பாலில் கலப்படம்-பலவிதங்களில் உடல் நலம் பாதித்திடும். பாலில் பசும்பால், எருமைப்பால், ஆவின் பால் என அன்றாடம் கேள்விப்படும் பால் ஒருவகை. ஆனால், மனிதன் கண்டுபிடித்த இன்னொரு பால் தான் தண்ணிப்பால்.
பாலில் தண்ணீர் சேர்ப்பது ஒரு வகை கலப்படம். தண்ணீரில் பாலை சேர்ப்பது கலைப்படம். நல்லா தண்ணி காட்ட தெரிந்த நம்மூர் வியாபாரிகளுக்கு இது கை வந்த கலை.
வாரத்தின் முதல் வேலை நாள். வந்து சேர்ந்தன வகை வகையாய் புகார்கள் - தண்ணீரில் பால் சேர்த்து விற்பதாக. சென்றோம், சோதனை இட்டோம்.
பால் விற்பனைக்கு கொண்டு வந்த அனைவரயும் நிறுத்தி சோதனையிட்டோம். அதை பார்ப்பதற்கு அந்த அதிகாலை பொழுதிலும் அலை மோதியது கூட்டம்.
பால் விற்பனைக்கு அல்ல, என்றைக்கும் பால் கொண்டு வரும் நண்பருக்கு உடல் நலமில்லை, அதனால் இன்று மட்டும் நான் வந்தேன், பாலை ஒரு திருமண/ விருந்து நிகழ்ச்சிக்கு கொண்டு செல்கிறேன் - இப்படி பலர் ஏமாற்ற எடுத்து விட்ட கதைகள் ஏராளம்.
அதிரடி ஆய்வு அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்தது. விளைவு: வீணாய் போன சில வீணர்கள் கொண்டு வந்த கலப்பட பால் சென்று விட்டது பகுப்பாய்விற்கு.
பாலை சோதனை செய்வது ஏன்?:
- கறந்த பால், நான்கு மணி நேரம் மட்டுமே, சாதாரண தட்ப வெட்ப நிலையில் கெட்டு போகாமலிருக்கும்.
- கிராமங்களில் கறக்கப்படும் பாலை, நகர்ப்புறங்களுக்கு கொண்டு வர ஏற்படும் காலதாமதத்தை ஈடுகட்ட, பாலில் யூரியா உள்ளிட்ட பல கெமிக்கல்கள் சேர்த்து பசு தந்த பாலெனும் அமுதத்தை பாழ் படுத்திவிடுகின்றனர்.
- பால்ல தண்ணீர் சேர்த்தா, பல நாட்கள் பொறுத்திருக்காமல், பணக்காரன் ஆகலாம் உடனே! ஆனால், பாலும் கெட்டியா இருக்கனுமே! இதற்கு கண்டு பிடித்த குறுக்கு வழிதான் ஜவ்வரிசி மாவு. இதை தண்ணீர் பாலில் சேர்த்து விட்டால், பால் கெட்டியாகத் தெரிய கேரண்டி. பருகும் நமக்குதான், சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம்.
- அடுத்தமுறை, டீக்கடைகளுக்கு செல்லும்போது, பாலை காய்ச்சி கொண்டிருக்கும் பாத்திரத்தை பாருங்கள். ஜவ்வரிசி மாவை பொட்டலமாய் கட்டி உள்ளே போட்டிருப்பர். எச்சரித்து எடுத்துவிட சொல்லுங்கள்.
- பாலை வேகமாய் கறக்க வேண்டும், பருகுவதற்கு கூட பாலின்றி கன்று கதறிட வேண்டும்- இதற்கு இந்த மனிதன் கண்டு பிடித்த உபாயம்தான் ஆக்சிடோசின் எனும் அருமருந்து.பேறுகால பொழுதில், நஞ்சுகொடி வெளியேற, பதிவு பெற்ற மருத்துவர்கள் பயன்படுத்தும் இம்மருந்தை, பால் கொடுக்கும் பசுவிற்கு போட்டு, பசுவின் ஆயுளை பாவிகள் பாதியாகக் குறைத்திடுவர்.
