்து தாக்குது. குடிக்கும் நீரிலும், குளிர் பானங்களிலும் கொடிய கலப்படங்கள். நெல்லையில் பத்த வச்ச தீ, ஹனுமன் வாலிலிட்ட தீ , இலங்கையை சுட்டெரித்ததுபோல், தமிழகம் முழுவதும் தானாய் பற்றி எரியுது. 
தமிழகம் முழுக்க, தண்ணீரின் தரம் சோதனை செய்யபடுகிறது. தரமற்ற தண்ணீர் பாக்கெட்களும், கேன்களும் பறிமுதல் செய்யப்பட்டு, தடாலடி நடவடிக்கைகள் தொடருது. 
ஆந்திரா ஈநாடு பத்திரிக்கையில் திருநெல்வேலி ரெய்டு  செய்தி.
                                      சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சென்ற வாரம் எடுத்த சீரிய நடவடிக்கைகளால், சிங்கார சென்னையினை சீரழித்த சுமார் நாற்பதாயிரம்  தரங்கெட்ட தண்ணீர் பாக்கெட்களும் , கேன்களும் பகிரங்கமாய்    பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இந்த சோதனையில் எண்ணூறு போலி  ரசனா பாகெட்களும் தப்பவில்லை. 
                                           அடுத்து வைத்த தீ, கார்பைடு கற்களால் சூடு வைக்கப்பட்ட மாங்கனிகள் மீது. தானாய் கனியும் மாம்பழங்கள் தேனாய் இனித்திடும். ஆலாய்  பறக்கும் மனிதர்கள், அது பழுக்கும் வரை பொறுத்திருக்க பொறுமையில்லை. அதனால், அவர்கள் பயன்படுத்தும் பொருள்: கார்பைடு கல். இதனை கந்தகக்கல்  என்றும் சொல்வார்கள்.  நன்கு விளைந்தத விளையாத மாங்காய்களை ஒரு கிட்டங்கியில் கொட்டி, கார்பைடு கல் பொட்டலங்களை அந்த குவியல்களில் ஆங்காங்கே வைத்து விடுவர்.மறுநாள் காலையில் பார்த்தால், விளைந்தத மற்றும் விளையாத மாங்காய்கள் மஞ்சள் நிறத்திலிருக்கும்.

                                 இந்த இடத்தில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான்: அந்த மாம்பழங்களின் மேல் தோல்தான் மஞ்சள் நிறத்திலிருக்கும், உள்ளே பழுத்திருக்காது!
எப்படி கண்டு பிடிக்கலாம் இவை கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டவை என்று?
கல் வைத்து கனிய வைக்கப்பட்ட பழங்ககளை உண்பதால், உருவாகும் உடல் நல பாதிப்புகள் என்ன?எப்படி நாம் முன்னெச்செரிக்கையாக இருக்கலாம்? இந்த சீசனில் மாம்பழங்களே  உண்ண கூடாதா? கேட்கிறது உங்கள் கேள்விகள் என் காதுகளில்.
 
பத்த வச்ச விஷயம்,  பரவ பரவ, தொடர்ந்து எழுதுகிறேன். 
Follow FOODNELLAI on Twitter

39 comments:

Unknown said...

நடத்துங்க வாத்தியாரே!

சக்தி கல்வி மையம் said...

கலக்குங்க தலைவா...
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துங்க..

சிவக்குமார் said...

தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம்

உணவு உலகம் said...

விக்கி உலகம் said..
நடத்துங்க வாத்தியாரே!//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே!

உணவு உலகம் said...

வேடந்தாங்கல் - கருன் *! said...
கலக்குங்க தலைவா...
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துங்க..//
உங்கள் பள்ளியில் நாங்கள் மாணவர்கள். நன்றி.

உணவு உலகம் said...

தமிழானவன் said...
தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம்//
தொட்டு தொடருங்கள்.நன்றி.

டக்கால்டி said...

இது போல ஓர் இடுகையை உங்களிடம் இறந்து எதிர்பார்த்தேன் சார்...
இப்போதெல்லாம் வருடாவருடம் இந்த செய்தி இடம்பிடிக்கிறது...

உணவு உலகம் said...

டக்கால்டி said...
இது போல ஓர் இடுகையை உங்களிடம் இறந்து எதிர்பார்த்தேன் சார்...
இப்போதெல்லாம் வருடாவருடம் இந்த செய்தி இடம்பிடிக்கிறது...//
இன்னும் வரும், உங்கள் பேராதரவுடன். நன்றி நண்பரே!

பொன் மாலை பொழுது said...

எனக்கும் இந்த குறை இருந்தது. நெல்லையில் நடக்கிறது பிற இடங்கில் இல்லையே என்று. நெல்லை செய்தி தெலுங்கு நாடு வரை பரவியுள்ளதை அறிந்து மகிழ்ச்சி தலைவரே! தொடரட்டும் உங்களின் இந்த மக்கள் பணி. வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

நல்ல பகிர்வு..மாம்பழம் வாங்கும் பொழுது இனி உஷாராயிடுவோம்..

Unknown said...

மக்களுக்கு செய்யும் சேவை தொடர வாழ்த்துக்கள்...

சென்னை பித்தன் said...

இந்தக் கோடையில் இது போன்ற அவசியமான பதிவுகளைத் தொடருங்கள்!

Anonymous said...

உங்கள் அதிரடி வேட்டை தொடரட்டும்

ரஹீம் கஸ்ஸாலி said...

நல்ல விழிப்புணர்வு பதிவு...எங்கள் ஊர் கிராமப்புறம் என்பதால் இயற்கையாக பழுத்த மாம்பழமே அதிகமாக கிடைக்கும்...செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் வருவது அரிது...

