இது ஒரு மீள் பதிவு.
- ஒவ்வொரு பொட்டல பொருள் மீதும் அந்த உணவு பொருள் தயாரித்த தேதி அச்சிடப்பட்டிருக்கும். அந்த உணவு பொருளை தயாரித்த தேதி தெரிந்தால் தான், அந்த உணவு பொருளை எந்த தேதி வரை பயன்படுத்தலாம் என்ற விபரம் தெரியவரும்.
- பாட்ச் எண் என்பது, ஒரு குறிப்பிட்ட அளவில் தயாரிக்கப்படும் உணவு பொருளுக்கு கொடுக்கப்படும் குறியீட்டு எண் ஆகும். கடைகளில் விற்கப்படும் உணவு பொருளில் ஏதேனும் குறை காணப்பட்டாலோ, புகார் எழுந்தாலோ, கெட்டு போனாலோ அந்த பாட்ச் எண் உள்ள அனைத்து உணவு பொட்டலங்களை கடைகளில் இருந்து முழுமையாக அப்புறபடுத்த பாட்ச் எண் உதவும்.
- சைவ அசைவ வகை உணவு குறியீடுகள், நாம் வாங்கும் உணவு பொருள் சுத்தமான சைவமா அல்லது அசைவ உணவா என தெரிந்து கொள்ள உதவும்.
- எந்த தேதி வரை பயன்படுத்தலாம் (Best Before Date) என்பது அந்த உணவு பொருள் அதன் தன்மை மாறாது பயன்படுத்த உகந்த காலத்தை குறிக்கும்.
- தயாரிப்பாளரின் முழு விலாசம் இருந்தால்தான், அந்த உணவு பொருளில் ஏதேனும் குறையோ கலப்படமோ இருந்தால் அது பற்றி புகார் தெரிவிக்கவும், குறைகள் களையப்படாவிட்டால், தயாரிப்பளார் மீது உணவு கலப்படத் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் உதவும் . டிஸ்கி-1 : உபயம் - தேர்தல் பணி அலுப்பு தீரல. கொஞ்சம் பொறுத்துக்கோங்க.

27 comments:
//பாட்ச் எண் என்பது, ஒரு குறிப்பிட்ட அளவில் தயாரிக்கப்படும் உணவு பொருளுக்கு கொடுக்கப்படும் குறியீட்டு எண் ஆகும்//
ஒரே பாடச் எண் கொண்ட எல்லாப் பொருட்களும் ஒரே முடிவுத் திகதியையும் கொண்டிருக்கும் அப்படியா?
நல்ல பகிர்வு..
தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள், இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதுங்களேன்....!
//////ஜீ... said...
//பாட்ச் எண் என்பது, ஒரு குறிப்பிட்ட அளவில் தயாரிக்கப்படும் உணவு பொருளுக்கு கொடுக்கப்படும் குறியீட்டு எண் ஆகும்//
ஒரே பாடச் எண் கொண்ட எல்லாப் பொருட்களும் ஒரே முடிவுத் திகதியையும் கொண்டிருக்கும் அப்படியா?
/////
ஆமாம், ஒரே பாட்ச் எண் கொண்டவை அனைத்தும் மொத்தமாக ஒன்றாக தயாரிக்கப்பட்டு, பேக்கிங் செய்யப்பட்டவை! எனவே அவை அனைத்தும் ஒரே மாதிரியான தன்மையிலேயே இருக்கும்!
நல்ல பகிர்வு
Blogger ஜீ... said...
//பாட்ச் எண் என்பது, ஒரு குறிப்பிட்ட அளவில் தயாரிக்கப்படும் உணவு பொருளுக்கு கொடுக்கப்படும் குறியீட்டு எண் ஆகும்
ஒரே பாடச் எண் கொண்ட எல்லாப் பொருட்களும் ஒரே முடிவுத் திகதியையும் கொண்டிருக்கும் அப்படியா?//
ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட அளவிலான உணவு பொருட்களுக்கு ஒரு பாட்ச் எண் ஒதுக்கப்படும். அவை அனைத்தும் ஒரே தன்மை உடையனவாய் இருக்கும். எனவே, அவற்றின் காலாவதியாகும் தேதியும் ஒன்றாகவே இருக்கும்.