- பருகும் நமக்கென்ன பாதிப்பு?
பள்ளி செல்லும் குழந்தைகள், துள்ளி விளையாடும் வயதில் பருவம் எய்துவதும்(PUBERTY), கர்ப்பிணி பெண்களின் கர்ப்பம் கலையவும் காரணம் பாலில் கலந்து விட்ட ஆக்சிடோசினின் அபாயம்.
மேலதிக தகவல்களுக்கு: பாலையும் பாழ் படுத்தும் பாவிகள்.

64 comments:
பால்ல எவ்வளோ விஷயம் இருக்கா?
நன்றி பல தகவல்கள் தந்ததற்கு..
//வேடந்தாங்கல் - கருன் *! said...
பால்ல எவ்வளோ விஷயம் இருக்கா?
நன்றி பல தகவல்கள் தந்ததற்கு..//
இன்னும் பல தகவல்கள் இனிய மாம்பழ்ம் குறித்து விரைவில் வரும். நன்றி.
அண்ணே.. தகவல்கள் அருமை.. நான் இந்த பதிவைப்போட்டு இருந்தா அமலா பால் படம் போட்டு சொதப்பி இருப்பேன். ஹி ஹி
//சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே.. தகவல்கள் அருமை.. நான் இந்த பதிவைப்போட்டு இருந்தா அமலா பால் படம் போட்டு சொதப்பி இருப்பேன். ஹி ஹி//
அமலா பால் உங்களுக்கே அர்ப்பணம் சார்.
பால் -குடிப்பதற்கு அல்ல!//
அப்போ, பால் என்ன குளிப்பதற்கா சகோ;-))
பாலில் கலப்படம்-பலவிதங்களில் உடல் நலம் பாதித்திடும். பாலில் பசும்பால், எருமைப்பால், ஆவின் பால் என அன்றாடம் கேள்விப்படும் பால் ஒருவகை. ஆனால், மனிதன் கண்டுபிடித்த இன்னொரு பால் தான் தண்ணிப்பால். //
இதனைச் சென்சர் போர்ட்...படிக்கலையா?
நிரூபன் said...
பால் -குடிப்பதற்கு அல்ல!//
அப்போ, பால் என்ன குளிப்பதற்கா சகோ;-))//
நல்லா படிச்சிட்டீங்களா சகோ!
பாலில் தண்ணீர் சேர்ப்பது ஒரு வகை கலப்படம். தண்ணீரில் பாலை சேர்ப்பது கலைப்படம். நல்லா தண்ணி காட்ட தெரிந்த நம்மூர் வியாபாரிகளுக்கு இது கை வந்த கலை.//
அது.......ஒரு லீட்டர் போத்திலுள் 800மில்லி லீட்டர் தண்ணி, போக 200மில்லி பால் தான் கிடைக்குதே...
பால் விற்பனைக்கு அல்ல, என்றைக்கும் பால் கொண்டு வரும் நண்பருக்கு உடல் நலமில்லை, அதனால் இன்று மட்டும் நான் வந்தேன், பாலை ஒரு திருமண/ விருந்து நிகழ்ச்சிக்கு கொண்டு செல்கிறேன் - இப்படி பலர் ஏமாற்ற எடுத்து விட்ட கதைகள் ஏராளம்.//
பிழைக்கத் தெரிந்த மனிதர்கள் ஏராளம்...
//நிரூபன் said...
பாலில் கலப்படம்-பலவிதங்களில் உடல் நலம் பாதித்திடும். பாலில் பசும்பால், எருமைப்பால், ஆவின் பால் என அன்றாடம் கேள்விப்படும் பால் ஒருவகை. ஆனால், மனிதன் கண்டுபிடித்த இன்னொரு பால் தான் தண்ணிப்பால். //
இதனைச் சென்சர் போர்ட்...படிக்கலையா?//
அதான் சென்சர் போர்ட் உறுப்பினர் நீங்க படிச்சிட்டீங்கல்ல!