இளங்கோ said...

பரட்ட பத்த வெச்சதும் நல்லதுக்கு தான் :)

நிரூபன் said...

இது அடுத்த ரெய்டா... வாழ்த்துக்கள் சகோ.

நிரூபன் said...

மக்களின் சுகாதாரத்திற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் அயராது உழைக்கும் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்!

உணவு உலகம் said...

நன்றி:
கக்கு - மாணிக்கம்
asiya omar
சென்னை பித்தன்
ஆர்.கே.சதீஷ்குமார்
ரஹீம் கஸாலி
இளங்கோ
நிரூபன்

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க நல்லவர் ஆச்சே/? ஹி ஹி

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
நீங்க நல்லவர் ஆச்சே/? ஹி ஹி//
நான் உங்கள் நண்பரல்லவா!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்றைய பதிவும் அசத்தல் தல....

மாம்பழங்கள் பழுக்க வைக்க வேதி பொருட்களை பயன்படுத்துவது மிகவும் கொடுமை...

உணவு உலகம் said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
இன்றைய பதிவும் அசத்தல் தல....
மாம்பழங்கள் பழுக்க வைக்க வேதி பொருட்களை பயன்படுத்துவது மிகவும் கொடுமை...//
எல்லாம் நண்பர்கள் ஊக்குவிப்புதான்.

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

அடடா நான்தான் லேட்டா......

MANO நாஞ்சில் மனோ said...

//இந்த இடத்தில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான்: அந்த மாம்பழங்களின் மேல் தோல்தான் மஞ்சள் நிறத்திலிருக்கும், உள்ளே பழுத்திருக்காது!///

ரைட்டு இனி உஷார் ஆகிருவேன். நன்றி ஆபீசர்....

MANO நாஞ்சில் மனோ said...

//பத்த வச்ச விஷயம், பரவ பரவ, தொடர்ந்து எழுதுகிறேன். //


நல்ல விழிப்புணர்வு பதிவு ஆபீசர். வாழ்த்துகள்.....

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
நடத்துங்க வாத்தியாரே!//


யோவ் கண்ணு தெரியலையா தக்காளி உமக்கு, வாத்தியார் இல்லைய்யா ஆபீசர்.....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
நீங்க நல்லவர் ஆச்சே/? ஹி ஹி///


அட கம்னாட்டி நீ இங்கேயும் பதிவை படிக்காமதான் கமெண்ட்ஸ் போடுறியா, கொய்யால பிச்சிபுடுவேன் பிச்சி.....

உணவு உலகம் said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...
அடடா நான்தான் லேட்டா......//
ஆமா லேட்டுதான்!

உணவு உலகம் said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...
//இந்த இடத்தில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான்: அந்த மாம்பழங்களின் மேல் தோல்தான் மஞ்சள் நிறத்திலிருக்கும், உள்ளே பழுத்திருக்காது!///
ரைட்டு இனி உஷார் ஆகிருவேன். நன்றி ஆபீசர்....//
உஷாரையா உஷார்!

உணவு உலகம் said...

/MANO நாஞ்சில் மனோ said...
//பத்த வச்ச விஷயம், பரவ பரவ, தொடர்ந்து எழுதுகிறேன்.
நல்ல விழிப்புணர்வு பதிவு ஆபீசர். வாழ்த்துகள்.....//
நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும்.

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said..
//விக்கி உலகம் said...
நடத்துங்க வாத்தியாரே!//
யோவ் கண்ணு தெரியலையா தக்காளி உமக்கு, வாத்தியார் இல்லைய்யா ஆபீசர்.....//
சரிதான், நமக்கு வாத்தியார் கருன்தானே!

உணவு உலகம் said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...
//சி.பி.செந்தில்குமார் said...
நீங்க நல்லவர் ஆச்சே/? ஹி ஹி///
அட கம்னாட்டி நீ இங்கேயும் பதிவை படிக்காமதான் கமெண்ட்ஸ் போடுறியா, கொய்யால பிச்சிபுடுவேன் பிச்சி.....//
அவர் ’பிரா’ப்ல, சாரி பிரபல பதிவர் விட்ருஙக மனோ!

K.S.Muthubalakrishnan said...

Hats off to ur raids for last 3 days.

ம.தி.சுதா said...

///// மாம்பழங்களின் மேல் தோல்தான் மஞ்சள் நிறத்திலிருக்கும், உள்ளே பழுத்திருக்காது!/////

எப்படியெல்லாம் கோல்மால் பண்ணுறாங்கப்பா... வாசிக்க வியப்பாக இருக்கு..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

உணவு உலகம் said...

//K.S.Muthubalakrishnan said..
Hats off to ur raids for last 3 days.//
Thanks for your wishes.

உணவு உலகம் said...

♔ம.தி.சுதா♔ said...
///// மாம்பழங்களின் மேல் தோல்தான் மஞ்சள் நிறத்திலிருக்கும், உள்ளே பழுத்திருக்காது!////
எப்படியெல்லாம் கோல்மால் பண்ணுறாங்கப்பா... வாசிக்க வியப்பாக இருக்கு.
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா//
இன்னைக்கு ஆரம்பிச்சிட்டோம்ல, எங்க ஆட்டத்த!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்கிட்டீங்க சார், விழிப்புணர்வு எங்கும் பரவட்டும்......!

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
கலக்கிட்டீங்க சார், விழிப்புணர்வு எங்கும் பரவட்டும்......!//
அடுத்த பதிவை போட்டு நீங்க கலக்குங்க சார்!