//asiya omar said...
நல்ல பகிர்வு..//
வருகைக்கு நன்றி.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள், இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதுங்களேன்....!//
உங்கள் விருப்பம், நிச்சயம் நிறைவேற்றுகிறேன்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////ஜீ... said...
//பாட்ச் எண் என்பது, ஒரு குறிப்பிட்ட அளவில் தயாரிக்கப்படும் உணவு பொருளுக்கு கொடுக்கப்படும் குறியீட்டு எண் ஆகும்//
ஒரே பாடச் எண் கொண்ட எல்லாப் பொருட்களும் ஒரே முடிவுத் திகதியையும் கொண்டிருக்கும் அப்படியா?
/////
ஆமாம், ஒரே பாட்ச் எண் கொண்டவை அனைத்தும் மொத்தமாக ஒன்றாக தயாரிக்கப்பட்டு, பேக்கிங் செய்யப்பட்டவை! எனவே அவை அனைத்தும் ஒரே மாதிரியான தன்மையிலேயே இருக்கும்!//
எனக்காக எடுத்துகொண்ட அக்கறைக்கு நன்றி.
//விக்கி உலகம் said...
நல்ல பகிர்வு//
உங்கள் வரவு எனக்கு உற்சாகம்.
நல்ல பயனுள்ள தகவல்.மிக்க நன்றி.
Thank you for the useful tips. :-)
வந்தேன்..வந்தேன்..
லேட்டாக வந்தேன்..
மறுபடியும் ஒரு பயனுள்ள தகவல்..
நல்ல விழிப்புணர்வு பதிவு.. வாழ்த்துக்கள்..
ரெஸ்ட் எடுத்தாச்சா ? எலக்ஷன் பதிவு எப்போ?
//sakthi said...
நல்ல பயனுள்ள தகவல்.மிக்க நன்றி.//
மிக நீண்ட இடைவேளைக்கு பின்னர் சந்திக்கிறேன்.தேர்தல் பணி சிறப்பாக முடிந்ததா,சக்தி?
//Chitra said...
Thank you for the useful tips. :-)//
நன்றி சித்ரா.
வேடந்தாங்கல் - கருன் *! said...
1. வந்தேன்..வந்தேன்..
2. லேட்டாக வந்தேன்..
ஆனாலும் என்ன, நீங்கள் லேட்டஸ்ட் தான்.
//வேடந்தாங்கல் - கருன் *! said...
மறுபடியும் ஒரு பயனுள்ள தகவல்..//
ஆமா,நான்தான் மீள் பதிவுன்னு சொல்லிட்டேனே தலைவரே!
//கவிதை வீதி # சௌந்தர் said...
நல்ல விழிப்புணர்வு பதிவு.. வாழ்த்துக்கள்..//
வாழ்த்துக்களுக்கு நன்றி.
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ரெஸ்ட் எடுத்தாச்சா ? எலக்ஷன் பதிவு எப்போ?//
ஆமாம். விரைவில்.
நீங்களும் உங்கள் தேர்தல் பணி அனுபவத்தை பகிரலாமே.
பயனுள்ள தகவல்கள் சகோ, ஆனால் எமது ஊர்களில் பல லோக்கர் ரேட் மார்க் விற்பனைப் பொருட்கள் பொலித்தினால் மட்டும் பைக்கற் பண்ணப்பட்டு இப்படியான விபரங்கள் ஏதுமின்றி வருகின்றனவே, அவற்றை என்ன பண்ணலாம்?
நல்ல பயனுள்ள பதிவு, இது!
அப்படியே எக்ஸ்பயரி டேட் என்பதை பெஸ்ட் பிஃபோராக ஏன் மாத்தினாங்க அப்படீங்கறதையும் எழுதுங்க சாரே! :))
சாரி ஃபார் லேட்
Post a Comment