//நிரூபன் said...
பாலில் தண்ணீர் சேர்ப்பது ஒரு வகை கலப்படம். தண்ணீரில் பாலை சேர்ப்பது கலைப்படம். நல்லா தண்ணி காட்ட தெரிந்த நம்மூர் வியாபாரிகளுக்கு இது கை வந்த கலை.//
அது.......ஒரு லீட்டர் போத்திலுள் 800மில்லி லீட்டர் தண்ணி, போக 200மில்லி பால் தான் கிடைக்குதே...//
சரியா சொல்லீட்டீங்க சகோ!
பாலில் எப்பூடி கலப்படம் செய்கிறார்கள், இதனைக் கண்டறிவது எப்படி,
கலப்படம் செய்த பாலை உட்கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பறிறிய ஒரு விழிப்புணர்வு பதிவு அருமை சகோ.
//நிரூபன் said...
பால் விற்பனைக்கு அல்ல, என்றைக்கும் பால் கொண்டு வரும் நண்பருக்கு உடல் நலமில்லை, அதனால் இன்று மட்டும் நான் வந்தேன், பாலை ஒரு திருமண/ விருந்து நிகழ்ச்சிக்கு கொண்டு செல்கிறேன் - இப்படி பலர் ஏமாற்ற எடுத்து விட்ட கதைகள் ஏராளம்.//
பிழைக்கத் தெரிந்த மனிதர்கள் ஏராளம்...//
இதெல்லாம் ஒரு பிழைப்பா?
நிரூபன் said...
பாலில் எப்பூடி கலப்படம் செய்கிறார்கள், இதனைக் கண்டறிவது எப்படி,
கலப்படம் செய்த பாலை உட்கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பறிறிய ஒரு விழிப்புணர்வு பதிவு அருமை சகோ.//
நன்றி நண்பரே!
FOOD said...
//நிரூபன் said...
பால் விற்பனைக்கு அல்ல, என்றைக்கும் பால் கொண்டு வரும் நண்பருக்கு உடல் நலமில்லை, அதனால் இன்று மட்டும் நான் வந்தேன், பாலை ஒரு திருமண/ விருந்து நிகழ்ச்சிக்கு கொண்டு செல்கிறேன் - இப்படி பலர் ஏமாற்ற எடுத்து விட்ட கதைகள் ஏராளம்.//
பிழைக்கத் தெரிந்த மனிதர்கள் ஏராளம்...//
இதெல்லாம் ஒரு பிழைப்பா?//
மத்தவங்களின் வயிற்றில் அடித்து, இந்த கலப்பட வியாபாரிகள் பிழைக்கிறார்களே, அதனைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் சகோ,
நிரூபன் said...
FOOD said...
//நிரூபன் said...
பால் விற்பனைக்கு அல்ல, என்றைக்கும் பால் கொண்டு வரும் நண்பருக்கு உடல் நலமில்லை, அதனால் இன்று மட்டும் நான் வந்தேன், பாலை ஒரு திருமண/ விருந்து நிகழ்ச்சிக்கு கொண்டு செல்கிறேன் - இப்படி பலர் ஏமாற்ற எடுத்து விட்ட கதைகள் ஏராளம்.//
பிழைக்கத் தெரிந்த மனிதர்கள் ஏராளம்...//
இதெல்லாம் ஒரு பிழைப்பா?//
மத்தவங்களின் வயிற்றில் அடித்து, இந்த கலப்பட வியாபாரிகள் பிழைக்கிறார்களே, அதனைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் சகோ,//
கண்டிப்பாக தொடரும். அடுத்த பதிவு மாம்பழமாம் மாம்ப்ழம்.
