இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 25 April, 2011

இயற்கையை வெல்ல இனி ஒருவன் பிறக்க வேண்டும்.

           இயற்கை நமக்கு அளித்துள்ள வளங்கள் ஏராளம். நம் உடலில் இயற்கை அமைத்துள்ள இயக்கங்கள் என்றும் நின்று இயங்குவன. மனிதன் சுய கட்டுப்பாடின்றி செய்யும் சில காhpயங்கள் உடலில் பல உபாதைகள் உருவாக வழிவகுக்குக்கின்றன. 
   விந்தைமிகு விஞ்ஞானிகள் இயற்கைக்கு ஈடு கட்டும் விதமாக நாளுமொரு புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து உடல் உபாதைகளுக்கு மாற்று வழிகள் உருவாக்கி வருகின்றனர்.
   இருதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்போது அவாpன் உடலிலிருந்தே செல்களை எடுத்து, அதி நவீன தொழில் நுட்பத்தின் மூலம் ரத்த நாளங்கள் உருவாக்கி பொருத்தி வந்தனர். இதற்கு ஒன்பது மாதங்கள் கால அவகாசம் தேவைப்பட்டது. இந்த கால அவகாசம், பலாpன் அவசரத் தேவைக்குப் பயன்படவில்லை.
   தற்போது, செல்களைத் தானமாகப் பெற்று, இயற்கையாகக் கிடைக்கும் புரோட்டீன்களுடன் சோ;த்து, ஆய்வுக்கூடங்களில், இரத்த நாளங்களை உருவாக்கும் முயற்சியில், விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.அவ்வாறு உருவாக்கப்படும் இரத்த நாளங்கள், ஒரு வருடம் வரை பத்திரப்படுத்த முடியுமென்பதும் மேலும் ஒரு ஆறுதலான செய்தி. 
   என்ன செய்தாலும் இயற்கையை வெல்லவும் முடியவில்லை. இறக்கும் நாளை சொல்லவும் முடியவில்லை. இறப்பென்றாலும் சரி இயற்கை சீற்றமென்றாலும் சரி எப்போது வரும், எப்படி வருமென்று சொல்ல இன்னும் முடியவில்லை.
Follow FOODNELLAI on Twitter

18 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

உண்மைதான் இயற்கையை ஒருபோதும் செயற்கையால் வெல்ல முடியாது! படங்களும் கருத்துக்களும் அருமை!!

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே.. கட்டுரை வழக்கம் போல் நல்லாஇருக்கு/.. இயற்கை உணவு இயற்கை விவசாயம் போன்றவற்றுக்கு மனிதன் முக்கியத்துவம் கொடுக்கனும்

அப்புறம் ஒரு விஷயம் உங்க பிளாக் எடிட்ல போய் நார்மல் லெட்டர் குடுங்க இது எழுத்துக்கள் சின்னதா இருக்கு,

Unknown said...

உண்மைதானுங்க...
பகிர்வுக்கு நன்றி!

Asiya Omar said...

இயற்கையை வெல்வது முடியாத காரியம் தான்...எழுத்து சின்னதாக இருக்கு.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உண்மைதாங்க...

உலகில் இருக்கும் அனைத்து மனித சக்தியை ஒன்று திட்டினாலும் இயற்கையை வெல்ல முடியாது....

பகிர்வுக்கு வாழ்த்துக்கள்..

மொக்கராசா said...

உண்மைதான், இயற்கையை அழிக்க முடியாது அவ்வாறு முயற்சி செய்தால் மனித குலத்திற்க்குதான் கேடு.....

சரியான பதிவு......

சென்னை பித்தன் said...

வென்றதாக நினைக்கும் போதெல்லாம்,
தலையில் ஒரு குட்டு வைத்து இயற்கை தன் வலிமையை நிரூபிக்கும்!
சிபி சொன்னது சரி!எழுத்துச் சின்னது!என்னை மாதிரி ஆளுக் கெல்லாம் ரொம்பக் கஷ்டம்!

உணவு உலகம் said...

நண்பர்கள் அனைவரும் மன்னிக்க வேண்டும். இன்று காலை ஒரு ரெய்டு சென்று விட்டதால், இப்போதுதான் எழுத்து சிறிதாக இருப்பதை கவனித்தேன். மாற்றி விட்டேன். நன்றி.

பனித்துளி சங்கர் said...

பயனுள்ள சிறந்த கட்டுரை . நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் . மரணத்தின் மர்மதைபோல் இயற்கையும் இன்னும் நம்மால் அறிந்துகொள்ள இயலாத ஒரு விநோதமே ! பகிர்ந்தமைக்கு நன்றி தோழா

உணவு உலகம் said...

நன்றி நண்பரே!

டக்கால்டி said...

பாஸ்..உண்மையாலுமே உங்க தளத்துக்கு வந்தா ஆக்கப்பூர்வமான தகவல்கள் அறிந்துகொள்ள முடிகின்றது...சபாஷ் தொடருங்கள்...

உணவு உலகம் said...

டக்கால்டி said...
பாஸ்..உண்மையாலுமே உங்க தளத்துக்கு வந்தா ஆக்கப்பூர்வமான தகவல்கள் அறிந்துகொள்ள முடிகின்றது...சபாஷ் தொடருங்கள்...//
நன்றி நண்பரே!

Anonymous said...

இயற்கைதான் என்றுமே வல்லரசு

sakthi said...

இயற்கையை வெல்ல மனித சக்தியால் முடியாது.வெல்ல துடிப்பது இயற்கை.ஆனால் வெல்வது இயற்கைதான்.

உணவு உலகம் said...

//Blogger sakthi said...
இயற்கையை வெல்ல மனித சக்தியால் முடியாது.வெல்ல துடிப்பது இயற்கை.ஆனால் வெல்வது இயற்கைதான்.//
நன்றி சக்தி.சென்னை செய்திகளை அனுப்புங்கள். உனவு உலகத்தில் சேர்ப்போம்.

Unknown said...

படங்களும் கருத்துக்களும் அருமை!!

உணவு உலகம் said...

Blogger சிநேகிதி said...
படங்களும் கருத்துக்களும் அருமை!!//
நன்றி சகோ!

ம.தி.சுதா said...

//// இரத்த நாளங்கள், ஒரு வருடம் வரை பத்திரப்படுத்த முடியுமென்பதும் மேலும் ஒரு ஆறுதலான செய்தி.////

இன்னும் எத்தனையோ முன்னெற்றங்கள் எம்மை வியக்க வைக்கப் போகிறது சகோதரம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)