FOOD said...
நிரூபன் said...
பால் -குடிப்பதற்கு அல்ல!//
அப்போ, பால் என்ன குளிப்பதற்கா சகோ;-))//
நல்லா படிச்சிட்டீங்களா சகோ!//
அண்ணே, நக்கலு..
ஹி...ஹி..
மாம்பழமாம், மாம்பழத்தைப் பற்றி எப்பூடி உல்டா பண்ணுறாங்க என்பதை அறிய, விழிப்புணர்வை அறிய ஆவல் சகோ
உங்கள் பணியினைப் பற்றித் தொலைக்காட்சியில் பார்த்ததாக மனோ அண்ணன், இரு பதிவு போட்டிருக்காரே, பார்த்தீங்களா அண்ணே?
பாலில் இவ்வள்வு கலப்படமா ....... மனிதனுக்கு மனிதன் தான் எதிரி.....
நான் இருக்கும் பெங்களூரில் பெரும்பாலன மக்கள் reliance fresh, food world,heritage fresh கடைகளில் உணவு பொருட்களை வாங்குகிறோம் ....
இவர்களிடம் உள்ள உண்வு பொருட்களிலும் கலப்படம் இருக்கும் தானே ....இதை பார்த்த உடன் கண்டுபிடிக்க வழி உள்ளதா....எதேனும் முத்திரை உள்ள உணவு பொருட்களை (like ISI ) நம்பி வாங்கலாம் தானே.....
இதை படித்த பிறகு எந்த உணவு பொருளை பார்த்தாலும் கலப்படம் இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது.....
உங்களின் சமூக அக்கறைக்கு hats off sir
நண்பரே உங்கள் பதிவிலிருந்து பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி..........அதே நேரத்தில் ஒரு அரசு அதிகாரி இந்த அளவுக்கு நண்பராய் கிடைத்தது பதிவுலகத்துக்கும் எமக்கும் கிடைத்த பேறு நன்றி!
அய்யோ... பாலிலுமா??? தண்ணி கலப்பதாவது பரவாயில்லை....இப்படி யூரியாவும், ஜவ்வரிசி மாவும் கலந்தால்??? எப்படி வீட்டிலேயே இதை கண்டு பிடிப்பது சார்? தயவு செய்து அதையும் சொல்லிவிடுங்கள்.
தங்களின் சேவைக்கு இறைவன் தக்க கூலி தருவானாக. :)
இந்த உலகில் புனிதமான பொருளாக கருதுவது பால்.. அதிலுமா கலப்படம்...
பால் என்பது ரத்தத்தின் உருமாற்றம்..
பாலில் கலப்படம் தண்டனைக்குறிய விஷயமே....
உண்மையில் உங்களின் இது போன்ற பதிவுகள்தான் எப்போதும் முன்னணியில் இருந்திருக்கவேண்டும். அப்படி இருக்க விட மாட்டார்கள் என்பதும் தெரியும். சரி அதை விடுங்கள்.பெரும்பாலும் எல்ல வித பாகெட் பாலில் கூட வழக்கத்துக்கு மாறாக விரைவில் ஆடை படிவதும் அதுவும் மிக அதிகமாக ஆடை படிய ஆரம்பிப்பதும் காரணம் என்ன?
நிறைய தண்ணீர் சேர்த்தாலும் பாத்திரத்தில் பெவிகால் பசை போல வெண்மையாக பால் படிகிறதே?
வீட்டில் கறந்த பாலில் இந்த அளவுக்கு விரைவாக ,அதிகமாக ஆடை படிவதில்லை.
கொஞ்சம் கரூர் பக்கமும் செக் பன்னுங்க
அட்டகாசம் தாங்கமுடியல்
பாலில் கலப்படம்-பலவிதங்களில் உடல் நலம் பாதித்திடும். பாலில் பசும்பால், எருமைப்பால், ஆவின் பால் என அன்றாடம் கேள்விப்படும் பால் ஒருவகை. ஆனால், மனிதன் கண்டுபிடித்த இன்னொரு பால் தான் தண்ணிப்பால்.//
அருமையான தொடக்கம்
ரொம்ப சாதரணமா கலக்குறானுக
நல்ல தகவல்கள் ஆபீசர்....
பால்ல இம்புட்டு கொடுமை செயிராயிங்களா....அம்மாடியோ....
இனி உஷாரா இருப்போம்ல...
//Blogger நிரூபன் said...
FOOD said...
நிரூபன் said...
பால் -குடிப்பதற்கு அல்ல!//
அப்போ, பால் என்ன குளிப்பதற்கா சகோ;-))//
நல்லா படிச்சிட்டீங்களா சகோ!
அண்ணே, நக்கலு..//
சாரி நல்லா குடிச்சிட்டீங்களா சகோ?
மொக்கராசா said...
பாலில் இவ்வள்வு கலப்படமா ....... மனிதனுக்கு மனிதன் தான் எதிரி.....
நான் இருக்கும் பெங்களூரில் பெரும்பாலன மக்கள் reliance fresh, food world,heritage fresh கடைகளில் உணவு பொருட்களை வாங்குகிறோம் ....
இவர்களிடம் உள்ள உண்வு பொருட்களிலும் கலப்படம் இருக்கும் தானே ....இதை பார்த்த உடன் கண்டுபிடிக்க வழி உள்ளதா....எதேனும் முத்திரை உள்ள உணவு பொருட்களை (like ISI ) நம்பி வாங்கலாம் தானே.....
இதை படித்த பிறகு எந்த உணவு பொருளை பார்த்தாலும் கலப்படம் இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது.....
உங்களின் சமூக அக்கறைக்கு hats off sir//
எந்த பொருளை எங்கு வாங்கினாலும், விதிகளின்படி விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கான்னு பாருங்க. என்னென்ன பார்க்க வேண்டுமென வெவ்வேறு பதிவுகளில் விளக்கம் அளித்துள்ளேன். தொடர்ந்து எழுதுகிறேன்.நன்றி நண்பரே!
//விக்கி உலகம் said...
நண்பரே உங்கள் பதிவிலிருந்து பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி..........அதே நேரத்தில் ஒரு அரசு அதிகாரி இந்த அளவுக்கு நண்பராய் கிடைத்தது பதிவுலகத்துக்கும் எமக்கும் கிடைத்த பேறு நன்றி!//
விக்கியைப்போல் ஒரு நண்பர் கிடைத்ததற்கு நானும் பெருமைபடுகிறேன்.
//அன்னு said...
அய்யோ... பாலிலுமா??? தண்ணி கலப்பதாவது பரவாயில்லை....இப்படி யூரியாவும், ஜவ்வரிசி மாவும் கலந்தால்??? எப்படி வீட்டிலேயே இதை கண்டு பிடிப்பது சார்? தயவு செய்து அதையும் சொல்லிவிடுங்கள்.
தங்களின் சேவைக்கு இறைவன் தக்க கூலி தருவானாக. :)//
மாவு பொருள் கலப்படம் செய்திருந்தால், சுட வைத்து ஆறிய வெது வெதுப்பான பாலில் சிறிது டிஞ்சர் அயோடினை சேர்த்தால், பால் நீல நிறமாக மாறிவிடும். ஆனாலும்,சரியான முடிவு பெற ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்வது மட்டுமே உதவிடும்.
//கவிதை வீதி # சௌந்தர் said...
இந்த உலகில் புனிதமான பொருளாக கருதுவது பால்.. அதிலுமா கலப்படம்...
பால் என்பது ரத்தத்தின் உருமாற்றம்..
பாலில் கலப்படம் தண்டனைக்குறிய விஷயமே....//
கருத்திற்கு நன்றி.
//கக்கு - மாணிக்கம் said...
உண்மையில் உங்களின் இது போன்ற பதிவுகள்தான் எப்போதும் முன்னணியில் ருந்திருக்கவேண்டும். அப்படி இருக்க விட மாட்டார்கள் என்பதும் தெரியும். சரி அதை விடுங்கள்.பெரும்பாலும் எல்ல வித பாகெட் பாலில் கூட வழக்கத்துக்கு மாறாக விரைவில் ஆடை படிவதும் அதுவும் மிக அதிகமாக ஆடை படிய ஆரம்பிப்பதும் காரணம் என்ன?
நிறைய தண்ணீர் சேர்த்தாலும் பாத்திரத்தில் பெவிகால் பசை போல வெண்மையாக பால் படிகிறதே?
வீட்டில் கறந்த பாலில் இந்த அளவுக்கு விரைவாக ,அதிகமாக ஆடை படிவதில்லை.//
சாதாரணமாக பாலில் உள்ள சத்துக்களின் அளவு ஒவ்வொரு ஏரியாவிலும் வேறுபடும்.பாக்கெட் பால் தயாரிக்கும்போது,சத்துக்களை சரி விகிதத்தில் கொண்டுவர, கொழுப்புச்சத்து சேர்ப்பர்.அதனாலும் இருக்கலாம். ஆய்வகத்தில் மட்டுமே என்ன கலந்திருக்குமென அறுதியிட்டு சொல்ல முடியும். நன்றி.
//Speed Master said...
கொஞ்சம் கரூர் பக்கமும் செக் பன்னுங்க
அட்டகாசம் தாங்கமுடியல்//
கரூர் நண்பர்களிடம் சொல்கிறேன்.
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
பாலில் கலப்படம்-பலவிதங்களில் உடல் நலம் பாதித்திடும். பாலில் பசும்பால், எருமைப்பால், ஆவின் பால் என அன்றாடம் கேள்விப்படும் பால் ஒருவகை. ஆனால், மனிதன் கண்டுபிடித்த இன்னொரு பால் தான் தண்ணிப்பால்.
அருமையான தொடக்கம்//
கருத்திற்கு நன்றி.
//MANO நாஞ்சில் மனோ said...
1. நல்ல தகவல்கள் ஆபீசர்....
2. பால்ல இம்புட்டு கொடுமை செயிராயிங்களா....அம்மாடியோ....
3.இனி உஷாரா இருப்போம்ல...//
உஷாரைய்யா உஷாரு! நேற்றைய உங்கள் மாங்’கனி’ பதிவு மூலம் நிறைய நண்பர்களின் பார்வையை உணவு உலகம் பக்கம் திருப்பியுள்ளது.நன்றி மக்கா!
நல்ல தகவல்கள், சரியான நடவடிக்கை சார். தொடருங்கள்!
/பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல தகவல்கள், சரியான நடவடிக்கை சார். தொடருங்கள்!//
நீண்ட இடைவேளைக்கு பின் உங்கள் வருகை -மிக்க மகிழ்ச்சி!
பால் என்னும் அருமையான உணவை பாழாக்கிய கயவர்களை என்ன செய்வது.
அவர்களைச் சொல்லியும் பயனில்லை, அந்தக் காலத்தில் காடு மேடுகளில் புல், பச்சைகளை தின்று மாடுகள் வளரும். இன்று தீவனதிலும், மருந்து ஊசிகளிலும் அவை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மக்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.நன்றிங்க
//இளங்கோ said...
பால் என்னும் அருமையான உணவை பாழாக்கிய கயவர்களை என்ன செய்வது.
அவர்களைச் சொல்லியும் பயனில்லை, அந்தக் காலத்தில் காடு மேடுகளில் புல், பச்சைகளை தின்று மாடுகள் வளரும். இன்று தீவனதிலும், மருந்து ஊசிகளிலும் அவை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மக்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.நன்றிங்க//
பலே, பலே! நன்றி
First of all, Hats off and congrats for doing your duty honestly. Please continue this sir.
Next regarding the post:
தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாகப் பிரிப்பது பசுவோட வேலையப்பா
அது பிரித்தாளும் பாலோட தண்ணீரை கலப்பது மனிதனின் மூளையப்பா
Voted in all moderator sites. Keep up the good work sir.
//Blogger டக்கால்டி said...
First of all, Hats off and congrats for doing your duty honestly. Please continue this sir.
Next regarding the post:
தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாகப் பிரிப்பது பசுவோட வேலையப்பா
அது பிரித்தாளும் பாலோட தண்ணீரை கலப்பது மனிதனின் மூளையப்பா//
ரஜினி பாட்டு தூள் கிளப்றீங்களே?
//டக்கால்டி said...
Voted in all moderator sites. Keep up the good work sir.//
Thank You Friend.
சார்.
மற்ற மாவட்டங்களில் இதை எப்படி வெளிக்கொணருஅவ்து? ஒரு தடவை ஒரு மனிதர் கம்ப்ளெயிண்ட் செய்தால் போதுமா? இதை மாநில அளவில் செய்ய அரசை அணுக முடியுமா? எப்படி கம்ப்ளெயிண்ட் செய்தால் அலுவலர்கள் உடனே செய்வார்கள், தெரியப்படுத்தவும்.
டிஞ்சர் அயோடின், லிட்மஸ் பேப்பர் எல்லாம் எங்கே கிடைக்கும்? மருந்துக்கடையில் ப்ரெஸ்கிரிப்ஷன் இல்லாமல் கிடைக்குமா சார்? இன்னும் இந்த பாதிப்பிலிருந்து நான் நீங்கவில்லை. வலைப்பூ முகவரியையும், பதிவையும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி உள்ளேன். நன்றி சார்.
தங்கள் ஆர்வத்திற்கு நன்றி. ஒவ்வொரு ஊரிலும் உணவு ஆய்வாளர்கள் இருக்கின்றனர். அவர்களிடம் புகார் செய்யலாம். அரசு தற்போதும் முன்னூறுக்கும் மேற்பட்ட உணவு ஆய்வாளர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
டிஞ்சர் அயோடின், லிட்மஸ் பேப்பர் சர்ஜிக்கல் கடைகளில் ப்ரெஸ்கிரிப்ஷன் இல்லாமல் கிடைக்கும்.
ஃப்ரெஷ் மில்க் என்று கிடைக்கும் பாலை வாங்கி சாப்பிடுவதில் இவ்வளவு கொடுமையா? பகிர்விற்கு நன்றி சகோ.
asiya omar said...
ஃப்ரெஷ் மில்க் என்று கிடைக்கும் பாலை வாங்கி சாப்பிடுவதில் இவ்வளவு கொடுமையா? பகிர்விற்கு நன்றி சகோ.//
வருகைக்கு நன்றி
பாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே! உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே? பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க! பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்

பாலில் கலப்பிடத்தைப்பற்றி அருமையாக கூறியிருக்கிறீர்கள்.
நீங்களும்... பிறர் பின்னூட்டத்தில் தேவையில்லத கமெண்ட் செய்வதை தவிர்க்கலாமே! உங்கள் கருத்தை தெளிவாக சொல்லுங்கள். அது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். நீங்கள் நல்ல விஷயங்கள் சொல்லி விட்டு பிறரின் பின்னூட்டங்களில் உளறுவது உங்களின் மீதான மதிப்பை குறைக்கும் அல்லவா?.
தங்கள் கருத்துகளுக்கு நன்றி, நண்பரே!
sir,
sago (Javvarisi) bad for health?because many health mix are having sag
பால் பாலாக இருக்க வேண்டும். அதில் எந்த ஒரு வெளிப்பொருளை கலந்தாலும் அது கலப்படமே!
Post a Comment